Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் மூவலூர் ராமாமிர்தத்தம்மாள்

மூவலூர் ராமாமிர்தத்தம்மாள்

வாழ்க்கைக்குறிப்பு:

  • 1883-ஆம் ஆண்டு பிறந்தார்.
  • தந்தை பெயர் கிருஷ்ணசாமி - பொருளாதார கடைநிலை காரணமாக குடும்பத்தை விட்டு சென்றுவிட்டார்.
  • வளர்ப்புத் தாய் அறுபது வயது முதியவருக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி செய்தபோது, மணமுடிக்க மறுத்து தனக்கு இசையும், நாட்டியமும் கற்றுத்தந்த சுயம்பு என்பவரை மணந்தார்.
  • 27.06.1962 அன்று தனது எண்பதாம் வயதில் மறைந்தார்.

குறிப்பு:

  • "தமிழகத்தின் அறிஞர் அண்ணா அவர்களால் அன்னிபெசன்ட்” எனப் புகழப்பட்டார்
  • வறுமை காரணமாக தாயால் பத்து ரூபாய்க்கு தேவதாசி ஒருவரிடம் சிறுவயதிலேயே விற்கப்பட்டார்.
  • 1917-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் தேவதாசி முறைக்கு எதிரான தனது முதல் போராட்டத்தை தொடங்கினார்.
  • சுயமரியாதை திருமணங்களை ஆதரித்தார்.
  • பேச்சாளர்கள் பேச ஆங்கிலேயர்கள் தடை விதித்திருந்த போது, தனது கருத்துக்களை கரும்பலகையில் எழுதி மக்கள்முன் வைத்தார்.
  • இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய காந்தியடிகளை ஆங்கிலேயர் கைது செய்ததைக் கண்டித்து மூவர்ணக் கொடியை ஆடையாக அணிந்து கொண்டார். கதராடையை ஊர் ஊராக கொண்டுசென்று விற்றார்.
  • காந்தியத்தை ஏற்போர் குடிசையில் வாழவேண்டும் என்ற காந்தியடிகளின் கட்டளையை ஏற்று தனது ஒட்டு வீட்டை விடுத்து குடில் அமைத்து வாழ்ந்தார். அக்குடிலின் வெளியே "கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும்” எனும் பலகை தொங்கியது.
  • பெரியார், திரு.வி.க, வரதராசலு, தருமாம்பாள், நீலாம்பிகை, மலர்முகத்தம்மையார், தாமரைக்கண்ணியம்மையார் ஆகியோருடன் இணைந்து தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டனர்.
  • 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போர் பேரணியில் திருச்சி உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள், 57 மைல் நடைபயணம் மேற்கொண்டார். வழியில் 87 பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்.


Share with Friends