Easy Tutorial
For Competitive Exams

Group 4 - இந்திய தேசிய இயக்கம் INM - தேசிய மறுமலர்ச்சி Notes (12th Std New Book)

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமூகச் சீர்திருத்தங்களுக்காக மேற்கொள்ளபட்ட இயக்கங்கள், போராட்டங்கள்,குடிமை உரிமை வேண்டுகோள்கள் ஆகியவையே இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு தோன்ற காரணமாக அமைந்தது .
  • அவர் கி.பி. (பொ .ஆ) 1915இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வருகை .
  • 1919இல் இந்திய தேசிய இயக்கத்திற்கு அவர் தலைமையற்றதிலிருந்து இந்திய தேசியம் மிகப்பெ ரும் மக்கள் இயக்கமாக மாறியது.

சமூகப் பொருளாதாரப் பின்னணி :

1. புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகள்

  • நிலவரியானது, விவசாயிகளுடன் விளைச்சலைப் பகிர்ந்து கொள்வதாய் அமைந்திருந்தது.
  • புதிய நில நிர்வாகக் கொள்கையின் இரண்டு பாதிப்புகள்:
    • நிலத்தை விற்பனைப் பொருளாக்குவது,
    • இந்தியாவில் வேளாண்மையை வணிகமயமாக்குவது
    ஆகிய இரண்டையும் அவர்கள் நிறுவனமாகவே ஆக்கினர்.
  • வரி/குத்தகை செலுத்தப்படவில்லை என்பதற்காக அரசு நிர்வாகம் நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து, அந்நிலங்களை மற்றவர்களுக்கு ஏலத்திற்கு விடப்பட்டன.

2. கட்டுப்பாடுகளற்ற வணிகக் கொள்கை,

சுதந்திர வணிகம் (laissez faire):

  • ஆங்கில அரசு கட்டுப்பாடுகளற்ற சுதந்திர வணிகம் (laissez faire) எனும் கொள்கையைப் பின்பற்றியது.
  • பருத்தி, சணல், பட்டு ஆகிய கச்சாப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ,இக்கச்சாப் பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டப் பொருட்கள் மீண்டும் இந்தியச் சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
  • கச்சாப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கான இடமாக இந்தியா மாறியது.
  • இந்தியக் கைத்தறி நெசவுத் துணிகளைக் காட்டிலும் இறக்குமதி செய்யப்பட்டத் துணிகள் குறைந்த விலையில் கிடைத்தன.
  • இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழிற்சாலைப் பயிர்களான அவுரி (Indigo) மற்றும் ஏனையப் பயிர்களை உற்பத்தி செய்யும்படி இந்திய விவசாயிகள் வற்புறுத்தப்பட்டனர்.
  • வேளாண்மை பாதிக்கப்பட்டு உணவு பற்றாக்குறைக்கு இட்டுச் சென்றது.
  • 1859-60இல் மேற்கொள்ளப்பட்ட இந்த இண்டிகோ புரட்சியின் மூலம் விவசாயிகள் பண்ணையார்களை வடக்கு வங்காளத்திலிருந்து வெளியேற்றினர்.

3. பஞ்சங்களும் இந்தியர்கள் ஆங்கிலேயரின் கடல் கடந்த காலனிகளில் குடியேறுதலும்

பஞ்சங்கள்

  • ஆங்கிலேயர்கள் பஞ்சங்களின் போதும் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றினர். இதன் விளைவாக ஆங்கிலேயரின் ஆட்சியில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் மாண்டனர்.
  • 1770-1900 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டகாலப்பகுதியில் பஞ்சத்தின் காரணமாக 25 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 1891 முதல் 1900 வரையிலான பத்தாண்டுகளில் பஞ்சத்தினால் மட்டுமே இந்தியாவில் பத்தொன்பது மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மெட்ராஸ் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் வில்லியம் டிக்பை குறிப்பிட்டுள்ளார்.
  • 1866இல் ஒரிசா பஞ்சத்தின்போது ஒன்றரை மில்லியன் மக்கள் பட்டினிக்குப் பலியான நிலையில் ஆங்கிலேயர் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்தனர்.
  • 1876- 1878 காலப்பகுதியில் தொடர்ந்து இரண்டாண்டுகள் பருவமழைப் பொய்த்துப் போனதால் மதராஸ் மாகாணத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.
  • ஒரிசா பஞ்சத்தின் போது பின்பற்றப்பட்ட தலையிடாக் கொள்கையையே அரசப்பிரதிநிதி லிட்டன் பின்பற்றினார்.
  • மதராஸ் மாகாணத்தில் 3.5 மில்லியன் மக்கள் பஞ்சத்திற்குப் பலியானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்

