ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்
- இந்தியப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்) கட்சியானது எம்.என். ராய், அபானி முகர்ஜி, எம்.பி.டி. ஆச்சார்யா, முகமது அலி, முகமது ஷாஃபிக் ஆகியோரால் உஸ்பெகிஸ்தானிலுள்ள தாஷ்கண்டிலும் பின்னர் சோவியத் யூனியனிலும் 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உருவாக்கப்பட்டது.
- 1922-1927ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அவர்கள் மீது தொடர்ச்சியாக ஐந்து சதி வழக்குகள் தொடுக்கப்பட்டன.
- அவற்றுள் முதலாவது பெஷாவர் சதி வழக்கு ஆகும். இதனைத் தொடர்ந்து கான்பூர் (போல்ஷ்விக்) சதி வழக்கு 1924ஆம் ஆண்டிலும் மிகவும் பிரசித்தி பெற்ற மீரட் சதி வழக்கு 1929ஆம் ஆண்டிலும் தொடுக்கப்பட்டன.
- இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் 1925இல் பம்பாயில் முறைப்படி தொடங்கப்பட்டது.
- இந்துஸ்தான் புரட்சிகர சோசலிசக் கூட்டமைப்பைச் சார்ந்த பகத்சிங் வங்காளத்தில் சிட்டகாங் படைத்தளத்தில் தொடர்ச்சியான தாக்குதலை ஏற்பாடு செய்த இந்திய குடியரசு இராணுவத்தைச் சேர்ந்த கல்பனா தத் ஆகிய இரண்டு புரட்சியாளர்கள் அடுத்த பகுதியில் கவனம் பெற உள்ளனர்.
- 1924ஆம் ஆண்டின் கான்பூர் சதிவழக்கு அத்தகையதொரு நடவடிக்கையே ஆகும். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் ஆவர்.
- இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவின் கீழ் அவர்களுள் எட்டு பேர் "வன்முறையான புரட்சி ஒன்றின் மூலம் ஏகபோக பிரிட்டனிடமிருந்து இந்தியாவை முற்றிலும் பிரித்து பிரிட்டானிய இந்தியாவின் பேரரசரின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்" குற்றம் சாட்டப்பட்டுப் பல்வேறு சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
- இந்த வழக்கு மாட்சிமைபொருந்திய அமர்வு நீதிபதி H.E. ஹோம்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
- சௌரிசௌரா வழக்கில் தொடர்பு கொண்டவர்களாகக் குற்றம் சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துப் பிரசித்தி பெற்றவர்.
- கான்பூர் சதிவழக்கில் முசாபர் அகமது, சவுகத் உஸ்மானி, நளினி குப்தா, எஸ். ஏ. டாங்கே ஆகியோர் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிப்பதற்காகச் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
- கான்பூர் சதிவழக்கில் ஆரம்பத்தில் 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது:
- எம்.என்.ராய்
- முசாபர் அகமது
- சவுகத் உஸ்மானி
- குலாம் ஹுசைன்
- எஸ்.ஏ.டாங்கே
- எம். சிங்காரவேலர்
- ஆர்.எல்.சர்மா
- நளினி குப்தா
- ஷமுத்தின் ஹாசன்
- எம். ஆர். எஸ். வேலாயுதன்
- டாக்டர் மணிலால்
- சம்பூர்ண நந்தா
- சத்ய பக்தா.
- குலாம் ஹுசைன் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்) மாறிவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.
- சிங்காரவேலர் மோ சமான உடல்நிலை காரணமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
- டிசம்பர் 1925இல் இந்தியாவெங்கிலும் இருந்து வந்திருந்த பல்வேறு கம்யூனிஸ்ட்களின் குழுக்களின் மாநாடு ஒன்று நடந்தேறியது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து சிங்காரவேலர் சென்று கலந்துகொண்டார்.
- அங்கிருந்துதான் பம்பாயைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி நிறுவப்பட்டது.
- எம். சிங்காரவேலர் (18 பிப்ரவரி 1860 – 11 பிப்ரவரி 1946) மதராசில் பிறந்தார். இவர் இளமைக் காலத்தில் புத்தமதத்தைத் தழுவியவர்.
