Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் சதவீதம் (Percentage) சூத்திரங்கள்

சதவீதம் (Percentage)-சூத்திரங்கள் (Formulas)

சதவீதம் % = (மதிப்பு / மொத்த மதிப்பு ) * 100


சூத்திரங்கள் (Formulas)

  • A-யின் வருமானம் B-யின் வருமானத்தைவிட R% அதிகம் எனில் B- யின் வரு மானம் A-யின் வருமானத்தைவிட $\dfrac{R}{100 + R} \times 100 % $ குறைவு.

  • A-யின் வருமானம் B-யின் வருமானத்தைவிட R% குறைவு எனில் B- யின் வரு மானம் A-யின் வருமானத்தைவிட $\dfrac{R}{100 - R} \times 100 % $ அதிகம்.

மக்கள் தொகை கணக்கு :

ஒரு கிராமத்தில் மக்கள் தொகை தற்சமயம் P என்க. ஓவ்வொரு ஆண்டும் R% மக்கள்தொகை அதிகரிக்கும் என்றால்,

  • 'n' வருடங்களுக்குப் பிறகு மக்கள் தொகை = P(1+$\dfrac{R}{100})^n$

  • 'n' வருடங்களுக்கு முன்பு மக்கள் தொகை =$\dfrac{P}{(1+\dfrac{R}{100})^n}$

தேய்மான கணக்குகள் (Depreciation) :

ஒரு இயந்திரத்தின் தற்போதைய விலை P என்க. அது வேலை செய்வதால் ஒவ்வொரு ஆண்டும் R% அதன், விலை குறையும் என்றால்,

  • 'n' வருடங்களுக்குப் பிறகு இயந்திரத்தின் விலை =P * $(1-\dfrac{R}{100})^n$

  • 'n' வருடங்களுக்கு முன்பு இயந்திரத்தின் விலை =$\dfrac{P}{(1-\dfrac{R}{100})^n}$
Share with Friends