  • 1815 இல் சிலோன் ஆளுநர் மதராஸ் மாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் பெருந்தோட்டங்களில் ( சிலோன் (ஸ்ரீலங்கா), மொரிஷியஸ், ஃபிஜி, மலேயா, கரீபியன் தீவுகள், தென்னாப்பிரிக்கா - காபி, தேயிலை, கரும்பு ) வேலை செய்யக் “கூலிகளை” அனுப்பிவைக்கக் கேட்டுக் கொண்டார்.
  • 1833, 1843 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள் அரசாங்கத்தின் தூண்டுதல் இல்லாமலேயே மக்கள் புலம்பெயர்ந்து செல்லும் நிலையைஉருவாக்கியது.
  • 1843இல் பிரிட்டிஷ் இந்தியாவில் அடிமைமுறை ஒழிக்கப்பட்டதால் பேரரசின் காலனிகளுக்கு குடிபெயரும் செயல்பாடுகள் ஊக்கம் பெற்றன.
  • 1837இல் தமிழ்நாட்டிலிருந்து குடிபெயர்ந்து இலங்கையில் காபித் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 10,000.தொழிலின் வேகமான வளர்ச்சியால் தொழிலாளர்களின் தேவை அதிகரித்தது.
  • 1846இல் 80,000 என மதிப்பிடப்பட்ட தமிழ் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1855இல் 1,28,000 ஆனது.
  • 1877இல் ஏற்பட்ட பஞ்சத்தினால் இலங்கையில் ஏறத்தாழ 3,80,000 தமிழ் கூலித்தொழிலாள ர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

கூலித்தொழிலாளர்களின் இறப்பு விகிதம்

  • 1856-1857இல் கல்கத்தாவிலிருந்து டிரினிடாட் சென்ற கப்பலில் பயணம் செய்த ஒப்பந்தக் கூலித்தொழிலாளர்களின் இறப்பு விகிதம் பின்வருமாறு:
    ஆண்களில்-12.3 %
    பெண்களில்-18.5 %
    சிறுவர்களும்-28 %
    சிறுமிகளும்-36 %
    குழந்தைகளும்-55 %
  • மொ ரிஷியஸ், நீரிணைக் குடியேற்றங்கள் (Strait Settlements), கரீபியன் தீவுகள், டிரினிடாட், ஃபிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களுக்கும் ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களாகக் குடிபெயர்ந்து செல்ல இந்தியர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
  • 1843இல் மொ ரிஷியஸில் 30,218 ஆண்களும் 4,307 பெண்களும் குடியேறியதாக அரசே அறிவித்தது.
  • நூற்றாண்டின் இறுதியில் 5,00,000 தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்தது மொரிஷியஸ் சென்றனர்.

மேற்கத்தியக் கல்வியும் அதன் தாக்கமும்

ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவில் கல்வி

  • காலனிய காலத்திற்கு முந்தைய இந்தியாவில் கல்வியானது சாதி, மத அடிப்படையில் துண்டுபட்டிருந்தது.
  • வித்யாலயங்கள், சதுஸ்பதிகள் என்றழைக்கப்பட்ட உயர்தரக் கல்விக் கூடங்களில் கல்வி பயின்றனர்.
  • புனிதமான மொழி எனக் கருதப்பட்ட சமஸ்கிருத மொழி வழியில் அவர்கள் கல்வி கற்றனர்.
  • இம்முறையிலிருந்த மற்றுமொரு குறைபாடு பெண்களும் ஒடுக்கப்பட்டோரும் ஏனைய ஏழை மக்களும் கல்வியறிவு பெறுவதிலிருந்து தடை செய்யப்பட்டதாகும்.
  • கல்வி கற்பதில் மனப்பாட முறைக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

