ஒரு தொடர்வண்டியில் அது பயணத்தினை தொடங்கும்போது பயணிகளால் நிரப்பப்பட்டுள்ளது. முதல் நிலையத்தில் 1/3 பங்கு பயணிகள் இறங்கவும் 280 பயணிகள் ஏறவும் செய்தனர். இரண்டாம் நிலையத்தில் 1/2 பங்கு பயணிகள் இறங்கவும் 12 பேர் ஏறவும் செய்தனர். மூன்றாம் நிலையத்திற்கு செல்லும்போது தொடர்வண்டியில் மொத்தம் 248 பயணிகள் உள்ளனர் எனில் தொடர்வண்டி பயணத்தினை தொடங்கும்போது இருந்த பயணிகளின் எண்ணிக்கையைக் காண்க.
தொடக்கத்தில் தொடர்வண்டியில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை = x என்க.
முதல் நிலையத்திற்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கை = (x - (x/3)) + 280
= (2x/3) + 280)
இரண்டாம் நிலையத்திற்கு பிறகு பயணிகளின் எண்ணிக்கை = 1/2 ((2x/3) + 280) + 12
1/2 (2x/3) + 280) + 12 = 248
(2x/3) + 280) = (248 - 12) * 2
((2x/3) + 280) = 236 * 2
(2x/3) = 472 - 280
x = 192 * (3/2)
X = 96 * 3
தொடக்கத்தில் தொடர்வண்டியில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை = 288