Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 19th July 19

47434.‘பரமார்ஷ்’ யுஜிசி திட்டத்தை எந்த அமைச்சர் தொடங்கி வைத்தார்?
நிதி அமைச்சர்
மனித வள மேம்பாட்டு அமைச்சர்
சிறுபான்மை விவகார அமைச்சர்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்
Explanation:
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் “நிஷாங்க்” புதிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு கவுன்சில் (என்ஏஏசி) அங்கீகார ஆர்வமுள்ள நிறுவனங்களை வழிநடத்துவதற்கான பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) ‘பரமார்ஷ்’ திட்டத்தை தில்லியில் தொடங்கினார்.
47435.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தீட்சாரம்பை- மாணவர் ஊக்குவித்தல் திட்டத்திற்கான வழிகாட்டியை எங்கு வெளியிட்டார்?
மும்பை
வாரணாசி
புது தில்லி
கான்பூர்
Explanation:
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்’ மாணவர் ஊக்குவித்தல் திட்டத்திற்கான யுஜிசி வழிகாட்டியை – தீட்சாரம்பை புதுதில்லியில் வெளியிட்டார் .
47436.பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக தற்போது நியமிக்கப்பட்டவர் யார் ?
ராஜ்நாத் சிங்க்
அமித் ஷா
சதானந்த கவுடா
விவேக் குமார்
Explanation:
வி வேக் குமார், கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை பணியில் அதிகாரியாக தேர்வானவர். மேலும் விவேக் குமாா் பதவியேற்கும் நாளில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை அவா் அந்தப் பொறுப்பில் தொடா்வாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training- DOPT) வெளியிட்டுள்ளது. ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக (DIPLOMATIC)பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் இயக்குநராக விவேக் குமார் பணியாற்றினார். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
47437.இந்தியாவில் இருந்து எந்த நோயை அகற்ற சுகாதார அமைச்சகத்திற்கும் ஆயுஷ் அமைச்சகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது?
மலேரியா
சின்னம்மை
காசநோய்
போலியோ
Explanation:
ஆயுஷ் அமைச்சகம் மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இடையே “காசநோய் இல்லா இந்தியா” முன்முயற்சிக்கான கொள்கை, திட்டமிடல் மற்றும் திட்ட அமலாக்க மட்டத்தில் இடைத்துறை ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
47438.சந்திரயான் -2 விண்ணில் என்று ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது ?
ஜூலை 21
ஜூலை 22
ஜூலை 23
ஜூலை 24
Explanation:
சந்திரயான் -2 ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. "நாங்கள் நிலவுக்கு போகிறோம் - இந்த சமயம் அங்கே தங்குகிறோம் என கூறி உள்ளது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பணிபுரியும் நாசா ஸ்பேஸ் சூட் பொறியாளர் லிண்ட்சே அட்சீசன் கேள்வி பதில் அமர்வின் இணைப்பைப் பகிர்ந்துள்ளார்.
47439.சாகர் மைத்ரி மிஷன் எந்த அமைப்பின் முன்முயற்சி?
DRDO
ISRO
NDRF
HAL
Explanation:

சாகர் மைத்ரி என்பது டிஆர்டிஓவின் ஒரு தனித்துவமான முன்முயற்சியாகும், இது சமூக-பொருளாதார அம்சங்களில் நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் “பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (சாகர்)” என்ற கொள்கை அறிவிப்பின் பரந்த நோக்கத்துடன் ஒத்து போவதாகவுள்ளது.
47440.எந்த நாட்டில் 1,200 வருடங்கள் பழமையான மசூதி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது ?
இஸ்ரேல்
பிரான்ஸ்
பிரிட்டன்
ஆஸ்திரேலியா
Explanation:
இஸ்ரேல் நாட்டில் 1,200 வருடங்கள் பழமையான மசூதியை தொல்லியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இஸ்ரேல் நாட்டின் தெற்கே நெகெவ் பாலைவன பகுதியில் ரகத் நகரில் புதிய மசூதி ஒன்று கட்டுவதற்கான பணிகள் நடந்தன. இதில் கட்டிடம் ஒன்று தெரிந்துள்ளது. செவ்வக வடிவிலான திறந்த வெளியை கொண்ட மசூதி என அது அறியப்பட்டு உள்ளது. இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி, தெற்கு பகுதியை பார்த்தபடி மிராப் அல்லது இறைவணக்கம் செலுத்தும் பகுதி உள்ளது.அரேபியர்கள் கடந்த 636ம் ஆண்டில் இந்த பகுதியை வெற்றி பெற்ற பின்னர் இஸ்ரேலில் இஸ்லாம் மதம் தோன்ற தொடங்கியது. அந்த காலத்தில் இருந்த மசூதிகளில் இதுவும் ஒன்று என இஸ்லாமிய மதத்தின் தொடக்ககால வரலாறு பற்றிய நிபுணர் கிடியோன் ஆவ்னி கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளது.
47441.WEF மையம், எந்த மாநில அரசுடன் இணைத்து ட்ரோன்கள் வழியாக மருத்துவ பொருட்களை அனுப்பவுள்ளது?
தெலுங்கானா
ஆந்திர பிரதேஷம்
கர்நாடகா
குஜராத்
Explanation:
WEF மையம், தெலுங்கானா அரசு ட்ரோன்கள் வழியாக மருத்துவ பொருட்களை அனுப்பவுள்ளது.
47442.எந்த நாட்டிற்கான இந்திய தூதராக உபேந்தர் சிங் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார் ?
பனாமா
இஸ்ரேல்
தாய்லாந்து
இங்கிலாந்து
47443.2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பெண்மணி எந்த மாநிலத்தை சேர்ந்தவர் ?
தமிழ்நாடு
கர்நாடக
ஆந்திரா
கேரளா
Explanation:
ப.அனுராதா 2019-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு தமிழகத்தில் முதல் பெண்மணியாக தங்கம் வென்றுள்ளார். 87 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு ஸ்னாச் முறையில் 100 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 121 கிலோ என்ற நிலையில் மொத்தம் 221 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார். அவருக்கு, என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்”
47444.10 வது ஜாக்ரான் திரைப்பட விழா எங்கு நடைபெறுகிறது ?
பெங்களூரு
புது தில்லி
மும்பை
கொல்கத்தா
Explanation:
ஜூலை 18 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள சிரி கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 வது ஜாக்ரான் திரைப்பட விழா நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.
47445.மனிதன் நிலவில் கால்பதித்து எவ்வளவு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன ?
40
45
50
55
Explanation:
1969 ஆம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங்கும், எட்வின் ஆல்ட்ரினும் நிலவில் முதல் முறையாக கால் பதித்தனர். அன்று எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்டாடும் வகையில் கூகுள் இந்த சிறப்பு வீடியோ டூடுலை வெளியிட்டுள்ளது. 1969-ம் ஆண்டு, ஜூலை மாதம் 16-ம் தேதி, அப்பல்லோ 11 என்ற விண்வௌி ஓடத்தை அமெரிக்கா ஏவியது. நிலவில் இறங்கும் இந்தத் திட்டத்தில் கட்டளை அதிகாரியாக நீல் ஆம்ஸ்ட்ராங்கும், கட்டளை விமானியாக மைக்கேல் காலின்ஸும், எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர். நான்கு நாட்கள் பயணத்துக்குப் பின்னர் அந்த விண்வௌி ஓடம் ஜூலை 20-ம் தேதி நிலவில் இறங்கியது. நிலவு பயணத்தை முடித்துக் கொண்டு ஜூலை 25-ம் தேதி 1969-ம் ஆண்டு பூமிக்கு வெற்றிகரமாக திரும்பினர். அதனைத்தொடர்ந்து 1972-ம் ஆண்டு 10 விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
47446.எந்த ஆண்டில் அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் பயணித்து நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் முதன் முதலில் தரை இறங்கினர்?
1959
1969
1979
1989
Explanation:
ஜூலை 20, 1969 இல், அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் “பஸ்” ஆல்ட்ரின் ஆகியோர் அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் பயனித்து சந்திரனில் முதன் முதலில் தரை இறங்கினர்.
47447.சரப்ஜோத் சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
வில்வித்தை
பளு தூக்குதல்
கபடி
துப்பாக்கி சுடுதல்
Explanation:
ஐ.எஸ்.எஸ்.எஃப் ஜூனியர் உலகக் கோப்பையில், ஷூட்டிங்கில் சரப்ஜோத் சிங் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் தங்கம் வென்றார். ஜெர்மனியின் சுஹ்லில் நடந்த போட்டியில் இந்தியாவின் ஒன்பதாவது தங்கம் இதுவாகும்.
47448.இந்தியா-இங்கிலாந்து கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தக குழுவின் 13 வது கூட்டம் எங்கு நடைபெற்றது?
லண்டன்
மான்செஸ்டர்
புது தில்லி
மும்பை
Explanation:
நம் நாட்டின் மத்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல், இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை செயலர் டாக்டர் லியாம் ஃபாக்ஸ்ஸை, ஜூலை 15, 2019 அன்று இந்தியா-இங்கிலாந்து கூட்டு பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவின் (ஜெட்கோ) 13 வது கூட்டத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பு லண்டனில் நடைபெற்றது .
47449.ஜி 7 நிதி அமைச்சர்கள் கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது?
அமெரிக்கா
ஜெர்மனி
இங்கிலாந்து
பிரான்ஸ்
Explanation:
பிரான்சில் ஜி 7 நிதி மந்திரிகள் கூட்டம் நடந்தது. அதில் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை ஒப்புக் கொண்டது, இது அவர்களுக்கு குறைந்தபட்ச வரிவிதிப்பை நிர்ணயிக்கும்.
47450.உலகில் தாய்மொழி இல்லாத நாடு எது ?
நியூசிலாந்து
இந்தியா
ஸ்விட்சர்லாந்து
மலேசியா
47451.எந்த நாட்டிற்கான இந்திய தூதராக சஞ்சீவ் குமார் சிங்கவா நியமிக்கப்பட்டுள்ளார்?
பனாமா
இஸ்ரேல்
செபி
உக்ரைன்
Share with Friends