உடுமலை நாராயணகவி
வாழ்க்கை குறிப்பு
- புலவர் :உடுமலை நாராயணகவி
- பிறப்பு :திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூர்
- பெற்றோர் : கிருஷ்ணசாமி – முத்தம்மாள்
- இயற்பெயர் : நாராயணசாமி
- காலம் :15.09.1899 முதல் 23.05.1981
- சிறப்பு பெயர் : பகுத்தறிவுக் கவிராயர்
ஆசிரியர் குறிப்பு
இவர் திரைப்படப் பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
பாமர மக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர்.
கல்வி
- முத்துசாமிக் கவிராயரிடம் கல்வி பயின்றார் .
- சங்கரதாசு சுவாமிகளிடம் யாப்பிலக்கணம் பயின்றார் .
- கலைவானர் N.S. கிருஷ்ணனுக்கு "கிந்தனார் கதா காலச்சேபம் " எழுதியதால் கலைவானரின் குருவாக மதிக்கப்பட்டார்.
திரையுலகத் தொடர்பு
- கிராமபோன் கம்பனிக்கு பாட்டு எழுதி தர இயக்குனர் நாராயணன் இவரை திரைப்பட துறைக்கு அறிமுகப்படுத்தினார்
- இவர் பாடல் எழுதிய முதல் திரைப்படம் சந்திர மோகனா (அ ) சமூக தொண்டு
- நாட்டுப்புற பாடல் மெட்டுகளை , திரைப்படத்திற்கு அறிமுகம் செய்தவர்.
- தம் பாடல்களின் திருக்குறள் கருத்துக்களைமிகுதியாக பயன்படுத்தியவர்.
சிறப்பு
‘கலைமாமணி’ என்னும் பட்டம் பெற்றார்.
இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை 500 காசு அஞ்சல் தலையை வெளியிட்டது.
சிறப்புப் பாடல்கள்
- பெண்களை நம்பாதே ! கண்களே பெண்களை நம்பாதே !(தூக்கு தூக்கி என்ற திரைப்படத்தில் இந்த பாடலை எழுதியுள்ளார்)
- காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம் , பி.ஏ படிப்பு பெஞ்ச் துடைக்குதாம்.
- குற்றம்புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது ?
- சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம் ; சோம்பல் வளர்த்தா ஏற்படும் கஷ்டம்.
- கத்தியைத் தீட்டுவது அந்தக்காலம் , புத்தியைத் தீட்டுவது இந்தக்காலம்.
பாடல் எழுதிய திரைப்படங்கள்
- வேலைக்காரி
- ஓர் இரவு
- ராஜகுமாரி
- நல்லதம்பி
- பராசக்தி
- மனோகரா
- பிரபாவதி
- காவேரி
- சொர்க்க வாசல்
- தூக்குத் தூக்கி
- தெய்வப்பிறவி
- மாங்கல்ய பாக்கியம்
- சித்தி
- எங்கள் வீட்டு மகாலட்சுமி
- ரத்தக்கண்ணீர்
- ஆதி பராசக்தி
- தேவதாஸ்
மணி மண்டபம்
தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.
இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.