Easy Tutorial
For Competitive Exams

Aptitude-தமிழ் வயது (Age) வினா - விடை (Q&A)

47280.ஒருவர் தனது மகளிடம் உன்னுடைய தற்போதைய வயதுதான் நீ பிறந்தபோது என்முடைய வயதாகும். தந்தையின் தற்போதைய வயது 36 எனில், 5 வருடங்களுக்கு முன் அவரது மகளின் வயது என்னவாக இருக்கும்?
13 ஆண்டுகள்
20 ஆண்டுகள்
17 ஆண்டுகள்
15 ஆண்டுகள்
Explanation:
தந்தையின் வயது =x
மகளின் வயது = y
பிறகு,
x-y = y.
x = 2y
தந்தையின் தற்போதைய வயது = 36 ஆண்டுகள்
36 = 2y
y=18 ஆண்டுகள்
5 வருடங்களுக்கு முன் மகளின் வயது = 18 - 5
= 13 ஆண்டுகள்.
47281.தென்றலின் வயது, ரேவதியின் வயதைவிட 3 குறைவு. தென்றலின் வயது 18 எனில், ரேவதியின் வயது என்ன?
11 ஆண்டுகள்
21 ஆண்டுகள்
15 ஆண்டுகள்
22 ஆண்டுகள்
Explanation:
ரேவதியின் வயது X என்க
தென்றலின் வயது = X - 3
தென்றலின் வயது 18 ஆண்டுகள் எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
x - 3 = 18
x = 18 + 3
x = 21
ஆதலால் ரேவதியின் வயது 21 ஆகும்.
47282.மாலா தனது மகனிடம், எனது வயதினைத் தலைகீழாக எழுதினால் உனது அப்பாவின் வயது கிடைக்கும். அவர் என்னைவிட மூத்தவர் ஆவார் மற்றும் எங்களது வயதின் வித்தியாசம் எங்களின் வயதின் கூட்டுத்தொகையின் 1/11 பங்குக்கு சமம். ஆகவே, மாலாவின் வயது என்னவாக இருக்கும்?
30
24
38
45
Explanation:
மாலாவின் வயதில் இரண்டாமிடத்தில் உள்ள இலக்கத்தினை X எனவும்,
ஒன்றாமிடத்தில் உள்ள இலக்கத்தினை y எனவும் கொள்க.
மாலாவின் வயது = (10x + y) ஆண்டுகள்
மாலாவின் கணவர் வயது = (10y + x) ஆண்டுகள்
(10y + x) - (10x + y) = (1/11) (10x + y + 10y + x)
(9y - 9x) = (1/11) (11x + 11y)
9y - 9x = x +y
10x = 8y
x = (4/5)y
ஆகவே y என்பது ஒற்றை இலக்க எண்ணாகவும் அது கட்டாயம் 5 இன் பெருக்கற்பலின் வருவதாகவும் இருக்கும்.
x = 4, y = 5
மாலாவின் வயது = (10x + y) ஆண்டுகள்
=(( 10*4) + 5) ஆண்டுகள்
மாலாவின் வயது = 45 ஆண்டுகள்
47283.ரம்யா, ஜனனியை விட 7 வயது சிறியவர் இவர்களுடைய வயதின் விகிதமானது 7 : 9 எனில் ரம்யாவின் வயது என்ன?
24.5
22
26.5
29.25
Explanation:
ஜனனியின் வயதை X எனக் கொள்க
ரம்யாவின் வயதை (x -7) எனக் கொள்க
(x - 7)/x=7/9
9 (x - 7) =7x
9x - 63 = 7x
9x -7x = 63
2x = 63
x= 63/2
= 31.5
ரம்யாவின் வயது = (x - 7) = (31.5 - 7) = 24.5
47284.பத்து ஆண்டுகளுக்கு முன்னால் A ன் வயது B ன் வயதில் பாதியாக இருந்தது. தற்போதைய அவர்களின் வயது விகிதம் 3:4 எனில், அவர்களின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன?
