சூரியக் குடும்பம் - 8 கோள்கள் பற்றி தொகுப்பு
8 கோள்கள்
புதன் (Mercury):
*சூரியனுக்கு மிக அருகில் உள்ளது.
*தன்னைத் தானே சுற்ற 59 நாட்கள்.
*சூரியனைச் சுற்ற 88 நாட்கள்.
*துணைக்கோள் இல்லை.
*சூரியனை சுற்றும் கோளில் மிகவேகமாக சுற்றும் கோள் ஆகும்.
*இது வேகமான கோள்.
Previous Year Questions:2012
1. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்
II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது
III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது. இவற்றுள் எது / எவை சரி :
வெள்ளி (Venus):
*சூரியனிலிருந்து 2வது கோள் ஆகும்.
*காலை நட்சத்திரம் மற்றும் மாலை நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது.
*அதன் அடர்த்தி, நிறை புவியைப் போன்றது.
*இதனால் வெள்ளிக் கோளை புவியின் இரட்டை (Earth's Twin) என்கிறோம்.
*சூரியனை அடுத்து பிரகாசமாக தெரிவது.
*புவிக்கு அருகில் உள்ளது.
*தன்னைத் தானே சுற்ற 243 நாட்கள்.
*சூரியனைச் சுற்ற 224.5 நாட்கள்.
*கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகிறது.
*துணைக்கோள்கள் இல்லை.
புவி(Earth):
*நீலக்கோள் (Blue Planet) ஏனெனில் புவியில் நீர் உள்ளது.
*5வது பெரிய கோள்.
*ஒரே ஒரு துணைக்கோள் உள்ளது - சந்திரன்.
*தன்னைதானே சுற்ற 23 மணி 56 நிமிடம் எடுத்துக் கொள்கிறது.
*சூரியனை சுற்ற 365.25 நாட்கள்.
Previous Year Questions:2013,2012
II. சந்திரனை துணைக்கோள் என அழைக்கலாம்.
III.சந்திரனை குருங்கோள்கள் என அழைக்கலாம்
IV.சந்திரனை வால் நட்சத்திரம் என அழைக்கலாம்.
செவ்வாய்(Mars):
*சூரியனிலிருந்து 4வது கோள்.
*சிவப்பு நிறக்கோள் (Red Planet).
*வறண்ட ஆறுகள், செயலிழந்த எரிமலை, பாலைவனங்கள், பாறைகள், பனிமூடிய துருவங்கள் உள்ளது.
*துணைக்கோள்கள் - 2 (கோபால், டெய்மோஸ்).
*செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருக்கலாம் என ஆராய 1979ல் வைக்கிங் விண்கலம் அனுப்பப்பட்டது. 1998ல் சோனேஜர் விண்கலம் அனுப்பப்பட்டது.
வியாழன் (குரு) (Jupiter):
*மிகப்பெரிய கோள்,இராட்சத கோள் (Giant plant).
*மிகப்பெரிய சிவப்பு புள்ளி காணப்படுகிறது.
*தன்னைத்தானே சுற்ற 10 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
*சூரியனைச் சுற்ற 12 ஆண்டுகள்.
*துணைக்கோள்கள் - 63.
*பூமியை விட 11 மடங்கு பெரியது.
*கேனிமேட் துணைக்கோள் மிகப்பெரியது.
*மற்ற துணைக்கோள் யுரோப்பா ,காலிஸ்டோ.
*சனிக்கு அனுப்பப்பட்ட விண்கலம் - காசினி.
சனி (Saturn):
*2வது மிகப்பெரிய கோள்.
*7 வளையங்கள் (Ring) உள்ளது.
*தன்னைத்தானே சுற்ற 10.5 மணி நேரம்.
*சூரியனைச் சுற்ற 29.5 ஆண்டுகள்.
*வெறும் கண்ணால் பார்த்தால் மஞ்சள் நிறமாகத் தெரியும்.
*துணைக்கோள்கள் - 60.
*முக்கியத் துணைக்கோள் - டைட்டன் (Titan).
*சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு(< 1).எனவே தண்ணீரில் போடும் பொழுது மிதக்கும்.
Previous Year Questions:2012
கூற்று (A) : சனிக்கோள் தண்ணீ ரில் போடும் பொழுது மிதக்கும்.
காரணம் (R) : சனிக்கோளின் ஒப்படர்த்தி ஒன்றைவிட குறைவு. கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
யுரேனஸ் (Uranus):
*முதலில் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட கோள் 1781 வில்லியம் ஹெர்வில்ன் கண்டுபிடித்தார்.
*துணைக்கோள்கள் - 27.
*முக்கிய துணைக்கோள்கள் மிராண்டா. ஏரியல், அம்ரியல்,டைட்டாபினியா.
*தன் அச்சில் 98 டிகிரி சாய்ந்துள்ளது .எனவே உருண்டு கொண்டே சூரியனை சுற்றும்.
