தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்
- மகாராஷ்டிராவில் பாலகங்காதர திலகர், வங்காளத்தில் பிபின் சந்திரபால், பஞ்சாபில் லாலா ஜபதி ராய் ஆகியோரின் தலைமையில் இப்போர்க்குணம் வளர்ச்சி பெற்றது.
- ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு முதன்மையான எடுத்துக்காட்டு 1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையாகும்.
- பிரிவினைத் திட்டம் முதன்முதலில் மிதவாத தேசியவாதிகளால் எதிர்க்கப்பட்டது.
- அந்நியப் பொருட்களைப் புறக்கணிப்பது, அரசால் நிர்வகிக்கப்படும் கல்வி நிலையங்களைப் புறக்கணிப்பது ஆகியன சுதேசி இயக்கத்தின் ஆக்கபூர்வமானத் திட்டங்களாக இருந்தன.
- இவ்வியக்கமே (1905-1911) காந்தியடிகளின் சகாப்தத்திற்கு முந்தைய இந்திய தேசிய இயக்கத்தின் மிக முக்கியக் கட்டமாகும்.
- தமிழ்நாட்டில் சுதேசமித்திரன், மகாராஷ்டிராவில் கேசரி, வங்காளத்தில் யுகந்தர் ஆகிய பத்திரிக்கைகளின் பங்களிப்பு ஒரு சில எடுத்துக்காட்டுகளாகும்.
- இருப்பினும் ஆங்கில அரசு, பொதுக்கூட்டங்கள் சட்டம் (1907), வெடி மருந்துச் சட்டம் (1908), செய்தித்தாள் சட்டம், தூண்டுதல் குற்றச் சட்டம் (1908), இந்தியப் பத்திரிகைச் சட்டம் (1910) என பல அடக்குமுறைச் சட்டங்களை வரிசையாய் இயற்றியது.
வங்கப் பிரிவினை
- 1899 ஜனவரி 6இல் புதிய தலைமை ஆளுநராகவும் இந்தியாவின் அரசப்பிரதிநிதியாகவு ம் கர்சன் பிரபு பணி நியமனம் செய்யப்பட்டார்.
- கர்சன் கல்கத்தா மாநகராட்சிக் குழுவில் அங்கம் வகித்தத் தேர்ந்தெடுக்கப்ப ட்ட இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தார் (1899).
- 1904இல் இயற்றப்பட்டப் பல்கலைக்கழகச் சட்டத்தின்படி கல்கத்தா பல்கலைக்கழகம் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டது.
- இந்தியச் செய்திப் பத்திரிகைகளின் தேசியவாதத் தன்மையைக் குறைப்பதற்காக அலுவலக ரகசியச் சட்டத்தில் (1904) திருத்தம் கொண்டுவரப்பட்டது.
- வங்காளத்தைப் பிரிக்க 1905இல் ஆணை பிறப்பித்தார்.
- 1860ஆம் ஆண்டு முதலாக விவாதங்கள் நடைபெற்று வந்தன. மார்ச் 1890இல் பிரிவினைக்கானத் திட்டத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது.
- டிசம்பர் 1903இல் தன்னுடைய இந்தியாவின் பிரதேச மறுவிநியோகம் தொடர்பான குறிப்புகளில் ஒரு திட்டத்தை கர்சன் தீட்டியிருந்தார்.அதுவே பின்னர் திருத்தம் செய்யப்பட்டு ரிஸ்லி அறிக்கை (Risely Papers) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
- பிரிவினைக்கு ஆதரவாக இரண்டு காரணங்கள் : வங்காளத்திற்கு சுமை குறைவு & அசாமின் முன்னேற்றம்
இந்து முஸ்லிம்களைப் பிரிக்கும் நோக்கம்
- புவியியல் அடிப்படையில் பாகீரதி ஆறு இயற்கையாகவே வங்காளத்தைப் பிரிப்பதாக அமைந்திருந்தது.
- கிழக்கு வங்காளத்தில் முஸ்லிம்கள் அதிகம் இருந்தனர். மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்தனர். மத்திய வங்கத்தில் இரு சமூகத்தினரும் சமஅளவில் வாழ்ந்து வந்தனர்.
- முஸ்லிம் மக்கள் ஒருபோதும் அனுபவித்திராத ஓர் ஒற்றுமையைப் புதிய மாகாணமான கிழக்கு வங்காளத்தில் அனுபவிப்பார்கள் என பிப்ரவரி 1904இல் டாக்காவில் கர்சன், முஸ்லிம்களுக்கு உறுதியளித்தார்.
