காமராஜரின் எத்தனையாவது பிறந்தநாள் விழா ஜூலை 15 அன்று கொண்டாடப்படுகிறது ?
இவரது பிறந்தநாளை ஒட்டி ரூ.25 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பளவில் விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை முதல் அமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
காமராசர் (காமராஜர்) (சூலை 15, 1903 - அக்டோபர் 02, 1975) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.