காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு
- இந்தியப் பிரிவினை வங்காளம் மற்றும் பஞ்சாபின் மாகாணங்களை இரண்டாகப் பிரித்தது.
- முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள் பாகிஸ்தானுக்கு எனப் பிரிக்கப்பட்டன; இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்கள் இந்தியாவோடு இணைக்கப்பட்டன.
- இங்கிலாந்து பிரதமர் கிளமண்ட் அட்லி, 1947 பிப்ரவரி 20இல் லண்டனில் வெளியிட்ட அறிவிப்பில் பிரிட்டிஷ் அரசாங்கம் 1948 ஜூன் 30க்குள் இந்தியாவிற்குச் சுதந்திரம் அளித்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறும் என்று தெரிவித்தார்.
- 1947 மார்ச் 22இல் வேவல் பிரபுவுக்குப் பதிலாக அரச பிரதிநிதியாக பதவிக்கு வந்த மௌண்ட்பேட்டன் பிரபுவின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்படுவதைத் துரிதப்படுத்தின.
- 1947 ஜூன் 3இல் மௌண்ட்பேட்டன் பிரபு, அட்லி அறிவித்த தினத்திற்கு முன்னதாகவே 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். வகுப்புவாதப் பிரச்சனை, இருநாடு கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு டொமினியன் அரசாங்கங்களிடம் பகிர்ந்து ஒப்படைப்பதே மௌண்ட்பேட்டன் திட்டமாகும்.
- 1947 ஜூன் 14இல் மீரட்டில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியப் பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மௌண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- ஜவகர்லால் நேரு 1947 ஆகஸ்டு 14-15 இடைப்பட்ட நாளன்று நள்ளிரவில் அரசமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களிடம் உரையாற்றினார்.
- ஆசிரியர்கள் ஜவகர்லால் நேருவின் முழு உரையையும் மாணவர்களைக் கேட்கச் செய்யலாம். அதற்கான இணைப்பு https:// www.youtube.com/watch?v=Uj4TfcELODM
- தொடக்கத்தில் பிரிவினையை மிகத் தீவிரமாக எதிர்த்த காந்தியடிகள் அது தவிர்க்க முடியாததாகிவிட்டதை ஏற்றுக்கொண்டார்.
- 1948 ஜனவரி 30இல் நிகழ்ந்த மகாத்மா காந்தியடிகளின் படுகொலை இதன் தொடக்கமாகும்.
பிரிவினையின் விளைவுகள்
- லாகூர் மாநாடு (மார்ச் 1940)
- முஸ்லிம் லீக், இந்து-முஸ்லிம் அடிப்படையில் இந்தியாவைப் பிரிவினை செய்வதற்கான கோரிக்கையை லாகூர் மாநாடு (மார்ச் 1940) முதலே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
- 1947 ஜூன் 3இல் வெளியிடப்பட்ட மௌண்ட்பேட்டன் திட்டத்தில் இடம் பெற்றது.
- மௌண்ட்பேட்டன் அதிகார மாற்றத்திற்கான நாளை ஆகஸ்ட் 15, 1947 என்று அறிவித்ததால், மௌண்ட்பேட்டன் திட்ட வெளியீடு, இந்திய விடுதலை ஆகியவற்றுக்கான கால இடைவெளி வெறும் 72 நாட்கள் மட்டுமே.
- இந்திய வ ரைபடத்தைப் பிரிவினைக்கேற்றவாறு மாற்றி வரைவதற்கு லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட வழக்கறிஞரான சர்சிரில் ராட்க்ளிஃப்
- 1947 ஆகஸ்ட் 15க்குப் பின் இந்தியா – பாகிஸ்தான் என்ற இரண்டு அரசமைப்பு நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
- 1947 ஜூலை 8இல் சர் சிரில் ராட்க்ளிஃப் இந்தியா வந்தடைந்தார். பஞ்சாப்-வங்காளம்
- இந்து மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையினர் வாழும் கிராமங்களை 1941ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அடையாளம் கண்டறிய எல்லை ஆணையத்திற்கு ஐந்து வார கால அவகாசம் மட்டுமே இருந்தது.