*தன்னைத்தானே சுற்ற 17 மணி நேரம்.
*சூரியனைச் சுற்ற 84 ஆண்டுகள்.
*5 தேய்ந்த வளையங்கள் உள்ளது.
*கிழக்கிலிருந்து மேற்காக சுற்றுகிறது.
சனிக்கோளின் வளையங்கள்:
*தொலைநோக்கி வழியே பார்த்தால், சனிக்கோளைச் சுற்றி வளையம் போன்ற அமைப்பு காணப்படும். நுண் கற்கள் தூசும் பனியும் கொண்ட தொகுதியே இந்த வளையம்.*சனியின் வளையம் தான் எடுப்பானது என்றாலும் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களுக்கும் வளையங்கள் உள்ளன.
நெப்டியூன் (Neptune):
*1846- K.G,காலே (பெர்லின்) கண்டறிந்தார்.
*துணைக்கோள் - 13 (முக்கியமானவை : நெராய்டு)
*கருப்புப் புள்ளி கோள்.
*தன்னைத் தானே சுற்ற - 16 மணி நேரம்
வால் நட்சத்திரம் (comet ):
*வால் நட்சத்திரம் என்பது ஒரு விண்மீன் இல்லை.
*பனி,தூசு முதலியப் பொருள்கள் நிறைந்த பனிப்பாறைதான் (காமட்).
*சூரியனுக்கு அருகே வரும் போது பனி உருகி ஆவியாதலாலும், சூரிய ஒளி பிரதிபலிப்பதாலும் வால்போல் நீண்டு தோன்றுகிறது.
*வால் நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர் திசையில் அமையும்.
*சூரியனிலிருந்து வரும் நுண்துகள்கள் வால்நட்சத்திலிருந்து வெளிப்படும் ஆவியின் மீது மோதுவதால் வால்பகுதி உருவாகிறது.
Previous Year Questions:2013
வால் மீன்களில் வால்பகுதி எப்பொழுது தோன்றாது?
I.அவை சூரியனை விட்டு தொலைவில் இருக்கும் பொழுது,
II. அவை சூரியனுக்கு அருகில் இருக்கும் பொழுது.
III. அவை பூமிக்கு அருகில் இருக்கும் பொழுது,
IV. அவை பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும் பொழுது.
ஹேலி வால் நட்சத்திரம் (Halley Comet):
*1862ல் எட்மண்ட் ஹேலியால் கண்டறியப் பட்டது.*76 வருடங்களுக்கு ஒரு முறைத் தோன்றும்.
*இறுதியாக 1986ல் தோன்றியது.இனி 2062 ல் தோன்றும்.
*1922 ஜீலை ஷி மேக்கர் லெவி-9 வால் நட்சத்திரம் வியாழனில் மோதியது.
குறுங்கோள்கள் (Asteroids):
*செவ்வாய்க் கோளுக்கும், வியாழன் கோளுக்கும் இடையில் இலட்சக்கணக்கான குறுங்கோள்கள் உள்ளன.
*சிறு சிறு கற்கள், பெரும்பாறை முதல் 300 - 400 கி.மீ விட்டம் உடைய பெரும் வான்பொருள்கள் ஆகியவற்றின் தொகுதியே இந்தக் குறுங்கோள்கள்.
*இவற்றில் சிலவற்றுக்கு இந்தியப் பெயர்களும் அளித்துள்ளனர்.
*இவற்றை பறக்கும் கோள்கள் எனவும் சிறுகோள்கள் எனவும் அழைக்கலாம்.
Previous Year Questions:2016
*அணுசக்தித் துறையின் தந்தை - சாராபாய்
*கணித மேதை - இராமானுஜம்
எரிகற்கள் (Meteors):
*பாறை துண்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் புவியை நோக்கி வரும் பாறைத்துண்டுகள் வளிமண்டலத்தில் ஊடுருவும் போது உராய்வினால் எரிந்து விடுகின்றன. இதனை எரிநட்சத்திரம் (Falling Stars) எனலாம்.
வீழ்கற்கள் (Meteorites):
* சில பாறைத்துண்டுகள் முழுமையாக எரியாமல் புவியின் மேற்பரப்பில் விழலாம்.இவை மிகப்பெரியப் பள்ளங்களை புவியில் இருக்கும்.
சூரியக் குடும்பத்திற்கு அருகிலுள்ள நட்சத்திரத் தொகுதி:
* பிராக்ஸிமா சென்ட்ரி
*ஆல்பா சென்ட்ரி
சந்திரசேகரன் எல்லை:
* இந்தப் பகுதி ஒட்டுமொத்த நட்சத்திரங்களின் அதிகபட்ச உயர எல்லை ஆகும்.
*இதற்கும் மேல் பகுதியில் நட்சத்திரங்கள் வெடிப்பதனால் சிறிய அளவுடைய நட்சத்திரங்கள் பகுதி அல்லது உடைவதால் கரும் புள்ளிகள் உருவாகின்றன.