பிரிவினை எதிர்ப்பு இயக்கம்
- டிசம்பர் 1903இல் வங்கப்பிரிவினை அறிவிக்கப்பட்டது.
- 1905 ஜூலை 19இல் வங்கப் பிரிவினை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- 1905 ஜுலை 17இல் கல்கத்தாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்ப்பை மக்களிடையே விரிவுபடுத்துவது என்று முடிவு செய்யப்ப ட்ட து .
- அதே கூட்டத்தில் ஆங்கிலப்பொருட்களையும் நிறுவன ங்களையும் புறக்கணிக்க சுரேந்திரநாத் பானர்ஜி அறைகூவல் விடுத்தார்.
- ஆகஸ்டு 7இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற மற்றொரு கூட்டத்தில் சுதேசி இயக்கம் முறையாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
- அதிகாரபூர்வமாக வங்காளம் பிரிக்கப்பட்ட நாளான 1905 அக்டோபர் 16 துக்கதினமாக கடைபிடிக்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டது.
புறக்கணித்தலும், வங்காளத்தில் சுதேசி இயக்கமும் (1905 -1911)
- சென்னையைச் சேர்ந்த தேசியவாதியான G. சுப்பிரமணியம் சுதேசி இயக்கத்தின் குறிக்கோள் குறித்து "தேசிய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் சார்பு நிலைக்கு எதிரான புரட்சி" எனச் சுருக்கமாக விளக்கினார்.
- கோபால கிருஷ்ண கோகலேயின் வார்த்தைகளில் சுதேசி இயக்கமானது நம்முடையத் தொழில்களின் முனனேற்றத்திற்கானது மட்டுமல்ல; நமது தேசிய வாழ்க்கை சார்ந்த அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிற்குமானது.
ஆக்கபூர்வமான சுதேசி (ரவீந்திரநாத் தாகூர்)
- ஆக்கபூர்வமான சுதேசி திட்டம் பெருமளவு சுய உதவிக்கு முக்கிய த் துவம் கொடுத்தது.
- சுயஉதவி (ஆத்ம சக்தி) எனும் ஆக்கத் திட்டத்தினை ரவீந்திரநாத் தாகூர் கோடிட்டுக் காட்டினார்.
- தாகூர் சுய பொருளாதார வளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.
- கல்வியானது தாய்மொழியில் வழங்கப்பட வேண்டுமென வற்புறுத்தினார்.
- சுயஉதவி (ஆத்ம சக்தி) எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதற்கு மேளாக்கள் எனும் திருவிழாக்களைப் பயன்படுத்தஅவர் அழைப்பு விடுத்தார்.
சுதேசி சிந்தனையின் பரிணாம வளர்ச்சி
- விடுதலைப் போராட்டத்தின்போது சுதேசி இயக்கம் என்ற எண்ணம் முதன்முதலாக 1905இல் ஒரு சில காங்கிரஸ் தலைவர்களாலும், பின்னர் 1920களில் மகாத்மா காந்தியடிகளின் தலைமையிலும் ஒரு தத்துவமானது.
- 'சுதேசி' என்பதன் பொருள் 'ஒருவரது சொந்தநாடு' என்பதாகும்.
- 1872இல் பூனாவில் மகாதேவ் கோவிந்த் ரானடே தனது தொடர்சொற்பொழிவுகளின் மூலம் இச்சிந்தனையைப் பிரபலப்படுத்தியதிலிருந்துத் தொடங்குகிறது.
- ஒருவரது சொந்த நாட்டில் உற்பத்திசெய்யப்ப டும் பொருட்களுக்கு அப்பொருட்களின் பயன்பாடு குறைவான மனநிறைவைக் கொடுத்த போதிலும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
- ஒருவர் தனது சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மட்டும் பயன்படுத்துவது என்பது மட்டுமல்ல.
- சுதேசி என்பது நமக்குள்ளிருக்கும் ஆன்மபலம் அது வெகு தொலைவிலிருந்து கிடைப்பனவற்றை ஒதுக்கி வைத்து நமக்கு வெகு அருகேயுள்ள சுற்றுப்புறத்திலிருந்து கிடைக்கும் பயன்களையும் சேவைகளையும் பயன்படுத்தும் வண்ணம் இங்கு உள்ளவர்களால் தயார் செய்யப்படும் பொருட்களை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும்.