காலனியரசின் பங்களிப்பு: மெக்காலே கல்வி முறை

  • ஆங்கிலேயர்க்குத் தங்களிடம் பணி செய்ய பெரும் எண்ணிக்கையிலான கல்வி கற்ற நபர்கள் தேவைப்பட்டனர்.
  • இந்நோக்கத்தில்தான் 1835இல் இந்தியக் கவுன்சில் ஆங்கிலக் கல்விச் சட்டத்தை இயற்றியது.
  • ஆங்கில முறையை வடிவமைத்தவர் - T.B. மெக்காலே
  • 1823இல் பொதுக்கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது.
  • T.B. மெக்காலே 1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர்.
  • இவ்வமைப்புப் பின்னர் இரண்டு குழுக்களாகப் பிரிந்தது.
    • கீழ்த்திசைக் குழு - பிராந்திய மொழிகளில் கல்வி
    • ஆங்கில மரபுக்குழு - ஆங்கில மொழி கல்வி
    கற்பிக்கப்பட வேண்டும் எனும் கருத்தை முன் வைத்தது.
  • 1835இல் அவர் தனது புகழ்பெற்ற “இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் (Minute on Indian Education)” எனும் குறிப்புகளை வெளியிட்டார்.
  • 1857இல் பம்பாய், சென்னை, கல்கத்தா ஆகிய இடங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.
  • ஆங்கிலேயர் கற்றறிந்த இந்திய மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி அதை பாபு வர்க்கமென ஏளனப்படுத்தினர்.

சமூக, சமய சீர்திருத்தங்கள்

  • 1828இல் ராஜா ராம்மோகன் ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவினார்.
  • பிரார்த்தனை சமாஜம் (1867) ஆரிய சமாஜம் (1875) ஆகியவை நிறுவப்பெற்றன.
  • இஸ்லாமியரிடையே அலிகார் இயக்கம் இதே பணியை மேற்கொண்டது.
  • சர் சையத் அகமது கான் அலிகார் இயக்கத்தை வழிநடத்தினார்.
  • சையத் அகமது கான் ஆங்கிலோ-ஓரியன்டல் கல்லூரியை ஆரம்பித்தார்
10058.பின்வருவனவற்றுள் தவறானவை எது எவை?
I. சர் சையத் அகமது கான் அலிகார் இயக்கத்தை வழிநடத்தினார்.
II.சர் சையத் அகமது கான் சுத்தி இயக்கத்தை ஆதரித்தார்.
III.சையத் அகமது கான் ஆங்கிலோ-ஓரியன்டல் கல்லூரியை ஆரம்பித்தார்.
II மட்டும்
I மற்றும் II
I மற்றும் III
I, II மற்றும் III

தேசியத்தின் எழுச்சிக்கு ஏனைய முக்கியக் காரணங்கள்

1857 குறித்த ஓயாத நினைவுகள்

  • 1857இன் பேரெழுச்சியே இந்திய தேசிய இயக்கத்தின் பிறந்த நாளாகும்.
  • 1857 ஜூன் – செப்டம்பர் மாதங்களில் ஆங்கிலப் படைகளால் டெல்லி முற்றுகையிடப்பட்டது.
  • ஆளுநர் எல்பின்ஸ்டன், அப்போதைய இந்தியாவின் எதிர்கால அரசப்பிரதிநிதி (1864) சர்ஜான் லாரன்ஸுக்கு எழுதிய பதிவு.
  • “நண்பன் பகைவன் என்ற வேறுபாடின்றி முழுவீச்சிலான பழி வாங்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கொள்ளையடிப்பதைப் பொறுத்தமட்டில் நாம் உண்மையாகவே நாதிர்ஷாவை மிஞ்சிவிட்டோம்”.

இனப்பாகுபாடு

  • அரசு உயர்பதவிகளில் இந்தியர்களைப் பணியமர்த்தாமல் திட்டமிட்டு விலக்கி வைக்கப்பட்டதை மக்கள் இந்திய எதிர்ப்புக் கொள்கையின் நடவடிக்கையாகக் கருதினர்.
  • குடிமைப்பணித் தேர்வுகளை ஒரே நேரத்தில் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் நடத்த வேண்டுமென இந்தியாவின் கற்றறிந்த நடுத்தர வர்க்கம் வைத்த வேண்டுகோளை ஆங்கில அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தது.

இந்தியர்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் நடவடிக்கைகள்

  • இந்திய தண்டனைச் சட்டம் (1870) பிரிவு 124A அடக்குமுறை ஒழுங்காற்றுச் சட்டம்
  • பத்திரிக்கைகளைத் தணிக்கைக்கு உட்படுத்திய பிராந்திய மொழிச் சட்டமும் (1878) எதிர்ப்புகளைத் தூண்டின.
  • இல்பர்ட் மசோதாவின் மூலம் இந்திய நீதிபதிகள் ஐரோப்பியர்களை விசாரிக்க அதிகாரம் பெற்றனர்.