- திரு. வி. கல்யாணசுந்தரத்துடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை இவர் தோற்றுவித்தார். 1923ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன்முறையாக நாட்டில் மே தினத்தைக் கொண்டாடினார்.
- 1928ஆம் ஆண்டு தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தத்தை (பொன்மலை, திருச்சிராப்பள்ளி) ஏற்பாடு செய்ததில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். அதற்காகத் தண்டனை பெற்றார்.
மீரட் சதி வழக்கு, 1929
- 1929ஆம் ஆண்டின் மீரட் சதி வழக்குதான் அனேகமாக, ஆங்கிலேய அரசினரால் தொடுக்கப்பட்ட அனைத்துக் கம்யூனிஸ்ட் சதி வழக்குகளிலும் பெரிதும் புகழ்பெற்றதாகும்.
- 1927ஆம் ஆண்டு பிப்ரவரியிலும் செப்டம்பரிலும் நடைபெற்ற காரக்பூர் ரயில்வே பணிமனை வேலைநிறுத்தங்கள், 1928ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை மாதங்களுக்கிடையில் நடைபெற்ற லில்லுவா ரயில் பணிமனை வேலைநிறுத்தம், 1928ஆம் ஆண்டின் கல்கத்தா துப்புரவுத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், 1929ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வங்காளத்தின் சணல் ஆலைகளில் நடைபெற்ற பல்வேறு வேலைநிறுத்தங்கள், 1928ஆம் ஆண்டு ஜூலையில் திருச்சிராப்பள்ளியின் பொன்மலை பணிமனையில் நடைபெற்ற தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தம், 1928 ஏப்ரலில் பம்பாயில் நடந்தேறிய ஜவுளித் தொழிலாளர் வேலைநிறுத்தம் ஆகியன குறிப்பிட்டுச் சொல்லத்தக்கச் சில வேலைநிறுத்தங்கள் ஆகும்.
அரசு ஒடுக்குமுறை
- 1928ஆம் ஆண்டின் தொழிற்தகராறுகள் சட்டம், 1928ஆம் ஆண்டின் பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா ஆகிய இரு கொடுஞ்சட்டங்களை இயற்றியது.
- 32 முன்னோடிச் செயல்பாட்டாளர்களைக் கைது செய்தது. 8 பேர் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர்கள்.
- பிலிப் ஸ்ப்ராட், பான் ப்ராட்லி, லெஸ்டர் ஹட்சின்சன் ஆகிய பிரிட்டானிய கம்யூனிஸ்டுகள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
- இந்திய தண்டனைச் சட்டம் 121 ஏ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.
விசாரணையும் தண்டனையும்
- கே.எஃப். நாரிமன், எம்.சி. சக்லா போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வாதாடினர். காந்தியடிகள், ஜவகர்லால் நேரு போன்ற தேசியத் தலைவர்கள்கூடச் சிறைக்குச் சென்று குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பார்த்துவிட்டு வந்தனர்.
- 1929இல் நடைபெற்ற கைது நடவடிக்கைகளுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1933 ஜனவரி 16இல் மீரட் அமர்வு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது.v
பகத்சிங்கும் கல்பனா தத்தும்
பகத்சிங்கின் பின்புலம்
- கிஷன்சிங் (தகப்பனார்), வித்யாவதி கவுர் (தாயார்) ஆகியோரின் மகனாக பகத்சிங், தற்போதைய பாகிஸ்தானின் ஒரு பகுதியான பஞ்சாப் மாநிலத்திலுள்ள லயல்பூர் மாவட்டம், ஜார்ன்வாலா என்ற இடத்தில் 1907 செப்டம்பர் 28இல் பிறந்தார். அவருடைய தகப்பனார் ஒரு தாராளவாதியாக இருந்தார்.
- அவருடைய குடும்பத்தினர் சுதந்திரப் போராட்டக்காரர்களாக விளங்கினர். பகத்சிங்கின் 14ஆம் வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது.
- அவர் தனது இளமைக் காலம் முதலாகவே, நவ்ஜவான் பாரத் சபா, ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டார்.
- இதில் இரண்டாவது அமைப்பு சச்சின் சன்யால், ஜோகேஷ் சட்டர்ஜி ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது.
