Easy Tutorial
For Competitive Exams
GS - Indian Economy (இந்தியப் பொருளாதாரம்) QA இந்திய பொருளாதாரம் Prepare Q&A Page: 2
56887.கூற்று 1: இனப்பெருக்கம், தாய்மைப் பேறு, சிசு மற்றும் குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினரின் நலனுக்காக பல்வேறு பணிகளை NRHM மேற்கொள்கிறது.

கூற்று 2: மகப்பேறு மற்றும் குழந்தை நலன் ஆகியவற்றுக்கு NRHM முக்கியத்துவம் வழங்குகிறது.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
56888.ஊரக பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவினரில் 2005 ஆம் ஆண்டில் _____________ சதவீதம் பேர் ஊரக வறுமையில் இருந்தனர்.
40%
50%
80%
90%
56889.2011-12 ன் மதிப்பீட்டின்படி ஊரகப் பகுதிகளில் ____________ மக்கள் ஏழையாகவும், வறுமைக் கோட்டிற்கு கீழும் வசிக்கின்றனர்.
12 கோடி
20 கோடி
22 கோடி
25 கோடி
Explanation:
வறுமை என்பது அடிப்படைத் தேவைகளான உணவு உடை, இருப்பிடம் போன்றவற்றை பூர்த்தி செய்ய முடியாத நிலையாகும்.
56890.தவறான இணையைத் தேர்ந்தெடு
20 அம்சத் திட்டம் - 1975
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP) – 1976
ஊரக இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சி (TRYSEM) – 1979
வேலைக்கு உணவுத் திட்டம் (FWP) – 1980
Explanation:
வேலைக்கு உணவுத் திட்டம் (FWP) – 1977)
56891.கூற்று 1: இந்திய அரசாங்கம் 1965 ஆம் ஆண்டு ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆராய, ஊரக வங்கிகளில் பணிபுரிந்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி, வட்டார ஊரக வங்கிகள் செயல்படுத்தப்பட்டன.

கூற்று 2: சிறு மற்றும் குறு விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள், கிராம கைவினைஞர்கள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பிற உதவிகளை வழங்குவதன் மூலம் ஊரக பொருளாதாரம் மேம்பாடு அடைய வட்டார ஊரக வங்கிகள் பரிந்துரைக்கப்பட்டன.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Explanation:

இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு ஊரக வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆராய, ஊரக வங்கிகளில் பணிபுரிந்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி, வட்டார ஊரக வங்கிகள் செயல்படுத்தப்பட்டன.)
56892.தவறான இணையைத் தேர்ந்தெடு.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) - 1980
ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (RLEGP) – 1983
ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் (JRY) – 1988
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் (MGNREGS) – 2006
Explanation:
ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம் (JRY) – 1989)
56893.பொருத்துக.
1. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் i) 2009

2. தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் ii) 2005

3. தேசிய ஊரக நலத்திட்டம் iii) 2011

4. ராஜீவ் ஆவாஸ் யோஜனா iv) 2013
iii i ii iv
ii iii iv i
iii i ii iv
iv iii ii i
56894.தற்போது இந்தியாவில் உள்ள வட்டார ஊரக வங்கிகளின் எண்ணிக்கை
54
58
64
68
Explanation:

மத்திய மாநில அரசுகள் மற்றும் வணிக வங்கிகளின் கூட்டு முயற்சியால் உருவானதே வட்டார ஊரக வங்கிகள் ஆகும்.
56895.2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் _______________ கிராமங்கள் உள்ளன.
4,60,867
5,40,807
6,86,407
6,40,867
Explanation:

இந்தியாவின் 121 கோடி மொத்த மக்கள்தொகையில், 68.84 சதவீத மக்கள் ஊரகங்களில் வசிக்கின்றனர்.
56896.இந்தியாவின் மொத்த வேலையின்மை _____________ சதவீதம் ஆகும்.
7.5%
7.8%
8.2%
8.5%
Explanation:

வேலையின்மை என்பது நடைமுறையிலுள்ள ஊதிய விகிதத்தில், தனிநபரால் வேலை செய்ய விருப்பப்பட்டும் கிடைக்கப் பெறாத நிலையாகும். இதனால் மனிதவளம் மிகவும் வீணாகிறது மற்றும் குறைவாக பயன்படுத்தப்படுகிறது.)

