Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Notes

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

  • காந்தியடிகள் அக்டோபர் 1940இல் தனிநபர் சத்தியாகிரகத்தைத் துவங்கியதன் மூலமாக காங்கிரஸ் இயக்கத்தின் மனவலிமையை உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியதால் சுபாஷ் தம் பதவியைத் துறந்தார். பின்னர் ஃபார்வர்ட் பிளாக் கட்சியைத் துவக்கினார்.
  • அதிருப்தியிலிருந்த தேசியவாதிகளை அரவணைக்கும் பொருட்டு மார்ச் 1942இல் கிரிப்ஸ் தூதுக்குழு வருகைபுரிந்தது.
  • காந்தியடிகள் ஆகஸ்ட் 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை’ நடத்த முடிவு செய்தார்.
  • அதன்பின் வந்த அமைச்சரவைத் தூதுக்குழுவின் திட்டம் காங்கிரசாருக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. எனினும், பாகிஸ்தானின் உருவாக்கத்தை எதிர்பார்த்த ஜின்னாவும் அவர்தம் முஸ்லிம் லீக் கட்சியும் ‘நேரடி நடவடிக்கை நாள்’ என்று விடுத்த அறைகூவலில் கிழக்கு வங்காளத்தில் வன்முறை வெடித்துக் கிளம்பியது.

தனிநபர் சத்தியாகிரகம்

  • பெருவாரியான மக்களைஉள்ளடக்கிய இயக்கங்களை நடத்திவந்த காந்தியடிகள், சர்வாதிகாரத்திற்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்யாமலிருக்கத் தனிநபர் சத்தியாகிரகம் என்ற வழியைக் கைக்கொண்டார்.
  • வினோபா பாவே மகாராஷ்டிரத்தில் அமைந்த தனது பாவ்னர் ஆசிரமத்தருகே 1940 அக்டோபர் 17இல் முதல் சத்தியாகிரகத்தை நடத்தியதின் வாயிலாக இவ்வியக்கம் தொடங்கப் பெற்றது. காந்தியடிகள் டிசம்பர் 1940இல் இவ்வியக்கம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார்.
  • மீண்டும் ஜனவரி 1941இல் குழு சத்தியாகிரகமாக உருவெடுத்தபோதும் அதை ஆகஸ்ட் 1941இல் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

ஆகஸ்ட் கொடை

  • லின்லித்கோ பிரபு 1940 ஆகஸ்ட் 8இல் அளிக்க முன்வந்ததாவது: வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து, அதிகமான இந்தியர்களைக் கொண்டு அரச பிரதிநிதியின் குழுவை (செயற்குழு) விரிவாக்கம் செய்தல், இந்திய உறுப்பினர்களைக் கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்குதல் , சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல், போருக்குப் பின் இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பளிக்க உறுதியளித்தல் ஆகியவையாகும்.

காங்கிரஸில் இருந்து போஸ் நீக்கப்படுதல்

  • உறுப்பினர் எண்ணிக்கை 1938-39இல் 4.5 மில்லியன் என்ற நிலையிலிருந்து 1940-41இல் 1.4 மில்லியன் என்ற அளவுக்குச் சரிந்திருந்தது.
  • கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப் பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • ஃபார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கினாலும், ஆகஸ்ட் 1939இல் அவர் காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

லாகூர் தீர்மானம்

  • இஸ்லாமியர்களுக்கான தனிநாடு கோரிக்கையாகும். இதன் துவக்கம் 1930களில் கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் தனிப்பகுதி அல்லது சில பகுதிகள் என்ற நிலையிலிருந்து 1940 மார்ச் 23இல் லாகூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இது ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியது.
  • இத்தகைய கோரிக்கையை முஸ்லிம் லீக் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் முன்வைக்க காலனி ஆட்சியாளர்களே தூண்டுதலாக இருந்ததற்கான ஆதாரங்கள் வெகுவாக உள்ளன.
  • அச்சு நாடுகளின் – ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான். போஸ் ஒருவர் மட்டுமே நேசநாடுகளோடு ஒத்துழையாமல் அச்சு நாடுகளை ஆதரித்தார்.
  • போர்க்கால அமைச்சரவையைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சில், சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸை காங்கிரசோடு பேச்சுவார்த்தை நடத்த அனுப்பிவைத்தார்.

