வெப்பம்
- வெப்பம் ஒரு வகை ஆற்றலாகும்.
- வெப்ப ஆற்றலின் அளவு ஒரு பொருளிலுள்ள துகள்களின் திசை வேகம், எண்ணிக்கை, துகள்களின் வகை மற்றும் அளவைப் பொறுத்தது.
- பொருட்களை வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் அப்பொருளின் வெப்ப நிலை உயருகிறது.
- வெப்பமும் வெப்பநிலையும் ஒன்றல்ல. அவை ஒன்றோடொன்று தொடர்புடையவை.அவை ஒரு பொருளின் வெவ்வேறான இரு பண்புகள் ஆகும்.
பொருளின் வெப்பம்
பொருளின் வெப்பம் என்பது அதிலுள்ள மூலக்கூறு இயக்கத்தின் மொத்த ஆற்றலாகும். வெப்பநிலை, மூலக்கூறு இயக்கத்தின் சராசரி ஆற்றலைக் குறிக்கிறது.
வெப்ப நிலை
- இது ஆற்றலன்று. ஆனால் சராசரி வெப்ப ஆற்றலின் அளவைக் குறிக்கிறது.
- வெப்பம் என்பது ஒரு வகையான ஆற்றலாகும்.
- வெப்ப நிலையின் அலகு - °C அல்லது கெல்வின்
- வெப்ப ஆற்றலின் அலகு - ஜீல்
Previous Year Questions:
- ஒரு பொருளைக் குளிர்விக்கக் கூடிய மிகக் குறைந்த வெப்ப நிலை ஆகும்.
- தனிச்சுழி வெப்பநிலை என்பது 0K அல்லது - 273.15°C ஆகும்.
- கெல்வின் அளவு (K) = செல்சியஸ் அளவு (°C) + 273
- செல்சியஸ் அளவு (°C) = கெல்வின் அளவு (K) - 273
- செல்சியஸ் அளவீட்டிலிருந்து ஃபாரன்ஹீட் அளவிட்டிற்கு மாற்றும் முறை
$\dfrac{C}{100}$=$\dfrac{F-32}{180}$
வாயு விதிகள்
வெப்ப ஆற்றல் ஒரு வாயுவின் வெப்பநிலை, பருமன் அழுத்தம் ஆகியவற்றில் மாறுபாடுகளைத் தோற்றுவிக்கிறது.
பாயில் விதி
ராபர்ட் பாயில் என்ற அறிவியலாளர் வாயுவின் வெப்பநிலை மாறாமல் உள்ள போது அதன் பருமன், அழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயுள்ள தொடர்பை கூறினார்.
வெப்பநிலை மாறாமல் இருக்கும் போது குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம் அதன் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.
$P \propto \dfrac{1}{2}$
Pv= மாறிலி
சார்லஸ் விதிகள்
விதி - 1
அழுத்தம் மாறாமல் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் பருமன் அதன் கெல்வின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும்.
$V \propto T$
$\dfrac{V}{T}$= மாறிலி
விதி - 2
பருமன் மாறாமல் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம் அதன் கெல்வின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும்.
$P \propto T$
$\dfrac{P}{T}$= மாறிலி
வாயுச் சமன்பாடு
PV = RT
வெப்ப என்ஜின்கள்
எரிபொருள்களின் வேதி ஆற்றலை இயக்க ஆற்றலாக மாற்றுகின்றன. வெப்ப என்ஜின்களே உலகின் தொழிற்புரட்சிக்கு வித்திட்டது.
வகைகள்- உள் எரி இயந்திரம் (எ.கா) பெட்ரோல் எந்திரம் டீசல் எந்திரம்
- வெளி எரி இயந்திரம் (எ.கா) நீராவி எந்திரம்
வெப்ப அளவீடு
வெப்பமானிகள்
வெப்பமானிகளின் அடிப்படைத் தத்துவம்:
வெப்பத்தால் திட, திரவ, வாயுப் பொருட்கள் விரிவடையும் பண்பு
வகைகள் :பாதரச வெப்பமானி
பாதரசத்தின் கொதிநிலை = 375°C
பாதரசத்தின் உறைநிலை = -39°C
ஆல்கஹால் வெப்பமானி
ஆல்கஹாலின் கொதிநிலை = 70°C
ஆல்கஹாலின் உறைநிலை =-130°C
வாயு வெப்பமானி
வாயு = 'H' ஹைட்ரஜன்
அளவீடு =-39°C முதல் 500°C
துல்லியத் தன்மை= +0.005°C
மின்தடை வெப்பமானி
தனிமம்= பிளாட்டினம்
அளவீடு=-200°C முதல் 1200°C
துல்லியத் தன்மை= +0.001°C
வெப்ப மின்வெப்பமானிதத்துவம்= சீபெக் விளைவு
அளவீடு= 0°C to 3000°C
வெப்பக்கதிர் வீசல் வெப்பமானி
பைரோ மீட்டர் = 3000°C to 6000°C
பைரோ ஹீலியோ மீட்டர் = சூரியனின் வெப்பநிலையை அளக்க
வெப்பம் பரவும் முறைகள்
- வெப்பக்கடத்தல் (conduction)
- வெப்பச் சலனம் (convection)
- வெப்பக் கதிர்வீசல் (Radiation)
தன்வெப்ப ஏற்பு திறன்
ஒரு பொருளின் தன்வெப்ப ஏற்பு திறன் என்பது ஓரலகு நிறை கொண்ட பொருளின் வெப்பநிலையை 1k உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவாகும் .
இதன் அலகு $JKg^{-1} k^{-1}$
குறியீடு = S
வெப்ப ஏற்பு திறன்
ஒரு பொருளின் வெப்ப ஏற்புத் திறன் என்பது ஒரு குறிப்பிட்ட நிறை கொண்ட பொருளின் வெப்ப நிலையை 1k உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவாகும்.
இதன் அலகு $JK^{-1}$
வெப்ப ஏற்புத் திறன் = நிறை X தன்வெப்ப ஏற்பு திறன்