Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-மரபுக்கவிதை மருதகாசி

மருதகாசி:

வாழ்க்கை குறிப்பு:

  • ஊர் : மேலக்குடிகாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
  • பெற்றோர் : அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள்.
  • மனைவி : தனக்கோடி அம்மாள்.
  • ஆசிரியர் : ராசகோபால ஐயர்.
  • காலம் : பிறப்பு : பிப்ரவரி 13, 1920-இறப்பு : நவம்பர் 29, 1989
  • சிறப்பு பெயர் : திரைக்கவித் திலகம்

ஆசிரியர் குறிப்பு

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.

1949 இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

கல்வி:

உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றார் பின்பு, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் சேர்ந்து, உயர் கல்வி கற்றார்.

திருமண வாழ்க்கை:

1940 ஆம் ஆண்டில் திருமணமானது.

மருதகாசிக்கு 6 மகன்கள், 3 மகள்கள் உள்ளார்கள்.

திரைப்பயணம்:

  • கல்லூரி படிப்பிற்குப் பிறகு "தேவி நாடக சபையின்" நாடகங்களுக்கு பாடல்கள் எழுதி வந்தார்.
  • எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகியோருக்கு மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர்.
  • கருணாநிதி எழுதிய மந்திரிகுமாரி என்ற நாடகத்திற்கு பாடல் எழுதியுள்ளார்.

முதல் பாடல்:

1949-இல் சேலம் மாடர்ன் தியேட்டரின் மாயாவதி என்ற படத்திற்கு

பெண் எனும் மாயப் பேயாம் ....

பொய் மாதரை என் மனம் நாடுமோ ....

என்று தொடங்கும் பாடலே மருதகாசி எழுதிய முதல் திரைப்படப் பாடலாகும்.

சிறப்பு :

  • "கலைமாமணி" பட்டம் பெற்றுள்ளார்.
  • "துணைவன்" படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார்.
  • “மருதமலை மாமணியே முருகையா” பாடல் தமிழக அரசின் பரிசை பெற்றது.
  • “திரைக்கவித் திலகம்” என்ற பட்டம் வழங்கியவர் "குடந்தை வாணி விலாச சபையினர்".
  • ஜகம்புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே என்று 53 வரிகளில் ராமாயணத்தை சுருக்கமாக எழுதினார் .

நினைவை விட்டு அகலாத சில பாடல்கள்:

  • கடவுள் என்னும் முதலாளி ( விவசாயி )
  • சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா… ( நீலமலைத் திருடன் )
  • ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லே ( பிள்ளைக்கனியமுது )
  • காவியமா? நெஞ்சின் ஓவியமா? ( பாவை விளக்கு )
  • முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போல ( உத்தம புத்திரன் )
  • கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த ( தூக்குத் தூக்கி )
  • சமரசம் உலாவும் இடமே ... (ரம்பையின் காதல் 1939)
  • சிரிப்பு… இதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நம் பொறுப்பு ( ராஜா ராணி )
  • ஆளை ஆளைப் பார்க்கிறார் ( ரத்தக்கண்ணீர் )
  • ஆனாக்க அந்த மடம்… ( ஆயிரம் ரூபாய் )
  • கோடி கோடி இன்பம் பெறவே ( ஆட வந்த தெய்வம் )
  • வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே ( மல்லிகா )

பாடல்கள் நாட்டுடமை:

மருதகாசியின் திரை இசைப் பாடல்களையும், புத்தகங்களையும் மே 2007 இல் தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

கவிஞரின் வாரிசுகள் 9 பேருக்கும் ரூ 5 லட்சத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

Share with Friends