கிரிப்ஸ் தூதுக்குழு

தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல் :

  • பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம், நார்வே, ஹாலந்து ஆகிய நாடுகள் ஜெர்மனி வசம் சிக்கியதோடு பிரிட்டனும் பல பின்னடைவுகளை எதிர்கொண்டது. அவற்றுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது தென்கிழக்கு ஆசியாவிற்குள் ஜப்பான் படைநடத்திச் சென்றதேயாகும்.
  • இந்நிகழ்வு முத்துத் துறைமுகம் (Pearl Harbour) என்ற அமெரிக்க துறைமுகம் 1941 டிசம்பர் 7இல் தாக்கப்பட்ட சமகாலத்தில் நடந்தேறியது. அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்டும், சீனக் குடியரசுத்தலைவரான ஷியாங் கே- ஷேக்கும் ஜப்பானின் அதிரடிப்போக்கை நிறுத்த முனைந்தனர்.
  • ஜப்பானியப் படைகள் 1941இன் முடிவில் பிலிப்பைன்ஸ், இந்தோ-சீனா, இந்தோனேசியா, மலேசியா, பர்மா போன்ற பகுதிகளை மண்டியிட வைத்து இந்தியாவின் வடகிழக்கு எல்லை வழியாக நுழையத் தயாராயின. பின்னர் உருவான இந்திய தேசிய இராணுவம் இந்நிலையில் இருந்தே கட்டியெழுப்பப்பட்டது.
  • அது பற்றி விரிவாக இப்பாடத்தில் காண்போம் (தொகுதி 7.3). இச்சூழலில் டிசம்பர் 1941இல் கூடிய காங்கிரஸ் செயற்குழு போருக்குப் பின் விடுதலையையும், உடனடியாக முக்கியப் பிரிவுகளில் அதிகாரப் பகிர்வையும் உறுதியளிக்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தால் தாங்கள் ஒத்துழைப்பு நல்கத் தயார் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

கிரிப்ஸ் வருகை

  • சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தலைமையிலான பிரதிநிதித்துவக் குழு மார்ச் 1942இல் இந்தியா வந்தடைந்தது. தொழிலாளர் கட்சியின் சார்பில் பங்கு வகித்தமையே கிரிப்ஸ் குழு மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. ‘விரைவில் சுயாட்சியை உணர்த்தும் அரசுமுறையை நிறுவுதல்’ என்று மொழிந்திருந்தார்.

கிரிப்ஸின் முன்மொழிவு

  • கிரிப்ஸ் டொமினியன் அந்தஸ்தையும் போருக்குப் பின் அரசியல் சாசன வரைவுக் குழுவை உருவாக்குதலையும் ஆதரித்தார்.
  • “நான் முதன்முறையாக இவ்வரைவை வாசித்த போது, கடுமையான மன அழுத்தத்திற்கு உட்பட்டேன்” என்றார்.

கிரிப்ஸின் முன்மொழிவு நிராகரிக்கப்படல்

  • டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும். பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.

முத்துத்துறைமுகம் (Pearl Harbour) தாக்கப்பட்ட வேளையில் காங்கிரஸ் முன்னிருந்த சவால்கள்:

  • துவக்கத்திலிருந்தே இந்திய தேசிய இயக்கத்தையும் குறிப்பாக காந்தியடிகளையும் சர்ச்சில் வெறுப்புணர்வோடே அணுகி வந்தார்.
  • ஒருபுறம் விடுதலைக்கான எந்த உறுதியும் கொடுக்காமல் காலனிய அரசு இழுத்தடித்தது என்றால் மறுபுறம் சுபாஷ் சந்திர போஸ் அச்சு நாடுகளோடு கைக்கோர்த்து சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நெருக்கடி கொடுத்தார்.
  • ஜெர்மனியில் இருந்து மார்ச் 1942இல் ஆசாத் ஹிந்து ரேடியோ மூலம் போஸ் இந்திய மக்களைத் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தினார். இப்பின்புலத்தில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்:

காங்கிரசின் வார்தா கூட்டம்.

  • இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு 1942 ஜூலை 14இல் வார்தாவில் சந்தித்தது. இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப்போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
  • இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த இராஜாஜியும் புலாபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர்.

‘செய் அல்லது செத்துமடி’ எனும் முழக்கம்

  • காந்தியடிகள் 1942 மே 16இல் கூடிய பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினார். அவர் மக்களை நோக்கி ‘செய் அல்லது செத்துமடி’ என்று கூறி ‘முடிவை நோக்கிய ஒரு சண்டையாகக்’ கருதி தனது மறுப்பியக்கத்தைத் துவக்கினார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள்

காலனிய அரசு தாமதிக்காமல் காந்தியடிகள் உட்பட அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களையும் 1942 ஆகஸ்ட் 9 அன்று அதிகாலையில் கைதுசெய்து சிறையில் தள்ளியது. ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டம் ஆகஸ்ட் 20இல் துவங்கி 13 நாட்கள் நடைபெற்றது.

அரசாங்கத்தின் மனிதத்தன்மையற்ற அடக்குமுறை

  • 57 பட்டாலியன் இராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டதையும் சான்றாகக் கொள்ளலாம்.
  • நிலைமையின் தீவிரத்தையும் அதன் அழுத்தத்தையும் பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கு விளக்க விழைந்த லின்லித்கோ பிரபு தாம் எதிர்கொண்ட எதிர்ப்பைப் பற்ற எழுதுகையில் 1857 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின் கவலை கொள்ளவைக்கும் ஒரு வளர்ச்சி; எனினும், அதன் முக்கியத்துவத்தையும் வீரியத்தையும் இராணுவக் காரணங்களுக்காக உலகத்தின் பார்வையில் இருந்து மறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது’ என்று குறிப்பிடுகிறார்.
  • இரண்டாம் நிலையில் அது கிராமப்புறங்களில் பரவியது. உணவு தானியங்களின் விலை ஏப்ரல் 1942இல் இருந்து அதே ஆண்டு ஆகஸ்டுக்குள் அறுபது புள்ளிகள் அளவில் ஏறியதே வெறுப்புக் கிளம்பக் காரணமாக அமைந்தது.
  • மேலும் காங்கிரசிற்குள் இருந்த சோஷலிசவாதிகள் காவல்துறையினரின் ஆகஸ்ட் 9 நடவடிக்கையில் சிக்காமல் கிராமப்புறங்களுக்குள் தலைமறைவாக இருந்து கிராமத்து இளைஞர்களை கொரில்லா நடவடிக்கை மூலம் ஒருங்கிணைத்தார்கள்.

கட்டவிழ்ந்த வன்முறை

  • இவ்வியக்கம் செப்டம்பர் 1942லிருந்து தாக்குதல்களையும் அரசின் தொலைத்தொடர்பு வசதிகளான தந்திக்கம்பிகளையும் இருப்புப் பாதைகளையும் இரயில் நிலையங்களையும் நாசமாக்குவதையும் அரசு அலுவலகங்களுக்கு நெருப்பு வைப்பதையும் உத்தியாகக்கொண்டிருந்தது.
  • புரட்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளில் ‘தேசி யவாத அரசை’ நிறுவிவிட்டதாக பறைசாற்றிக்கொண்டனர்.
  • இதன் ஒரு உதாரணமாகவங்காளத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் 1944 வரை ஏற்படுத்தப்பட்டிருந்த ‘தம்லுக் ஜாட்டியா சர்க்கார்’ (Tamluk Jatiya Sarkar) அரசைக் கூறலாம். சதாராவிலும் ஓர் இணை அரசாங்கம் செயல்பட்டது.
  • காந்தியடிகள் 1943 பிப்ரவரி 10இல் சிறைச்சாலையில் துவக்கிய 21 நாட்கள் உண்ணாவிரதம் ஒரு திருப்புமுனையாக அமைந்து இயக்கத்திற்கு (சில நெறிமுறைகளுக்கு உட்பட்ட வன்முறைக்கும்) வலுவேற்றியது.

