Easy Tutorial
For Competitive Exams

சைவம் ஆகமமும் நாராயணனும்

ஆகமமும் நாராயணனும் :

* ஜனமேஜயருக்கு வைசம்பாயனர் மஹா பாரதத்தைச் சொன்னவர்.

* அந்த சமயம் ரோமஹர்ஷணர் குமாரர் உக்ரச்ரவஸ் என்பவர் உடனிருந்து கேட்டவர்.

* அந்த உக்ரச்ரவஸ் என்பவர், நைமிசாரணியம் என்னும் திவ்விய தலத்திற்கு வந்து அங்கு ஸத்ரம் என்னும் யாகத்தைச் செய்து கொண்டிருந்த சௌனகர் முதலான பலமஹரிஷிகளுக்கு மஹாபாரதத்தைப் பிரவசனம் செய்தார் என்னும் வரலாறு.

* உக்ரச்ரவஸ் என்பவர், தாம் மஹாபாரதத்தைச் சொல்லத்தொடங்கும் போதே, பின் குறிக்கப்பெறும் கருத்தை நன்கு வெளியிட்டிருக்கிறார்.

* அளவறிந்த தேசுபொருந்திய வியாஸ பகவானுக்கு நமஸ்காரம். அவர் அருளினால் இந்த நாராயண கதையைச் சொல்லத் தொடங்குகின்றேன்.

* நாராயணகதை எங்ஙனம் பயனளிக்குமோ அங்ஙனம் பிரமசரியம் முதலிய ஆசிரம தருமங்களைச் செய்வதும் தீர்த்தங்களிலெல்லாம் ஸ்நானம் செய்வதும், பயனைக் கொடுக்கமாட்டா.

* நாராயணனுக்கு ஒப்பு, முன்னும், பின்னும் இப்போதும், எப்போதும் இல்லை .

* மஹாபாரதம், நாராயணன் சரிதத்தையே கூறவந்த சிறந்த நூல் என்பதாகும்.

* நாராயணசரிதம் மிக மேலான பயனை அளிக்கும்.

* நாராயணன், ஒத்தாரும் மிக்காரும் இல்லாதவன் ஆவார்.

* மஹாபாரதம் ஐந்தாவது வேதமாய்க் கூறப்பெற்றிருக்கிறது. இதில், உபநிஷத்தாக பகவத்கீதை அமைந்திருக்கிறது.

* அந்தப் பகவத் கீதையின் ஸாரப் பொருளை நாம் அனுபவிக்கும் போது, நாராயணன் மேன்மையை நன்கு அறியலாகும்.

Share with Friends