Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் கூட்டு வட்டி (Compound Interest) தேர்வு (Online Test)

47406.ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் Rs. 7500 க்கு ஆண்டு வட்டி வீதம் 4% வீதப்படி, 2 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்.
ரூ. 674
ரூ. 612
ரூ. 541
ரூ. 471
Explanation:
வட்டியானது ஆண்டுக்கு ஒரு முறை அசலுடன் சேர்க்கப்பட்டால் அதற்கான
சூத்திரம் : தொகை = P * $[(1 +(R/100))^n] $
தொகை = Rs. $[ 7500 * (1 + (4/100))^2] $
= Rs. $[7500 * (104/100)^2]$
= Rs. $[7500 * (26/25)^2 ]$
= Rs. [7500 * (26/25) * (26/25)]
= Rs. [12* 26 * 26 )
= Rs. 8112
கூட்டுவட்டி = Rs. [8112 - 7500]
= Rs. 612
47407.ஒரு குறிப்பிட்ட தொகையானது கூட்டுவட்டி வீதத்தில் ரூ. 6690 என 2 ஆண்டுகளுக்கு பிறகும், ரூ. 10,035 என 3 ஆண்டுகளுக்கு பிறகும் கிடைக்கிறது எனில், அசலினைக் காண்க.
ரூ. 3546
ரூ. 4460
ரூ. 8452
ரூ. 6524
Explanation:
அசலினை ரூ. P எனக் கொள்க.
$[P* (1 + (R/100))^3]$ = 6690 ---------------------- (1)
$[P* (1 + (R/100))^6]$ = 10035 ---------------------- (2)
சமன்பாடு (2) / (1) .
$[P* (1 + (R/100))^6]$/$[P* (1 + (R/100))^3]$ = 10035/6690
$(1 + (R/100))^3$ = 10035/ 6690
$(1 + (R/100))^3$ = 372
$(1 + (R/100))^3$ = 3/2 என்பதை சமன்பாடு (1) இல் பிரதியிட கிடைப்பது,
P * (3/2) = 6690
P = 6690 * (2/3)
P = 2230 * 2 = ரூ. 4460
ஆகவே, அசல் = ரூ. 4460
47408.ஒரு குறிப்பிட்ட அசலானது குறிப்பிட்ட வட்டிவீதத்தில் 2 ஆண்டுகளில் ரூ. 7350 எனவும், 3 ஆண்டுகளில் ரூ. 8575 எனவும் கிடைக்கிறது. ஆகவே, அசலினையும், வட்டிவீதத்தினையும் காண்க.
ரூ. 3500, 16 * (1/3)%
ரூ. 4200, 16 * (2/3)%
ரூ. 6100, 16 * (1/3)%
ரூ. 5400, 16 * (2/3)%
Explanation:
ரூ. 7350 க்கு ஓராண்டுக்கு தனிவட்டித்தொகை = Rs. (8575 - 7350) = ரூ. 1225
வட்டிவீதம் = [ (100 * 1225) / (7350 * 1) 1%
வட்டிவீதம் = 16 * (2/3)%
அசலினை x எனக் கொள்வோம்.
$[ x * (1 + (50 / (3 * 100) ) )^2 ]$=7350
X * (7/6) * (7/6) =7350
X = 7350 * (36/49)
X = ரூ. 5400
அசல் = ரூ. 5400
47409.ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் Rs. 8000 க்கு ஆண்டு வட்டி வீதம் 15% வீதப்படி, 2 ஆண்டுகள் 4 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காண்க.
ரூ. 3109
ரூ. 4512
ரூ. 6541
ரூ. 2486
Explanation:
காலம் = 2 ஆண்டுகள் 4 மாதங்கள் = 2* (4/12) ஆண்டுகள்
= 2* (1/3) ஆண்டுகள்
வட்டியானது ஆண்டுக்கு ஒரு முறை அசலுடன் சேர்க்கப்பட்டால் அதற்கான
சூத்திரம் : தொகை = P * $[ (1 + (R/100))^n]$
தொகை = Rs. ${ [ 8000 * (1 + (15/100))^2 * [1 + (((1/3) * 15) / 100) ] } $
= Rs. [ 8000 * (23/20) * (23/20) * (21/20) ]
= Rs. [ 23 * 23 * 21] = Rs. 11109
கூட்டுவட்டி = Rs. (11109 - 8000) = Rs. 3109
47410.அரை ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 1000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காண்க.
ரூ. 167.36
ரூ. 852.45
ரூ. 250.75
ரூ. 157.63
Explanation:
P = ரூ. 1000,
r = 10% ஆண்டுக்கு
In = 18 மாதங்கள் = 18/12 வருடங்கள் = 3/2 வருடங்கள் 18 மாதங்கள் இறுதியில் கூட்டுத் தொகை
A = P$[1 + 1/2 (r/100)]^{2n}$
= 1000$[1 + 1/2 (10/100)]^{2*3/2} $
= 1000$(1 + (1/20))^3$
= 1000 $(21/20)^3 $
= 1000 * (21/20) * (21/20) * (21/20)
= ரூ. 1157.63 கூட்டு வட்டி
= A - P
= 1157.63 - 1000
= ரூ. 157.63
Share with Friends