Easy Tutorial
For Competitive Exams

TNPSC GS Polity - உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்-தமிழ்நாடு Study Material

உள்ளாட்சி அரசு-பஞ்சாயத்துராஜ்

    கிராமங்களிலுள்ள நகரங்களிலும் வாழும் மக்களின் நல்வாழ்வை உயர்த்துவதற்கான வழிமுறைகளை வகுத்து அவைகளை செவ்வனே செயல்படுத்துவதே தல சுய ஆட்சி நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாகும். இது அரசாங்க அமைப்பிலிருந்து எவ்வாறு வேறுபாடுகிறது என்றால் சட்டமன்ற, ஆட்சித்துறை நீதித்துறை ஆகிய மூன்று அமைப்பு முறைகளைக் கொண்டது அரசாங்கம்.
  • தலசுய ஆட்சி நிறுவனம் நாடு முழுவதும் அல்லாமல் அங்கங்கு பல பகுதிகளில் வாழும் மக்கள் தொகையின் நலனுக்காக செயல்படுகிறது. ஒரு பகுதி எல்லைக்குள் எழும் சிக்கல்கள் போன்றவைகள் அதனுடைய அதிகார வரம்பிற்குட்பட்டவை.

Group-IV(2011 & 2014)

57471.உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது ?
மத்திய தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்
மாவட்டத் தேர்தல் வாரியம்
பார்வையாளர்கள்
தல சுய ஆட்சியின் அவசியம்
    தல சுய ஆட்சி சில காரணங்களால் ஒரு அவசியமான நிறுவனமாகிறது. தற்காலத்தில் அரசியலமைப்புப் பெரியதாகியும் அதன் பணிகள் பெருகியும் காணப்படுகின்றன. அரசு பெரிய அமைப்பாகவும் அதில் வாழும் மக்கள் தொகையும் பெருகி இருப்பதால் ஒரு நாட்டின் அரசாங்கம் சிறந்த முறையில் செயல்படவும் அதன் பல்வேறான பகுதிகளில் வாழும் மக்களின் குறிப்பிட்ட தேவைகளை கவனிக்கவும் கடினமாயிருக்கிறது. ஒரு நாட்டில் எழும் சிக்கல்கள் இடத்திற்கிடம் மாறுபட்ட தன்மையுடையவை. ஒரே தன்மையுடையவை அல்ல. எல்லா சிக்கல்களையும் ஒரே மாதிரியான முறையில் தீர்வு காண முடியாது. எனவே அதிகாரத்தைப் பிரித்து பன்முகப்படுத்தி அந்தந்த தலங்களிலுள்ள மக்களிடம் ஒப்படைப்பதன் மூலம் அவர்களே தங்களது தலங்களின் தேவைகளை ஆர்வத்துடன் செயல்படுத்த முடிகிறது.

Group-IV(2011)

9235.உள்ளாட்சித் தேர்தல்களை எந்த அமைப்பு நடத்துகிறது?
மாநிலத் தேர்தல் ஆணையம்
மத்திய தேர்தல் ஆணையம்
மாவட்ட தேர்தல் வாரியம்
பார்வையாளர்கள்
வேறு சில சந்தர்ப்பங்களில் தல சுய ஆட்சி நிறுவனம் செய்யும் பணிகள்

சில மாறுபட்ட சந்தர்ப்பங்களில் வேற சில குறிப்பிட்ட பணிகளையும் தல சுய ஆட்சி மேற்கொள்கிறது.
அ) தலங்களில் சுய ஆட்சி உறுப்புகளாக இருந்து பணிபுரிந்து
ஆ) தலங்களில் பொதுநலச் சேவைகள் செய்வதன் மூலம் தனிப்பட்டவர்களை நல்ல குடிமக்களாக்குவது.
இ) கிராம நகர்ப்பகுதிகளில் சீரான திட்ட வளர்ச்சிகள் கொண்டுவர உதவுதல்.
ஈ) தல வருவாய் வாய்ப்புகளைப் பெருக்கிப் பொதுநலத்திற்கு உபயோகப்படுத்துதல்.
உ) கூட்டான முறையில் சமூக, பொருளாதார கலாச்சார வளர்ச்சிகளுக்கு உதவுதல்.

தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து அரசு அமைப்பு
  • தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அரசு முறை, ‘தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம்’ 1958-ன் படி ஏற்படுத்தப்பட்டது. இந்த முறை கிராமப் பஞ்சாயத்து அடிப்படையில் அமைந்துள்ளது. இதற்கு மேலாகப் பஞ்சாயத்து ஒன்றியங்களும் மாவட்ட வளர்ச்சிக் குழுக்களும் உள்ளன.
  • இந்தப் புதிய அமைப்பு முறையில் மாவட்ட கழகங்கள் அகற்றப்பட்டுப் பஞ்சாயத்து ஒன்றியங்கள் அவற்றின் வாரிசுகளாக ஆயின.
  • பஞ்சாயத்து ஒன்றியத்தின் பரப்பளவு சமூக பரப்பளவு சமூக முன்னேற்றத் திட்டத்திலுள்ள அபிவிருத்தி அமைப்புகள்; சம எல்லை அமைப்புகளாக அமைக்கப்பட்டன. கிராம மட்டங்களின் மக்களால் நேரிடையாகத் தங்களுக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • இப்பொழுது பஞ்சாயத்துத் தலைவரையும் நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு முயற்சி இருக்கிறது. பஞ்சாயத்து யூனியனில் அதன் அதிகாரத்திற்குட்பட்ட பஞ்சாயத்துக் கவுன்சிலின் தலைவர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். இவர்கள் பஞ்சாயத்து யூனியன் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
  • தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாயத்து அரசு நிறுவனங்களின் அமைப்பைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கலாம்.
    1. பஞ்சாயத்துகள்
    அ) கிராமப் பஞ்சாயத்துகள்
    ஆ) நகரப் பஞ்சாயத்துகள்
    2. பஞ்சாயத்து யூனியன்
    3. மாவட்ட அபிவிருத்திக் கவுன்சில்
    4. மாநில மட்டத்திலுள்ள பஞ்சாயத்து அபிவிருத்தி கவுன்சில்
  • உள்ளாட்சி அரசாங்க அமைப்புகள், இந்தியாவில் இரண்டு வகையாக உள்ளன. ஒருவகையாக கிராமப்புறப் பகுதிகளுக்கும் மற்றொரு வகை நகர்ப்புறப் பகுதிகளுக்குமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புமுறை பஞ்சாயத்துராஜ் அமைப்பு என்று அறியப்படுகிறது.
  • 1992-ஆம் ஆண்டு 73 மற்றும் 27-வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்களின் அமைப்பாக்கம் மற்றும் செயல்பாடுகள் மீது பெரும் அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன..
தோற்றம் பல்வந்த்ராய் மேத்தா கமிட்டி
  • சமுதாய மேம்பாட்டுத் திட்டம் (1952) மற்றும் தேசிய விரிவுபடுத்தப்பட்ட பணிகள் (1953) ஆகியவற்றின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய இந்திய அரசாங்கம 1957-ல்; கமிட்டி ஒன்றை அமைத்தது. இக்கமிட்டியின் தலைவர் பல்வந்த்ராய் ஜீ.மேத்தா ஆவார்.
  • இக்கமிட்டி தனது அறிக்கையை 1957-ம்ஆண்டு நவம்பரில் சமர்ப்பித்தது.
  • மேலும் மக்களாட்சி பரவலாக்கல் (Decentralized Democracy) திட்டத்தை நிலைநிறுத்த பரிந்துரை அளித்தது.
  • இதன் இறுதியாகத் தோன்றியதே பஞ்சாயத்து இராஜ்யம் ஆகும்.
இதன் முக்கிய பரிந்துரைகளாவன:
  • பஞ்சாயத்து அமைப்பு முதன் முதலில் இந்தியாவில் ராஜஸ்தானில் நிறுவப்பட்டது. அக்டோபர் – 2 – 1959ல் நகாவூர் மாவட்டம்.
  • இரண்டாவதாக ஆந்திராவில் 1959 – ல் நிறுவப்பட்டது.
அசோக் மேத்தா கமிட்டி
  • 1977 – ம் ஆண்டு டிசம்பரில் ஜனதா அரசாங்கத்தால் அசோக்மேத்தா தலைமையில் பஞ்சாயத்து ராஜ் நிறுவன கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டது.
  • 1978 – ஆகஸ்டில் தனது அறிக்கையை குழு சமர்ப்பித்தது.
  • மேலும் சீர்கேடு அமைந்து வரும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை புதுப்பிக்கவும் மற்றும் வலுப்படுத்தவும் 132 – பரிந்துரைகளை முன் வைத்தது.
முக்கியத்துவம்
  • கிராமசபா
  • மூன்று – அடுக்கு முறை
  • உறுப்பினர் மற்றும் தலைவரை தேர்ந்தெடுத்தல்
  • கிராமபஞ்சாயத்து இடைநிலை மற்றும் மாவட்ட அளவில் உள்ள அனைத்து உறுப்பினர்கம் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • இறுதியாக இடைநிலை பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் மாவட்ட அளவிலான தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக மாநில சட்டமன்றம் முடிவெடுக்கும்.
  • எனினும் கிராம பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக மாநில சட்டமன்றம் முடிவெடுக்கும்.
பஞ்சாயத்து அமைப்பின் பணிக்காலம்
  • பஞ்சாயத்து அமைப்பு ஒவ்வொரு 5 ஆண்டுகள் பணியாற்றும்.
  • எனினும் பணிக்காலத்திற்கு முன்பே கலைக்கப்படலாம் இறுதியாக(புதிதாக தேர்தல் நடத்தி பூர்த்தி செய்யலாம்)
  • 5 – ஆண்டு பணிக்காலத்திற்கு முன்பு அல்லது பணிக்காலம் காலாவதியாவதற்கு முன்பு கலைந்துவிட்டால் அனைத்து நிலைகளிலும் பஞ்சாயத்து ஐந்து ஆண்டு காலநிலையைப் பெற்றுள்ளது.
  • ஆனால் அதன் காலம் முடிவதற்குள் அது கலைக்கப்பட முடியும். மேலும் ஐந்து ஆண்டு காலம் முடிவதற்குள் அதற்கான பஞ்சாயத்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த தேர்தல் பஞ்சாயத்து கலைக்கப்பட்ட பின் ஆறு மாதத்திற்குள் நடைபெற வேண்டும்.
ss மாவட்ட ஊராட்சி மன்ற (ஜில்லா ரிஷத்)த்தின் அமைப்பாகம்
  • ஜில்லா பரிஷத் – மாவட்ட ஊராட்சி மன்றம் என்பது பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் இறுதி உயர்நிலையில் மூன்றாவது அடுக்காக உள்ளது.
  • இவ்வமைப்பு மாவட்ட அளவில் அமைந்துள்ளது. ஜில்லா பரிஷத்தின் பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகளாகும். இதனுடைய சில உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
  • பஞ்சாயத்து சமிதிகளின் தலைவர்கள் பதவிப் பொறுப்பு வழி உறுப்பினர்களாவர். ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கூட ஜில்லா பரிஷத்தின் உறுப்பினர்களேயாவர்.
  • மாவட்ட ஊராட்சி மன்றத்தின் தலைவர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடையிலிருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கைக்குக் குறையாத உறுப்பினர்ஃ தலைமை இடங்கள் பெண் உறுப்பினர்களுக்கான என ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளவை.
  • பட்டியலின் சாதிகளுக்கும் பட்டியலின் பழங்குடி இனத்தவருக்கும் கூட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மாநில தேர்தல் ஆணையம்
  • பஞ்சாயத்து தேர்தல்களை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தயாரித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் போன்ற அனைத்து பணிகளையும் மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது.
  • தற்போதைய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.ஐயர்
மாநில நிதி ஆணையம்
  • பஞ்சாயத்து மற்றும் நகராட்சியின் நிதி நிலையை ஆராய்ந்து ஆளுநரிடம் பரிந்துரைகள் செய்வதற்கு ஆளுநர் ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் நிதிக்குழு அமைக்க வேண்டும்.
  • கீழ்வருவனவற்றை ஆளும் கொள்கைகள் தொடர்பாக ஆளுநரிடம் பரிந்துரைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்

