Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்-மரபுக்கவிதை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

வாழ்க்கைக் குறிப்பு:

பெற்றோர்அருணாசலம், விசாலாட்சி
இவரின் ஊர்செங்கப்படுத்தான் காடு
காலம்பிறப்பு  13.04.1930 - மறைவு 08.10.1959 வரை ( 29 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்துள்ளார்.)

கவிஞர் 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார்.

பாரதிதாசன் நடத்திய குயில் இதழில் உதவியாளராகப் பணியாற்றினார்.

பாரதிதாசனால் “எனது வலது கை” எனப் புகழப்பட்டவர்.


சிறப்புகள் :

"நல்லதச் சொன்னா நாத்திகனா" என்பது அவர் முதல் பாடலாகும்.

189 திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

பட்டுக்கோட்டையார் பாடல் எழுதிய முதல் படம் படித்தபெண்.

பொதுவுடைமைக் கருத்துகளைத் திரைப்படப் பாடலில் புகுத்தியவர்.

1981-ம் ஆண்டு தமிழக அரசு பாவேந்தர் விருது வழங்கியது.

1993-ல் கவிஞருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

உடுமலை நாராயகவி இவரை “அவர் கோட்டை, நான் பேட்டை” எனப் புகழ்ந்தார்

இவரை “மக்கள் கவிஞர், பொதுவுடைமை கவிஞர், பாமர மக்களின் கவிஞர்” எனப் போற்றுவர்


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பன் பரிமாணங்கள்:

1. விவசாயி

2. மாடு மேய்ப்பவர்

3. மாட்டு வியாபாரி

4. மாம்பழ வியாபாரி

5. இட்லி வியாபாரி

6. முறுக்கு வியாபாரி

7. தேங்காய் வியாபாரி

8. கீற்று வியாபாரி

9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி

10. உப்பளத் தொழிலாளி

11. மிஷின் டிரைவர்

12. தண்ணீர் வண்டிக்காரர்

13. அரசியல்வாதி

14. பாடகர்

15. நடிகர்

16. நடனக்காரர்

17. கவிஞர் (இறுதியாக)

பொதுவுடைமைச் சித்தாந்த பாடல்வரிகள்:

"தூங்காதே தம்பி தூங்காதே சேம்பேறி என்ற சொல் வாங்கதே"

"சின்னப்பயலே சின்னப் பயலே சேதிகேளடா ---------------
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி"

"வசதி படைச்சவன் தரமாட்டான் வயிறு பசிக்கறவன் விடமாட்டான்"
"வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுரேன்னு வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்"

"குறுக்கு வழியில் வாழ்க்கை தேடும் திருட்டு உலகமடா"

‘காடு வௌஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்’

"திருடாதே பாப்பா திருடாதே


மணி மண்டபம்

தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் பரணிடப்பட்டது

இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.


Share with Friends