Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 20th July 19

47452.கருப்பு நிற மக்களின் விடிவெள்ளி தினம் என்று கொண்டாடப்படுகிறது ?
ஜூலை 17
ஜூலை 18
ஜூலை 19
ஜூலை 20
Explanation:
நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990-ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்.
47453.இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ?
1978
1979
1980
1981
47454.ஆபூர்த்தி என்ற மொபைல் செயலி எந்த அமைப்பு தொடங்கியது ?
இந்திய விமான துறை
இந்திய ரயில்வே துறை
இந்திய போக்குவரத்து துறை
தபால் துறை
Explanation:
கடந்த 3 ஆண்டுகளில் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை டிஜிட்டல் மூலம் பெறுவது 35 ஆயிரம் சதவீதம் அதிகரித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். ரயில்வே அமைச்சகத்தின் தகவல் சேவை மையம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு டெல்லியில் நடைபெற்றது. இதில், இத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்றார். அப்போது அவர், இ.டெண்டர் மற்றும் இ-ஏலம் தொடர்பான தகவல்களை செல்போன்களில் பெறும் வகையில் புதிதாக ``ஆபூர்த்தி என்ற மொபைல் ஆப்பை தொடங்கி வைத்தார்.
47455.புதிய இ-சலான் அமைப்பு, மின் கட்டண நுழைவாயில் எந்த நகரத்தின் போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது?
டெல்லி
மும்பை
கொல்கத்தா
சென்னை
Explanation:
டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் டெல்லி போக்குவரத்து காவல்துறையின் பயன்பாட்டிற்காக புதிய இ-சலான் முறையையும் மின் கட்டண நுழைவாயில் முறையையும் தொடங்கி வைத்துள்ளார்.இ-சலான் சாதனங்கள் செயலில் உள்ள ஜி.பி.எஸ் மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
47456.இந்திய செக்யூரிட்டி அச்சகம் எங்கு அமைந்து உள்ளது ?
பூனே
நாசிக்
நாக்பூர்
கோலாப்பூர்
Explanation:
இ-பாஸ்போர்ட்டுகளை தயாரிப்பதற்காக, மின்னணு தொடர்பில்லாத பொறிப்புகள் (எலெக்டிரானிக் காண்டக்ட்லஸ் இன்லேஸ்) கொள்முதல் செய்வதற்கு நாசிக்கில் (மராட்டியம்) உள்ள இந்திய செக்யூரிட்டி அச்சகத்துக்கு அரசு தனது ஒப்புதலை வழங்கி உள்ளது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இ-பாஸ்போர்ட்டுகளை (மின்னணு பாஸ்போர்ட்டுகளை) அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ‘சிப்’ பொருத்தப்பட்டிருக்கும்.
47457.ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மக்களுக்கு வழங்கும் காப்பேட்டு தொகை ?
2 லட்சம்
3 லட்சம்
4 லட்சம்
5 லட்சம்
Explanation:
தற்போதைய நிலையில் தெலுங்கானா , ஒரிசா , டெல்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டும் மத்திய அரசின் ஆயுஷ்மான் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பங்கேற்கவில்லை
47458.டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் தொடர்ந்து எதனை ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார் ?
10
15
18
19
Explanation:
அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டார் ஷீலா தீட்சித். 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லி முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இவர் இன்று காலமானார்
47459.ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
டேபிள் டென்னிஸ்
வில்வித்தை
குத்துச்சண்டை
ஷூட்டிங்
Explanation:
ஷூட்டிங் ஜூனியர் உலகக் கோப்பையில், ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், சுஹ்ல் ஜெர்மனியில் நடந்த ரைபிள் 3-நிலை போட்டியின் இறுதிப் போட்டியில் ஜூனியர் உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.
47460.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சந்திரயான் -2யை எந்த தேதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது?
செப்டம்பர் 6
ஜூலை 22
ஆகஸ்ட் 15
ஜூலை 30
Explanation:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சந்திரயான் -2யை ஜூலை 22 அன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 15 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே நிறுத்தப்பட்டது.
47461.நிலவில் மனிதன் காலடி வைத்த எத்தனையாவது ஆண்டு தினம் கொண்டாடப்படுகிறது ?
40
45
50
55
Explanation:
நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்து 50 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைய இருப்பதை முன்னிட்டு, அமெரிக்காவில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969 ஜூலை 16ல் அப்பல்லோ- 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் மைக்கேல் கோலின்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.
47462.காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் பட்டத்தை எந்த நாட்டின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வென்றது?
இங்கிலாந்து
இந்தியா
சீனா
ஸ்பெயின்
Explanation:
ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய ஆண்கள் அணி வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்தது.
47463.சந்திரயான்-2 விண்கலத்தின் பயண நாளை எவ்வளவு நாட்களாக குறைத்து உள்ளனர் ?
47
48
49
50
Explanation:
வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 2.59 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்111 ராக்கெட் அந்த விண்கலத்தை சுமந்து சென்று விண்ணில் 170 கிலோ மீட்டர் தொலைவில் நீள்வட்ட சுற்றுபாதையில் கொண்டு போய்விடும். அதன்பிறகு சுமார் 40 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவுக்கு சந்திரயான்-2 விண்கலம் பயணத்தை மேற்கொள்ளும். நிலவின் அருகில் நெருங்கி செல்ல 54 நாட்கள் தேவைப்படும் என்று முதலில் விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்து இருந்தனர். தற்போது சந்திரயான்-2 விண்கலத்தின் பயண நாளை 47 நாட்களாக விஞ்ஞானிகள் குறைத்துள்ளனர்.