- அப்படியான தொழில்கள் எங்கு தேவைப்படுகின்றனவோ அங்கே அவைகள் திறம்படவும் முழுமையாகவும் செயல்படச் சேவை செய்யவேண்டும்.
- 1905 நவம்பர் 5இல் விடிவெள்ளிக் கழகத்தின் முன்னெடுப்பில் கல்விக்கான தேசிய கழகம் உருவாக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 1906இல் வங்காள தேசியக் கல்லூரியும் பள்ளியும் நிறுவப்பட்டன. அடிமை நிறுவனங்களிலிருந்து வெளியே வரும்படி சதிஷ் சந்திரா மாணவர்கட்கு ஒரு உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்தார்.
வட்டார மொழியில் கல்வி, எனும் கருத்து சுதேசி இயக்கத்திற்கு வெகு முன்னரே 1902இல் சதீஷ் சந்திர முகர்ஜியால் விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) நிறுவப்பட்ட போதே உருவாகி விட்டது.
சமிதிகள்
- சமிதிகள் (தொண்டர் படைகள்) எனும் அமைப்புகள் உருவாக்கப்பட்டமையாகும்.
தீவிர தேசியவாதம்
- லாலா லஜபதி ராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால் (அடிக்கடி லால் - பால் - பால் (Lal-Bal-Pal) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்கள்) ஆகியோரின் இயக்க நடவடிக்கைகளின் விளைவாக மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப் ஆகிய மூன்றும் சுதேசி இயக்கக் காலப்பகுதியில் தீவிர தேசியவாதத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்தன.
- தீவிர தேசியவாதத் தலைவர்களில் மற்றுமொரு செல்வாக்குப் பெற்ற ஆளுமையாக இருந்தவர் அரவிந்த கோஷ் ஆவார்.
1905இல் அரவிந்த கோஷ் "நீ அந்த வரைபடத்தைப் பார்க்கிறாயா? அது ஒரு வரைபடமல்ல மாறாக பாரத மாதாவின் உருவப்படம் அதனுடைய நகரங்களும் மலைகளும் ஆறுகளும் காடுகளும் அவளுடைய உடலை உருவாக்கியுள்ளன.
அவளுடைய குழந்தைகளே அவளுடைய பெரிதும் சிறியதுமான நரம்புகள்.... பாரதத்தை வாழ்கின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி ஒன்பது மடங்கு அதிக பக்தியுடன் அவளை வழிபடு" என பதிலுரைத்தார்.
சுயராஜ்ஜியம் அல்லது அரசியல் சுதந்திரம்
- தீவிர தேசியவாதத்தலைவர்களின்பொதுவான குறிக்கோள்களில் ஒன்று சுயராஜ்ஜியம் அல்லது சுயாட்சி என்பதாகும்.
- திலகருக்கு சுயராஜ்ஜியம் என்பது நிர்வாகத்தின் மீதான இந்தியர்களின் கட்டுப்பாடு அல்லது சொந்த மக்களின் நிர்வாகம் என்பது மட்டுமே தவிர இங்கிலாந்துடனான உறவுகள் அனைத்தையும் துண்டித்துக் கொள்வதல்ல.
- பிபின் சந்திரபாலின் கருத்துப்ப டி சுயராஜ்ஜியம் என்பது அந்நியர் ஆட்சியிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைதல் என்பதாகும்.
- 1908 முதல் தீவிர தேசியவாதம் சரியத் தொடங்கியது.
- 1907இல் ஏற்பட்ட சூரத் பிளவு அதன் வீழ்ச்சிக்கான மற்றுமொரு காரணமாகும்.
சூரத் பிளவு
- 1906இல் மிண்டோ பிரபு இந்திய அரசப்பிரதிநிதியாகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிர தேசியவாதிகளுக்கும் இடையில் நிலவிய கருத்து வேற்றுமை மேலும் தீவிரமடைந்தது.
- 1906இல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று தாதாபாய் நௌரோஜி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிளவு தவிர்க்கப்பட்டது.
- பெரோஸ்ஷா மேத்தாவின் தலைமையிலான பல மிதவாத தேசியவாதிகள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர்.
- புறக்கணிப்பு, தேசியக் கல்வி, சுயாட்சி ஆகியவை தொடர்பான நான்கு தீர்மானங்களைத் தீவிர தேசியவாதிகள் ஒருவாறு நிறைவேற்றினர்.