- சீக்கிய சமூகத்தின் கோரிக்கைகளின் காரணமாக மேற்கு பஞ்சாபில் இருந்த கிராமங்களைச் சேர்ந்த சீக்கியர்களின் மக்கள்தொகையைப் பொருட்படுத்தாமல் சீக்கிய குருத்துவாரா இருந்த கிராமங்கள் இந்திய எல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையைஇரண்டு ஆணையங்களும் தங்கள் அறிக்கை மூலம் 1947 ஆகஸ்ட் 9இல் வெளியிட்டன.
- 1947 ஆகஸ்ட் 9இல் ராட்க்ளிஃப் அளித்த திட்டத்தின்படி அதுவரையில் பஞ்சாபின் பகுதியாக இருந்து வந்த 62,000 சதுர மைல்கள் கொண்ட நிலம் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது.
- இந்தப் பகுதியின் மொத்த மக்கள் தொகை (1941ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) 1.58 கோடியாகும். அவர்களில் 1.18 கோடி மக்கள் முஸ்லிம்கள் ஆவர்.
- கிழக்கு பஞ்சாப் 37,000 சதுரடி நிலப்பரப்பும் 1.26 கோடி மக்கள் தொகையும் உடையதாக இருந்தது. இவர்களில் 43.75 இலட்சம் பேர் முஸ்லிம்கள் ஆவர்.
- மேற்கு வங்காளம் பரப்பளவில் 28,000 சதுரமைலுடன் 21,20,000 மக்கள் தொகை கொண்டதாக இருந்தது. அதில் 5,30,000 முஸ்லிம்கள் ஆவார்.
- சர். ராட்கிளிஃப் ஆணையம் பழைய வங்காள மாநிலத்தின் 49,400 சதுரமைல்களும் 3,91,00,000 மக்கள்தொகை கொண்ட பகுதியை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
- 1941ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, 2,77,00,000 பேர் முஸ்லிம்கள் ஆவர். வேறுவிதமாக சொல்வதெனில் 29% பேர் இந்துக்கள்.
- கிழக்குப் பாகிஸ்தான் (இதுவே 1971 டிசம்பரில் பங்களாதேஷ் ஆகியது)
- பிரிவினைக்குப் பின் இந்தியாவில் 42 மில்லியன் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் 20 மில்லியன் முஸ்லிம் அல்லாதோரும் (இந்துக்கள், சிந்தியர்கள் மற்றும் சீக்கியர்கள்) இருந்தனர்.
- இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்டு 15 அன்று பிரிவினை வன்முறைகளுக்கு தன் எதிர்ப்பை உணர்த்தும் விதத்தில் புது தில்லிக்கு வெகுதொலைவில் உண்ணாவிரதம் இருந்தார்.
- ஆகஸ்டு 1947 முதல் நவம்பர் 1947 வரையிலான 4 மாத காலத்தில் 4.5 மில்லியன் மக்கள் மேற்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குக் குறிப்பாக கிழக்கு பஞ்சாப் நகரங்கள் மற்றும் புது தில்லிக்கு இடம் பெயர்ந்தனர்.
- அதே நேரத்தில், 5.5 மில்லியன் முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கள் வீட்டை விட்டு (கிழக்கு பஞ்சாப் ஐக்கிய மாகாணம் மற்றும் தில்லி ஆகியவற்றிலிருந்து) இடம்பெயர்ந்து பாகிஸ்தானுக்குச் சென்றனர்.
- வரலாற்று அறிஞர் ஞானேந்திர பாண்டே கூற்றுப்படி, 1947-48இல் 5 இலட்சம் முஸ்லிம் அல்லாத அகதிகள் (இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள்) பஞ்சாப் மற்றும் தில்லிக்கு இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.
- எல்லையைக் கடப்பதற்காக நின்ற அகதிகளின் நீண்ட வரிசை கஃபிலா (Kafila) எனப்பட்டது.
- வன்முறையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையிலாக இருக்க வேண்டும் என்றும் 15 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 1950இல் கூட இருநாடுகளின் அரசியல் தலைமைகளும் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்றும் தங்கள் வீடுகளைத் துறந்து வந்த இரு பக்கத்தினரும் அவர்கள் பகுதிகளுக்குத் திரும்ப வேண்டுமென்றும் விரும்பினர்.
