Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 21st July 19

47472.ஷீலா தீட்சித் மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை எந்த மாநில ஆளுநராக பதவியில் இருந்தார் ?
ஆந்திரா
கர்நாடகா
கேரளா
தமிழ்நாடு
Explanation:
டெல்லி முன்னாள் முதல்-மந்திரியுமான ஷீலாதீட்சித் ( 81) தற்போது காலமானார் . ஷீலா தீட்சித் 1998-ம் ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார். மேலும் ஷீலா தீட்சித் மார்ச் 2014 முதல் ஆகஸ்ட் 2014 வரை கேரள மாநில ஆளுநராகப் பதவி வகித்தார்.
47473.தியாகராஜ பாகவதருக்கு அவரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் எங்கு அமைக்கப்பட உள்ளது ?
மதுரை
தஞ்சாவூர்
திருச்சி
கரூர்
Explanation:
தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் அவரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.ளிமையும் மிகுந்த தியாகராஜ பாகவதரின் கலையுலக வாழ்வு 1934-ம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் அரங்கேறியது. தியாகராஜ பாகவதர் பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.
47474.சி.பா.ஆதித்தனார் எந்த இதழுடன் தொடர்புடையவர் ?
தினமணி
தினத்தந்தி
தினபூமி
தினமலர்
Explanation:
“தமிழக அரசின் சார்பில் ‘தினத்தந்தி’ நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் பெயரில் விருது வழங்கப்படும் என்னும் அறிவிப்பினை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அறிவித்தார். இவ்விருதுடன் ரூ.1 லட்சம் பரிசு தொகை, பாராட்டிதழ், கேடயம் மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
47475.117 குட்டி தீவுகளை கொண்டுள்ள நகரம் எது ?
ரோம்
வெனிசு
துரின்
மிலன்
47476.கைபர் பக்துங்வா மாகாண சட்டசபைக்கு எத்தனை தொகுதியில் தேர்தல் நடந்தது ?
13
14
15
16
Explanation:
பாகிஸ்தானில் கைபர் பக்துங்வா மாகாண சட்டசபைக்கு பழங்குடி மக்கள் வாழ்கிற 16 தொகுதிகளில் முதன்முதலாக தேர்தல் நடந்தது
47477.உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை எவ்வளவு காலம் நீட்டிக்க மசோதா நிறைவேற்றப்பட்டது ?
3 மாதம்
6 மாதம்
9 மாதம்
12 மாதம்
47478.ஜூலை 21 எந்த நாட்டில் விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது ?
பெல்ஜியம்
சிங்கப்பூர்
பொலீவியா
குவாம்
Explanation:
ஜூலை 21 - பெல்ஜியம் – தேசிய நாள் பொலீவியா – மாவீரர் நாள் குவாம் – விடுதலை நாள் (1944) சிங்கப்பூர் – இன சமத்துவ நாள்
47479.இந்த ஆண்டு திருக்குறள் எந்தந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்படவுள்ளது ?
அசாமி
சிந்தி
ஈப்ரு
இவை அனைத்தும்
Explanation:
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கண்ட ஐரோப்பிய தமிழறிஞர் டாக்டர் ராபர்ட் கால்டுவெல்லின் சீரிய தமிழ்ப் பணியினைப் போற்றி சிறப்பிக்கும் வகையில், அன்னாரின் நெறியில் ஒப்பிலக்கண ஆய்வில் தமிழறிஞர்களையும், மாணவர்களையும் நெறிப்படுத்தவும், திராவிட மொழிகளை ஒப்பிட்டு தொடர்ச்சியாக பல்வேறு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளவும், தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ் ஆய்விருக்கை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும். இதற்கென வைப்புத் தொகையாக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சித்திட்டத்தின் கீழ், முதன்முறையாக தமிழ் பல்கலைக்கழகத்தில் 20 கோடி ரூபாய் நிதியில் புதிய கட்டுமான வசதிகள், மேம்பாடு மற்றும் வளர்ச்சிப்பணிகள், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் ஏனைய வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார்
47480.மத்தியபிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல் இடமாற்றம் செய்யப்பட்டு எந்த மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் ?
உத்திரபிரதேசம்
பீகார்
நாகலாந்து
திரிபுரா
Explanation:
மத்தியபிரதேச மாநில கவர்னர் ஆனந்திபென் பட்டேல் இடமாற்றம் செய்யப்பட்டு, உத்தரபிரதேச மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் கவர்னர் லால்ஜி தாண்டன் மத்தியபிரதேச கவர்னராக மாற்றப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீலும், ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான ஜெகதீப் தாங்கர் மேற்குவங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். பா.ஜனதா கட்சியின் தலைவரான ரமேஷ் பயஸ் திரிபுரா கவர்னராக நியமிக்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பாகு சவுகான் பீகார் கவர்னராகவும், ஆர்.என்.ரவி நாகாலாந்து கவர்னராகவும் நியமிக்கப்பட்டனர்.
Share with Friends