Easy Tutorial
For Competitive Exams

Science QA மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Notes

மராத்தியப் பேரரசு

  • தக்காணம், மஹாராஷ்ட்ரா மலைப்பகுதி மக்கள் மராத்தியர்கள் என அழைக்கப்பட்டனர்.
  • மலைவாழ் மக்கள் என்பதால் மலைகளுக்கிடையே ஒளிந்திருந்து தாக்கும் 'கொரில்லா போர் (முறைசாரா போர் முறை) முறையை அறிந்திருந்தனர்,

57216.கொரில்லா போர் முறை என்றால்
முறையான போர் முறை
பயிற்சி பெற்ற போர் முறை
முறைசாரா போர் முறை
கலப்பு போர் முறை

சிவாஜி : (1627-1680)

  • 1627ம் ஆண்டு சிவாஜி பூனா அருகில் சிவனேரிக் கோட்டையில் பிறந்தார்.
  • தந்தை: ஷாஜி போன்ஸ்லே , தாய்: ஜீஜாபாய் .
  • ஷாஜி போன்ஸ்லே -ன் இரண்டாவது மனைவி துக்காபாய்.
  • சிவாஜி தன் தாய் மூலம் மகாபாரதம். ராமாயணங்களைக் கற்றார்.
  • சிவாஜியின் குருமார்கள் - குருராம்தாஸ் மற்றும் துக்காராம்.
  • சிவாஜியின் குரு ‘தாதாஜி கொண்ட தேவ்' இவருக்கு போர்க் கலை மற்றும் நிர்வாகம் கற்றுத் தந்தார்.
  • சிவாஜி தலைமையில் “மராத்தியர்கள் ஒன்று திரண்டனர்.
  • கி.பி. 1646ல் சிவாஜி, ரெய்கார், தோர்ணா, புரந்தர், கல்யாண் கோட்டை போன்றவற்றை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றினார் .
  • 1659ல் சிவாஜியை அடக்க பீஜப்பூர் சுல்தான் அப்சல்கான் என்பவரை அனுப்பினார்.
  • அப்சல்கானை சிவாஜி பாக்நக் என்ற புலிநகம் மூலம் கிழித்துக் கொன்றார்.
  • 1660ல் ஒளரங்கசீப் சிவாஜியை ஒடுக்க செயிஸ்டகான் என்பவரை அனுப்பினர்.
  • இதனை அறிந்த சிவாஜி செயிஸ்டகானை தாக்கிய போது தப்பினார். கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது.
  • 1665ல் ஔரங்கசீப் 2வது முறையாக ஆம்பர் நாட்டு மன்னன் ராஜா ஜெய்சிங் என்பவரை அனுப்பினார்.
  • சிவாஜி அவரிடம் சரணடைந்து புரந்தர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டார்.
  • 1666ல் புரந்தர் உடன்படிக்கையின் படி சிவாஜி ஒளரங்கசீப்பை சந்திக்க சென்ற போது கைது செய்யப்பட்டார்.
  • தந்திரமாக பழக்கூடை மூலமாக சிவாஜி தப்பினார்.
  • இதனால் ஒளரங்கசீப் சிவாஜியை தக்காண புற்றுநோய் என்றும் மலை எலி என்றும் கூறினார்.
  • 1672ல் முகலாயர்களை சால்கர் என்ற போர்களத்தில் தோற்கடித்தார்.
  • 1674ல் சிவாஜி ரெய்கார் கோட்டையில் சத்ரபதி' என்ற பட்டத்தைச் சூட்டி மராத்திய பேரரசை தோற்றுவித்தார்.
  • 1680ல் தனது 53வது வயதில் ரெய்கார் என்னும் இடத்தில் சிவாஜி உயிரிழந்தார்.
9287.சிவாஜி பிறந்தது
சதாரா
பீஜப்பூர்
ஷிவ்னேர்
பூனா

நிர்வாகம்

  • சிவாஜி அமைச்சரவை 'அஷ்டபிரதான் என அழைக்கப்பட்டது.
  • பேரரசு = மாநிலம் = பர்கானா = கிராமங்கள்
  • கிவாஜியின் பேரரசு ‘சுயராஜ்யம்' என்று அழைக்கப்பட்டது,