- காங்கிரசின் அடுத்த மாநாடு பூனாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது. மிதவாத தேசியவாதிகள் மாநாடு நடைபெறுமிடத்தைச் சூரத் நகருக்கு மாற்றினர்.
- தேசியவாதிகளின் வேட்பாளரான ராஷ்பிகாரி கோஷ் என்பாருக்கு எதிராகத் தீவிர தேசியவாதிகள் லாலா லஜபதி ராயின் பெயரை முன்மொழிந்தனர். லாலா லஜபதி ராய் போட்டியிட மறுத்தார்.
- பெரோஸ்ஷா மேத்தாவின் குழு இந்த தீர்மானங்களை நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட வேண்டுமெனக் கோரியது.
- மாநாடு குழப்பத்தில் முடிந்தது.
- தீவிர தேசியவாதிகள் இல்லாத புதிய காங்கிரஸ் "மேத்தா காங்கிரஸ்" என அழைக்கப்பட்டது.
புரட்சிகர தேசியவாதம்
- 1870களில் விவேகானந்தர் விளக்கியவாறு எஃகினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்ப ட்டன.
- பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ஆனந்மத் (ஆனந்த மடம்) எனும் நாவலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
- அந்நாவலின் ஒருபகுதியான வந்தே மாதரம் பாடல் சுதேசி இயக்கத்தின் கீதமாயிற்று.
அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு
- ஜதிந்தரநாத் பானர்ஜி, அரவிந்த கோஷின் சகோதரரான பரீந்தர்குமார் கோஷ் ஆகியோரால் கல்கத்தாவில் நிறுவப்பெற்ற அனுசீலன் சமிதி மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- இதைப்போலவே புலின் பிகாரி தாஸ் என்பவரின் முயற்சியினால் டாக்கா அனுசீலன் சமிதி 1906இல் உருவானது.
- புரட்சிகர வார இதழான யுகாந்தர் தொடங்கப்பெற்றது.
- கல்கத்தா அனுசீலன் சமிதி விரைவில் தன்னுடைய செயல்பாடுகளைத் துவங்கியது. இது நிதி திரட்டுவதற்காக ஆகஸ்ட் 1906இல் ரங்பூரில் முதல் சுதேசிக் கொள்ளையை நடத்தியது.
- ஹேம்சந்திர கனுங்கோ இராணுவப் பயிற்சி பெறுவதற்காக பாரிஸ் சென்றார்.
- 1908இல் நாடு திரும்பிய அவர் மணிக்தலா எனுமிடத்திலிருந்த ஒரு பண்ணை வீட்டில் ஒரு மதச்சார்புப் பள்ளியோடு குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு தொழிற்கூடத்தையும் நிறுவினார்.
- டக்ளஸ் கிங்ஸ்போர்டு எனும் ஆங்கில அதிகாரியை கொல்வதற்கான திட்டமும் அங்கு தீட்டப்பட்டது.
- 18 வயது நிரம்பிய குதிராம் போஸ், 19 வயதான பிரஃபுல்லா சாக்கி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- 1908 ஏப்ரல் 30இல் அவர்கள் தவறுதலாக ஒரு சாரட் வண்டியின் மீது குண்டை வீச கிங்ஸ் போர்டுக்குப் பதிலாக வேறு இரண்டு ஆங்கிலப் பெண்கள் அதில் கொல்லப்ப ட்டனர்.
- பிரஃபுல்லா சாக்கி தற்கொலை செய்து கொள்ள, குதிரம் போஸ் கைது செய்யப்பட்டு பின்னர் கொலைக் குற்றத்திற்காகத் தூக்கிலிடப்பட்டார்.
- அரவிந்த கோஷ், அவரின் சகோதரர் பரீந்தர் குமார் கோஷ் அவர்களுடன் மேலும் முப்பந்தை ந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அரவிந்த கோஷ், அவரின் சகோதரர் பரீந்தர் குமார் கோஷ் அவர்களுடன் மேலும் முப்பந்தை ந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர். சித்தரஞ்சன் தாஸ் இவ்வழக்கில் புரட்சிகர தேசியவாதிகளுக்காக வாதாடினார். இது அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு எனப்படுகிறது.
- ஆங்கில ஆட்சிக்கு எதிராக அரவிந்த கோஷ் சதியில் ஈடுப்பட்டார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என வழங்கப்பட்ட தீர்ப்பால் அனைத்துக் குற்றச் சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
- பரீந்தர் கோஷ், உல்லாஸ்கர்தத் ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது (பின்னர் அது ஆயுட்கால நாடு கடத்தல் தண்டனையாக மாற்றப்பட்டது) ஏனையோர் ஆயுட்காலத்திற்கும் நாடு கடத்தப்பட்டனர்.
