நிலவில் மனிதன் காலடி வைத்த எத்தனையாவது ஆண்டு தினம் கொண்டாடப்படுகிறது ?
நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்து 50 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைய இருப்பதை முன்னிட்டு, அமெரிக்காவில் பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969 ஜூலை 16ல் அப்பல்லோ- 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் மைக்கேல் கோலின்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர்.