அஷ்டபிராதான்

    பீஷ்வா-பிரதம அமைச்சர்
    சார் - இ - நோபத்-படைத்தளபதி
    அமாத்தியா-நிதியமைச்சர்
    வாக்நவின்-உளவுத்துறை
    அமந்தா-சடங்கு நிர்வாகம்
    சுமந்த்-வெளியுறவுத் துறை அமைச்சர்
    சச்சிவா-உள்துறை அமைச்சர்
    சேனாதிபதி-ராணுவ அமைச்சர்
    நியாய தீஷ்-நீதித்துறை அமைச்சர்
    பண்டிட் ராவ்-சமயத்துறை அமைச்சர்
  • சிவாஜி ஜமீன்தாரி முறையை ஒழித்தார்.
  • விளைச்சலில் 2/5 பங்கு வரியாக வசூலிக்கப்பட்டது.
  • காதி என்ற அளவுகோலை பயன்படுத்தி நிலங்கள் அளக்கப்பட்டன.
  • கர்கூன்கள் எனப்படும் வருவாய் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
  • முக்கிய வரிகள் : சவுத், சர்தேஷ் முகி (மராத்தியர்கள் அல்லாதவர்கள் மீது போடப்பட்ட வரி)
  • பட்டேல் என்ற அதிகாரி குற்றவியல் வழக்குகளை விசாரித்தார் .
  • மேல் முறையீட்டு வழக்குகளை நியாயதீஷ் விசாரித்தார்.
  • இ மராட்டியர்கள் கோட்டைகளைத் தாயாகக் கருதினர். (இறுதியில் 240 கோட்டைகளை நிறுவினார்)
  • மராத்தியர்கள் குதிரைப்படையில் இரண்டு பிரிவுகள் உள்ளன.
  • 1. பர்கிர்கள் - அரசின் நேரடி கட்டுப்பாடு
  • 2. சிலாதார்கள் - உயர்குடி மக்களின் பராமரிப்பில் இருப்பவை.

சிவாஜியின் வழித் தோன்றல்கள்

  • சிவாஜிக்கு பின் அவரது மகன் சாம்பாஜி பொறுப்பேற்றார்.
  • ஔரங்கசீப், பிஜப்பூர், கோல்கொண்டாவைக் கைப்பற்றி சாம்பாஜி மற்றும் மகன் ஷாகுவைக் கைது செய்தார்.
  • சாம்பாஜி சிறையிலேயே கொல்லப்பட்டார். அதன்பின் சிவாஜியின் மற்றொரு மகன் ராஜாராம்' பொறுப்பேற்றார்.
  • 1700ல் ராஜாராம் மரணம் அடைந்தார். பின் அவர் மனைவி தாராபாய், அவர் மகன் 2ம் சிவாஜி பொறுப்பேற்றனர்.
  • ஔரங்கசீப்புக்கு பின் வந்த முகலாய மன்னர் பகதூர்ஷா ஷாகுவை விடுதலை செய்தார்.
  • 1708 ல் சிறையில் இருந்து வந்து தாராபாயை ஷாகு தோற்கடித்து மராத்திய அரசரானார். உஷாகு பொறுப்பேற்க பாலாஜி விஸ்வநாத் பெரிதும் உதவியதால் அவரை பீஷ்வா (பிரதம அமைச்சர்)ஆக்கினார்
  • ஷாகு மறைவிற்கு பின் பாலாஜி விஸ்வநாத் பீஷ்வா ஆட்சியை மராத்திய மண்ணில் தோற்றுவித்தார்.

பீஷ்வாக்கள் ஆட்சி

பாலாஜி விஸ்வநாத் (கி.பி.1713 - 1720)

  • பீஷ்வா ஆட்சியை தோற்றுவித்தவர் பாலாஜி விஸ்வநாத்

பாஜிராவ் (கி.பி.1720 - 1740)

  • இரண்டாம் பீஷ்வாவாக பாஜிராவ் ஆட்சிப் பொறுப்பேற்றார்.
  • தலைசிறந்த பீஷ்வா 'பாஜிராவ் ஆவார். பாலாஜி விஸ்வநாத்தின் மகன்
  • போர்ச்சுகீசியர்களிடம் இருந்து பஸ்சின், தானா மற்றும் சால்செட் பகுதிகளைக் கைப்பற்றினார்.
  • கி.பி.1740 ல் இவர் இறந்தார்.

