Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் எண்கள் (Numbers) வினா - விடை (Q&A)

47293.இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 72. பெரிய எண் சிறிய எண்ணைப் போல 5 மடங்கு எனில், அந்த எண்கள் யாவை?
15, 75
12, 60
25, 125
10, 50
Explanation:
சிறிய எண் X எனில் பெரிய எண் 5x.
X + 5x=72 6x=72
x=7216
x=12
5x = 60
சிறிய எண் = 12
பெரிய எண் = 60
47294.ஒரு எண்ணின் 3 மடங்கிலிருந்து 6 ஐக் கழித்தால் 18 கிடைக்கும் அந்த எண் யாது?
7
8
6
9
Explanation:
தேவையான எண் X என்க.
எண்ணின் 3 மடங்கு = 3x
எண்ணின் 3 மடங்கிலிருந்து 6 ஐக் கழித்தால் கிடைப்பது 18.
3x - 6 = 18
3x = 18 + 6 = 24
x = 2473
X= 8
தேவையான எண் = 8
47295.ஒரு பேருந்து X என்ற நகரத்திலிருந்து புறப்படும்போது அதில் உள்ள மொத்த பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையில் பாதியாகும். பிறகு நகரம் Y ல் 10 ஆண்கள் இறங்கினார்கள் மற்றும் 5 பெண்கள் உள்ளே நுழைந்தார்கள், இப்போது மொத்த ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது. எனவே, முதலில் எத்தனை பயணிகள் பேருந்தில் இருந்திருக்க கூடும்?
83
65
34
45
Explanation:
பெண்களின் எண்ணிக்கை = x
ஆண்களின் எண்ணிக்கை = 2x
நகரம் Y ல்
(2x - 10) = (x + 5)
2x - X = 10 + 5
X = 15
ஆகவே, முதலில் பேருந்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை = (2x + x)
= (3x) = 3 * 15
= 45
47296.ஒரு கூட்டத்தில் உள்ள பசுக்கள் மற்றும் கோழிகளின் கால்களின் எண்ணிக்கையானது அவற்றின் தலைகளின் எண்ணிக்கையைவிட 14 அதிகமாகும். ஆகவே மொத்த பசுக்களின் எண்ணிக்கையைக் காண்க.
5 பசுக்கள்
6 பசுக்கள்
9 பசுக்கள்
7 பசுக்கள்
Explanation:
பசுக்களின் எண்ணிக்கை X எனவும்,
கோழிகளின் எண்ணிக்கையை y எனவும் கொள்க.
பிறகு, 4x + 2y=2(x + y) + 14
4x + 2y = 2x + 2y + 14
4x + 2y - 2x - 2y = 14
2x= 14
x=7
ஆகவே, பசுக்களின் எண்ணிக்கை = 7
47297.ஒரு எண்ணின் பாதியுடன் அந்த எண்ணின் ஐந்தில் ஒருபங்கைக் கூட்டினால் 21 கிடைக்கிறது. அந்த எண் யாது?
15
30
45
20
Explanation:
(x/2) + (x/5) = 21
(5x + 2x)/10 = 21
(7x / 10) = 21 7x = 210.
x = 210 /7
x= 30
தேவையான எண் = 30
47298.அடுத்தடுத்து மூன்று ஒற்றை எண்களின் கூடுதல் 51. அந்த எண்களைக் காண்க.
25, 27, 19
5, 7, 9
35, 37, 39
15, 17, 19
Explanation:
முதல் ஒற்றை எண் = x
இரண்டாம் ஒற்றை எண் = x + 2
மூன்றாம் ஒற்றை எண் = x + 4
அடுத்தடுத்து மூன்று ஒற்றை எண்களின் வித்தியாசம் 2 எனில்
(x) + (x + 2) + (x + 4) = 51
3x + 6 = 51
3x = 51 - 6
3x = 45
X = 45/3
x= 15 தேவையான எண்கள் = 15, 17, 19
47299.ஒரு சீருடைக்குத் தேவையான துணியின் நீளம் 2.25மீ எனில், 47.25 மீட்டர் துணியில் எத்தனை சீருடைகள் தைக்கலாம்?
24 சீருடைகள்
18 சீருடைகள்
11 சீருடைகள்
21 சீருடைகள்
Explanation:
47.25 மீட்டர் = 4700 + 25 = 4725 செ.மீட்டர்
2.25 மீட்டர் = 200+ 25 = 225 செ.மீட்டர்
= (4725/225) = 21 சீருடைகள் தைக்கலாம்.
47300.ஒரு மாணவன் பதிலளித்த 48 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையளித்ததை அடுத்து இரண்டு தவறான வினாக்களுக்கு விடையளிக்கிறான் எனில் அவர் எத்தனை சரியான வினாக்களுக்கு விடையளித்து இருப்பார்?
16
08
32
24
Explanation:
மாணவன் பதிலளித்த சரியான வினாவை X எனவும், தவறாக பதிலளித்த வினாவை 2x எனவும் கொள்க.
x + 2x = 48
3x= 48
X = 48/3
x= 16 மாணவன் சரியாக பதிலளித்த வினாக்களின் எண்ணிக்கை 16 ஆகும்.
47301.ஒரு குழுவில் உள்ளவர்களை 24, 45, 60 என சமமாகப் பிரித்தால் குழுவில் உள்ள குறைந்தபட்ச நபர்கள் எவ்வளவு?
240
360 நபர்கள்
180
420
Explanation:
24, 45, 60 ன் மீச்சிறு பொது மடங்கு காண வேண்டும்.