- 1928இல் அதனைத் தொடர்ந்து ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்று பகத்சிங்காலும் அவரது தோழர்களாலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அவ்வமைப்புத் திருத்தியமைக்கப்பட்டது.
பகத்சிங்கின் குண்டுவீச்சு
- பகத்சிங்கின் பெயரை நாம் குறிப்பிடும்போதே நமது நினைவுக்கு வருகிற சித்திரம் அவர் 1929 ஏப்ரல் 8இல் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய நிகழ்வுதான்.
லாகூர் சதி வழக்கு
- ராஜகுரு, சுகதேவ், ஜதீந்திரநாத் தாஸ் - சாண்டர்ஸ் கொலை தொடர்பான விசாரணைக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர் (இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது).
- ஜதீந்திரநாத் தாஸ் 64 நாட்களுக்குப் பின்னர் சிறையிலேயே மரணம் அடைந்தார்.
- பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு 1930 அக்டோபர் 7 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- ”புரட்சி என்பது வெறும் குண்டு எறிதலோ கைத்துப்பாக்கியால் சுடுவதோ அல்ல. புரட்சி என்பது மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை ஆகும். சுதந்திரம் என்பது அனைவரின் அழியாத பிறப்புரிமை ஆகும்.
- உழைப்பாளிகள், சமூகத்தின் உண்மையான ஆதரவாளர்கள் ஆவர். இந்தப் புரட்சியின் பலிபீடத்தில் நாம் மாபெரும் லட்சியத்துக்காக அளிக்கும் எந்தத் தியாகமும் அதற்கு முன் பெரிதல்ல” என்று விசாரணையின்போது நீதிமன்றத்தில் அவர் கூறினார்.
- இதனை உணர்த்தும் விதமாக அவர்களது தரப்பு அறிக்கையை விடுத்த பின்பு ‘புரட்சி ஓங்குக’ (Inquilab Zindabad) என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
- லாகூர் சிறைச்சாலையில் 1931 மார்ச் 23 அன்று அதிகாலையில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்பது ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷனின் புதுப்பிக்கப்பட்ட ஓர் அத்தியாயமே ஆகும்.
- ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன் லாகூரில் சாண்டர்ஸினைக் கொன்றது போன்ற பல நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.
- 1928 டிசம்பர் மாதத்தில் லஜபதி ராய் மீது கொடுந்தாக்குதல் நடத்தியதற்கும் அதனைத் தொடர்ந்த ராயின் மரணத்திற்கும் பொறுப்பான லாகூர்காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ. ஸ்காட்டுக்குப் பதில் தவறுதலாக சாண்டர்ஸ் பலியானார்.
- 1929, டிசம்பரில் இர்வின் பிரபு (1926 – 1931 ஆம் ஆண்டுகளில் கவர்னர் ஜெனரலாகவும் வைஸ்ராயாகவும் இருந்தவர்) பயணம் செய்துகொண்டிருந்த ரயிலைக் கொளுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
- 1928 டிசம்பர் மாதத்தில் லஜபதி ராய் மீது கொடுந்தாக்குதல் நடத்தியதற்கும் அதனைத் தொடர்ந்த ராயின் மரணத்திற்கும் பொறுப்பான லாகூர்காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ. ஸ்காட்டுக்குப் பதில் தவறுதலாக சாண்டர்ஸ் பலியானார்.
கல்பனா தத் (1913 – 1995)
- 1 9 2 0 க ளி ன் பிற்பகுதியில் கல்பனா தத் என்னும் ஓர் இளம்பெண் (கம்யூனிஸ்ட் தலைவர் பி . சி . ஜோ ஷி யை த் திருமணம் செய்து கொண்ட பின்னர் கல்பனா ஜோஷி என்று அறியப்பட்டவர்) சிட்டகாங் ஆயுதப் படைத்தளத்தைத் துணிகரமாகத் தாக்கியதன் மூலம் இளம் நெஞ்சங்களில் தேசபக்தியைக் கனன்றெழச் செய்தவர்.
- சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலின் புரட்சிகரத் தலைவரான சூரியா சென் “தனிப்பட்ட நடவடிக்கைகளின் இடத்தில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஏற்பாடு செய்வது என்னும் பாதையை ஓர் அர்ப்பணிப்பு மிக்க இளைஞர் பட்டாளம் காட்டித்தர வேண்டும். அதன் போக்கில் நம்மில் பலர் இறக்க நேரிடும். ஆனால் அத்தகைய உன்னத நோக்கத்திற்கான நமது தியாகம் வீண் போகாது“ என்று ஆனந்த குப்தாவிடம் கூறினார்.
- வங்காளத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்த சூரியா சென்னின் தலைமையில் செயல்பட்ட குழு முக்கியமானதாகும்.
- தல்காட் கிராமத்தில் அரசுப்படைகளின் தளபதி கேப்டன் கேமரூனை ஒரு ஏழை பிராமண விதவையான சாவித்ரி தேவி என்பாரின் வீட்டில் கொன்றனர்.
- கல்பனா தத்தின் சுயசரிதையில் இருந்து. (Chittagong Armoury Raiders’ Reminiscences)
சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதல்
- சூரியா சென்னின் புரட்சிகரக் குழுவான இந்தியக் குடியரசு இராணுவம் ஐரிஷ் குடியரசுப் படைக்குப் பின் அதுபோன்று பெயர்சூட்டிக்கொண்ட து .
- கொரில்லா பாணி தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டனர். 1930 ஏப்ரல் 18 அன்று இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்கித் தகர்க்கப்பட்டது.
- பிப்ரவரி 1933இல் அவர் கைதானார். பதினொரு மாதங்கள் கழித்து 1934 ஜனவரி 12இல் அவருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதிரடி செயல்களில் பெண்கள்
- சூர்யா சென்னும் கல்பனா தத்தும் வாழ்நாள் முழுதும் நாடுகடத்தப்பட்டனர். சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டு யாதெனில் "பேரரசருக்கு எதிரான போரை நடத்தியது." சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல் தொடங்கி அவர்கள் மீதான ஒட்டுமொத்த வழக்கு விசாரணையும் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு வழக்கு என அறியப்படுகிறது.
- Chittagong Armoury Raiders’ Reminiscences என்னும் தனது நூலில் சிட்டகாங்கின் புரட்சிகர இளைஞர்கள் நம்பிக்கையுடன் போரிட்டால் வெளியாட்களின் உதவியின்றி கூட அரசாங்கத்தை எதிர்த்துப் போராட முடியும் என்று நிரூபித்துள்ளதை நினைவூட்டுகிறார்.
இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு, 1931
- மார்ச் 1931இல் நடந்த கராச்சி அமர்வு சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதோடல்லாமல் சுதந்திர இந்தியாவின் பொருளாதார கொள்கை பற்றிய ஒரு பார்வையை வழங்கியது.
- சுதந்திர இந்தியாவிற்கான இந்திய தேசிய காங்கிரசின் கொள்கை அறிவிப்பு விளக்கமானது.
உலகப் பெருமந்தமும் இந்தியாவில் அதன் தாக்கமும்
- உலகப் பெருமந்த நிலை 1929இல் இருந்து ஒரு பத்தாண்டாக நீடித்த ஒரு கடுமையான மற்றும் நீடித்தப் பொருளாதார நெருக்கடி ஆகும்.
- அமெரிக்காவில் வால் தெருவில் (Wall Street) உண்டான (அமெரிக்கப்பங்குச் சந்தைஅமைந்துள்ள இடம்) பெரும் அளவிலான பொருளாதார வீழ்ச்சி உலகையே உலுக்கியது.
இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி
- 1854இல் பம்பாயில் கவஸ்ஜீ நானாபாய் தவர் (1815-73) என்ற பார்சி இனத்தைச் சேர்ந்த இந்தியரே பருத்தி ஆலையை முதன்முதலில் தொடங்கினார்.
- இது பாம்பே ஸ்பின்னிங் அண்ட் வீவிங் கம்பெனி என்று அறியப்பட்டது.
- முதல் பயணிகள் ரயில் 1853இல் பம்பாய்க்கும் தானேவுக்குமிடையே இயங்கியது.