இயக்கத்தின் பரவலும் அதன் தீவிரமும்

  • கைதானவர்களின் எண்ணிக்கை 1943ஆம் ஆண்டின் முடிவில் 91,836 என்ற அளவை எட்டியது. அதே காலத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1060 ஆனது.
  • அரசின் 208 காவல் கண்காணிப்பு நிலைகளும் (out post) 332 இருப்புப்பாதை நிலையங்களும் 945 அஞ்சல் அலுவலகங்களும் முற்றிலுமாக அழிக்கப்படவும் சேதத்திற்கு உட்படுத்தப்படவும் இயக்க நடவடிக்கைகள் காரணமாக அமைந்தன.
  • குறைந்தபட்சம் 205 காவல்துறை வீரர்களாவது தங்கள் பணியை விடுத்துப் புரட்சியாளர்களோடு கைக்கோர்த்தார்கள்.
  • ஆசம்கரின் ஆட்சியராக இருந்து புரட்சியாளர்களின் மீது போதுமான நடவடிக்கை எடுக்க தவறியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட R.H. நிப்ளெட் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்தப் பதிவின்படி ‘பிரிட்டிஷார் காவல்துறையினரின் மூலமாகப் பல கிராமங்களைத் தீக்கிரையாக்கியதோடு பல மைல்களுக்குத் தீயைப் பரவவிட்டு ‘வெள்ளை பயங்கரத்தை’ அரங்கேற்றி அடக்குமுறையே ஆட்சிமுறை என்ற அளவுக்கு அக்காலகட்டத்தில் நடந்துகொண்டார்கள்’ என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.

இரகசிய வானொலி ஒலிபரப்பு

  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் புரட்சியாளர்களால் வானொலி பயன்படுத்தப்பட்டமை ஆகும். இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர் உஷா மேத்தா இவ்வியக்கம் காங்கிரஸ், சோஷலிசவாதிகள், ஃபார்வர்டு பிளாக் கட்சி என்று அனைவரின் பங்களிப்பையும் உள்ளடக்கியதாகும்.

காந்தியடிகளின் விடுதலை:

  • 1944 மே 6இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காந்தியடிகள் லின்லித்கோ பிரபுவிற்குப் பின் அக்டோபர் 1943இல் அரசபிரதிநிதிப் பதவியேற்ற ஆர்கிபால்டு வேவல் பிரபு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைச் சுற்றுக்கு ஆயத்தப்படுத்தலானார்.
  • இதனால் தெளிவாக வெளிப்பட்ட செய்தி ஒன்று தான் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர பிரிட்டிஷாருக்கு வேறு வழி இருக்கவில்லை.

நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும்

  • பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் அதிகாரியான கேப்டன் மோகன் சிங் . மோகன் சிங்கின் கட்டுப்பாட்டில் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 45,000 என்ற அளவை எட்டியது.
  • இவர்களில் இருந்து 40,000 பேரைத் தேர்ந்தெடுத்து 1942இன் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்தை மோகன் சிங் பலப்படுத்தினார்.
  • 1943 ஜுலை 2இல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் சென்று சேர்ந்தார். அங்கிருந்து டோக்கியோ சென்று பிரதமர் டோஜோவைச் சந்தித்தார்.
  • சிங்கப்பூருக்குத் திரும்பிய போஸ் 1943 அக்டோபர் 21இல் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை ஏற்படுத்தினார்.

போஸும் இந்திய தேசிய இராணுவமும்:

  • மருத்துவராகப் பணியாற்றியவரும் சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான அம்மு சுவாமிநாதனின் மகளுமான டாக்டர் லட்சுமி, ராணி ஜான்சி என்ற படைப்பிரிவிற்குத் தலைமையேற்றார். சுபாஷ் சந்திர போஸ் 1944 ஜுலை 6இல் தனது ஆசாத் ஹிந்த் ரேடியோவின் மூலம் ரங்கூனிலிருந்து காந்தியடிகளை நோக்கிய ஒரு உரையை ஆற்றினார்.
  • ஆகஸ்டு 1939 இல் இந்திய தேசிய காங்கிரசால் விடுவிக்கப்பட்ட போஸ், இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 1940 ஜுலை 3 அன்று கைது செய்யப்பட்ட அவர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். 1941 ஜனவரி 16-17இன் நள்ளிரவில் தப்பிய அவர், ஹிட்லரையும் கோயபல்ஸையும் சந்தித்தார். ஆசாத் ஹிந்த் ரேடியோவை உருவாக்க அனுமதி வழங்கினர்.

போரில் அச்சு நாடுகளோடு இந்திய தேசிய இராணுவம்:

  • ஷா நவாஸால் வழி நடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவும் (battalion) பங்கெடுத்தது.

இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

  • டெல்லியின் செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் இந்திய தேசிய காங்கிரஸ் தனது மிகச் சிறந்த சட்ட நிபுணர்களைக் கொண்டு அவர்கள் சார்பாக வாதாடியது இந்திய வரலாற்றில் சிறப்பான ஒரு அம்சமாகும்.
  • காந்தியடிகளின் குரலுக்கு இசைந்து ஒத்துழையாமை இயக்கத்தின் பின்புலத்தில் 1920களின் ஆரம்பத்தில் தனது சட்டப்பணிகதைத் துறந்த ஜவஹர்லால் நேரு , நீண்ட இடைவெளிக்குப் பின் தனது கருப்பு அங்கியை அணிந்து இந்திய தேசிய இராணுவ வீரர்களின் சார்பில் வழக்கில் ஆஜரானார் .
  • இந்திய அரசியல் சட்டம், 1935இன் கீழ் தேர்தல் வருவதாக இருந்தாலும் இக்கூட்டங்களில் ஓட்டுக் கேட்பதைவிட பெரும்பாலும் இந்திய தேசிய இராணுவ விசாரணையைப் பற்றிய பேசப்பட்டது.
  • காலணிய ஆட்சியாளர்கள்– ஷா நவாஸ்கான், P.K. ஷெகல் மற்றும் G.S. தில்லான்– ஆகிய இந்திய தேசிய இராணுவத்தின் மூன்று முக்கிய அதிகாரிகளைப் பிரித்தெடுத்து விசாரணை நடத்தியது.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்தி வைத்திருந்த முஸ்லிம் லீக், சிரோமணி அகாலி தளம், இந்து மகாசபை போன்ற அமைப்புகள் எதிர்ப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ள துவங்கியதோடு சிறைப்பட்ட வீரர்களின் வழக்குச் செலவிற்காக நிதி திரட்டவும் செய்தன.
  • முப்படைகளின் தளபதி (Commander-in-chief) அவர்களின் தண்டனையைக் குறைத்ததோடு 1946 ஜனவரி 6இல் அவர்களை விடுதலை செய்தார்.

இரோயல் இந்திய கடற்படையின் கலகம்:

  • HMIS தல்வார் என்ற போர்கப்பலில் மாலுமியாகப் பணியாற்றிய B.C. தத் என்பவர் அக்கப்பலின் பக்கவாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ தத்தின் கைது நடவடிக்கை 1946 பிப்ரவரி 18இல் வெடித்துக் கிளம்பிய கலகத்திற்கு உந்துவிசையாக அமைந்தது.
  • பம்பாயின் கலகச் செய்தி கராச்சியை அடைந்ததும் பிப்ரவரி 19இல் HMIS ஹிந்துஸ்தான் கப்பலின் மாலுமிகளும் கராச்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிறரும் மின்னல் வேகத்தில் போராட்டத்தைத் துவக்கினர்.
  • போராட்ட அலை கடற்படை முழுவதும் பரவியதால் 78 கப்பல்களிலும் 20 கரைசார்ந்த பணியிடங்களிலும் இருந்த 20,000 மாலுமிகள் 1946 பிப்ரவரி 18க்குப் பின் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.
  • மாலுமிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசூர், அம்பாலா நகரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இராயல் இந்திய விமானப்படை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஜபல்பூரில் நிலைகொண்டிருந்த இந்திய இராணுவச் சிப்பாய்களும் போராடலாயினர்.
  • காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் பம்பாய், கல்கத்தா, மதராஸ் நகரங்களின் தொழிற்சங்கப்போராட்டங்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டுக் காலனிய ஆட்சிக்கு எதிரான உணர்வுக் குவியலாகத் தெரிந்தாலும் அவை நீண்டகாலம் நீடிக்க முடியாததால் இறுதியில் மாலுமிகள் சரணடைய வேண்டியதாயிற்று.
  • பம்பாய் நகரில் இருந்த சர்தார் வல்லபாய் படேல் கலகத்தை முடிவிற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார். ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தின் கடைசி அத்தியாயமாகவும் திகழ்கிறது.

இராஜாஜியின் முன்மொழிவும் வேவல் திட்டமும்:

தனிநாடு கோரிக்கை

  • முஸ்லிம் லீக் மார்ச், 1940இல் நிறைவேற்றிய லாகூர் தீர்மானத்தின்படி இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்ற நிலையிலிருந்து அவர்கள் ஒரு தனிநாடு என்ற நம்பிக்கைக்கு மாறிப்போயிருந்தனர். முகமது அலி ஜின்னா மார்ச் 23, 1940 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

இராஜாஜி திட்டம் (C.R. Formula)

  • 1944 ஏப்ரலில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறையில் இருந்த நிலையில் சுமூகமானத் தீர்வை எட்டும் பொருட்டு இராஜாஜி ஒரு முன்மொழிவுத் தீர்மானத்தை வழங்கினார். காந்தியடிகள் ஜூலை, 1944இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் ’இராஜாஜி திட்டத்தை’ அடிப்படையாகக் கொண்டு ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார்.

