உரங்கள், தீங்குயிர்க்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் (Fertilizers, Pesticides, Insecticides)
பூச்சிக்கொல்லிகள் (Insecticides)
பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள்
• அலிஃபாட்டிக் ஹைட்ரோ கார்பன்கள்
• அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்கள்
• பாஸ்பரஸ் அதன் வழிப்பொருட்கள்
• குளோரின் போன்ற ஹேலஜன்கள்
பூச்சிக்கொல்லிகலின் வகைகள்
குளோரின் சேர்ந்த பூச்சிக்கொல்லிகள்
• எ.கா.: DDT, BHC
பாஸ்பரஸ் சேர்ந்த பூச்சிக்கொல்லிகள்.
• எ.கா.: பாராதையான்
DDT (டைகுளோரோ டைபினைல் ட்ரைகுளோரோ ஈத்தேன் - Di-chloro Di-phenyl Tri-chloro Ethane)
• இதனை முதன்முதலில் தயாரித்தவர் ஜெய்ட்லர். ஆனால் இதன் பூச்சிக்கொல்லி பண்பை கண்டறிந்தவர் பால்முன்னர்.
• கந்தக அமிலத்தின் முன்னிலையில், குளோரோ பென்சீனை (C6H5Cl) குளோராலுடன் (Cl3C-CHO - ட்ரைகுளோரோ அசிட்டால்டிஹைடு) குறுக்கவினைக்குட்படுத்தி (condensation) DDT தயாரிக்கப்படுகிறது.
• மூலக்கூறு வாய்பாடு : 2C6H5Cl - CH - CCl3
• கரிம குளோரின் பூச்சிக்கொல்லி
• IUPAC பெயர் : 2,2-பிஸ் ( பாரா குளோரோபினைல் ) - 1,1,1-ட்ரைகுளோரோ ஈத்தேன்
நன்மைகள்
• இது ஒரு வலிமைமிக்க பூச்சிக்கொல்லி - கொசுக்கள், ஈக்கள், பயிர்களை அழிக்கும் உயிரினங்களை கொல்லும்
• இது மலேரியாவை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது
தீமைகள்
• இது மனித இனத்திற்கும் (சிறுநீரக கல் உருவாவதற்கு), பறவைகளுக்கும் (அவற்றின் முட்டையின் தோல் மெலிந்து, கரு அழிந்துபோவதற்கு), மீனினங்களுக்கும் நச்சுத்தன்மையுடையது. இவ்வாறு, உயிரிகளின் உடல்திசுக்களில் DDT கலப்பதற்கு 'உயிரியல் உருப்பெருக்கம் (Biomagnification)' என்றுபெயர்.
• இதனை அதிகளவில் பயன்படுத்தினால் உயிரியல் சிதைவுக்கு உள்ளாகாது.
BHC ( பென்சீன் ஹெக்ஸா குளோரைடு - Benzene Hexa-Chloride)
• இது காம்மெக்ஸேன் அல்லது லிண்டேன் அல்லது HCB (Hexa-Chloro Benzene) எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாக, இது வியாபார ரீதியில் BHC எனப்படுகிறது.
• புற ஊதாக்கதிர்களின் முன்னிலையில். பென்சீனை குளோரினுடன் வினைக்குட்படுத்தி BHC தயாரிக்கப்படுகிறது. மூலக்கூறு வாய்பாடு : C6Cl6
• இதன் பூச்சிக்கொல்லித் தன்மை அதிலுள்ள காமா அமைப்பினால் ஏற்படுகிறது. இந்த காமா அமைப்பின் ஐசோமரின் பெயர் தான் லிண்டேன் அல்லது காமெக்ஸேன் எனப்படுகிறது.
பூச்சிக்கொல்லிகள் - பிற குறிப்புகள் :
• வேரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் பூச்சிக்கொல்லி குளோரோபைரிபாஸ் (Chlorpyrifos - CPS).
தண்டையும், இலையையும் கடித்துத்துளைக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள்
• மாலத்தியான் (Malathion)
• லிண்டேன் (Lindane)
• தையோடான் (அதாவது) எண்டோசல்ஃபன் (Thiodan (aka) Endosulfan)
சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பூச்சிக்கொல்லிகள்
• டை மீத்தோயேட் (Di-Methoate)
• மெட்டாசிஸ்டாக்ஸ் (Metasystox)