1.மாநிலங்களுக்கும் பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளுக்கும் இடையே மாநிலங்களால் விதிக்கப்படும் வரி, சுங்கவரி, ஏற்றுமதி வரி ஆகிய வரிகளைப் பகிர்தல். 2. பஞ்சாயத்தால் வசுலிக்கப்பட வேண்டிய வரி சுங்கவரி மற்றும் கட்டணங்கள் ஆகியவை. 3.மாநில தொகுநிதியிலிருந்து பஞ்சாயத்துகளுக்கான உதவித்தொகை 4. பஞ்சாயத்துகளின் நிதிநிலையை உயர்த்தும் அளவீடுகள் 5.பஞ்சாயத்துகளின் நலனுக்காக நிதிநிலையை உயர்த்த ஆளுநரால் நிதிக் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் விவரங்கள்.

மாநகராட்சிகள்
  • மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் விதிக்கப்பட்டவாறு, பெரும் நகரங்களில் மாநகராட்சிகள் நிறுவப்பட்டுள்ளன. மாநகராட்சிகளின் உறுப்பினர்கள் ஐந்தாண்டு பதவிக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தங்களுக்குள் ஒருவரை ஆண்டு தோறும் மாமன்றத் தலைவராக(மேயராக) தேர்வு செய்கின்றனர். மேயர் மாநகரத்தின் முதலாவது குடிமகனாகக் கருதப்படுகிறார்.
  • மாநகராட்சி கலைக்கப்படும் பட்சத்தில் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகும்.
  • மாநகராட்சிகளில் முதன்மை செயல் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்ற வேண்டியவரான மாநகராட்சி ஆணையர் என்ற அதிகாரப்பூர்வ பணியிடம் உண்டு.
  • இந்த ஆணையர் மாநில அரசாங்கத்தினால் நியமிக்கப்படுபவர் ஆவார். டெல்லி போன்ற மத்திய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் விஷயத்தில் இப்பணி நியமனம் நடைபெறும் செயல் முறையை மத்திய அரசு மேற்கொள்ளும்.
நகராட்சிகள்
  • மிகப்பெரும் எண்ணிக்கையில் மக்கள் தொகையைக் கொண்டிராத சிறு நகரங்களில் நகராட்சிகள் அமைகின்றன. உள்ளுர் நகரங்களையும், அவற்றின் பிரச்சனைகளையும், வளர்ச்சிப் பணிகளையும் இந்நகராட்சிககள் கவனித்துக் கொள்கின்றன.
  • ஒவ்வொரு நகராட்சியும், அந்நகரின் வயது வந்த வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களான நகர்மன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன.
  • மாநில தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்டு விதிக்கப்படுகிற நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிறவர்கள் யாரோ அவர்கள் மட்டுமே நகர்மன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட முடியும்.
  • Group-IV(2014)

