Easy Tutorial
For Competitive Exams

Current Affairs Tamil - 2019 22nd July 19

47481.நிலவில் முதலாக நடப்பட்ட கொடி என்ற பெருமையை தட்டி சென்ற நாடு ?
சீனா
இந்தியா
ஜப்பான்
அமெரிக்கா
Explanation:
நிலவில் லூனார் கலத்தின் மூலம் நீல் ஆம்ஸ்டிராங்கின் குழுவினர் காற்றின் வேகம், புவியின் தொலைவு மற்றும் சில முக்கிய ஆராய்ச்சிகளை செய்தனர். நிலவில் முதலாக நடப்பட்ட கொடி என்ற பெருமையை அமெரிக்கா தட்டிச் சென்றது. நிலவில் முதலாக காலடி வைத்த பெருமை, நீல் ஆம்ஸ்டிராங்குக்கு கிடைத்துள்ளது.
47482.21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்த நாள் ?
ஜூலை 21
ஜூலை 22
ஜூலை 23
ஜூலை 24
Explanation:
2009 , ஜூலை ௨௨ – சூரிய கிரகணம், 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காள தேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது.
47483.நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்ந்த நாடு ?
அமெரிக்கா
சீனா
ரஷியா
இவற்றில் எதும் இல்லை
Explanation:
நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் செய்யப்போகிறது.சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன . இந்நிலையில், கிரையோஜெனிக் ஸ்டேஜ் (சி25)ல், திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டது. இதன்பின் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சந்திரயான்-2 ஏவுகணை வெற்றிகரமுடன் விண்ணில் இன்று ஏவப்பட்டுள்ளது.
47484.பிளம்பிங் மற்றும் சேவைத் துறைக்கான இரண்டு புதிய திறன் மையங்கள் (CoE) எங்கு திறக்கப்பட்டது?
உத்தரபிரதேசம்
மேற்கு வங்கம்
குஜராத்
மகாராஷ்டிரா
Explanation:
உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோருக்கு இடையில் லக்னோவில் நடைபெற்ற சந்திப்பில், இரண்டு சிறந்த திறமை மையத்தை (CoEs) அமைக்க கூட்டு முடிவு எடுக்கப்பட்டது – பிளம்பிங்கிற்கான சிறந்த திறமை மையம் கிரேட்டர் நொய்டாவிலும்; சேவைத் துறைக்கு வாரணாசியிலும் அமைக்கப்படவுள்ளது.
47485.இந்தோனேசியா ஓபன் BWF டூர் சூப்பர் 1000 பேட்மிண்டன் போட்டியில் வென்றவர் யார்?
சாய்னா நேவால்
கரோலினா மரியம்
அகானே யமகுச்சி
பி வி சிந்து
Explanation:
ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன் BWF டூர் சூப்பர் 1000 பேட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டியில் பி வி சிந்து அகானே யமகுச்சியிடம் தோல்வி அடைந்தார்.
47486.படுகேஸ்வர் தத் ஒரு சுதந்திர போராளி அவர் எந்த மாநிலத்தில் பிறந்தவர் ?
மேற்கு வங்கம்
குஜராத்
உத்தரபிரதேசம்
ஒடிசா
Explanation:
மேற்கு வங்காளத்தின் பர்தாமன் ரயில் நிலையத்திற்கு புரட்சிகர சுதந்திர போராட்ட வீரர் பதுகேஷ்வர் தத்தின் பெயர் சூட்டப்பட உள்ளது. பர்தாமன் மாவட்டத்தில் பிறந்த சுதந்திரப் போராளியான பதுகேஷ்வர் தத், டெல்லியில் உள்ள தேசிய சட்டமன்றத்தில் குண்டுகளை வீசியதற்காக பகத்சிங்குடன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
47487.இஸ்ரோவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் எந்த நாளை குறிப்பிட்டார் ?
