மனிதன் நிலவில் கால்பதித்து எவ்வளவு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன ?
1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் நிலவில் முதல் முறையாக கால் பதித்தனர். அன்று எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்டாடும் வகையில் கூகுள் இந்த சிறப்பு வீடியோ டூடுலை வெளியிட்டுள்ளது. 1969-ம் ஆண்டு, ஜூலை மாதம் 16-ம் தேதி, அப்பல்லோ 11 என்ற விண்வௌி ஓடத்தை அமெரிக்கா ஏவியது. நிலவில் இறங்கும் இந்தத் திட்டத்தில் கட்டளை அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ராங்கும், கட்டளை விமானியாக மைக்கேல் காலின்ஸும், எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர். நான்கு நாட்கள் பயணத்துக்குப் பின்னர் அந்த விண்வௌி ஓடம் ஜூலை 20-ம் தேதி நிலவில் இறங்கியது. நிலவு பயணத்தை முடித்துக் கொண்டு ஜூலை 25-ம் தேதி 1969-ம் ஆண்டு பூமிக்கு வெற்றிகரமாக திரும்பினர். அதனைத்தொடர்ந்து 1972-ம் ஆண்டு 10 விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.