- இந்த நிறுவனத்தில் 1911இல் 98,723 நபர்கள் பணியில் இருந்தனர்.
- சணல் உற்பத்தி மற்றொரு தொழில் ஆகும்.
- முதல் சணல் உற்பத்தி ஆலை கல்கத்தாவில் 1855இல் நிறுவப்பட்டது.
- 1914ஆம் ஆண்டில் கல்கத்தா மாகாணத்தில் மட்டும் 64 ஆலைகள் இருந்தன.
- 1843இல் ரவீந்திரநாத் தாகூரின் தாத்தா துவாரகநாத் தாகூர் (1794-1847) என்பவரால் ராய்கஞ்ச் என்ற இடத்தில் பெங்கால் நிலக்கரி நிறுவனம் நிறுவப்பட்டது.
- 1907இல் பீகாரிலுள்ள சாகி நகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) - முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது.
- இதற்கு முன்னர், 1875இல் ஐரோப்பியர்கள் குழு ஒன்று வங்காள இரும்பு நிறுவனத்தை நிறுவ முயற்சித்தது.
- இதைத் தொடர்ந்து 1889இல் வங்காள இரும்பு மற்றும் எஃகு ஆலை அமைக்கப்பட்டது.
(ஏப்ரல் 16, 1853, 3:35 பிற்பகல் அன்று இந்தியாவின் முதல் இரயில் பயணம் பம்பாயிலுள்ள போரி பந்தர் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு 34 கி.மீ. தொலைவிலுள்ள தானே எனுமிடத்தைச் சென்றடைந்தது.)
- ஜே.என். டாடா (1839 - 1904), பரோடாவில் உள்ள நவ்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி ( ஜொராஷ்ட்ரியன் ) வணிகக் குடும்பத்திலிருந்து வந்தவர்.
- இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் இவர் என்பதால், இந்திய நவீனத் தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- 1868இல் நிறுவப்பட்ட அவருடைய வர்த்தக நிறுவனம் டாடா குழுமம் என்றானது.
- ஒரு தேசியவாதியாய், குர்லா, பம்பாயில் உருவாக்கிய தனது நிறுவனம் ஒன்றிற்கு "சுதேசி" எனப் பெயரிட்டார்.
- அவரது மகன்களான தோரப்ஜி டாடா மற்றும் ரத்தன்ஜி டாடா ஆகியோர் அவரது கனவுகளை நனவாக்கி வந்தனர்.
- தோரப்ஜி டாடா அவரது தந்தையின் நீண்ட காலக் கனவான இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தை 1907ஆம் ஆண்டில் நிறுவினார்.
- 1910இல் மிகப்பெருமளவில் டாடா நீர்மின்சக்தி நிறுவனம் உதயமானது.
- தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய அறிவியல் கழகம் ஒன்றை பெங்களூரில் டாடா குழுமம் நிறுவியுள்ளது.
- முதல் முறையாக 1916இல் ஒரு தொழிற்துறை ஆணையம் நியமிக்கப்பட்டது.
- 1882ஆம் ஆண்டில் லக்னோவில் முதல் காகித ஆலை இந்திய முதலாளிகளால் - கூப்பர் பேப்பர் மில் என்ற பெயரில் அமைக்கப்பட்டது.
- இதைத் தொடர்ந்து ஐரோப்பியர்களால் இதகர் காகித ஆலை மற்றும் பெங்கால் காகிதஆலைநிறுவப்பட்டது.
- 1904இல் மதராஸ் நகரில் தென்னிந்திய தொழிற்சாலை நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கியது. சிந்தியா நீராவிக் கப்பல் கம்பெனி லிமிடெட் (1919) ஏனையவற்றிற்கு முன்னோடியாக இருந்தது. 1939இல், அவர்கள் பிரிட்டிஷாரின் பம்பாய் நீராவிக் கப்பல் நிறுவனத்தையும் வாங்கிவிட்டனர்.
பொருளாதாரப் பெருமந்தத்தின் போது தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி
- கோயம்புத்தூரில், 1896இல் ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்ட பின் வேறு எந்த ஆலைகளும் வரவில்லை.
- 1932இல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.