நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்ந்த நாடு ?
நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, ரூ.1,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம் செய்யப்போகிறது.சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன . இந்நிலையில், கிரையோஜெனிக் ஸ்டேஜ் (சி25)ல், திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டது. இதன்பின் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சந்திரயான்-2 ஏவுகணை வெற்றிகரமுடன் விண்ணில் இன்று ஏவப்பட்டுள்ளது.