Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும்  சுதேசி இயக்கமும் Online Test

56518.சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?
அரவிந்த கோஷ்
தாதாபாய் நௌரோஜி
ஃபெரோஸ் ஷா மேத்தா
லாலா லஜபதி ராய்
56519.பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
(i) 1905இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப் பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
(ii) 1905இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
(iii) 1905 ஆகஸ்ட் 7இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
மேற்கண்ட கூற்றுக்களில் எது-எவை சரியானவை.
(i) மட்டும்
(i) மற்றும் (iii) மட்டும்
(i) மற்றும் (ii) மட்டும்
மேற்கண்ட அனைத்தும்
56520.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.
இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 - சுய ஆட்சி
விடிவெள்ளிக் கழகம் - சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
சுயராஜ்யம் - தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது
சுதேசி - கல்விக்கான தேசியக் கழகம்
3 1 4 2
1 2 3 4
3 4 1 2
1 2 4 3
56521.பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது? (மார்ச் 2020 )
பங்கிம் சந்திர சாட்டர்ஜி – ஆனந்த மடம்
G.சுப்ரமணியம் – விடிவெள்ளிக் கழகம்
மிண்டோபிரபு – பல்கலைக்கழகச் சட்டம், 1904
தீவிர தேசியவாத மையம் – சென்னை
56522.கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர் (மார்ச் 2020 )
புலின் பிஹாரி தாஸ்
ஹேமச்சந்திர கானுங்கோ
ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரிந்தர் குமார் கோஷ்
குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி
56523.கூற்று : 1905 அக்டோபர் 16 துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது.
காரணம் : மேற்படி நாளில் வங்காளம் முறைப்படி இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
56524.கூற்று : வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
காரணம் : இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை .
கூற்று சரி காரணம் தவறு.
கூற்று தவறு காரணம் சரி.
56525.சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?
பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.
பாரதி திலகரின் “Tenets of New Party” என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தார்.
பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.
பாரதி பெண்களுக்கான “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்.
56526."டாக்கா அனுசீலன் சமிதி " புலின் பிகாரி தாஸ் என்பவரால் --- இல் உருவாக்கப்பட்டது ---?
1906
1902
1908
1909
56527.1906 இல் கல்கத்தா மாநாட்டில் மிதவாத தேசியவாதிகளின் கோரிக்கையை ஏற்று ---- தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
தாதாபாய் நௌரோஜி
W C பானர்ஜி
பத்ருதீன் தியாப்ஜி
அன்னிபெசன்ட் அம்மையார்
Share with Friends