25 வருடங்கள்
43 வருடங்கள்
35 வருடங்கள்
28 வருடங்கள்
Explanation:
தற்போது A ன் வயது = 3x
தற்போது B ன் வயது = 4x
பத்து ஆண்டுகளுக்கு முன் A ன் வயது = 3x - 10
பத்து ஆண்டுகளுக்கு முன் B ன் வயது = 4x - 10
பத்து ஆண்டுகளுக்கு முன் A:B ன் வயது விகிதம் = 1:2
எனவே ,
3x - 10/ 4x = 10 = 1/2
6x - 10 = 4x -10
2x = 20
x = 5
எனவே, தற்போது அவர்களின் வயதுகளின் கூடுதல் = 3x + 4x
= 15 + 20 = 35
47285.அரவிந்த் அவரின் தந்தையின் திருமணத்திற்கு இரு வருடங்களுக்குப் பின் பிறக்கிறார். அரவிந்தின் தாய் அவரது அப்பாவைவிட 5 வயது இளையவர் மற்றும் அரவிந்தைவிட 20 வயது மூத்தவர் மற்றும் அரவிந்தின் வயது 10 ஆண்டுகள். ஆகையால் அரவிந்தின் அப்பாவிற்கு எந்த வயதில் திருமணம் நடந்து இருக்கும்?
33 வருடங்கள்
14 வருடங்கள்
23 வருடங்கள்
25 வருடங்கள்
Explanation:
அரவிந்தின் தற்போதைய வயது = 10
ஆண்டுகள் அவனது தாயின் தற்போதைய வயது = (10 + 20 ) = 30
ஆண்டுகள் அவனது தந்தையின் தற்போதைய வயது = (30 + 5) = 35
ஆண்டுகள் அரவிந்த் பிறந்தபோது அவனது தந்தையின் வயது = (35 - 10) = 25 ஆண்டுகள்
ஆகவே, அரவிந்தின் அப்பாவின் திருமணத்தின்போது அவருக்கு வயது = 23 ஆண்டுகள்
47286.P மற்றும் Q ஆகியோரின் தற்போதைய வயதின் விகிதம் 6 : 7, Q என்பவர் P யைவிட 4 வயது மூத்தவர் எனில், 4 வருடங்களுக்கு பிறகு P மற்றும் Q வின் வயதின் விகிதம் என்ன?
5 : 6
2 : 3
8 : 9
7 : 8
Explanation:
P மற்றும் Q வின் வயது 6x, 7x ஆகும்.
பிறகு, 7x - 6x = 4
X = 4
தேவையான விகிதம் = (6x + 4) : (7x + 4)
= 28 : 32
4 வருடங்களுக்கு பிறகு P மற்றும் Q வின் வயதின் விகிதம் =7 : 8
47287.ஒரு குடும்பத்தில் ஒரு ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அப்பாவின் வயது அவரின் மகளின் வயதினைப் போல் மூன்று மடங்கு ஆகும். மகனின் வயதில் பாதி அவரது அம்மாவின் வயது ஆகும். அவரது மனைவி 9 ஆண்டுகள் அவரைவிட இளையவர் மற்றும் மகனின் வயது 7 ஆண்டுகள் மகளின் வயதினைவிட அதிகம். ஆகவே, அவர்களின் அம்மாவின் வயதினைக் காண்க.
55 ஆண்டுகள்
60 ஆண்டுகள்
44 ஆண்டுகள்
32 ஆண்டுகள்
Explanation:
மகளின் வயது X ஆண்டுகள் என்க.
அப்பாவின் வயது = 3xஆண்டுகள்
அம்மாவின் வயது = (3x - 9) ஆண்டுகள்
மகனின் வயது = (x + 7) ஆண்டுகள்
அதனால், (x +7) = (3x - 9) / 2
2x + 14=3x - 9
3x - 2x = 14 + 9
x= 23
ஆகையால், அம்மாவின் வயது = 3x - 9
= (3 * 23) - 9
= 69 - 9
= 60 ஆண்டுகள்
Share with Friends