- 1950, ஏப்ரல் 8இல் நேரு மற்றும் லியாகத் அலி கான் கையெழுத்திட்ட தில்லி ஒப்பந்தம் இரு தரப்பிலும் உள்ள சிறுபான்மையினரின் நம்பிக்கையை மீட்டெடுப்பது பற்றி குறிப்பிட்டது.
அரசமைப்பு உருவாக்கம்
- இந்திய அரசமைப்பின் வரைவை இந்தியர்கள் தான் உருவாக்க வேண்டும்; பிரிட்டிஷ் பாராளுமன்றம் அல்ல என்ற கோரிக்கை இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக 1934இல் அதிகாரப்பூர்வமாக எழுப்பப்பட்டது.
- இந்தியர்களே தங்களுக்கான அரசமைப்பை உருவாக்குவார்கள் என்ற அடிப்படைக் கருத்து 1922லேயே காந்தியடிகளால் முன்வைக்கப்பட்டது.
- இந்திய அரசாங்கச் சட்டம் 1935இன் அடிப்படையில் ஆகஸ்ட் 1946இல் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
- 1946இல் நடைபெற்ற மாகாண தேர்தலில் சொத்துரிமை உரியவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை என இருந்தது.
- அரசமைப்பு நிர்ணய சபையில் காங்கிரஸ் (224 இடங்கள்) ஆதிக்கம் செலுத்திய போதிலும் கம்யூனிஸ்டுகளும் சோஷியலிஸ்டுகளும் குறைந்த எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தனர்.
- டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர், பம்பாயிலிருந்து அரசமைப்பு நிர்ணயசபைக்கு தேர்ந்தெடுக்கப்படுமாறு பார்த்துக் கொண்ட காங்கிரஸ் அவரை அரசமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.
- இந்திய தேசிய காங்கிரசால் கராச்சி கூட்டத்தில் (மார்ச் 1931) நிறைவேற்றப்பட்ட அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில் இடம் பெற்ற தன்னாட்சி என்பதன் பொருள் மற்றும் விடுதலைப் போராட்டத்தின் இலக்கியல் (idealism) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்திய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் மேற்கண்டவாறு அரசமைப்பு நிர்ணயசபையை உருவாக்கியது.
- 1946, டிசம்பர் 13 அன்று ஜவகர்லால் நேரு இந்திய அரசமைப்புக்கான குறிக்கோள்தீர்மானத்தை அரசமைப்புநிர்ணய சபையில் அறிமுகப்படுத்தினார்.
- அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9இல் நடைபெற்றது.
- இராஜேந்திர பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இந்திய அரசமைப்பு 1949 நவம்பர் 26இல் அரசமைப்பு நிர்ணயசபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- அரசைமைப்பின் சட்டமொழி குறிக்கோள் தீர்மானத்திலிருந்தும் அதைவிட மிக முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபை 1948 டிசம்பர் 10இல் வெளியிட்ட அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கையிலிருந்தும் எடுக்கப்பட்டது.
சுதேச அரசுகளின் இணைப்பு
- சுதேசஅரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பணி 1947 ஆகஸ்ட் 15 க்குள் விரைவாக முடிக்கப்பட்டது.
- காஷ்மீர், ஜுனாகத், ஹைதராபாத் ஆகியவற்றைத் தவிர மற்ற சுதேசஅரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் (Instrument of Accession)கையெழுத்திட்டு பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் மைய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டன.
- டிசம்பர் 1945 மற்றும் ஏப்ரல் 1947 - அனைத்திந்திய மாநில மக்கள் மாநாடு
- இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் மாநில நிர்வாகங்களுக்கான அமைச்சராகவும் இருந்த சர்தார் வல்லபாய் படேல் திறம்பட செய்து முடித்தார்.
- சுதேச அரசுகளின் இணைப்பில் முக்கியப் பங்கு வகித்த போராட்டங்களாக மூன்று போராட்டங்களைக் குறிப்பிடலாம்.
- புன்னப்புரா – வயலார் ஆயுதப் போராட்டம் முக்கியமானது.