- ஒரு ஆயுதமேந்தியப் புரட்சியை முன்னெடுப்ப து எனும் அரவிந்தரின் கருத்து நிறைவேறவேயில்லை.
ஆங்கிலேயரின் அடக்குமுறை
- டிசம்பர் 1908இல் மிண்டோ-மார்லி அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன.
- வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நிறுவனப்படுத்தி இந்து, முஸ்லிம்களைப் பிரித்தது.
- அடக்கு முறைச் சட்டங்களையும் காலனிய அரசு அறிமுகம் செய்தது.
- 1908 செய்தித்தாள் சட்டம் (குற்றம் செய்யத் தூண்டுதல்).
- 1910 இந்தியப் பத்திரிக்கைச் சட்டம்
- இந்தியக் குற்றவியல் சட்டம்
தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்
- திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கம் பெரும் கவனத்தையும் ஆதரவையும் பெற்றது.
- மெரினாக் கடற்கரையில் சுதேசி கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாயிற்று. மற்றொரு இடம் மூர்மார்க்கெட் வளாகமாகும்.
- பொது இடங்களில் ஐரோப்பியர்கள் மாணவர்களால் "வந்தே மாதரம்" எனும் முழக்கத்துடன் வாழ்த்தப்ப ட்டனர்.
- 1907இல் சென்னைக்கு வருகை தந்த பிபின் சந்திர பால் சென்னைக் கடற்கரையில் ஆற்றிய உரைகள் பார்வையாளர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தின.
வ.உ.சி. யும் சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியும் (SSNC)
- 1906இல் வ.உ. சிதம்பரம் ஆங்கிலேயரின் கடற்பயண முற்றுரிமைக்கு எதிராகச் சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றை ஏற்படுத்தும் கருத்தை வெளிப்படுத்தியது.
- 1906இல் வ.உ.சி. சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனி (Swadeshi Steam Navigation Company - SSNC) எனும் கூட்டுப்பங்கு நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
- மொத்த முதலீடான `10 லட்சம் 40, 000 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பங்கு `25 வீதம் இந்தியர்கள், இலங்கையைச் சேர்ந்தவர்கள், ஆசிய நாடுகளைச் சேர்ந்தோருக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது.
- வ.உ.சி. S.S.கலியா, S.S.லாவோ என்னும் இரண்டு நீராவிக் கப்பல்களை வாங்கினார்.
- சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றி குறித்து லோகமான்ய திலகர் தன்னுடைய கேசரி, மராட்டா பத்திரிகைகளில் எழுதினார்.
- அரவிந்த கோஷும் சுதேசி முயற்சிகளைப் பாராட்டி கம்பெனியின் பங்குகள் விற்பனையாவதற்கு உதவினார். பாண்டித்துரையும், ஹாஜி பக்கீர் முகமதுவும் பெரிய பங்குதாரர்களில் இருவராவர்.
கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம்
- ஒரு நல்ல பேச்சாளரை வ.உ.சி. தேடிக் கொண்டிருந்த தருணத்தில் சுதேசி இயக்கத்தைப் போதித்து வந்த சுப்ரமணிய சிவாவைச் சந்தித்தார்.
- 1907இல் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருவரும் ( வ.உ.சி. & சுப்ரமணிய சிவா)தூத்துக்குடிக் கடற்கரையில் தினந்தோறும் பொதுக் கூட்டங்களில் பேசினர்.
- வ.உ.சி., சிவா கோரல் பருத்தி நூற்பாலைத் தொழிலாளர்கள் மார்ச் 1908இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- “கற்றறிந்த மக்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளது. அதுவே சுயராஜ்ஜியத்தை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட உன்னதமான முதல் அடியாகும்.
- இந்தியத் தொழிலாளியின் ஒவ்வொரு வெற்றியும் நாட்டிற்குக் கிடைத்த வெற்றி...” என அரவிந்த கோஷின் வந்தே மாதரம் புகழாரம் சூட்டியது.
சுப்ரமணிய பாரதி: கவிஞர் மற்றும் தேசியவாதி
- செய்திப் பத்திரிகையை பயன்படுத்தி தேசியவாதச் செய்திகளை விரிந்துபட்ட பார்வையாளர்களிடையே பரப்புரை செய்த தலைவர்களுள் முதன்மையானவர் G.சுப்ரமணியம்.
- வேறு ஐந்து நபர்களுடன் இணைந்து தி இந்து (The Hindu) மற்றும் சுதேசமித்திரன் (தமிழில் வெளியிடப்பட்ட முதல் தினசரி) எனும் பத்திரிகைகளை நிறுவினார்.
- 1906இல் பர்சால் காங்கிரஸ் மாநாட்டின் போது ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சித்து அவர் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
- சுதேசமித்திரன் தேசியவாதிகளின் செயல்பாடுகள் குறித்து குறிப்பாக வ.உ.சி. தூத்துக்குடியில் ஆற்றிய உரைகள் பற்றி விரிவான செய்திகளை வெளியிட்டது.
- சட்டத்திற்கு உட்பட்ட முறைகளைப் பின்பற்ற விரும்பிய மிதவாத தேசியவாதிகளை 'யாசிப்பவர்கள்' என தீவிர தேசியவாதிகள் ஏளனம் செய்தனர்.
- திலகரின் Tenets of New party எனும் நூலை பாரதி தமிழில் மொழியாக்கம் செய்தார்.
- மேலும் 1907இல் 'சூரத் சென்று வந்த பயணம் சென்னை மாகாணத் தீவிர தேசியவாதிகள் குறித்து' எனும் சிறு புத்தகமொன்றை வெளியிட்டார்.
- பாரதி ஆசிரியராகப் பணியாற்றிய இந்தியா என்ற வார இதழ் தீவிர தேசியவாதிகளின் குரலாக மாறியது.
வ.உ.சி., சுப்ரமணிய சிவா கைதும் சிறை வாசமும்
- ஆறுமாத காலச் சிறை தண்டனைக்கு பின்னர் பிபின் சந்திர பால் 1907 மார்ச் 9இல் விடுத லை செய்யப்ப ட்டார் . அந்நாளை தமிழ்நாட்டுச் சுதேசி இயக்கத் தலைவர்கள் ‘சுதேசி தினமாக’ திருநெல்வேலியில் கொண்டாட முடிவு செய்தனர்.
- வ.உ.சி., சுப்ரமணிய சிவா, பத்மநாபர் ஆகியோர் செயல்பட்டனர். அவர்கள் 1908 மார்ச் 12இல் தேச துரோகக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டனர்.
- பேரரசருக்கு எதிரான வ.உ.சி., சுப்ரமண்ய சிவா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் சில பகுதிகள் (நவம்பர் 4, 1908)
- இம்மாகாணத்தில் இவ்வகைப்பட்ட வழக்குகளில் இதுவே முதல் வழக்கு என்பது உண்மை.
- 1908 ஜுலை 7இல் வ.உ.சி. யும், சுப்ரமணிய சிவாவும் குற்றம் செய்தனர் என அறிவிக்கப்பட்டு தேச துரோகக் குற்றத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.
- அரசுக்கு எதிராகப் பேசிய குற்றத்திற்காகச் சிவாவுக்கு 10 ஆண்டுகள் நாடு கடத்துதல் தண்டனையும் அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக வ.உ.சி. க்கு ஆயுள் தண்டனையும் (20 ஆண்டுகள்) விதிக்கப் பெற்றது.
- வ.உ.சி அரசை எதிர்த்துப் பேசிய குற்றத்திற்காக மேலும் ஒரு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றார்.
ஆஷ் படுகொலை
- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷ், ஜுன் 1911இல் மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1880இல் திருவாங்கூர் அரசின் பகுதியில் பிறந்த வாஞ்சிநாதன் அவ்வரசின் ஆட்சியிலிருந்த புனலூரில் வனத்துறையில் காவலராகப் பணியாற்றினார்.
- 'பாரத மாதா' என்ற புரட்சிகர தேசியவாதக் குழுவில் அவரும் ஒரு உறுப்பினராவார். ஐரோப்பிய அதிகாரிகளைக் கொல்வதன் மூலம் இந்தியர்களைப் புரட்சிக்குத் தூண்டுவதே இவ்வமைப்பின் குறிக்கோளாகும்.
- வாஞ்சிநாதனுக்கு கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தும் பயிற்சியை வ.வே. சுப்ரமணியம் பாண்டிச்சேரியில் வழங்கினார்.
- மணியாச்சி ரயில் நிலையத்தில் ஆஷை சுட்ட பின்னர் வாஞ்சிநாதன் அதே துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக் கொண்டார்.