பத்திரிகைகளின் பங்கு

  • ராஜா ராம்மோகன் ராயின் வங்கமொழிப்பத்திரிகையான சம்வத் கௌமுதி (1821) பாரசீக மொழிப் பத்திரிக்கையான மிராத்-உல்-அக்பர் ஆகியவை மக்கள் நலன் சார்ந்த முக்கியப் பொது விஷயங்களை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் முற்போக்காக பங்காற்றின.
  • அமிர்த பஜார் பத்திரிக்கா, தி பாம்பே கிரானிக்கல், தி ட்ரிப்யூன், தி இண்டியன் மிரர், தி இந்து, சுதேசமித்திரன் ஆகியன முக்கியமானவை.

இந்தியாவின் பழம் பெருமையை வணங்குதல்

  • வில்லியம் ஜோன்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், மேக்ஸ் முல்லர் போன்ற கீழையுலக அறிஞர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு அராபிய, பாரசீக, சமஸ்கிருத மொழிகளிலிருந்த மத, வரலாற்று இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அனைவருக்கும் கிடைக்கச் செய்தனர்.

இந்தியாவில் சங்கங்கள் உருவாதல்

சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association - MNA)

  • 1852 பிப்ரவரி 26இல் சென்னைவாசிகள் சங்கம் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • நிலவுடைமை வணிக வர்க்கத்தினரின் அ மைப்பாகும் .
  • கஜுலா லட்சுமிநரசு என்பவரே இவ்வமைப்பு உருவாவதற்கு உந்து சக்தியாய்த் திகழ்ந்தவர்.
  • 1852 டிசம்பரில் சமர்ப்பித்த மனுவில் ரயத்துவாரி, ஜமீன்தாரி முறைகள் வேளாண் வர்க்கத்தினரைக் கடும் துன்பங்களுக்கு உள்ளாக்கியதைச் சுட்டிக் காட்டியது.
  • சென்னைவாசிகள் சங்கத்தின் மனு மார்ச் 1853இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
  • 1853ஆம் ஆண்டு பட்டயச்சட்டம் இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சித் தொடர அனுமதி வழங்கியது.
  • இந்தியாவில் கம்பெனியின் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையைக் கொண்ட பதினான்காயிரம் நபர்களால் கையெழுத்திடப்பட்ட தனது இரண்டாவது மனுவை ஆங்கிலப் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.
  • 1866இல் லட்சுமிநரசு இயற்கை எய்தினார்.
  • 1881இல் இவ்வமைப்பு இல்லாமல் போயிற்று.
  • இவ்வமைப்பு தனது மனுக்கள் மூலம் சுட்டிக்காட்டிய குறைபாடுகளும், நடத்தியப் போராட்டங்களும் செல்வந்தர்களின் குறிப்பாகச் சென்னை மாகாண நிலவுடைமையாளர்களின் எண்ணத்தின்படி நடந்தவையாகும்.
  • குறைபாடு யாதெனில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும், மக்களின் குறைகளை ஓங்கி ஒலிக்கச் செய்து, அக்குறைகளை நிவர்த்தி செய்ய காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் தேசிய அளவிலான அரசியல் சார்ந்த அமைப்பாக இல்லாமல் போனதுதான். அந்த இடைவெளியை இந்திய தேசிய காங்கிரஸ் நிரப்பியது.

சென்னை மகாஜன சங்கம் (Madras Mahajana Sabha - MMS)

  • மே, 1884இல் சென்னை மகாஜன சங்கம் நிறுவப் பெற்றது.
  • 1884 மே 16இல் நடைபெற்ற தொடக்க விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள் G. சுப்ரமணியம், வீரராகவாச்சாரி , அனந்தா சார்லு, ரங்கையா, பாலாஜிராவ், சேலம் ராமசாமி ஆகியோராவர்.
  • சென்னை மகாஜன சபையின் பிராந்திய மாநாடு நடைபெற்று முடிந்த பின்னர் அதன் தலைவர்கள் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் கலந்துகொண்டு சென்னை மகாஜன சபையை இந்திய தேசிய காங்கிரசோடு இணைத்தனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress - INC)

