Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2014 Page: 3
32941.கோதைவில் குரிசில் அன்னான்
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
சிவன்
இராமன்
அருச்சுனன்
இலக்குவன்
32942.பொருந்தாத இணையினைக் காண்க
யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றன்
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது - நாமக்கல் கவிஞர்
மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும் - கவிமணி
தேனொக்கும் செந்தமிழே நீ கனி -பாரதியார்
32943."தமிழ் செய்யுள் கலம்பகம்"
இது யார் தொகுப்பு?
மறைமலை அடிகளார்
திரு.வி.க.
கசு பிள்ளை
ஜி.யு.போப்
32944.கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?
இசையமுது
கண்ணகி புரட்சிக்காப்பியம்
தமிழியக்கம்
தமிழ்ப்பசி
32945.திருநாவுக்கரசரைக் குறிப்பிடாத பெயர் எது?
தருமசேனர்
தாண்டகவேந்தர்
தம்பிரான் தோழர்
வாகீசர்
32946."உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்"
என்னும் ----------- வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
சீத்தலைச்சாத்தனார்
மாணிக்கவாசகர்
கம்பர்
திருமூலர்
32947.ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது
சிலேடை
செம்மொழிச் சிலேடை
பிரிமொழிச் சிலேடை
பிறிதுமொழிதல்
32948.தற்குற்றம் வருவது ஒரான் புனைமலர்ச் சார்பால் அன்றி
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்
- இதில் அல்கு என்பதன் பொருள்
மருள்
இருள்
உருள்
திரள்
32949.வாக்கிங் போகும் போது மொபைல் யூஸ் பண்ண வேண்டாம் - சரியாக மொழிபெயர்க்கப்பட்ட
வாக்கியத்தைக் கண்டறிக
நடைபயிற்சி செய்யும் போது செல்பேசியைப் பயன்படுத்த வேண்டாம்
நடைபயிற்சி போகும் போது அலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்
நடைபயிற்சி போகும் போது தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்
நடைபயிற்சியின் போது இணையதளம் பயன்படுத்த வேண்டாம்
32950.பொருத்தமான இடைநிலையைத் தேர்க
(a) வருவான் 1. இறந்தகால இடைநிலை
(b) காணான் 2. நிகழ்கால இடைநிலை
(c) பார்த்தான் 3. எதிர்கால இடைநிலை
(d) நடக்கிறான் 4 எதிர்மறை இடைநிலை

3 4 2 1
4 1 3 2
3 4 1 2
1 2 4 3
32951.

பொருத்துக


(a) கஃஃசு 1. இன்னிசையளபெடை
(b) உழாஅர் 2. ஒற்றளபெடை
(c) உண்பது உம் 3. சொல்லிசையளபெடை
(d) உரனசைஇ 4. செய்யுளிசையளபெடை
2 1 3 4
2 4 1 3
3 1 4 2
3 4 2 1
32952.எதிர்ச்சொல்:
இடும்பை என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
துன்பம்
இன்பம்
கோபம்
பொறுமை
32953.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
வாழை, வாளை, வாலை
மரம், மீன், இளம்பெண்
விலங்கு, மரம், பூப்பருவம்
செடி, விலங்கு, மரம்
பூ, செடி, விலங்கு
32954.பிழையற்ற தொடர் எது
கயிறுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
கயிற்று கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
32955.சரியானவற்றை தெரிந்து எழுதுக:
புதுமைப்பித்தன் - அக்கரை பச்சை
முல்லை சக்தி-வெள்ளி இரவு
டாக்டர் மூ. வரதராசன் - கொலு பொம்மை
ஜீவா - பொன்னகரம்
32956.முதுகுடிப் பிறந்த மகளிரும் நிகரற்ற வீர வாழ்க்கையினராவர்.
- இவ்வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
வியப்பு வாக்கியம்
வினா வாக்கியம்
செய்தி வாக்கியம்
கட்டளை வாக்கியம்
32957.கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வாக்கியத்தைத் தேர்ந்து எழுதுக.
தம் அன்பினில் கும்பிடுதல் கூடும் கடன்
அன்பினில் கும்பிடுதல் தம் கடன் கூடும்
கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன்
கூடும் தம் கடன் கும்பிடுதல் அன்பினில்
32958."கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே...."
எனும் சொற்றொடர் இடம் பெறும் நூல்?
அகநானூறு
புறப்பொருள் வெண்பாமாலை
நாலடியார்
நற்றிணை
32959.தமிழ் மொழித் தூய்மை இயக்கம் - தோன்றிய நூற்றாண்டு
21 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
18 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
19ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
32960.கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது?
வேதியர் ஒழுக்கம்
சதுரகராதி
தொன்னூல் விளக்கம்
தமிழியக்கம்
Share with Friends