Easy Tutorial
For Competitive Exams
GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Prepare QA Page: 4
56232.பெருங்கிளர்ச்சிக்குக் காரணமாகச் செயல்பட்ட பல விஷயங்களை முன்வைப்பவர்?
எட்வர்டு ஜான் தாம்சன்
வில்லியம் பெண்டிங்க்
கர்னல் கீன்
கர்னல் மல்லீசன்
Explanation:

வரலாற்றறிஞர் கீன் (Keen) இக்கிளர்ச்சிக்குக் காரணமாகச் செயல்பட்ட பல விஷயங்களை முன்வைக்கிறார். டல்ஹௌசியின் இணைப்புக் கொள்கைகளாலும் சீர்திருத்த வேகத்தாலும் பாதிப்புக்குள்ளான இளவரசர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் குமுறல்கள் என ஏற்கனவே குவித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளை கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் தீப்பொறியை ஏற்படுத்திப் பற்றி எரியச் செய்தன.
56233.நீண்ட காலத்திற்கு வங்காளப்படைகளுக்கு நாற்றங்காலாக இருந்தது எது?
டெல்லி
மீரட்
அவத்
கான்பூர்
Explanation:

நீண்ட காலத்திற்கு வங்காளப்படைகளுக்கு அவத் நாற்றங்காலாக இருந்தது. அவத்தை சேர்ந்த வீரர்கள் குறைந்த ஊதியம் குறித்தும் விடுமுறை பெறுவதிலுள்ள இடர்ப்பாடுகள் பற்றியும் புகார் செய்தனர். அவர்கள் அனைவரும் பேகம் ஹஸ்ரத் மஹாலின் பின் அணி திரண்டனர். ராஜா ஜெய்லால் சிங்கின் தலைமையில் அவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு லக்னோவைக் கைப்பற்றினர்.
56234.கிழக்கிந்திய கம்பெனி படையில் இந்திய வீரர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டவர்?
கங்காதர்ராவ்
கான்சாகிப்
நானா சாகிப்
மாபூஸ்கான்
Explanation:

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிராமங்களை அடகு வைத்து ஏராளமாகக் கடன் வாங்கியிருந்த ஆற்காடு நவாப் அங்கெல்லாம் நிலவரி வசூல்செய்யும் உரிமையை கம்பெனிக்கு அளித்தார். கான் சாகிப் என்று அழைக்கப்பட்ட யூசுப்கான் கிழக்கிந்திய கம்பெனி படையில் இந்திய வீரர்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
56235.நீல் எங்கு நடைபெற்ற தெருச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்?
லக்னோ
மீரட்
டெல்லி
கான்பூர்
Explanation:

ஹஸ்ரத் மஹால் தன் மகன் பிர்ஜிஸ் கத்ராவை அவத்தின் அரசராக அறிவித்தார். கான்பூரில் பழிதீர்த்துக் கொண்ட நீல் லக்னோவில் தெருச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1858 மார்ச் மாதத்தில்தான் லக்னோவை ஆங்கிலேயரால் கைப்பற்ற முடிந்தது.
56236.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 1858இல் கானிங் இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டுஅமைதி மீட்கப்பட்டதாக அறிவித்தார்.
ii. தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு 1858 ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

குவாலியர் விரைவில் மீட்கப்பட்டது. 1858இல் கானிங் இராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டுஅமைதி மீட்கப்பட்டதாக அறிவித்தார். தாந்தியா தோபே கைது செய்யப்பட்டு 1858 ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார்.
56237.இரண்டாம் பகதூர்ஷா எந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார்?
இலங்கை
நேபாளம்
மியான்மர்
வங்காள தேசம்
Explanation:

இரண்டாம் பகதூர்ஷா செப்டம்பர் 1857இல் கைது செய்யப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ரங்கூனுக்கு (மியான்மர்) நாடு கடத்தப்பட்டார். அங்கேயே அவர் நவம்பர் 1862 இல் தனது 87வது வயதில் மரணமடைந்தார். அவருடைய இறப்போடு முகலாய அரசவம்சம் முடிவுக்கு வந்தது.
56238.நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகளுள் அல்லாதவர்?
மாபூஸ்கான்
மியானா
முடிமய்யா
நபிகான்
Explanation:

நவாப் சந்தா சாகிப்பின் பிரதிநிதிகளான மியானா, முடிமய்யா, நபிகான் கட்டக் ஆகிய பதான் இனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மதுரையையும் திருநெல்வேலியையும் கண்காணித்து வந்தனர். அவர்கள் ஆற்காடு நவாப் முகமது அலிக்கு எதிராகத் தமிழ்ப் பாளையக்காரர்களை ஆதரித்தனர். அவர்களுடன் புலித்தேவருக்கு நெருக்கமான உறவு இருந்தது.
56239.இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் மற்றும் முதல் வைஸ்ராய் யார்?
வெல்லெஸ்லி
வில்லியம் பெண்டிங்க்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
கானிங்
Explanation:

பெருங்கிளர்ச்சியின் விளைவுகள் அலகாபாத்தில் 1858 நவம்பர் 1இல் அரசு தர்பார் கூட்டப்பட்டது. விக்டோரியா ராணி வெளியிட்ட பிரகடனம் தர்பார் மண்டபத்தில் கானிங்பிரபுவால் வாசிக்கப்பட்டது. அவரே இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலும் முதல் வைஸ்ராயுமாவார்.
56240.அரசு செயலருக்கு உதவி செய்யும் இந்தியா கவுன்சிலில் எத்தனை உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர்?
பதினாறு
பத்து
ஐந்து
பதினைந்து
Explanation:

இதன் பின்னர் இந்தியா ஆங்கிலேய முடியரசின் பெயரால் அரசுச் செயலர் மூலம் ஆளப்படும். பதினைந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தியா கவுன்சில் எனும் அமைப்பு அரசு செயலருக்கு உதவி செய்யும். இதன் விளைவாகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குநர் குழுவும், கட்டுப்பாட்டுக் குழுவும் ஒழிக்கப்பட்டன. ஆங்கிலேய முடியரசும் நாடாளுமன்றமும் அரசியல் அமைப்பின் அடிப்படையில் இந்தியாவை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வர். கிழக்கிந்தியக் கம்பெனியின் படை கலைக்கப்பட்டு இங்கிலாந்து அரசின் படைகளோடு இணைக்கப்படும்.
56241.விக்டோரியா பிரகடனம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
i. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய அரசர்களோடு மேற்கொண்ட உடன்படிக்கைகளை இப்பிரகடனம் ஏற்றுக் கொண்டது.
ii. இந்தியாவில் உள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் இல்லை எனவும் அறிவித்தது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய அரசர்களோடு மேற்கொண்ட உடன்படிக்கைகளை இப்பிரகடனம் ஏற்றுக் கொண்டது. அவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் கௌரவத்தையும் மதிப்பதாகவும் உறுதியளித்தது. மேலும் இந்தியாவில் உள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான பகுதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கம் இல்லை எனவும் அறிவித்தது.
56242.விக்டோரியா பிரகடனம் தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
i. வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும் இணைப்புக் கொள்கையும் கைவிடப்படும்.
ii. ஆங்கிலேயரை நேரடியாகக் கொன்ற கிளர்ச்சியாளர்களைச் தவிர மீதமுள்ள கிளர்ச்சியாளர் அனைவருக்கு ம் பொதுமன்னிப்பு வழங்கப்படும்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

வாரிசு உரிமை இழப்புக் கொள்கையும் இணைப்புக் கொள்கையும் கைவிடப்படும். ஆங்கிலேயரை நேரடியாகக் கொன்ற கிளர்ச்சியாளர்களைச் தவிர மீதமுள்ள கிளர்ச்சியாளர் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும். கல்வி, பொதுப்பணித் திட்டங்கள் (சாலைகள் இருப்புப்பாதை, தந்தி, நீர்ப்பாசனம்) ஆகியவை முடுக்கிவிடப்படும்.
56243.நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரின்போது கவர்னர் ஜெனரல் ஆக இருந்தவர்?
வெல்லெஸ்லி
காரன்வாலிஸ்
வில்லியம் பெண்டிக்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
Explanation:

பிரான்சுடன் திப்பு ஏற்படுத்திக்கொண்ட கூட்டணியால் கோபமுற்ற புதிய கவர்னர் ஜெனரலான வெல்லெஸ்லி துணைப்படைத்திட்டத்தின் கீழ் மைசூரில் ஆங்கிலேயப் படை ஒன்றை நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். திப்பு இதை ஏற்கவில்லை. ஆங்கிலேயர் நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரை 1799இல் அறிவித்தனர்.
56244.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
i. மேற்கத்தியமயமான ஆங்கிலக் கல்வி பயின்ற நடுத்தர வர்க்கம் தேசிய சிந்தனைகளோடு உருவானது
ii. இந்தியச் சமூகத்தின் மரபுசார்ந்த கட்டமைப்பு உடையத் துவங்கியது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

கடந்த காலம் மீண்டும் வரும் எனும் நம்பிக்கை மங்கியது. இந்தியச் சமூகத்தின் மரபுசார்ந்த கட்டமைப்பு உடையத் துவங்கியது. மேற்கத்தியமயமான ஆங்கிலக் கல்வி பயின்ற நடுத்தர வர்க்கம் தேசிய சிந்தனைகளோடு உருவானது.
56245.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு.
i. முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா சிறைக் கைதியானார்.
ii. அவருடைய இரண்டு மகன்களும் பேரனும் கல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டனர்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

முகலாயப் பேரரசர் இரண்டாம் பகதூர்ஷா சிறைக் கைதியானார். அவருடைய இரண்டு மகன்களும் பேரனும் சரணடைந்த பின் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Share with Friends