9345.மாவட்ட அளவில் பலதரப்பட்ட பணிபுரியும் பணியாளராக இருப்பவர் யார் ?
மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட தொழிலாளர் அலுவலர்
தாசில்தார்
மாவட்டஆட்சியாளர்
9349.சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை
5 லட்சம்
7 லட்சம்
8 லட்சம்
10 லட்சம்
  • நகராட்சி மன்றக் குழுவின் தலைவர், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அவர்கள் நடுவிலிருந்து தேர்ந்தெடுப்படுகிறார். அவர் அல்லது அவள், தலைவர் பதவியை அந்நகர் மன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுள் பெரும்பான்மையோரின் நம்பிக்கையைத் தாங்கள் பெற்றிருக்கும் காலம் வரை வகிக்க முடியும்.
  • ஒவ்வொரு நகர் மன்றத்திற்கும் ஒரு செயல் நிர்வாக அதிகாரியை மாநில அரசாங்கம் நியமனம் செய்கிறது அவர், அவள் அன்றாடப் கணிகளையும், நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்கிறவராக இருப்பார்.
  • நகர பஞ்சாயத்துகள்
    • 30,000-த்திற்கு அதிகமான ஒரு இலட்சத்திற்கும் குறைவான குடியிருப்போரைக் கொண்ட ஒரு நகர்ப்புற மையம், ஒரு நகர பஞ்சாயத்தைப் பெற்றிருக்கும். எப்படியாயினும், சில விதிவிலக்குகளும் அங்குண்டு.
    • முந்தைய நகர்புறப் பகுதிக் குழுக்கள் அனைத்தும்(5,000த்திற்கு மேல் 20,000த்திற்குக் குறைவான மொத்த மக்கள் தொகையைக் கொண்ட நகர்ப்புற மையங்கள்) நகர்ப் பஞ்சாயத்துகள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
    • இவை ஒரு தலைவரையும் வார்டு உறுப்பினர்களையும் பெற்றிருப்பவையாகும். குறைந்தது பத்து தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களையும் மூன்று நியமன உறுப்பினர்களையும் இது பெற்றிருக்கலாம்.
    மாநகராட்சி
    • டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களுர் போன்ற இதர பெரிய நகரங்களின் நிர்வாகத்திற்காக முனிசிபல் கார்ப்பரேசன் உருவாக்கப்பட்டுள்ளது.
    • இவற்றினை மாநிலத்தில் ஏற்படுத்துவது சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றமாகும் மற்றும் யூனியன் பகுதியில் பாராளுமன்ற சட்டத்தின் வாயிலாக ஏற்படுத்தப்படுகிறது.
      முனிசிபல் கார்ப்பரேசன் மூன்று அமைப்புகளாக செயல்படுகிறது.
      • கவுன்சில்(தலைவர்ஃமேயர்)
      • நிலைக் குழு மற்றும்
      • கமிஷனர்
    நகராட்சி
    • இது நகரங்கள் மற்றும் சிறிய மாநகரங்களை நிர்வகிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது.
    • நகராட்சியும், மாநகராட்சியை போலவே மூன்று அமைப்புகளாக செயல்படுகிறது.
      1. கவுன்சில்
      2. நிலைக்குழு
      3. முதன்மை நிர்வாக அதிகாரி
    அறிவிக்கப்பட்ட பகுதி குழு
    • இது இரு வகையான பகுதிகளை நிர்வகிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது.
    • தொழில்மயமாதலால் விரைவாக வளரும் நகரம் மற்றும் நகராட்சியாவதற்கான தகுதிகளை பெறாத ஆனால் மாநில அரசால் முக்கியமானதாக கருதப்படும் நகரம்.
    • இக்குழுவில் சேர்மன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் மாநில அரசால் நியமிக்கப்பட்டவர்கள். ஆகவே இது தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்போ அல்லது சட்டரீதியான அமைப்போ அல்ல.
    Share with Friends