Easy Tutorial
For Competitive Exams
GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Prepare QA Page: 3
56182.வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. கர்னல் ஹர்கோர்ட் வேலூர் கோட்டையை 15 நிமிடங்களுக்குள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
ii. கர்னல் கில்லஸ்பி (வாலஜாபாத் படைக்குப் பொறுப்பு வகித்தவர்) ஜூலை 11இல் வேலூர் படையின் தற்காலிகப் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

கர்னல் கில்லஸ்பி வேலூர் கோட்டையை 15 நிமிடங்களுக்குள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது. கர்னல் ஹர்கோர்ட் (வாலஜாபாத் படைக்குப் பொறுப்பு வகித்தவர்) ஜூலை 11இல் வேலூர் படையின் தற்காலிகப் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
56183.வேலூர் படைமுகாமின் பொறுப்பாளராகப் பதவியேற்று, இராணுவச் சட்ட ஆட்சியை அமல்படுத்தியவர்?
கில்லஸ்பி
ஸ்கெல்ட்டன்
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
ஹர்கோர்ட்
Explanation:

ஜூலை 13இல் ஹர்கோர்ட் படைமுகாமின் பொறுப்பாளராகப் பதவியேற்று, இராணுவச் சட்ட ஆட்சியை அமல்படுத்தினார். கர்னல் கில்லஸ்பியின் விரைவான, சிறந்த திட்டமிடலுடன் கூடிய நடவடிக்கையே, கோட்டையை ச் சில நாட்களுக்குள் கைப்பற்றி, அடுத்ததாக மைசூரிலிருந்து வரவிருந்த 50 ஆயிரம் வீரர்களின் ஆதரவைப் பெறுவதற்குத் திட்டமிட்ட கிளர்ச்சியாளர்களின் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகக் கருதப்படுகிறது.
56184.வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. படைவீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த அருவருப்பான மாற்றங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன
ii. விசாரணைக் குழுவின் கூற்றுப்படி, மைசூர் இளவரசர்கள் கிளர்ச்சிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது நிறுவப்படாததால், அவர்களைக் கல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கும்படி உத்தரவிடப்பட்டது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

படைவீரர்கள் எதிர்ப்பு தெரிவித்த அருவருப்பான மாற்றங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. விசாரணைக் குழுவின் கூற்றுப்படி, மைசூர் இளவரசர்கள் கிளர்ச்சிக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பது நிறுவப்படாததால், அவர்களைக் கல்கத்தாவுக்கு அனுப்பிவைக்கும்படி உத்தரவிடப்பட்டது. உயர்மட்டத் தீர்ப்பாயங்கள் கவர்னர், தலைமைப் படைத்தளபதி, துணை உதவி ஜெனரல் ஆகியோரை இந்தக் குளறுபடிக்குப் பொறுப்பாக்கி. அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ள உத்தரவிட்டன.
56185.கூற்று (கூ): 1806ஆம் ஆண்டில் வேலூர் புரட்சி ஏற்பட்டது.
காரணம் (கா): அரியணையை இழந்த அரசர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் சந்ததியினர் ஆங்கிலேய ஆட்சி சுமத்திய அடிமைத்தளையைத் தகர்க்கத் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறானவை
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:

அரியணையை இழந்த அரசர்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் சந்ததியினர் ஆங்கிலேய ஆட்சி சுமத்திய அடிமைத்தளையைத் தகர்க்கத் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டனர். அவற்றின் மொத்த விளைவுதான் 1806ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேலூர் புரட்சி ஆகும்.
56186.கூற்று (கூ): . 1857ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் கிளர்ச்சிக்கான அனைத்து முன்னறிகுறிகளும் வேலூர் கிளர்ச்சியில் இருந்தன.
காரணம் (கா): பெருங்கிளர்ச்சியில் இடம்பெற்ற கொழுப்பு தடவபட்ட தோட்டாக்கள் என்ற சொல்லுக்கு மாற்றாக வேலூர் நிகழ்வில் இடம்பெற்ற பாட்ஜ் என்பதையும் பகதூர் ஷா, நானா சாகிப் ஆகியோருக்கு மாற்றாக மைசூர் இளவரசர்களையும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும்.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறானவை
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:

வேலூர் நிகழ்வின் தாக்கம் ஹைதராபாத், வாலஜாபாத், பெங்களூர், நந்திதுர்கம், பாளையங்கோட்டை, பெல்லாரி, சங்கரிதுர்கம் ஆகிய இடங்களிலும் பரவியது. 1857ஆம் ஆண்டு நடைபெற்ற பெரும் கிளர்ச்சிக்கான அனைத்து முன்னறிகுறிகளும் வேலூர் கிளர்ச்சியில் இருந்தன. பெருங்கிளர்ச்சியில் இடம்பெற்ற கொழுப்பு தடவபட்ட தோட்டாக்கள் என்ற சொல்லுக்கு மாற்றாக வேலூர் நிகழ்வில் இடம்பெற்ற பாட்ஜ் என்பதையும் பகதூர் ஷா, நானா சாகிப் ஆகியோருக்கு மாற்றாக மைசூர் இளவரசர்களையும் நம்மால் பொருத்திப் பார்க்க முடியும்.
56187.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி இரு தரப்பும் கைப்பற்றிய பகுதிகளை அவரவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
ii. தங்களைத் தற்காத்துக்கொள்ள நடைபெறும் போர்களில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

சென்னை உடன்படிக்கை யில் இருந்த நிபந்தனைகள் வருமாறு: இரு தரப்பும் கைப்பற்றிய பகுதிகளை அவரவரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். கரூர் மட்டும் ஹைதரின் வசம் இருக்கும். தங்களைத் தற்காத்துக்கொள்ள நடைபெறும் போர்களில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். இது மராத்தியருக்கு எதிராக ஆங்கிலேயர் உதவுவதற்கு கடமைப்பட்டவர்கள் என்பதையே குறித்தது. ஆனால் ஹைதருக்கும் மராத்தியருக்கும் எதிரான சண்டையின்போது தேவையான நேரத்தில் ஆங்கிலேயரின் உதவி கிடைக்காததால் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பினார்.
56188.விவசாயிகளின் கோரிக்கை செவிசாய்க்கப்படாமல் போனபோது அவர்கள் எந்தெந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்?
விவசாயிகள் உள்ளூர் கச்சேரி (வருவாய் வசூலிக்கும் அலுவலகம்)களைத் தாக்கினார்கள்.
தானியச் சேகரிப்புக்கிடங்குகளைக் கொள்ளையடித்தார்கள்.
வரியைச் செலுத்த மறுத்தார்கள்.
மேற்கண்ட அனைத்தும்
Explanation:

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காணும்படி விவசாயிகள் தொடக்கத்தில் கம்பெனி அரசாங்கத்துக்குப் புகார் அனுப்பினார்கள். ஆனால் அவர்களின் கோரிக்கை செவிசாய்க்கப்படாமல் போனபோது, அவர்கள் அணி திரண்டு, நேரடி நடவடிக்கையில் இறங்கினர். விவசாயிகள் உள்ளூர் கச்சேரி (வருவாய் வசூலிக்கும் அலுவலகம்)களைத் தாக்கினார்கள்; தானியச் சேகரிப்புக்கிடங்குகளைக் கொள்ளையடித்தார்கள்; வரியைச் செலுத்த மறுத்தார்கள்.
56189.1840களிலும் 1850களிலும் செயல்பட்ட விவசாயிகள் இயக்கம் என்னவாக வெளிப்பட்டது?
முண்டா கிளர்ச்சி
கோல் கிளர்ச்சி
சந்தால் கிளர்ச்சி
மலபார் கிளர்ச்சி
Explanation:

1840களிலும் 1850களிலும் செயல்பட்ட விவசாயிகள் இயக்கம் மலபார் கிளர்ச்சியாக வெளிப்பட்டது. இப்பகுதியில் குடியேறி, மலபார் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட அரபு வணிகர்களின் சந்ததியினர் (மாப்பிள்ளைகள்) ஆவர்.
56190.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. அரபு வணிகர்களின் சந்ததியினர் (அ) மாப்பிள்ளைமார்கள் படிப்படியாக விவசாயத்தைச் சார்ந்தவர்களாகி, நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்வோராகவும் மாறினர்.
ii. 1792இல் ஆங்கிலேயர் மலபாரைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தபோது, அவர்கள் நில உடைமை விவகாரங்களைச் சீரமைக்க முடிவெடுத்தார்கள்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

அரபு வணிகர்களின் சந்ததியினர் (அ) மாப்பிள்ளைமார்கள் படிப்படியாக விவசாயத்தைச் சார்ந்தவர்களாகி, நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்வோராகவும் நிலமற்ற உழைப்பாளர்களாகவும் சில்லறை வணிகர்களாகவும் மீனவர்களாகவும் மாறினர். 1792இல் ஆங்கிலேயர் மலபாரைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தபோது, அவர்கள் நில உடைமை விவகாரங்களைச் சீரமைக்க முடிவெடுத்தார்கள்.
56191.நில உடைமை விவகாரங்கள் சீரமைப்பு தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. நிலத்துக்கான தனிநபர் உரிமையாளர் முறையை உருவாக்குவது அவர்கள் கொண்டுவந்த மாற்றமாகும்.
ii. ஆங்கிலேயர் கொண்டுவந்த புதிய முறை ஜன்மிகளை நிலத்தின் முழு உரிமையாளர்களாக்கி, குத்தகை விவசாயிகளை வெளியேற்றும் அதிகாரத்தையும் கொடுத்தது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

நிலத்துக்கான தனிநபர் உரிமையாளர் முறையை உருவாக்குவது அவர்கள் கொண்டுவந்த மாற்றமாகும். மை பெற்றவர்), கனம்தார் (கனம் என்ற உரிமை பெற்றவர்), விவசாயி ஆகியோர் சரிசமமாகப் பகிர்வதற்கு வாய்ப்பளித்தது. ஆங்கிலேயர் கொண்டுவந்த புதிய முறை ஜன்மிகளை நிலத்தின் முழு உரிமையாளர்களாக்கி, குத்தகை விவசாயிகளை வெளியேற்றும் அதிகாரத்தையும் கொடுத்தது. இந்த நடைமுறை அதற்கு முன்பு இல்லாததாகும்.
56192.விவசாயிகளை வறுமையின் உச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளியது எது/எவை?
மிகையாக மதிப்பிடுதல்
சட்டத்துக்குப் புறம்பான வரிகளைச் சுமத்துவது
நீதிமன்றமும் காவல்துறையும் நில உரிமையாளருக்கு மட்டுமே ஆதரவாக நடந்துகொள்வது
மேற்கண்ட அனைத்தும்
Explanation:

புதிய நிலவுடைமை முறை விவசாயிகளை மிகவும் பாதித்தது. இவற்றுடன், மிகையாக மதிப்பிடுதல், சட்டத்துக்குப் புறம்பான வரிகளைச் சுமத்துவது, நீதிமன்றமும் காவல்துறையும் நில உரிமையாளருக்கு மட்டுமே ஆதரவாக நடந்துகொள்வது ஆகியவை விவசாயிகளை வறுமையின் உச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளியது. தாங்க ள் நசுக்கப்படுவதை ச் சகித்துக்கொள்ள முடியாத விவசாயிகள் எதிர்வினை புரிந்த நிகழ்வுகள் மலபாரில் பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுதும் நடந்தன.
56193.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 1849 ஆகஸ்ட் மாதத்தில் மஞ்சேரியிலும், 1851 ஆகஸ்ட் மாதத்தில் குளத்தூரிலும் 1852 ஜனவரி மாதத்தில் மட்டனூரிலும் நிகழ்ந்த கிளர்ச்சிகள் மிகவும் தீவிரமானவையாகும்.
ii. அமைதியை ஏற்படுத்த ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் பத்து வருடம் நீடித்தது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

அவற்றில் 1849 ஆகஸ்ட் மாதத்தில் மஞ்சேரியிலும், 1851 ஆகஸ்ட் மாதத்தில் குளத்தூரிலும் (இந்த இரு இடங்களும் தெற்கு மலபாரில் உள்ளவை) 1852 ஜனவரி மாதத்தில் வடக்கில் உள்ள மட்டனூரிலும் நிகழ்ந்த கிளர்ச்சிகள் மிகவும் தீவிரமானவையாகும். ஆங்கிலேய ஆயுதப்படைகள் கிளர்ச்சியை அடக்க அனுப்பப்பட்டன. இங்கெல்லாம் அமைதியை ஏற்படுத்த ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் இருபது ஆண்டுகளுக்கு மேல் நீடித்தன.
56194.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. மாப்பிள்ளைகள் 1870இல் மீண்டும் எழுச்சி பெற்றனர்.
ii. 1857க்கு முந்தைய இந்தியாவில் நடைபெற்றவற்றில் சில கிளர்ச்சிகள் பழங்குடியினரால் நடத்தப்பட்டன.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

ஆனால் மாப்பிள்ளைகள் 1870இல் மீண்டும் எழுச்சி பெற்றனர். மீண்டும் கிளர்ச்சிகள் நடந்தன. 1857க்கு முந்தைய இந்தியாவில் நடைபெற்றவற்றில் சில கிளர்ச்சிகள் பழங்குடியினரால் நடத்தப்பட்டன. உள்ளூர் வளங்கள் மீதான அவர்களின் தன்னாட்சியும் கட்டுப்பாடும் ஆங்கிலேய ஆட்சியாலும் பழங்குடி அல்லாதவரின் வருகையாலும் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும். இப்பழங்குடிகள் இந்தியாவின் பெரும்பகுதிக்குப் பரவி, 19ஆம் நூற்றாண்டில் நூற்றுக்கணக்கான தீவிர மோதல்களையும் கிளர்ச்சிகளையும் ஏற்படுத்தினார்கள்.
56195.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. சோன்பூர், தமர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள் திக்காடர்களுக்கு (வரி வசூலிப்போர்) எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர்.
ii. வெளியாருடைய சொத்துகளைத் தாக்குவதை இவர்களின் கிளர்ச்சி உள்ளடக்கியிருந்தது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

சோன்பூர், தமர் ஆகிய பகுதிகளில் வசித்த கோல்கள் திக்காடர்களுக்கு (வரி வசூலிப்போர்) எதிரான கிளர்ச்சியை நடத்துவதற்கு முதல் முயற்சியை எடுத்தனர். வெளியாருடைய சொத்துகளைத் தாக்குவதை இவர்களின் கிளர்ச்சி உள்ளடக்கியிருந்தது. கோல்கள் உயிர்ச்சேதம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
56196.நான்காம் மைசூர் போரின்போது ஸ்ரீரங்கப்பட்டணத்தினை கைப்பற்றியவர்?
கர்னல் பெய்லி
கர்னல் ஃபுல்லர்ட்டன்
கர்னல் ப்ரெய்த்வெயிட்
ஜெனரல் டேவிட் பெய்ர்டு
Explanation:

ஜெனரல் டேவிட் பெய்ர்டு ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது திடீர் தாக்குதல் தொடுத்துக் கைப்பற்றினார். அமைதி உடன்படிக்கைக்கான திப்புவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. இறுதி மோதலில் காயமுற்ற திப்பு ஓர் ஐரோப்பியப் படைவீரனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
56197.கோல் கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்?
புத்த பகத்
பகத்கான்
பிர்சா
பிந்த்ராய் மன்கி
Explanation:

கிளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்த பிந்த்ராய் மன்கி 1832 மார்ச் 19ஆம் நாள் சரணடைந்ததும், கோல்களின் போராட்டம் ஒரு துயரமான முடிவுக்கு வந்தது.
56198.சந்தால் கிளர்ச்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
1831-33
1855-56
1831-33
1853-57
Explanation:

சந்தால் கிளர்ச்சி (1855-56): பழங்குடிகளான சந்தால்கள் வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு காட்டுப்பகுதிகளில் அங்கங்கே பரவியிருந்தபடி வாழ்ந்தார்கள். மஞ்சி என்றும் அவர்கள் அறியப்பட்டார்கள்.
56199.சந்தால்கள் எந்த குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதியைத் திருத்தி அதை சந்தால்களின் நிலம் என்று அழைத்தார்கள்?
ராஜ்மகல் குன்று
பார மஹால் குன்று
தேவகிரி குன்று
மகேந்திர கிரி
Explanation:

தங்களின் தாய்மண்ணிலிருந்து துரத்தப்பட்ட சந்தால்கள் ராஜ்மகல் குன்றுகளைச் சுற்றியுள்ள பகுதியைத் திருத்தி, அதை டாமின்–இ-கோ (சந்தால்களின் நிலம்) என்று அழைத்தார்கள்.
56200.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
சந்தால்கள் உள்ளூர் காவல்துறையினராலும் அப்பகுதிகளில் தொடர்வண்டிப்பாதை அமைப்பதில் ஈடுபட்ட ஐரோப்பிய அதிகாரிகளாலும் அடக்குமுறைக்குள்ளானார்கள்.
பழங்குடி நிலங்கள் சந்தால் அல்லாத ஜமீன்தார்களுக்கும் வட்டிக்கடைக்காரர்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

பழங்குடி நிலங்கள் சந்தால் அல்லாத ஜமீன்தார்களுக்கும் வட்டிக்கடைக்காரர்களுக்கும் குத்தகைக்கு விடப்பட்டதால், சந்தால்கள் படிப்படியாகக் கையறுநிலையில் வாழ வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார்கள். இத்துடன், உள்ளூர் காவல்துறையினராலும் அப்பகுதிகளில் தொடர்வண்டிப்பாதை அமைப்பதில் ஈடுபட்ட ஐரோப்பிய அதிகாரிகளாலும் அடக்குமுறைக்குள்ளானார்கள். டிக்குகளின் (வெளியிலிருந்து வந்தோர்) இத்தகைய ஊடுருவல் சந்தால் சமூகத்தை நிலை தடுமாறச் செய்தது. இது அவர்கள் இழந்த பகுதியை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வைத்தது.
56201.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 1855 ஜூலையில் சந்தால்கள் ஜமீன்தார்களுக்கும் அரசாங்கத்துக்கும் விடுத்த இறுதி எச்சரிக்கையை செவி மடுத்தனர்.
ii. சந்தால்களின் கிளர்ச்சி தம்மை ஒடுக்குபவர்களான ஜமீன்தார்கள், வட்டிக்கடைக்கரார்கள், அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரின் புனிதமற்ற கூட்டுக்கு எதிரானது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

1855 ஜூலையில் சந்தால்கள் ஜமீன்தார்களுக்கும் அரசாங்கத்துக்கும் விடுத்த இறுதி எச்சரிக்கை செவிமடுக்காமல் போனவுடன், ஆயிரக்கணக்கிலான சந்தால்கள் வில்லும் அம்பும் ஏந்திக்கொண்டு வெளிப்படையான கிளர்ச்சியைத் துவக்கினார்கள். தமது கிளர்ச்சி தம்மை ஒடுக்குபவர்களான ஜமீன்தார்கள், வட்டிக்கடைக்கரார்கள், அரசாங்கம் ஆகிய மூன்று தரப்பினரின் புனிதமற்ற கூட்டுக்கு எதிரானது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
56202.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
1770இல் மைசூர் அரசர் நஞ்சராஜா நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார்
இந்த நிகழ்வுக்குப் பிறகு உடையார் வம்ச அரசர்கள் பெயரளவிலான ஆட்சியாளர்களாக ஆயினர்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

1770இல் மைசூர் அரசர் நஞ்சராஜா நஞ்சூட்டிக் கொல்லப்பட்டார். அதில் ஹைதருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் கிளம்பியது. இந்த நிகழ்வுக்குப் பிறகு உடையார் வம்ச அரசர்கள் பெயரளவிலான ஆட்சியாளர்களாக ஆயினர். ஹைதரே உண்மையான அரச அதிகாரத்துக்கு உரியவர் ஆனார்.
56203.அதிகாரத்துக்கு உரிமைகோரும் அடையாளத்துக்கான ஆடை எந்த நிறத்தால் ஆனது?
நீலம்
சிவப்பு
பச்சை
கருப்பு
Explanation:

மகேஷ்பூர் போரில் மஞ்சிகளில் பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற உடையை அணிந்திருந்தார்கள். பின்னாட்களில் இது அதிகாரத்துக்கு உரிமைகோரும் அடையாளத்துக்கான ஆடை ஆனது. கிளர்ச்சியின் முதல் வாரத்தில் பத்து பேர் அடங்கிய ஒரு குழு மோங்கபர்ரா என்னும் கிராமத்தைத் தாக்கித் தீக்கிரையாக்கியது. கிளர்ச்சியாளர்களில் பெண்களும் இருந்தார்கள்.
56204.தொடக்கத்தில் சந்தால்களின் தலைவராக இருந்தவர்?
சித்தோ
கானு
புத்த பகத்
பிர்சா
Explanation:

தொடக்கத்தில் சித்தோ சந்தால்களின் தலைவராக இருந்தார். அவர் கைது செய்யப்பட்ட பின்னர் கானு கிளர்ச்சியை நடத்தினார். கிளர்ச்சியின் பிற்பகுதியில் விவசாயிகளும் சேர்ந்துகொண்டார்கள்.
56205.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. ஆயிரக்கணக்கான விவசாயிகள் சார்லஸ் மசேக் அவுரித் தொழிற்சாலையைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள்.
ii. இராணுவம் குவிக்கப்பட்டு, சந்தால் கிராமங்கள் பழிக்குப் பழியாக ஒன்றன் பின் ஒன்றாகத் தீக்கிரையாக்கப்பட்டன.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

ஆயிரக்கணக்கான விவசாயிகள் சார்லஸ் மசேக் அவுரித் தொழிற்சாலையைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள். இதன் விளைவாக, கிளர்ச்சியை ஒடுக்க ஆங்கிலேயர் தரப்பிலிருந்து மிருகத்தனமான நடவடிக்கைகள் தொடங்கின. இராணுவம் குவிக்கப்பட்டு, சந்தால் கிராமங்கள் பழிக்குப் பழியாக ஒன்றன் பின் ஒன்றாகத் தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கணக்கீட்டின்படி, கிளர்ச்சி இறுதியாக ஒடுக்கப்படும் முன்பு, 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரையான கிளர்ச்சியாளர்களில் 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டார்கள் எனத் தெரிகிறது.
56206.முண்டாக்களின் கிளர்ச்சி எந்த காலகட்டத்தில் நடைபெற்றது?
1899-1900
1897-1898
1899-1905
1891-1900
Explanation:

பிர்சா முண்டா வழிநடத்திய முண்டாக்களின் கிளர்ச்சி (உல்குலன்) 1899-1900 காலகட்டத்தில் நடைபெற்றது. முண்டாக்கள் பீகார் பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பழங்குடிகள் ஆவர். ஆங்கிலேயரின் ஆட்சியில் அவர்களின் பொதுநில உரிமை முறை அழிக்கப்பட்டது.
56207.ஆங்கிலேயரை விரட்டிவிட்டு முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனிதத்தூதர் என தன்னை அழைத்துக்கொண்டவர்?
சித்தோ
கானு
பிர்சா
புத்தக பகத்
Explanation:

முண்டாக்களுக்குச் சொந்தமான நிலங்களை ஜாகீர்தார்களும் திக்காடர்களும் (பெரும் விவசாயி) வட்டிக்கடைக்காரர்களும் பறித்துக்கொண்டனர். பிர்சா முண்டா குத்தகைக்குப் பயிரிடும் விவசாயிகளின் குடும்பத்தில் 1874இல் பிறந்தார். ஆங்கிலேயரை விரட்டிவிட்டு, முண்டாக்களின் ஆட்சியை நிறுவ வந்த புனிதத்தூதர் என அவர் தன்னை அழைத்துக்கொண்டார்.
56208.முண்டா இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என வலியுறுத்தியவர்?
சித்தோ
கானு
பிர்சா முண்டா
புத்தக பகத்
Explanation:

பழங்குடிகளின் நிலங்களைப் பழங்குடி அல்லாதோர் ஆக்கிரமிப்பதை இவரது தலமையில் முண்டாக்கள் எதிர்த்தார்கள். முண்டா இனத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வாடகை செலுத்த வேண்டாம் என பிர்சா முண்டா வலியுறுத்தினார்.
56209.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. சித்தோ சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார்.
ii. சாயில் ரகப் என்னுமிடத்தில் முண்டா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள்
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

பிர்சா முண்டா சோட்டா நாக்பூர் பகுதியில் கிளர்ச்சியைத் துவக்கினார். சாயில் ரகப் என்னுமிடத்தில் முண்டா சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டார்கள். சாயில் ரகப் படுகொலை பிர்சா ஆதரவாளர்களைத் தடுத்து நிறுத்தவில்லை.
56210.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன், அவரைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசளிப்பதாகவும் அறிவித்தார்கள்.
ii. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1905ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாளில் தியாகி ஆனார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

ஆங்கிலேய அதிகாரிகள் பிர்சாவைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்ததுடன், அவரைப் பிடித்துத் தருபவர்களுக்குப் பரிசளிப்பதாகவும் அறிவித்தார்கள். இத்தனைக்குப் பிறகும் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்வதைக் காண முடிகிறது. ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட பிர்சா 1900ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் நாளில் தியாகி ஆனார். அவருடைய பெயர் தொடர்ந்து அப்பகுதியின் மலைவாழ் மக்களை ஈர்ப்பதாக உள்ளது.
56211.வேலூர் புரட்சி தொடர்பான பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. கில்லஸ்பி தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்ததால், பீரங்கிகள் தங்கள் பாதுகாப்புக்கு வந்துசேரும்வரை காத்திருக்க முடிவு செய்தார்.
ii. ஆற்காட்டிலிருந்து பின்தொடர்ந்து வந்த மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங் தலைமையிலான குதிரைப்படை 10 மணி அளவில் வந்துசேர்ந்தது
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

வேலூர் கோட்டைக்குக் காலை 9 மணிக்கு வந்தடைந்த கில்லஸ்பி தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருந்ததால், பீரங்கிகள் தங்கள் பாதுகாப்புக்கு வந்துசேரும்வரை காத்திருக்க முடிவு செய்தார். விரைவிலேயே ஆற்காட்டிலிருந்து பின்தொடர்ந்து வந்த கென்னடி தலைமையிலான குதிரைப்படை 10 மணி அளவில் வந்துசேர்ந்தது.
56212.1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி ஆங்கில ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்களால் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இராணுவக் கலகம்
இராணுவ வீரர்களின் கோபத்தின் வெளிப்பாடு
a மற்றும் b)
முதல் இந்திய சுதந்திரப்போர்
Explanation:

1857ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சி ஆங்கிலேய, இந்திய வரலாற்று அறிஞர்களிடையே பெரும் விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது. ஆங்கில ஏகாதிபத்திய வரலாற்றாசிரியர்கள் இவ்வெழுச்சியை இராணுவக் கலகம் என்றும் இராணுவ வீரர்களின் கோபத்தின் வெளிப்பாடு என்று கூறி சாதாரணமாகப் புறந்தள்ளுகின்றனர்.
56213.பிரான்சில் இருப்பதைப் போல ஜேக்கோபியர் கழகம் எங்கு தொடங்கப்பட்டது?
ஸ்ரீரங்கப்பபட்டணம்
மைசூர்
திண்டுக்கல்
பாரமகால்
Explanation:

பிரான்சில் இருப்பதைப் போல ஸ்ரீரங்கப்பட்டணத்திலும் ஜேக்கோபியர் கழகம் தொடங்கப்பட்டது. இது பிரெஞ்சுப்புரட்சியின்போது நிறுவப்பட்டு, பின்னர் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த புரட்சிகர அமைப்பாகும். மைசூர் சுல்தானுக்கும் பிரெஞ்சு அரசுக்குமான நல்லுறவைத் தெரிவிக்கும் விதத்தில் பிரெஞ்சு குடியரசின் கொடி ஏற்றப்பட்டது.
56214.“ஒரு இராணுவ வீரர்களின் கலகம் . . . விரைவாக தனது குணாதியத்தை மாற்றிக் கொண்டு தேசீய எழுச்சியாக மாறியது” என்று 1857 பெருங்கிளர்ச்சி குறித்து குறிப்பிடுபவர்?
எட்வர்டு ஜான் தாம்சன்
வில்லியம் பெண்டிங்க்
கர்னல் கீன்
கர்னல் மல்லீசன்
Explanation:

வங்காளப் படையின் ஆங்கிலத் தளபதியான கர்னல் மல்லீசன் “The Making of the Bengal Army” வங்காளப்படையின் உருவாக்கம் எனும் சிறு ஏட்டில் “ஒரு இராணுவ வீரர்களின் கலகம் . . . விரைவாக தனது குணாதியத்தை மாற்றிக் கொண்டு தேசீய எழுச்சியாக மாறியது” என்று குறிப்பிடுகிறார்.
56215.“பெருமளவில் உண்மையான விடுதலைப் போராட்டம்” என பெருங்கிளர்ச்சி குறித்து கூறியவர்?
எட்வர்டு ஜான் தாம்சன்
வில்லியம் பெண்டிங்க்
கர்னல் கீன்
கர்னல் மல்லீசன்
Explanation:

எட்வர்டு ஜான் தாம்சன் இந்நிகழ்வை “பெருமளவில் உண்மையான விடுதலைப் போராட்டம்” என விளக்கியுள்ளார்.
56216.1909இல் வெளியான சாவர்கரின் புத்தகம் எது?
சிப்பாய்க்கலகம்
இராணுவப்புரட்சி
முதல் இந்திய சுதந்திரப்போர்
பெருங்கிளர்ச்சி
Explanation:

ஆங்கிலம் படித்த மத்தியதர மக்கள் இவ்வெழுச்சியில் எந்த ஒரு பங்கையும் வகிக்காவிட்டாலும் தேசிய வரலாற்றிஞர்கள் இவ்வெழுச்சியை இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்றே கூறுகின்றனர்.1909இல் வெளியான சாவர்கரின் The War of IndianIndependence (இந்திய விடுதலைப் போர்) எனும் தனது நூலில் ஆங்கிலேயரால் இதுவரை வெறும் இராணுவப் புரட்சியே என்று வர்ணிக்கப்பட்ட இந்நிகழ்வு உண்மையில் அமெரிக்க சுதந்திரப் போரைப் போன்ற ஒரு விடுதலைப் போரே என வாதிடுகின்றனர்.
56217.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. நீதிமன்றங்களில் பொதுப்பணித் தேர்வுகளில் பாரசீக மொழியின் பயன்பாடு ஒழிக்கப்பட்டது.
ii. அரசுப் பணியில் முஸ்லீம்கள் சேர்வதற்கான வாய்ப்புகளைக் குறைத்தது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

ஆங்கில மொழியும் மேலைக்கல்வியும் முஸ்லீம் அறிவுஜீவிகளை முக்கியமற்றவர்களாக ஆக்கியது. நீதிமன்றங்களில் பொதுப்பணித் தேர்வுகளில் பாரசீக மொழியின் பயன்பாடு ஒழிக்கப்பட்டது அரசுப் பணியில் முஸ்லீம்கள் சேர்வதற்கான வாய்ப்புகளைக் குறைத்தது.
56218.மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் நவாபின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர்?
யாகூப் கான்
கான்சாகிப்
நானா சாகிப்
மாபூஸ்கான்
Explanation:

மாபுஸ்கான் (ஆற்காடு நவாபின் மூத்த அண்ணன்) இந்தப் பகுதிகளில் நவாபின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். மாபுஸ்கான் கர்னல் ஹெரானுடன் திருநெல்வேலிக்கு படையெடுத்துச் சென்றார். அவர்கள் மதுரையை எளிதாகக் கைப்பற்றினர். பாஞ்சாலக்குறிச்சி பாளையத்தை ஆட்சி செய்த கட்டபொம்மனின் அதிகாரத்தைக் குறைப்பதற்காகச் சிறப்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டு, பிறகு அது திரும்ப வரவழைக்கப்பட்டது.
56219.எந்த ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் வங்காளப் படையில் உயர் ஜாதியினரும் சேர்ந்துகொள்ள வழிவகை செய்தது?
1856
1843
1857
1858
Explanation:

மத உணர்வுகள்: 1856ஆம் ஆண்டு சட்டமானது வங்காளப் படையில் உயர் ஜாதியினரும் சேர்ந்துகொள்ள வழிவகை செய்தது. சாதிப்பற்றை, கைவிட்டு அவர்கள் படைகளில் சேரவேண்டும் அல்லது இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி முன்னேறும் வாய்ப்பைக் கைவிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
56220.லெக்ஸ் லோசி (Lex Loci Act) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1856
1850
1855
1858
Explanation:

மேலும் சதிஒழிப்புச் சட்டம், விதவை மறுமணத்தை சட்டபூர்வமாக்கியது, பெண் குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிரான சட்டம் ஆகியவை சமய நம்பிக்கைகளில் ஆங்கில அரசு தலையிடுவதாகக் கருதப்பட்டது. 1850இல்இயற்றப்பட்ட லெக்ஸ் லோசி (Lex Loci Act) சட்டம் கிறித்தவர்களாக மதம் மாறியவர்களுக்கும் மூதாதையரின் சொத்துக்களில் உரிய பங்கினைப் பெறும் உரிமையை அளித்தது. இது வைதீக இந்துக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது.
56221.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. துப்பாக்கித் தோட்டாக்களில் பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டுள்ளது என்ற செய்தி பரவியபோது இந்து முஸ்லீம் படைவீரர்களின் மத உணர்வுகள் புண்பட்டன.
ii. இத்தோட்டாக்களை புதிதாக அறிமுகமான என்பீல்டு துப்பாக்கிகளுக்குள் செலுத்துவதற்கு முன்பாக அதைப் படை வீரர்கள் கடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

துப்பாக்கித் தோட்டாக்களில் பசுவின் கொழுப்பும் பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டுள்ளது என்ற செய்தி பரவியபோது இந்து முஸ்லீம் படைவீரர்களின் மத உணர்வுகள் புண்பட்டன. இத்தோட்டாக்களை புதிதாக அறிமுகமான என்பீல்டு துப்பாக்கிகளுக்குள் செலுத்துவதற்கு முன்பாக அதைப் படை வீரர்கள் கடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. இது கிறித்தவ மதத்திற்கு மாற்றம் செய்யும் முயற்சியாக கருதப்பட்டது.
56222.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. கொழுப்பு தடவிய தோட்டா பிரச்சனை கிளர்ச்சி எனும் வெடிமருந்தில் வைக்கப்பட்ட தீப்பொறியாகும்.
ii. பதவி பறிக்கப்பட்ட அனைவரும் இவ்வெழுச்சியைத் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பாகக் கருதினர்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

அனைத்து விதத்திலும் 1857 ஆம் ஆண்டு, பெருங்கிளர்ச்சி கனிந்த ஆண்டாகும். கொழுப்பு தடவிய தோட்டா பிரச்சனை கிளர்ச்சி எனும் வெடிமருந்தில் வைக்கப்பட்ட தீப்பொறியாகும். பதவி பறிக்கப்பட்ட அதிருப்தி கொண்ட ராஜாக்கள், ராணிகள், ஜமீன்தார்கள், குத்தகைதாரர்கள் கைவினைஞர்கள், தொழிலாளர்கள், முஸ்லீம் அறிவு ஜீவிகள், இந்து பண்டிதர்கள், குருமார்கள் ஆகிய அனைவரும் இவ்வெழுச்சியைத் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பாகக் கருதினர்.
56223.கிளர்ச்சியாளர்கள் யாரை பேரரசராகப் பிரகடனம் செய்தனர்?
முதலாம் பகதூர்ஷா
இரண்டாம் அக்பர்
இரண்டாம் பகதூர்ஷா
இரண்டாம் ஆலம்கீர்
Explanation:

மே மாதம் 10 ஆம் நாளில் மூன்று ரெஜிமெண்டுகளைச் சேர்ந்த சிப்பாய்கள் கிளர்ச்சியில் இறங்கி தங்கள் உயர் அதிகாரிகளைக் கொன்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரர்களை விடுதலை செய்தனர். மறுநாள் தில்லியை அடைந்த அவர்கள் ஐரோப்பியர் பலரைக் கொன்று நகரைக் கைப்பற்றினர் கிளர்ச்சியாளர்கள் இரண்டாம் பகதூர்ஷாவை பேரரசராகப் பிரகடனம் செய்தனர்.
56224.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. ஹக் ரோஸ் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஜான்சியை முற்றுகையிட்டு தாந்தியா தோபேயைத் தோற்கடித்தார்.
ii. லட்சுமிபாய் துணிச்சலுடன் போரிட்டு குவாலியரைக் கைப்பற்றினார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

