என் . ஐ. ஏ அமைப்பு எதற்காக அமைக்கப்பட்டது ?
மும்பை தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக, கடந்த 2009-ம் ஆண்டு, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைக்கப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை சட்டப்படி இது உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், என்.ஐ.ஏ.வை மேலும் வலுப்படுத்துவதற்காக, தேசிய புலனாய்வு முகமை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் இந்தியர்களுக்கும், இந்தியர்களின் நலனுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்கள் பற்றி விசாரிப்பதற்காக என்.ஐ.ஏ.வுக்கு அதிகாரம் அளிக்க தேசிய புலனாய்வு முகமை சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியது.