Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 17th July 19

47387.சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தவர் யார்?
கிறிஸ்டின் லகார்ட்
கீதை கோபிநாத்
டொமினிக் ஸ்ட்ராஸ்-கான்
ரோட்ரிகோ ராடோ
Explanation:
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார் கிறிஸ்டின் லகார்ட்.
47388.குடியேற்றத் திட்டத்தில் திறமைசாலிகளுக்கான முன்னுரிமையை 57 சதவீதமாக அதிகரிக்க எந்த அரசு முடிவு செய்து உள்ளது ?
கனடா
அமெரிக்கா
நியூசிலாந்தில்
ஆஸ்திரேலியா
Explanation:
அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகரும், டிரம்பின் மருமகனுமான ஜேரட் குஷ்னர், அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய போது, கனடாவில் 53 சதவீதமும், நியூசிலாந்தில் 59 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 63 சதவீதமும், ஜப்பானில் 52 சதவீதமும் மெரிட் அடிப்படையிலான திறமைசாலிகளுக்கு குடியேற்றத்தில் முன்னுரிமை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
47389.முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வசதியாக இந்தியா எந்த நாட்டுடன் சமீபத்தில் ஃபாஸ்ட்-ட்ராக் செயல்முறையை அமைத்தன?
பிரான்ஸ்
இத்தாலி
அமெரிக்கா
ரஷ்யா
Explanation:

முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வசதியாக ஃபாஸ்ட்-ட்ராக் செயல்முறையை இந்தியாவும் இத்தாலியும் அமைத்தன.
47390.உலகிலேயே பெண் எம்.பிக்கள் அதிகம் உள்ள நாடு எது?
ஸ்வீடன்
நார்வே
ஐயர்லாந்து
ஐஸ்லாந்து
47391.இந்தியாவில்முழுமையான கிரகணம் எந்த ஆண்டு தோன்றும் என்று கணித்து உள்ளனர் ?
2020
2021
2022
2023
Explanation:
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே நேர் கோட்டில் பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுந்து அதை மறைக்கிறது. சந்திர கிரகண நிகழ்வின் போது பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே சந்திரனை மறைக்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி சரியான நேர் கோட்டில் அமையாமல் பகுதியளவு நேர்கோடாக வந்தால் பாதி சந்திர கிரகணம் நடக்கும்.
இதுபோன்ற பாதி சந்திர கிரகணம் தான் நேற்று நள்ளிரவு நடந்தது. இது 149 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. இந்த சந்திர கிரகணம் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வளைகுடா, நாடுகளில் தெளிவாக காண முடிந்தது.
47392.எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?
ஹைட்ரஜன்
ஹீலியம்
நிட்ரஸின்
சீசியம்
47393.21 வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் எங்கு தொடங்கியது?
கட்டாக்
மெல்போர்ன்
லண்டன்
கோலாலம்பூர்
Explanation:
21 வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 17 அன்று கட்டாக்கில் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகள் அனைத்தும் இந்த மாதம் 22 ஆம் தேதி அன்று நிறைவுபெறவுள்ளது.
47394.சர்வதேச நீதிக்கான உலக தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
ஜூலை 30
ஜூன் 17
ஜூலை 17
ஜூன் 30
Explanation:
சர்வதேச உலக நீதி தினம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நியூரம்பர்க் மற்றும் டோக்கியோ சோதனைகளுக்குப் பின்னர் உருவாகியுள்ள சர்வதேச நீதிக்கான புதிய மற்றும் பலப்படுத்தும் முறையை அங்கீகரிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை குறிக்கும் நாளாக ஜூலை 17 தேர்வு செய்யப்பட்டது, ஏனெனில் இது ஐ.சி.சி.யை உருவாக்கிய ரோம் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆண்டு நிறைவு நாள்.
47395.பிரான்சின் எல்விஎம்எச் (LVMH) நிறுவனத் தலைமைச் செயலதிகாரி உலக பணக்கார பட்டியலில் இவர் பிடித்த இடம் ?
3
4
2
1
Explanation:
உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த பில்கேட்சை பிரான்சைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் 3-வது இடத்திற்கு தள்ளி 2-வது இடம் பிடித்தார். உலகின் பெரும்பணக்காரர்களின் பட்டியலை புளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் ஏற்கனவே பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
47396.ஜன ஜக்ருக்தா திட்டத்தை எந்த அமைச்சகம் தொடங்கியது?
சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகம்
பாதுகாப்புத் துறை அமைச்சகம்
வெளியுறவுத் துறை அமைச்சகம்
வேதிப்பொருள் மற்றும் உரத்துறை அமைச்சகம்
Explanation:
மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற ஈ மற்றும் கொசு மூலம் பரவும் நோய்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமனா நடவடிக்கைகள் குறித்து சமூகத்தை உணர்த்துவதற்கான சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் டெல்லியில் ஒரு சிறப்பு மூன்று நாள் பிரச்சாரத்தை ஜூலை 17 தொடங்கியது.
47397.இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளிடையே பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சந்திப்பு எந்த நகரத்தில் நடைபெற்றது?
மும்பை
தாஷ்கண்ட்
புது தில்லி
புகாரா
Explanation:
பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் 8 வது செயற்குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.தகவல் பகிர்வு, பரஸ்பர திறன் மேம்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதன் மூலம் பயங்கரவாத எதிர்ப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து குழு விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டது.