பாலாஜி பாஜிராவ் (1740-1761)

  • மூன்றாவது பீஷ்வாவாக பொறுப்பேற்றார்.
  • பாலாஜி பாஜிராவ் உறவினரான சதாசிவராவ் மூலம் கி.பி. 1758ம் ஆண்டு முதல் மராத்திய பேரரசை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றார்.
  • பஞ்சாபைக் கைப்பற்றி மராத்திய கொடியைப் பறக்கவிட்டார்
  • 1761 ல் அகமது ஷா அப்தாலி (ஆப்கானிய மன்னர்) படையெடுப்பால் மராத்திய பேரரசு சீர்குலைந்தது.
  • ரோகில்கண்டு அரசர் நாஜிப்-உத்-தௌலா உதவியுடன் அகமது ஷா அப்தாலி, மராத்தியர்கள் மீது படையெடுத்தார்.
  • கி.பி. 1761 ல் மூன்றாம் பானிபட் போர் பாலாஜி பாஜிராவ் அமைச்சர் சதாசிவராவ்-க்கும், அகமது ஷா அப்தாலிக்கும் இடையே நடந்தது.
  • மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோற்றனர்.

நாதிர்ஷா

  • 1739ல் பாரசீக மன்னர் நாதிர்ஷா டெல்லி மீது படையெடுத்து செல்வங்களை கொள்ளை அடித்தார்.
  • பெஷாவரைக் கைப்பற்றி முகலாயர்களை கர்னூல் என்ற இடத்தில் தோற்கடித்தார் (முகமதுஷா)
  • 20 கோடியை முகலாய மன்னர் நஷ்ட ஈடாக கொடுத்த போதிலும் டெல்லியில் 15 நாட்கள் தங்கி டெல்லியை சூரையாடினார்.
  • கோஹினூர் வைரம், மயிலாசனத்தையும் தூக்கிச் சென்றதோடு முகலாய மன்னரையும் கொன்றார்.
  • 1747 ல் நாதிர்ஷா தன் படை வீரர்களாலேயே கொல்லப்பட்டார்.

அகமது ஷா அப்தாலி

  • 1761 ல் இந்தியா மீது படையெடுத்தார்
  • 1748 - 1767 வரை பல முறை படையெடுத்து இந்தியாவைக் கொள்ளை அடித்தார்.
  • 1767 ல் சீக்கியர்கள் மீது படையெடுத்து தோற்று ஆப்கானிஸ்தான் திரும்பினார்.

மராத்தியர் ஆட்சியில் முக்கிய ஆண்டுகள்

  • 1627 - சிவாஜி பிறப்பு (சிவனேரிக் கோட்டை)
  • 1646 - புரந்தர், ரெய்கார், தோர்னா, கல்யாண் கோட்டைகளை பீஜப்பூர் சுல்தானிடமிருந்து சிவாஜி கைப்பற்றினார்.
  • 1665 - புரந்தர் உடன்படிக்கை (சிவாஜி - ராஜா ஜெய்சிங்)
  • 1674 - சத்ரபதியாக முடி சூட்டுதல் (ரெய்கார் கோட்டை)
  • 1680 - சிவாஜி மரணம்
  • 1707 - ஔரங்கசீப் மரணம்
  • 1713 - மராத்தியத்தில் பீஷ்வா ஆட்சி
  • 1739 - நாதிர்ஷா படையெடுப்பு
  • 1708 - ஷாகு (சிவாஜி பேரன்) முடி சூட்டுதல்
  • 1761 - அகமது ஷா அப்தாலி படையெடுப்பு (3ம் பானிபட் போர்)

மராத்தியப்போர்கள் (கி.பி1775 - 1818)

முதல் மராத்திய போர் (கி.பி. 1776 - கி.பி.1783)

  • மராத்தியரின் உள்நாட்டு அலுவல்களில் ஆங்கிலேயர் குறுக்கிட்டதன் விளைவாக ஆங்கில - மராத்தியர் போர்கள் ஏற்பட்டன.
  • புகழ்பெற்ற மராத்திய முதலமைச்சர் நானாபட்னாவிச், நராராயணராவ் இறந்த பின் அவர் மகன் மாதவராவ் என்பவரை பீஷ்வாவாக பதவியில் அமர்த்தினார்.
  • இதனை ஏற்க மறுத்த நாராயணராவின் சித்தப்பா ரகுநாதராவ் பம்பாய் ஆங்கில அரசின் உதவியை நாடினார்
  • கி.பி. 1775 ல் இரகுநாத ராவ் ஆங்கிலேயர்களுடன் சூரத் உடன்படிக்கையைத் செய்து கொண்டார். ஆனால் தலைமை ஆளுநர் வாரன்ஹேஸ்டிங்ஸ் இதனை ஏற்கவில்லை,
  • இரகுநாத ராவுக்கு எதிராக மராத்தியருடன் கி.பி. 1776 ஆம் ஆண்டு வான்ஹேஸ்டிங்ஸ்
  • புரந்தர் உடன்படிக்கையை செய்து கொண்டார்.
  • ஆனால் புரந்தர் உடன்படிக்கையை மும்பை அரசு ஏற்க மறுத்தது. பாசினை கைப்பற்றும்படி இயக்குநர் குழு தலைமை ஆளுநருக்கு ஆணையிட்டது. எனவே மராத்தியப்போர் தொடங்கியது.
  • அவர் அனுப்பிய கேப்டன் பாப்மேன் மராத்தியரை வென்று குவாலியர் கோட்டையைக் கைப்பற்றினார்.
  • இப்போர் கி.பி. 1782ல் சால்பாய் உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது.
  • இந்த உடன்படிக்கையின் படி ஆங்கிலேயர்கள் 20 ஆண்டுகாலம் அமைதி காத்தனர்.