ஹக் ரோஸ் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஜான்சியை முற்றுகையிட்டு தாந்தியா தோபேயைத் தோற்கடித்தார். இருந்தபோதிலும் லட்சுமிபாய் துணிச்சலுடன் போரிட்டு குவாலியரைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருக்கு ஆதரவான குவாலியர் அரசர் சிந்தியா தப்பியோடினார். ரோஸ் தன்னுடைய படைகளோடு லட்சுமிபாயுடன் நேரடியாக மோதினார். வியப்பூட்டும் வகையில் லட்சுமிபாய் போரில் பங்கேற்று வீரமரணமடைந்தார்.
56225.தன்னைப் பேரரசருடைய வைஸ்ராயாக அறிவித்துக் கொண்டவர்?
குன்வர் சிங்
கான் இ கான்
கான் பகதூர் கான்
தாந்தியா தோப்
Explanation:

ஜுன் மாதத்தில் கிளர்ச்சி ரோகில்கண்ட் பகுதிக்குப் பரவியது. ஒட்டுமொத்த கிராமப்புறமும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. கான் பகதூர் கான் தன்னைப் பேரரசருடைய வைஸ்ராயாக அறிவித்துக் கொண்டார். புந்தேல்கண்ட் பகுதியும் ஆற்றிடைப்பகுதி முழுவதும் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தியது. ஜான்சியில் ஐரோப்பியர் கொல்லப்பட்டு 22 வயதான லட்சுமிபாய் அரியணை ஏற்றப்பட்டார்.
56226.கான்பூரில் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் யார்?
குன்வர் சிங்
நானா சாகிப்
ஹஸ்ரத் பேகம்
தாந்தியா தோப்
Explanation:

கான்பூரில் நானா சாகிப் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். பெண்களும் குழந்தைகளும் உட்பட சுமார் 125 ஆங்கிலேயர்களும் ஆங்கில அதிகாரிகளும் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் ஒரு கிணற்றுக்குள் வீசப்பட்டன. கான்பூர் படுகொலை என்றறியப்பட்ட இந்நிகழ்வு ஆங்கிலேயரைக் கோபம் கொள்ளச் செய்தது.
56227.கான்பூர் படுகொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கொடூரமான முறையில் பழி தீர்த்தவர்?
நீல்
ஹூக் ரோஸ்
ஹேவ்லக்
ஹென்றி லாரன்ஸ்
Explanation:

நிலைமைகளை எதிர்கொள்ள அனுப்பப்பட்ட தளபதி ஹென்றி ஹேவ்லக் படுகொலைக்கு மறுநாளே நானா சாகிப்பைத் தோற்கடித்தார். ஆங்கில இராணுவ அதிகாரி நீல் கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். படுகொலைக்குக் காரணமானவர்கள் எனக் கருதப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
56228.தாந்தியா தோபே கான்பூரைக் கைப்பற்றிய பின் அது விரைவில் யாரால் மீட்கப்பட்டது?
கார்ப்பரல் பியர்சி
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
ஹேவ்லக்
காம்ப்பெல்
Explanation:

நவம்பர் மாத இறுதியில் தாந்தியா தோபே கான்பூரைக் கைப்பற்றினார். ஆனால் அது விரைவில் காம்ப்பெல் என்பவரால் மீட்கப்பட்டது.
56229.லக்னோ ஆளுநர் மாளிகை யாரால் பாதுகாக்கப்பட்டது?
ஹேவ்லக்
மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
ஹென்றி லாரன்ஸ்
காம்ப்பெல்
Explanation:

ஹென்றி லாரன்சால் பாதுகாக்கப்பட்ட லக்னோ ஆளுநர் மாளிகை கிளர்ச்சியாளர்களின் வசமானது. நானா சாகிப்பை ஹேவ்லக் தோற்கடித்த பின்னர் லக்னோவைக் கைப்பற்ற விரைந்தார். ஆனால் அவர் திரும்ப நேர்ந்தது.
56230.புரட்சியாளர்களிடமிருந்து டெல்லியை கைப்பற்றிய ஆங்கிலத்தளபதி?
ஜான் நிக்கல்சன்
ஜான் லாரன்ஸ்
ஹென்றி லாரன்ஸ்
காம்ப்பெல்
Explanation:

ஜுலை மாத இறுதியில் ஜான் லாரன்ஸால் தில்லிக்கு அனுப்பப்பட்ட ஜான் நிக்கல்சன் அதைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார்.
56231.பின்வருவனவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
அவத்தில் மட்டும் தாலுக்தார்களும் விவசாயிளுடன் பங்கு கொண்டதால் கிளர்ச்சி நீடித்தது.
தாலுக்தார்களில் பலர் அவத் நவாபின் விசுவாசிகளாவர்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

அவத்தில் மட்டும் தாலுக்தார்களும் விவசாயிளுடன் பங்கு கொண்டதால் கிளர்ச்சி நீடித்தது. தாலுக்தார்களில் பலர் அவத் நவாபின் விசுவாசிகளாவர். ஆகவே அவர்கள் லக்னோவில் பேகம் ஹஸ்ரத் மஹாலோடு (நவாப் வஜித் அலியின் மனைவி) சேர்ந்து ஆங்கிலேயரை எதிர்த்தனர். பெரும்பாலான வீரர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். ஆதலால் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது இவர்களும் பாதிப்புக்குள்ளாயினர்.
Share with Friends