வேவல் திட்டம்

  • வேவல் பிரபு ஜூன், 1945இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார் .
  • ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், அச்சமயம் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகப் பதவிவகித்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் மாநாட்டில் பங்கெடுப்பதற்காகச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
  • மார்ச், 1945இல் லண்டன் சென்ற வேவல் பிரபு சர்ச்சிலிடம் போருக்குப் பின் எழும் நெருக்கடியைச் சமாளிக்க காங்கிரஸையும், முஸ்லிம் லீக்கையும் இணைத்து ஆட்சியமைக்க ஒப்புதல் பெற்றார்.
  • தீர்மானமெதையும் எட்டாமலேயே ஜூன் 25 முதல் ஜூலை 14 வரை நடந்த சிம்லா மாநாடு முடிவடைந்தது.
  • முஸ்லிம்களின் தேசிய அடையாளமானது 1940இன் லாகூர் தீர்மானத்துக்கும் 1945இன் சிம்லா மாநாட்டுக்கும் பின்னர் முழுமைப்பெற்று அதன் ஒரே நாயகராக ஜின்னா உறுதியாக நிலைப்பெற்றார்.
  • டெல்லியில் ஏப்ரல் 1946இல் நடந்த முஸ்லிம் லீக்கின் சட்டசபை உறுப்பினர்கள் மாநாட்டில் பாகிஸ்தான் ஒரு ‘இறையாண்மை கொண்ட தனிநாடு’ என்று வர்ணிக்கப்பட்டது.
  • சர்ச்சில் பதவியிழந்து அவர் பொறுப்பில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கிளெமண்ட் அட்லி பதவிக்கு வந்தார்.

மௌண்ட் பேட்டன் திட்டம்:

அமைச்சரவைத் தூதுக்குழு

  • இந்திய நாட்டிற்கென்று நியமிக்கப்பட்டிருந்த அரசு செயலரான சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்ஸ், A.V. அலெக்ஸாண்டர், பெதிக் லாரன்ஸ் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தத் தூதுக்குழு மார்ச் 1946இல் இந்தியா வந்தடைந்து முழு அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான அரசை உருவாக்க முனைந்தது. 1946 ஜூன் 6இல் ஜின்னா ஒப்புதல் அளித்தார்.
  • 1946 ஜூலை 7இல் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் குழுவில் பேசிய நேரு இந்திய தேசிய காங்கிரஸ் அந்த முன்மொழிவை ஏற்றுக் கொள்வதாகத் தெரியப்படுத்தினார். ஆனால், இதையடுத்து 1946 ஜூலை 29இல் பேசிய ஜின்னா முஸ்லிம் லீக் அம்முன்மொழிவை நிராகரிப்பதாக அறிவித்தார்.
  • 1946 ஜூன் 15இல் அரசபிரதிநிதி இடைக்கால அரசை நடத்த 14 பேருக்கு அழைப்புவிடுத்தார்.
  • காங்கிரஸ் சார்பாக ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், முஸ்லிம் லீக் சார்பாக முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலி கான், சீக்கியர்கள் சார்பாக சர்தார் பல்தேவ் சிங்கும், பார்சிகளின் சார்பில் சர் N.P. இஞ்சினியரும் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்பாக ஜெகஜீவன் ராமும் இந்திய கிறித்தவர்கள் சார்பாக ஜான் மத்தாயும் ஆவர். 1946 ஜூலை 29இல் முஸ்லிம் லீக் எதிர்ப்பு தெரிவித்ததோடு தாங்கள் சட்டசபையில் பங்கெடுக்கப் போவதில்லை.
  • அரசபிரதிநிதி 1946 ஆகஸ்ட் 12 அன்று, தான் காங்கிரஸ் தலைவர் நேருவை அழைத்து இடைக்கால அரசை உருவாக்கப் போவதாகத் தெரிவித்தார்.
  • நேருவோடு கலந்தாலோசித்த பின் 1946 ஆகஸ்ட் 25இல் தேசிய இடைக்கால அரசின் 12 உறுப்பினர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது.
  • அவர்கள் நேரு உட்பட வல்லபாய் படேல், இராஜேந்திர பிரசாத், ஆசப் அலி, இராஜாஜி, சரத் சந்திர போஸ், ஜான் மத்தாய், சர்தார் பல்தேவ் சிங், சர் ஷாஃப்த் அகமது கான், ஜெகஜீவன் ராம், சையது அலி ஸாகீர் மற்றும் குவர்ஜி ஹொர்முஸ்ஜி பாபா ஆகியோர் ஆவர்.
  • ஹரி கிருஷ்ண மஹ்தபின் இடத்தில் சரத் சந்திர போஸ் நியமிக்கப்பட்டார். அது போலவே பார்சி இனத்தில் N.P. இஞ்சினியர் இடத்தில் குவர்ஜி ஹொர்முஸ்ஜி பாபா நியமிக்கப்பட்டார்.
  • ஆசப் அலி, ஷாபத் அகமது கான், மற்றும் சையது அலி ஸாகீர் ஆகியோர்.
  • முஸ்லிம் லீக் 1946 ஆகஸ்ட் 16இல் நேரடி நடவடிக்கை செயலில் டெல்லியில் வீடுகளை இழந்த இஸ்லாமியர்கள் தற்காலிக முகாம்களில் (புராணா கிலா என்ற பழையக் கோட்டை போன்ற இடங்களில்) தங்கவைக்கப்பட்டனர்.
  • 1946 செப்டம்பர் 9 நேரு அச்சமயம் இடைக்கால அரசிற்குத் தலைமை ஏற்றிருந்தார். நேருவும் மற்ற பதினோரு நபர்களும் 1946 செப்டம்பர் 2இல் பதவியேற்றனர். முஸ்லிம் லீக் அவரது அழைப்பை ஏற்றாலும் ஜின்னா அமைச்சரவையில் பங்கெடுக்க மறுத்துவிட்டார்.
  • இடைக்கால அமைச்சரவை 1946 அக்டோபர் 26இல் மறுசீரமைக்கப்பட்டது. முஸ்லிம் லீக் சார்பில் பங்குபெற்றோர் லியாகத் அலி கான், I.I. சுந்துரிகர், A.R. நிஷ்தர், கஸன்பர் அலி கான் மற்றும் ஜோகேந்திர நாத் மண்டல் ஆகியோர் ஆவர்.
  • காங்கிரஸ் ஜூலை-ஆகஸ்ட் 1946இல் நடந்த தேர்தலில் 210ற்கு 199 பொது இடங்களைப் பெற்றுப் பெரும் வெற்றியைக் குவித்தது.
  • அணியில் 76 இடங்கள் இருந்தன. 76 இடங்களை 1946 டிசம்பர் 9இல் கூடிய முதல் சட்டசபையில் 207 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வேவல் பிரபு 1947 மார்ச் 22இல் அரசபிரதிநிதி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அப்பதவிக்கு மௌண்ட்பேட்டன் பிரபு நியமிக்கப்பட்டார்.

மௌண்ட்பேட்டன் திட்டம் :

  • காங்கிரஸ் செயற்குழு 1947 மே 1இல் இந்திய பிரிவினைத் திட்டத்திற்கு உடன்படுவதாக மௌண்ட்பேட்டனிடம் தெரிவித்தது.
  • குறித்த தேதிக்கு முன்பாகவே 1947 ஆகஸ்ட் 15இல் இந்தியாவைவிட்டு மொத்தத்தில் விலக விரும்புவதாகத் தெரிவித்தார்.
  • அனைத்திந்தியக் காங்கிரஸ் குழு 1947 ஜூன் 15இல் கூடிய போது கோவிந்த் பல்லப் பந்த் இந்தியப் பிரிவினைக்கான தீர்மானத்தை முன்னெடுக்க அது நிறைவேற்றப்பட்டது.
  • 1) அமைச்சரவைத் தூதுக்குழு நியமிக்கப்பட்டமை

    2) இடைக்கால அரசின் உருவாக்கம்

    3) சட்டமன்றத்தின் தோற்றம்

    4) காங்கிரசிற்கும், முஸ்லிம் லீக்கிற்குமிடையே ஏற்பட்ட பிளவு நாட்டின் பிரிவினைக்கும் இறுதியாக விடுதலைக்கும் இட்டுச்சென்றமை.


Share with Friends