பன்னிரு திருமுறைகள் (அல்ல து) சைவ தோத்திர நூல்கள்
* 1,2,3 திருமுறைகள் - திருஞானசம்பந்தரின் தேவாரப் பாக்களால் ஆனது.
* 4,5-வது திருமுறை - திருநாவுக்கரசரின் தேவாரப் பாக்களால் ஆனது.
* 7 வது திருமுறை - சுந்தரரின் தேவாரப் பாக்களால் ஆனது
* 8வது திருமுறை - மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றால் ஆனது.
* 9 வது திருமுறை :
1. திருமாளிகை தேவர்.
2. கருவூரார்த்தேவர்.
3. சேதிராமல்.
4. சேந்தனார்.
5. திருவாலி அமுதனார்.
6. புரத்த நம்பி,
7. புந்துருத்திநம்பி,
8. கண்டராதித்தர்,
9. காடவ நம்பி வேணாட்டு அடிகள் ஆகிய ஒன்பதின்மார் அருளிய திருப்பாசுரங்களால் ஆனது.
* 10 ம் திருமுறை - திருமூலர் அவர்களால் அருளப்பட்ட திருமந்திரத்தால் ஆனது.
* 11 ம் திருமுறை :
1. அதிரா அடிகள்.
2. கனம் பெருமாளடிகள்.
3. ஐயடிகள் காடவர்கோன்.
4. கபிலத்தேவர்.
5. கல்லாடத்தேவர்.
6. காரைக்கால் அம்மையார்.
7. சேரமான் பெருமாள்.
8. நக்கீரர்.
9. நம்பியாண்டார் நம்பி.
10. பட்டிணத்தார்.
11. பரணதேவர் முதலிய பதினோரு அடியார்களால் இயற்றப்பட்ட திருப்பாசுரங்களும், சிவபெருமான் அருளிய திருமுகப் பாசுரமும் உள்ளடக்கியது.
* 12 ம் திருமுறை :
1. சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம்
2.திருத்தொண்டர் புராணம் ஆகும்.
* பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளின் ஆசிரியர்களான திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் மூவர் முதலிகள் என்றும் அவர்களுடைய நூல்கள் தேவாரம் என்றும் அழைக்கப்படுகிறது.
* மூவர் முதலிகளுடன் மாணிக்கவாசகரையும் சேர்த்து சமயக்குரவர்கள் நால்வர் என்றும் சமயாச்சாரிகள் என்றும் சைவம் குறிப்பிடுகின்றது.
* மேலும் சைவ மரபின் நான்கு நெறிகளான சற்புத்திர மார்க்கம், தசமார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் ஆகியவற்றை வாழ்ந்து காட்டியவர்கள் என்றும் சமயக்குரவர்கள் போற்றப்படுகின்றனர்.