  • 1875இல் இறக்குமதியாகும் பருத்தி இழைத் துணிகளின் மீது இறக்குமதிவரி விதிக்கப்பட வேண்டுமென ஜவுளி ஆலை உரிமையாளர்கள் இயக்கம் நடத்தினர்.
  • 1877இல் அரசுப் பணிகள் இந்திய மயமாக்கப்பட வேண்டுமென்றக் கோரிக்கை ஓங்கி ஒலித்தது.
  • 1878ஆம் ஆண்டு வட்டார மொழிப் பத்திரிகைச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன.
  • இல்பர்ட் மசோதாவிற்கு ஆதரவாக 1883இல் கிளர்ச்சிகள் நடைபெற்றன.
  • ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (A.O. Hume) எனும் பணி நிறைவு பெற்ற இந்தியக் குடிமைப் பணி (Indian Civil Service – ICS) அதிகாரி டிசம்பர் 1884இல், சென்னையில் பிரம்ம ஞான சபையின் கூட்டமொன்றிற்குத் தலைமை ஏற்றிருந்தார்.
  • இந்திய தேசிய காங்கிரஸ் 1885 டிசம்பர் 28இல் பம்பாயில் உருவாக்கப்பட்டது.
  • W.C. பானர்ஜி இவ்வமைப்பின் முதல் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

தொடக்ககால தேசியவாதிகளின் பங்களிப்பு (1885-1915)

  • 1890களின் பிற்பகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசுக்குள்ளே கருத்து வேற்றுமைகள் வளர்ந்தன.
  • பிபின் சந்திரபால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் வெறுமனே மனுக்கள் எழுதுவது, மன்றாடிக் கேட்டுக் கொள்வது, விண்ணப்பம் செய்வதுபோன்ற அணுகு முறைகளுக்கு மாற்றாகத் தீவிரமான அணுகுமுறைகளைப் பரிந்துரைத்தனர்.
  • இத்தன்மையுடையோர் மிதவாத தேசியவாதிகளுக்கு நேரெதிராக “தீவிர தேசியவாதிகள்” என்றழைக்கப்பட்டனர்.
  • 1897இல் திலகர் “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழங்கிய போது அவர்களின் நோக்கம் தெளிவாகத் தெரிந்தது.
  • 1885இல் இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டபோது அதன் உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியினர் ப த்திரிகையாளர்களாக இருந்தனர்.
  • சுரேந்திரநாத் பானர்ஜி பெங்காலி (Bengalee) என்னும் செய்திப்பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
  • பாலகங்காதர திலகர் கேசரி, மராட்டா ஆகியப் பத்திரிகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்தார்.
  • இந்தியாவில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நாடுதழுவிய எதிர்ப்புக்கு அவர் (பாலகங்காதர திலகர்) அழைப்பு விடுத்தார்.
  • 1897 ஜுலை 27இல் திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A யின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
10060.பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
எட்டயபுரம் - கலெக்டர் ஆஷ்
ஜாலியன் வாலாபாக் துயரம் - ஹண்டர் கமிட்டி
சுயராஜ்ஜிய கட்சி — B. G. திலகர்
மதுவிலக்கு - வ.உ.சிதம்பரனார்

நௌரோஜியும் அவர் முன்வைத்த சுரண்டல் கோட்பாடும்

  • நௌரோஜி ‘இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்’ தலைவர்களில் ஒருவராவார்.
  • 1870களில் பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1892இல் இங்கிலாந்துப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெ டுக்கப்பட்ட நிலையில் அவர் லண்டனில் ‘இந்திய சங்கம் (Indian Society - 1865), கிழக்கிந்தியக் கழகம் (East Indian Association - 1866) எனும் அமைப்புகளை உருவாக்கினார்.
  • அவர் மூன்று முறை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • அவர் எழுதிய ‘வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்’ (Poverty and Un-British Rule in India - 1901) எனும் புத்தகமே இந்திய விடுதலைப்போராட்டத்திற்கு அவர் செய்த முக்கியப் பங்களிப்பாகும்.
  • இந்நூலில் அவர் “செல்வச் சுரண்டல்” எனும் கோட்பாட்டை முன் வைத்தார்.
  • தாயகக் கட்டணம் (Home Charges) எனும் பெயரில் ஆண்டொன்றுக்கு 30 மில்லியன் பவுண்டுகள் நஷ்டம் ஏற்படுத்துவதாக ந ௌரோஜி உறுதிபடக் கூறினார்.

Share with Friends