24 = 2 * 2 * 2 * 3
45 = 3* 3 * 5
60 = 2 * 2 * 3 * 5
24, 45, 60 ன் மீ.சி.ம = $2^3 * 3^2 * 5$
= 8 * 9 * 5
= 360
47302.ஒரு மைதானத்தில் குதிரைகளின் எண்ணிக்கையும், அவற்றில் அமர்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தனர். அவர்கள் பயணத்தினைத் தொடங்கியவுடன் மொத்த குதிரைகள் மற்றும் அவற்றில் அமர்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கையில் பாதியும் நடந்து செல்கின்றனர். நடந்து செல்பவர்களின் கால்களின் எண்ணிக்கை 70 எனில், அதில் உள்ள குதிரைகளின் எண்ணிக்கையைக் காண்க.
34 குதிரைகள்
24 குதிரைகள்
14 குதிரைகள்
44 குதிரைகள்
Explanation:
குதிரைகளின் எண்ணிக்கை = அமர்ந்து இருப்பவர்களின் எண்ணிக்கை = x
மொத்த கால்களின் எண்ணிக்கை = 4x + 2 * (x/2) = 5x
ஆகையால், 5x = 70 அல்லது X = 14
மொத்த குதிரைகளின் எண்ணிக்கை = 14 குதிரைகள்
47303.366 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தில் உள்ள மொத்த இலக்கங்களின் எண்ணிக்கையைக் காண்க.
990
366
732
1098
Explanation:
மொத்த இலக்கங்களின் எண்ணிக்கை = (ஒற்றை இலக்கங்களின் எண்ணிக்கை * 1) + (இரட்டை இலக்கங்கள் கொண்ட எண்களின் எண்ணிக்கை * 2) + ( மூன்று இலக்கங்கள் கொண்ட எண்களின் எண்ணிக்கை * 3)
= (9 * 1) + ( 90 * 2) + ( 267 * 3).
= ( 9 + 180 + 801)
366 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தில் உள்ள மொத்த இலக்கங்களின் எண்ணிக்கை = 990
47304.ஒரு மாணவர் ஒரு எண்ணை 27 ஆல் பெருக்குவதற்குப் பதில் 72 ஆல் பெருக்க அவனுக்கு கிடைத்த விடை சரியான விடையை விட 23175 அதிகம் அப்படியெனில் சரியான எண் யாது?
515
111
212
313
Explanation:
தேவையான எண் = x
சரியான பெருக்கல் = 27 * x
தவறான பெருக்கல் =72 * x
தவறான பெருக்கற்பலன் = சரியான பெருக்கல் + 23175
72 * x = 27 * x + 23175
72 * x - 27 * x = 23175
45 * x = 23175
X = 515
தேவையான எண் = 515
47305.ஒரு வகுப்பில் உள்ள மொத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையில் மாணவர்கள் எண்ணிக்கை மாணவிகளின் எண்ணிக்கையைப்போல் மூன்று மடங்கு ஆகும். ஆகவே, அவ்வகுப்பில் உள்ள மொத்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கைக்கு பின்வருவனவற்றுள் எவ்விடை பொருந்தாது எனக் காண்க.
48
44
42
40
Explanation:
மாணவிகளின் எண்ணிக்கை = x எனக் கொள்க.
மாணவர்களின் எண்ணிக்கை = 3x எனக் கொள்க.
மொத்த மாணவ மாணவிகள் எண்ணிக்கை = 3x + x = 4x ஆகவே மொத்த மாணவ மாணவிகள் கட்டாயம் 4 ஆல் வகுபட வேண்டும். அதனால், கொடுக்கப்பட்ட விடைகளுள் 42 என்பது கட்டாயம் மொத்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கையாக இருக்க முடியாது.
47306.ஒரு வகுப்பறையில் 3/5 பங்கு மாணவிகளும், மீதம் மாணவர்களும் இருக்கின்றனர். ஆனால், 2/9 பங்கு மாணவிகள் மற்றும் 1/4 பங்கு மாணவர்கள் அன்று வகுப்புக்கு வரவில்லையெனில், அன்றைய தினம் வகுப்பறைக்கு வந்தவர்களின் காண்க-
5/7
21/90
3/5
23/30
Explanation:
மாணவிகள் = 3/5
மாணவர்கள் = 1 - (3/5) = 2/5
அன்றைய தினம் வகுப்புக்கு வராத மாணவ மாணவிகள்
= 3/5 ல் 2/9 + 2/5 ல் 1/4
= 6/45+1/10
45, 10 ன் மீ.சி.ம = 90
= (12+ 9) /90 = 21/90 =7/30
அன்றைய தினம் வகுப்புக்கு வந்த மாணவ மாணவிகள் = 1 - (7/30)
அன்றைய தினம் வகுப்புக்கு வந்த மாணவ மாணவிகள் =23/30
47307.7, 5, 1, 8, 4 என்ற இலக்கங்களைப் பயன்படுத்தி மிகப்பெரிய ஐந்திலக்க எண்ணையும், மிகச்சிறிய ஐந்திலக்க எண்ணையும் கண்டு அவற்றுக்கிடையேயான வித்தியாசத்தைக் காண்க. (இலக்கங்களை ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டும்).
78964
46665
72963
68757
Explanation:
பெரிய எண் = 87541
சிறிய எண் =14578
வித்தியாசம் = 87541 - 14578
வித்தியாசம் = 72963
Share with Friends