ஜூலை 20
ஜூலை 21
ஜூலை 22
ஜூலை 23
Explanation:
நிலவின் தென்துருவத்தை நோக்கிய இந்தியாவின் வெற்றிகரமான பயணம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் மூலம் சந்திரயான் விண்கலம் நிலவை நோக்கி பாய்ந்து துவங்கியுள்ள இன்றைய ஜூலை 22 ம் நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார் .
47488.வேட்டை தடைச் சட்டம் சமீபத்தில் எங்கு நீக்கப்பட்டது ?
நமீபியா
ஜிம்பாவே
மொசாம்பிக்
போட்சுவானா
Explanation:
தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்சுவானாவில் வேட்டை தடைச் சட்டம் சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது.
47489.டெஃப்எக்ஸ்போ இந்தியா – 2020 இன் பதினொன்றாவது பதிப்பு எங்கு நடைபெறவுள்ளது ?
வாரணாசி
பெங்களூரு
மும்பை
லக்னோ
Explanation:
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பதினொன்றாவது பதிப்பு டெஃப்எக்ஸ்போ இந்தியா – 2020 முதல் முறையாக உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பிப்ரவரி 2020 இல் நடைபெற உள்ளது. டெஃப்எக்ஸ்போ இந்தியா- 2020 இன் முக்கிய கருப்பொருள் – இந்தியா – வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையம் மற்றும் பாதுகாப்புத்துறையின் டிஜிட்டல் உருமாற்றத்தில் கவனம் செலுத்தப்படும்.
47490.இந்திய ஜனாதிபதியின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுவர் யார் ?
நர்பேந்திரா மிஸ்ரா
பிரமோத் குமார் மிஸ்ரா
ஸ்ரீ அஜய் படூ
புலக் சாட்டர்ஜி
Explanation:
ஐ.ஏ.எஸ். ஸ்ரீ அஜய் படூவை ஜனாதிபதியின் இணை செயலாளராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு (ஏ.சி.சி) ஒப்புதல் அளித்துள்ளது.
47491.சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்துள்ள ஆல் டைம் உலகக்கோப்பை லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் இந்தியர்கள் எத்தனை பேர் ?
5
4
3
2
Explanation:
சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்துள்ள ஆல் டைம் உலகக்கோப்பை லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- 1. ரோகித் சர்மா, 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. விராட் கோலி, 5. ஷாகிப் அல் ஹசன், 6. பென் ஸ்டோக்ஸ், 7. ஹர்திக் பாண்டியா, 8. ஜடேஜா, 9. மிட்செல் ஸ்டார்க், 10. பும்ரா, 11. ஜாப்ரா ஆர்சர்.
47492.ஆந்திராவில் புதிதாக கட்டப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ஆமை விளக்க மையம் எங்கு திறக்கப்பட்டது?
விசாகப்பட்டினம்
விழியநகரம்
விஜயவாடா
நெல்லூர்
Explanation:
ஆந்திராவின் விழியநகரத்தில் வனத்துறை அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட பட்டாம்பூச்சி பூங்கா மற்றும் ஆமை விளக்க மையம் [Turtle Interpretation Centre] திறக்கப்பட்டது.
47493.அடுத்த தலைமுறை வரிசைமுறை (என்எஸ்ஜி) வசதி எங்கு திறக்கப்பட்டது?
கொல்கத்தா
ஹைதெராபாத்
புது தில்லி
சென்னை
Explanation:
ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் அடுத்த தலைமுறைக்கான வரிசைமுறை (என்.எஸ்.ஜி) வசதியை சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் திறந்து வைத்தார்.
47494.பெஞ்சமின் நேதன்யாகு எந்த நாட்டின் பிரதமர் ?
லெபனான்
சிரியா
ஜோர்தான்
இஸ்ரேல்
Explanation:
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அந்த நாட்டின் நீண்டகால பிரதமர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்தநிலையில் அவர் வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி இந்தியா வருகிறார்.
47495.எந்த மாநிலத்தில் பின்பற்றப்படும் நீர் பாதுகாப்பின் மிகவும் பொதுவான பாரம்பரிய முறைகளில் மதகா ஒன்றாகும்?
