மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் (Soil, minerals and natural resources)
* வளங்களில் மண்வளம் மிக முக்கிய வளமாகக் கருதப்படுகிறது. உலகில் காணப்படும், இந்திய நாட்டின் பரப்பளவு கொண்ட மற்ற நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் வேறுபட்ட இயற்கைச் சூழல் அதிக எண்ணிக்கையிலான மண் வகைகளுக்கு காரணமாக உள்ளது. (வளமான மண் வகைகள், வேளாண்மையை ஊக்கப்படுத்துவதன் மூலம் அதிக மக்கட் தொகைக்கு ஆதரவாக உள்ளது).
மண்(Soil) :
* மண் என்பது கனிமங்களின் கூட்டுப் பொருட்கள், மக்கிய தாவரங்கள், விலங்கினப் பொருட்கள், காற்று மற்றும் நீர் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது புவியின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு அடுக்காகும். மண்துகள்கள், களிமண், மணல் மற்றும் மண்மண்டி படிவு (Silt) என மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. பல்வேறு காலநிலை சூழலில் பாறைகள் சிதைவடைவதால் மண் உருவாகிறது. சில மண்வகைகள் தேயுருதல் காரணிகளால் அரிக்கப்பட்டு பின் படியவைக்கப்பட்டு உருவாகின்றன. மண்ணானது பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடும்.
மண்ணின் வகைகள் :
1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் இந்தியாவில் காணப்படும் மணவகைகளை 8 பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. அவை
1. வண்டல் மண்
2. கரிசல் மண்
3. செம்மண்
4. சரளை மண்
5. காடு மற்றும் மலை மண்
6. வறண்ட பாலை மண்
7. உப்பு மற்றும் காரமண்
8. களிமண் மற்றும் சதுப்பு நில மண்
Previous Year Questions:G4
பட்டியல் I பட்டியல் II
a)தார் 1.ஆப்பிரிக்கா
b)அடகாமா 2.சீனா
c)சாகேல் 3. சிலி
d) கோபி4.இந்தியா
குறியீடுகள் :