- பிரஜா மண்டல் மற்றும் ஒடிசாவில் நடந்த பழங்குடியினர் கிளர்ச்சிகள் (நீலகிரி, தெங்கனால் மற்றும் தல்சர்) இந்தியாவில் நடந்த இரண்டாவது முக்கிய சுதேச எதிர்ப்புப் போராட்டம் ஆகும்.
- மைசூர் மகாராஜாவிற்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் நடத்திய போராட்டங்களும் இந்திய சுதேச அரசுகளின் இணைப்புக்கு முக்கியப் பங்காற்றின.
- ஹைதராபாத் நிஜாம் விடுதலைப் பிரகடனம் செய்த 48 மணிநேரத்திற்குள் இந்தியா அங்கு காவல்துறை நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
- 1946 முதலே படேல் காஷ்மீர் மகாராஜாவோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோதிலும், காஷ்மீர் அரசர் ஹரிசிங் இந்தியாவோ டு இணைய மறுத்துவந்தார் .
- (அக்டோபர் 1947) பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரைச் சூறையாடியபோது மகாராஜா ஹரிசிங்கால் அந்த நடவடிக்கையைத் தடுக்க முடியவில்லை. காஷ்மீர் அரசருக்கு உதவுவதற்காக, இந்திய இராணுவம் அனுப்பப்படுவதற்கு முன் காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதில் படேல் உறுதியாக இருந்தார்.
மொழி அடிப்படையில் மாநிலங்களின் மறுசீரமைப்பு
இந்திய வெளியுறவுக் கொள்கை
- சுதந்திர இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படைக் கோட்பாடுகள் இந்தியா விடுதலை அடைவதற்கு குறைந்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டன எனலாம்.
- இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் பின்வருமாறு:
- காலனிய எதிர்ப்பு (அ) ஏகாதிபத்திய எதிர்ப்பு
- இன ஒதுக்கலை எதிர்த்தல்
- இனவெறியை எதிர்த்தல்
- வல்லரசுநாடுகளுடன் அணி சேராமை
- ஆப்பிரிக்க- ஆசிய ஒற்றுமை
- பிறநாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல்
- பிறநாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்
- ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறையாண்மை மற்றும் நில எல்லையை மதித்தல்
- உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்
- நாடுகளுக்கிடையேயான அமைதியை நிலைநிறுத்துவதில் வெற்றிடம் ஏற்படா வண்ணம் இரு நாடுகளும் சமநீதியைப் பாதுகாத்தல்.
- இரண்டாம் உலகப்போருக்குப் பின், அமெரிக்கா (USA) மற்றும் சோவியத் ஒன்றியம் (USSR) ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பனிப்போர் காரணமாக இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு இந்தியா அணிசேராக் கொள்கை மூலம் தீர்வு கண்டது.
- இந்தியா சீனாவோடு கொண்டிருந்த உறவு
- இந்தியா, சீனாவோடு நீண்ட எல்லையைக் கொண்டிருந்ததால் நேரு சீனாவுடனான நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் தந்தார்.
- சீன மக்கள் குடியரசை 1950 ஜனவரி 1இல் முதன் முதலாக அங்கீகரித்த நாடு இந்தியா.
- இந்தியாவும் சீனாவும் கைகோர்த்து உலகில் ஆசியாவிற்கோர் இடத்தை நிலைநிறுத்த முடியும் என்று நேரு கருதினார்.
- 1950இல் சீனா, திபெத்தை ஆக்கிரமித்த போது இந்தியா வருத்தமடைந்தது.
- 1954இல் இந்தியா மற்றும் சீனாவிடையே கையெழுத்தான ஒப்பந்தம் சீனாவிற்கு திபெத் மீதிருந்த உரிமையை அங்கீகரித்தது.
- ஏப்ரல் 1955இல் நடைபெற்ற பாண்டுங் மாநாட்டில் சீனாவையும் அதன் தலைவரான சூ - யென் – லாயும் முன்னிலைப்படுத்த நேரு சிறப்பான முயற்சிகள் எடுத்தார்.
- 1959இல் சீன அரசாங்கம் பௌத்தர்களின் கிளர்ச்சியை ஒடுக்கியதால், பெளத்தர்களின் தலைவரான தலாய்லாமா ஆயிரக்கணக்கான அகதிகளுடன் திபெத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
- 1959இல் லடாக்கில் இருந்த கொங்காய் கணவாயில் காவல் இருந்த இந்தியப் படை மீது சீனா தாக்குதல் நடத்தியது.