இரண்டாம் மராத்தியப் போர் (கி.பி 1802 -1806)

  • கி.பி. 1800ல் மராத்திய முதல் அமைச்சரான நானாபட்னாவிச் இறந்தார்.
  • கி.பி. 1802ல் - பீஷ்வா இரண்டாம் பாஜிராவ் ஆங்கிலேயருடன் பாசின் உடன்படிக்கை செய்து கொண்டார்.
  • இந்த உடன்படிக்கைக்கு கெய்க்வாட், ஹோல்கர் ஆகியோர் துணையாக இருந்தனர்.
  • இந்த உடன்படிக்கையை சிந்தியாவும் போன்ஸ்லேயும் ஏற்க மறுத்தனர்.
  • ஆங்கிலேயர்கள் நர்மதா நதிக்கரைப் படைகளை விலக்கிக் கொள்ளுமாறு போன்ஸ்லே மற்றும் சிந்தியாவிற்கு கட்டளையிட்டனர். இதனை எதிர்த்ததால் இரண்டாம் மைசூர் போர் ஏற்பட்டது.
  • சிந்தியா மற்றும் போன்ஸ்லே படைகள் தோற்கடிக்கப்பட்டன.
  • எனினும் ஹோல்கர் ஆங்கிலேயர்களின் மேலாண்மையைத் தவிர்க்க ஆங்கிலேயர்களுடன் போரிட்டார்.
  • ஆங்கிலேயர்களால் ஹோல்கரைக் கட்டுபடுத்த முடியாதலால் போரை முடிவுக்குக் கொண்டு வர கி.பி.1806ல் ராய்க்கார்க் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

மூன்றாம் மராத்தியப் போர் (கி.பி. 1817-1818)

  • மராத்தியரின் 2 வது போரில் தோற்றுப்போன மராத்தியத் தலைவர்கள் ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற முயன்றனர்.
  • 1817 ல் பீஷ்வா இரண்டாம் பாஜிராவ் ஆங்கிலேயருக்கு எதிராக மராத்தியர்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சி செய்தார்.
  • மூன்றாம் மராத்தியப் போருக்கு முன் ஆங்கிலேயர் தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொண்டனர்.
    • நாக்பூர் உடன்படிக்கையின் மூலம் கெய்க்வாட் படைக்குறைப்பு செய்தார்.
    • குவாலியர் உடன்படிக்கை மூலம் சிந்தியா பிண்டாரிகளுக்கு எதிராக ஆங்கிலேயர்களுக்கு உதவ ஒப்பு கொண்டார்.
  • ஹேஸ்டிங் பிரபு பிண்டாரிகளுக்கு எதிராக துவக்கிய நடவடிக்கைகளிலிருந்து மூன்றாம் மராத்திய போர்துவங்கியது.
  • மராத்தியப் படை, திறமை வாய்ந்த கம்பெனி படையால் தோற்கடிக்கப்பட்டது.
  • மராத்திய அரசு கலைக்கப்பட்டது, பீஷ்வா பதவி நீக்கப்பட்டது மற்றும் அனைத்துப் பகுதிகளையும் ஆங்கிலேயர் இணைத்துக் கொண்டனர்.
  • இதன் மூலம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் மிக உயர்ந்த சக்தியாக உருவெடுத்தது.
57991.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை ?
போன்ஸ்லே -நாக்பூர்
ஹோல்கார் -இந்தோர்
பேஷ்வா - டில்லி
சிந்தியா - குவாலியர்

Share with Friends