47464.ரயில் பாதைகளை மேம்படுத்த இந்தியாவுடன் எந்த நாடு ஒப்பந்தம் செய்துள்ளது?
இலங்கை
வங்காள தேசம்
நேபால்
பூடான்
Explanation:
26 மில்லியன் செலவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் ஒரு முக்கிய ரயில் பிரிவில் தடங்களை மேம்படுத்த இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. இலங்கை ரயில்வேயை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.
47465.பீகார் ஆளுநராக தற்போது நியமனம் செய்யப்பட்டு உள்ளவர் யார் ?
பிரகு சவுகான்
ரவி
ரமேஷ் பயாஸ்
லால் ஜி தாண்டன்
Explanation:
மத்திய பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்திபென் படேல் உத்தரபிரதேச ஆளுநராகவும், பீகார் ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்திய பிரதேச ஆளுநராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேற்கு வங்காள ஆளுநராக ஜகதீப் தாங்கர், பீகார் ஆளுநராக பிரகு சவுகான், நாகலாந்து ஆளுநராக ரவி, திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயாஸ் ஆகியோரை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
47466.பிரதமரின் புதிய தனிச்செயலாளராக நியமிக்கப்படவர் யார் ?
நர்பேந்திரா மிஸ்ரா
பிரமோத் குமார் மிஸ்ரா
விவேக் குமார்
புலக் சாட்டர்ஜி
Explanation:
2004ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய அயலக சேவை (ஐ.எஃப்.எஸ்) அதிகாரியான விவேக் குமார் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிச்செயலாளராக (பி.எஸ்) நியமிக்கப்பட்டுள்ளார்.
47467.சர்வதேச செஸ் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
ஜூலை 17
ஜூலை 20
ஜூலை 24
ஜூன் 20
Explanation:
1924ம் ஆண்டு ஜூலை 20 இல் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 20 அன்று சர்வதேச செஸ் தினம் கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஸ் தினமாக கொண்டாடும் யோசனையை யுனெஸ்கோவால் முன்மொழியப்பட்டு 1966 முதல் கொண்டாடப்படுகிறது.
47468.நாட்டின் 64 வது கிராண்ட் மாஸ்டர் யார்?
பிருது குப்தா
டி.குகேஷ்
ஐஸ்வர்யா பிரதாப் சிங்
சரப்ஜோத் சிங்
Explanation:
பிருது குப்தா நாட்டின் 64 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். போர்த்துகீசிய லீக்கின் நான்காவது சுற்றைத் தொடர்ந்து ஒரு GM ஆக இருக்க வேண்டிய அனைத்து தொழில்நுட்ப நிபந்தனைகளையும் 15 ஆண்டு நான்கு மாதம் மற்றும் 10 நாட்கள் ஆன பிருது குப்தா பூர்த்திசெய்தார்.
47469.கடலோரக் காவல்படை (Coast Guard) இந்திய நாட்டின் தனி இராணுவமாக உருவான ஆண்டு ?
1975
1976
1977
1978
Explanation:
1977 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் கடலோரக் காவல்படை (Coast Guard) இந்திய நாட்டின் தனி இராணுவமாக உருவாகியது. கடலோரப் பகுதிகள் மேற்கு, கிழக்கு, அந்தமான், நிக்கோபர் தீவுகள் என 3 கண்காணிப்பு பிரிவுகளாக உள்ளன. தலைமையகங்கள் மும்பை, சென்னை, போர்ட்பிளேயரில் உள்ளன. கண்காணிப்பு பிராந்தியங்கள் 11 கண்காணிப்பு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
47470.அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் கோல்டன் பேபி லீக்ஸ் 2019-20 கையேட்டை எந்த அமைச்சர் வெளியிட்டார் ?
விளையாட்டு துறை அமைச்சர்
உள்துறை துறை அமைச்சர்
பாதுகாப்பு துறை அமைச்சர்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர்
Explanation:
அகமதாபாத்தில் நடைபெற்ற இன்டர்காண்டினன்டல் கோப்பையின் ஒரு பகுதியாக அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் கோல்டன் பேபி லீக்ஸ் 2019-20 கையேட்டை விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு வெளியிட்டார்.
47471.சீன திட்டங்களுக்கான நிதி வழங்கலை விசாரிக்க சீனாவும் எந்த நாடும் ஒரு கூட்டு செயற்குழுவை அமைத்துள்ளது?
அமெரிக்கா
இந்தியா
வங்காளதேசம்
தாய்லாந்து
Explanation:
வங்காளதேசத்தில் நடந்து வரும் சீன திட்டங்களுக்கான மிகக் குறைந்த அளவிலான நிதி வழங்கலை விசாரிக்க வங்காளதேசமும் சீனாவும் சேர்ந்து ஒரு கூட்டு செயற்குழுவை அமைத்துள்ளன.
Share with Friends