56897.அனைத்து சிறு நிதி வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் அதன் செயல்பாடுகளை தரம் நிர்ணயம் செய்தல் மற்றும் முறையான ஒப்புதல் வழங்குதல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த வங்கியின் நோக்கம்
NABARD
MUDRA
RRB
SBI
56898.பணிக்கான படிப்பு என்ற ஆய்விற்காக பீட்டர் டயமண்ட், டேல் மார்டின்கன் மற்றும் கிறிஸ்டோர் பிசாரிட்ஸ் ஆகிய பொருளாதார அறிஞர்கள் நோபல் பரிசு பெற்ற ஆண்டு
2008
2009
2010
2011
Explanation:

பீட்டர் டயமண்ட், டேல் மார்டின்கன் மற்றும் கிறிஸ்டோர் பிசாரிட்ஸ் ஆகியோர் உருவாக்கிய முறைக்கு அல்லது கோட்பாட்டிற்கு DMP முறை என்று பெயர். பொருளாதார கொள்கைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் எப்படி வேலையின்மை, வேலைக்கான காலியிடங்கள் மற்றும் கூலி ஆகியவற்றை பாதிக்கிறது என அறிந்து கொள்ள DMP முறை உதவுகிறது.
56899.ஊரக மேம்பாடு என்பது குறிப்பிட்ட ஊரக மக்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை முறையை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட உத்தி" என்பது யாருடைய கூற்று
ஐக்கிய நாடுகள் சபை
ஐரோப்பிய யுனியன்
உலக வங்கி
சார்க்
Explanation:

ஊரக மேம்பாடு என்பது ஊரக மக்களின் சமூக நலம் மற்றும் வாழும் சூழ்நிலையை மேம்படுத்துதல் போன்ற ஒட்டு மொத்த முன்னேற்றத்தைக் குறிப்பதாகும்.
56900.ஊரக வேலையின்மை எத்தனை வகைப்படும்?
5
2
3
4
Explanation:

வெளிப்படையான வேலையின்மை மறைமுக வேலையின்மை அல்லது குறை வேலையுடைமை பருவகால வேலையின்மை
56901.பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச் சத்து உணவு எடுத்துக்கொள்ளுதல் அளவு அடிப்படையில் கிராமங்களில் வாழும் மக்கள் நாள் ஒன்றுக்கு _____________ கலோரி அளவு மற்றும் அதற்குக் குறைவாக எடுத்துக்கொள்பவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவர்.
1, 200
1,800
2,400
2,600
Explanation:

வறுமைக் கோடு என்பது மக்களின் வருமானம் அல்லது நுகர்வு நிலையை பொறுத்து வறுமை கோட்டிற்கு மேல் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அனுமானிக்கும் கோடு ஆகும்.
56902.கீழ்க்கண்டவற்றுள் ஊரக வேலையின்மைக்கான காரணங்கள் எவை?


1. திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் இன்மை

2. துணை தொழில்களின்மை

3. வேளாண்மையை இயந்திரமயமாக்கல்

4. மூலதன செறிவு தொழில்நுட்பம்

5. கல்விமுறையில் உள்ள குறைபாடுகள்
அனைத்தும்
2, 3, 5
1, 2, 4, 5
1, 3, 4, 5
56903.இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் _______________ மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்.
50 கோடி
80 கோடி
85 கோடி
90 கோடி
Explanation:

இவர்களில் கால் பகுதி கிராம மக்கள் (22 கோடி மக்கள்) வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கின்றனர்.
56904.கூற்று 1: ஊரக பகுதிகளில், ஊரக மக்களால் நடத்தப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் ஊரக தொழிற்சாலைகள் ஆகும்.

கூற்று 2: உள்ளூரில் கிடைக்கும் கச்சாப்பொருட்கள், திறன்கள் மற்றும் சிறிய அளவிலான முதலீடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஊரக தொழிற்சாலைகள் அமைகின்றன.
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Explanation:

ஊரக தொழிற்சாலைகளின் வகைகள் குடிசைத் தொழில்கள் ஊரக தொழில்கள் சிறு தொழில்கள் குறுந்தொழில்கள் வேளாண் சார்ந்த தொழில்கள்
56905.குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிச் சட்டத்தின்படி சேவை சார்ந்த தொழிற்சாலைகள் _____________ அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
உற்பத்தி
தொழிலாளர்களின் எண்ணிக்கை
கருவிகள் மீதான முதலீடு
ஏற்றுமதி
Explanation:

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி சட்டம் 2006ன் படி உற்பத்தி தொழிற்சாலைகள் முதலீட்டின் அடிப்படையிலும், சேவை சார்ந்த தொழிற்சாலைகள் கருவிகள் மீதான முதலீட்டின் அடிப்படையிலும் பிரிக்கப்படுகின்றன.
56906.கீழ்க்கண்டவற்றுள் வேளாண் சார்ந்த தொழிற்சாலை அல்லாதது எது?
ஜவுளி தொழிற்சாலை
சர்க்கரை ஆலை
காகித ஆலை
சலவை சோப்பு தயாரித்தல்
Explanation:
தாவர எண்ணெய் ஆலை, தேயிலை மற்றும் காபி தொழிற்சாலைகள் ஆகியவையும் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் ஆகும்.
Share with Friends