கேரளா
தமிழ்நாடு
கர்நாடகா
ஆந்திரா
Explanation:
கடலோர கர்நாடகாவில் பின்பற்றப்படும் மிகவும் பொதுவான நீர் பாதுகாப்புக்கான பாரம்பரிய பாதுகாப்பு முறைகளில் ஒன்று மதகா ஆகும். இது ஒரு தனித்துவமான பாரம்பரிய நீர் பாதுகாப்பு நடைமுறையாக இருந்தது. பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியில் ஒரு பக்கத்தில் வரப்பு போன்ற இயற்கை தடுப்புகள் அமைப்பதன் மூலம் சேறும் சகதியுமான நிலப்பரப்பில் பெரிய அளவிலான நீர் சேகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
47496.பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எந்த மாநிலத்தில் 1000 மீட்டர் நீளமுள்ள உஜ் பாலத்தை திறந்து வைத்தார்?
ஜம்மு & காஷ்மீர்
சிக்கிம்
அருணாச்சல பிரதேசம்
அசாம்
Explanation:
கத்துவா மாவட்டத்தில் 1000 மீட்டர் நீளமுள்ள உஜ் பாலம் மற்றும் சம்பா மாவட்டத்தில் 617.40 மீட்டர் நீளமுள்ள பசந்தர் பாலம் ஆகியவற்றை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
47497.தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நதிகளை சுத்தப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு ?
5,870 கோடி
5,860 கோடி
5,850 கோடி
5,840 கோடி
Explanation:
மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பாபுல் சுப்ரியோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலில், தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 16 மாநிலங்களில் மாசடைந்த 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது, இதில் மத்திய அரசு தனது பங்காக மாநிலங்களுக்கு ரூ.2,522 கோடி வழங்கி வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். நகர்ப்புற பகுதிகளில் நதிகள் அதிக அளவில் மாசடைவதாகவும், எனவே அவற்றை தூய்மைப்படுத்த நிதி உதவி தேவைப்படுவதாகவும் மாநிலங்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, கங்கை நீங்கலாக 34 நதிகளை தூய்மைப்படுத்த ரூ.5,870 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
47498.எத்னா எரிமலை எங்கு உள்ளது ?
சார்த்தினியா
சிசிலி
அப்ரூசா
லேஸியோ
Explanation:
இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள எத்னா எரிமலை நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென வெடித்தது. இதனால் 1.5 கி.மீ. தொலைவுக்கு எரிமலைக்குழம்பு பரவி உள்ளது.
47499.இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டவர் யார் ?
லூ ஜாவோ ஹூய்
சன் வெய் டாங்.
ஷாங் யான்
வெய் வெய்
Explanation:
இந்தியாவுக்கான சீனாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள சன் வெய் டாங் பொறுப்பை ஏற்றுக்கொள்ள டில்லி வந்துள்ளார். சீனாவின் முன்னாள் தூதர் லூ ஜாவோ ஹூய், சீன வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து தமது தூதரக பதவியை ராஜினாமா செய்து அவர் சீனா சென்று விட்டார். இதனையடுத்து தெற்காசியா குறித்த விரிவான அனுபவமும் அறிவும் மிக்கவரான 53 வயதான சன் வெய் டாங் புதிய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
47500.தெற்காசியா பட்டத்தை வென்ற நாடு எது?
இந்தியா
இலங்கை
நேபால்
பாகிஸ்தான்
Explanation:
இந்திய பாடிபில்டர் ரவீந்தர் குமார் மாலிக் மிஸ்டர் தெற்காசியா பட்டத்தை வென்றார். காத்மாண்டுவில் நடைபெற்ற 12 வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடலமைப்பு விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் ஒட்டுமொத்த சாம்பியனாக முடி சூட்டப்பட்டார் ரவீந்தர் மாலிக். அணிகளுக்கான பிரிவில் சாம்பியன்ஷிப்பை ஆப்கானிஸ்தான் வென்றது.
Share with Friends