- இதில் 5 இந்தியக் காவலர்கள் கொல்லப்பட்டனர், 12 பேர் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்
- ஏப்ரல் 1960இல் சூ - யென் – லாய் டெல்லிக்குப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதிலும் இந்திய சீன உறவில் போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை.
- 1962இல் இந்திய சீனப் போர் ஏற்பட்டது.
- 1962, செப்டம்பர் 8இல் சீனப் படைகள் தக்லா மலைப் பகுதியில் தாக்குதல் நடத்தின.
- மார்ச் 1947இல் டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுக்கான மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன.
- இத்தகைய மாநாடு மீண்டும் ஒரு முறை டிசம்பர் 1948இல் இந்தோனேசியாவில் மறு காலனியாக்கத்திற்கு உட்படுத்த விரும்பிய, டச்சுக்காரர்களுக்குப் பதில் கூறும் வகையில் நடத்தப்பட்டது.
- காலனி ஆதிக்க நீக்க முயற்சிகள் 1954இல் கொழும்பில் நடைபெற்ற ஆசியத் தலைவர்கள் மாநாட்டில் மேலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
- 1955இல் இந்தோனேசியா நாட்டின் பாண்டுங் நகரில் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது.
- பெல்கிரேட் நகரில் இந்த நாடுகள் கூடி அணி சேரா இயக்கத்தைத் தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தை பாண்டுங் மாநாடு ஏற்படுத்திக் கொடுத்தது.
- கொள்கையின்சிற்பியானஜவகர்லால்நேரு, எகிப்து அதிபர் நாசர் மற்றும் யூகோஸ்லாவியாவின் டிட்டோ ஆகியோருடன் இணைந்து 1961இல் அணுசக்தி ஆயுதக்குறைப்பு மற்றும் சமாதானத்திற்கான அழைப்பு விடுத்தார்.
பாண்டுங் பேரறிக்கை
உலக அமைதியையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக ஐ.நா.சாசனத்தின் 10 அம்சக் கோட்பாடுகளை உள்ளடக்கிய “பேரறிக்கை”:
1. அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றை மதித்து நடத்தல்.
2. அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் எல்லை ஒருமைப்பாட்டிற்கு மரியாதை அளித்தல்.
3. அனைத்து இனங்களின் சமத்துவத்தையும் பெரிய மற்றும் சிறிய அளவிலான அனைத்து நாடுகளின் சமத்துவத்தையும் அங்கீகரித்தல்.
4. மற்றொரு நாட்டின் உள் நிகழ்வுகளில் தலையீடு அல்லது தலையீடுகளில் இருந்து விலகுதல்.
5. ஒவ்வொரு நாட்டிற்கும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உரிமையுண்டு. தனியாகவோ அல்லது கூட்டாகவோ, ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு ஏற்ற விதத்தில் பாதுகாத்துக் கொள்ளலாம்.
6. (அ) வல்லரசுகளின் எந்தவொரு குறிப்பிட்ட நலன்களுக்கும் சேவை செய்வதற்கு கூட்டாகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை பயன்படுத்துவதில் இருந்து ஒதுங்கிக் கொள்ளல். (ஆ) எந்தவொரு நாடும் பிறநாடுகளின் மீது அழுத்தங்களைச் செலுத்தாமல் ஒதுங்கி இருத்தல்.
7. ஆக்கிரமிப்பு அல்லது ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் அல்லது எந்த ஒரு நாட்டின் நில ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுயநிர்ணயத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் விலகி இருத்தல்.
8. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு இணங்க அனைத்து சர்வதேச முரண்பாடுகளையும் சமாதான வழிவகைகள், சமரசம், நடுவர் அல்லது நீதித்துறை தீர்வு போன்ற அமைதியான வழிமுறைகளில் தீர்த்துக் கொள்ளுதல்.
9. பரஸ்பர நலன்களையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துதல்.
10. நீதி மற்றும் சர்வதேசக் கடமைகளை மதித்தல்.