47398.சீனாவின் தானியங்கி பேருந்து சோதனை ஓட்டம் எங்கு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. ?
கத்தார்
கம்போடியா
மலேசியா
சிங்கப்பூர்
Explanation:
சீனாவில் இயங்கி வரும் பிரபல நிறுவனம் ஒன்று, ரயில் பெட்டிகளை போல் தோற்றம் கொண்ட 32 மீட்டர் நீளம் கொண்ட அதிவிரைவு தானியங்கி பேருந்து ஒன்றை தயார் செய்துள்ளது. இந்த பேருந்தானது 2022ல் நடைபெறவுள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியின் போது கத்தாரில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
47399.உலகிலேயே பத்திரிகைகளுக்கு அதிக நேரம் பேட்டியளித்த பிரதமர் யார்?
அடல் பிஹாரி வாஜ்பாய்
நரேந்திர மோடி
மன்மோகன் சிங்க்
வி பி சிங்க்
Explanation:
திரு. வி.பி.சிங். இவர் பதவியேற்ற இரண்டாவது சந்திப்பில் 800 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு டெல்லி ஸ்ரீபோர்ட் ஆடிட்டோரியத்தில் 2 மணி நேரம்வரை பதில் அளித்து உலக சாதனை புரிந்தார்.
47400.பணியில் இருக்கும்போது உயிர்த்தியாகம் செய்யும் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கும் இழப்பீட்டை எந்த மாநில அரசு உயர்த்தியுள்ளது?
மத்தியப் பிரதேசம்
குஜராத்
கேரளா
மகாராஷ்டிரா
Explanation:
பணியில் இருக்கும்போது உயிர்த்தியாகம் செய்யும் பாதுகாப்புப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கும் இழப்பீட்டை மகாராஷ்டிரா அரசு உயர்த்தியுள்ளது.
47401.9 வது சார்க் திரைப்பட விழாவில் இந்திய படங்கள் எத்தனை விருதுகளை வென்றன?
4
6
5
1
Explanation:
கொழும்பில் நடைபெற்ற 9 வது சார்க் திரைப்பட விழாவில் நாகர்கீர்த்தன் திரைப்படத்திற்கான சிறந்த திரைப்படம் உட்பட ஆறு விருதுகளை இந்திய உள்ளீடுகள் பெற்றன.
47402.சமீபத்தில் எந்த வீரர்கள் கிரிக்கெட் மற்றும் டென்னிஸில் அர்ஜுனா விருதுகளைப் பெற்றனர்?
மிதாலி ராஜ் & லியாண்டர் பேஸ்
ஸ்மிருதி மந்தனா & ரோஹன் போபண்ணா
ஸ்மிருதி மந்தனா & லியாண்டர் பேஸ்
மிதாலி ராஜ் & ரோஹன் போபண்ணா
Explanation:
புது தில்லியில் நடைபெற்ற விழாவில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஸ்ரீ கிரேன் ரிஜுஜு திருமதி ஸ்மிருதி மந்தனா (கிரிக்கெட்) மற்றும் ஸ்ரீ ரோஹன் போபண்ணா (டென்னிஸ்) ஆகியோருக்கு அர்ஜுனா விருதுகளை வழங்கினார்.
47403.ஐரோப்பிய ஆணையத்தில் முதல் பெண் ஜனாதிபதி யார் ?
உர்சுலா வான் டெர் லேயன்
ஹிலாரி கிளிண்டன்
எல்லன் ஜான்சன் சிர்லீஃப்
மைக்கேல் பேச்லெட்
Explanation:
ஜெர்மன் பாதுகாப்பு மந்திரி உர்சுலா வான் டெர் லேயன் (60 வயது) ஐரோப்பிய ஆணையத்தின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உர்சுலா வான் டெர் லேயன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், ஒன்றுபட்ட மற்றும் வலுவான ஐரோப்பாவிற்கு அழைப்பு விடுத்தார்.
47404.இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் எந்த திட்டத்தின் கீழ் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது ?
ஸௌபாக்ய திட்டம்
நியாய் திட்டம்
உஜ்வாலா திட்டம்
கிஸ்ஸான் சம்மான்
Explanation:
பிரதமர் மோடியின் அடுத்த பெரிய இலக்கு, நிர்ணயித்து உள்ளது அடுத்த 100 நாட்களுக்குள் எட்டு கோடி இல்லத்தரசிகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப பெண் உறுப்பினர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. பிரதமரின் உஜ்வாலா யோஜனா என்ற இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் 2016-இல் அறிமுகம் செய்யப்பட்டது.
நியாய் திட்டம் - காங்கிரஸ் கட்சியின் இத்திட்டம் 2 கண்மாய்கள் அளிக்கும் -
1 . ஏழை மக்களுக்கு குரானிதபட்ச வருமானம் அழைப்பது
2.பணமதிப்பிழப்பு மூலம் பொருளாதாரம் அடைந்த வீழ்ச்சியை சரி செய்வது ஸௌபாக்ய திட்டம் -கிராம புறங்களில் இலவச மின்சாரம் வழங்குதல்
47405.‘சந்திராயன்-1’ என்ற விண்கலத்தை விண்ணில் ஏவிய வருடம் ?
2005
2006
2007
2008
Explanation:
பூமிமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இஸ்ரோ ‘சந்திராயன்-1’ என்ற விண்கலத்தை தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது.
Share with Friends