*பல்வேறு மில்லியன் கணக்கில் அண்டங்களைக் கொண்ட தொகுப்பு பேரண்டம் எனப்படும்.
*இது பரந்து விரிந்து செல்கிறது. இது குறித்த ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
அண்டம் (Galaxy):
*பல கோடிக்கணக்கான வீண்மீன்களின் தொகுதியே அண்டம் எனப்படும்.
*இத்தகைய அண்டங்களில் ஒன்று பால்வெளி அண்டம் - நாம் வாழும் சூரியக் குடும்பம் இருக்கக் கூடிய அண்டமாகும்.
பால்வெளி அண்ட ம் (Milky Way Galaxy) :
*சூரியன் உட்பட, கண்களுக்கு புலப்படும் விண்மீன்கள் எல்லாம் பால் வெளி அண்டத்தைச் சார்ந்தவை.
*சில நாள்களில் தெளிந்த இரவு வானில் வெண்மை நிறத்தில் ஒளிரும் பட்டை போன்ற பகுதி புலப்படும்.
*பால்வெளி அண்டத்தை நமது முன்னோர் பால்வெளி (Milky way ) எனவும் ஆகாய கங்கை எனவும் அழைத்தனர்.
*நமது பால்வெளியும் மிக அடர்த்தியான விண்மீன் தொகுதி தான் .
*இந்த விண்மீன்கள் வெகுதொலைவில் இருப்பதால் புள்ளி போலக் காட்சி தருகின்றன. இதில் ஏறக்குறைய 1011 விண்மீன்கள் உள்ளன.
*இந்த அண்டம் சுருள் வடிவமாகக் காணப்படுகிறது.
Previous Year Questions:
9547.எந்த ராக்கெட் மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்காக INSAT-3DR-யை, கடந்த 8, செப்டம்பர், 2016 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது?
GSLV-F05
PSLV-4
அரியான்
GSLV-3
9984.தொலை நுண்ணுர்வு விண்கலங்களை அது விண்ணில் செலுத்தப்பட்ட வருடத்தைக் கொண்டு கீழிருந்து மேலாக அடுக்குக. I. ஐ.ஆர்.எஸ் II. ஸ்பாட் III. டிரையோஸ் IV. லாண்ட்சாட்
I, II, IV, III
III, IV, II, I
I, II, III, IV
IV, III, I, II
10152.வட ஒளிகள், என்று பரவலாக அழைக்கப்படும் அரோரா போரியோலிஸ் உருவாவதற்கான காரணம்
பூமியினது காந்தப்புலத்தில் பிடிபட்டுள்ள காஸ்மிக் கதிர் துகள் அணுமோதல்களை உருவாக்குகிறது
துருவங்களில், உள்ள ஒரு வகைச் சிறப்பு நின்றொளிர்தல் பொருள் அமைந்திருத்தல்
சூரிய மற்றும் பூமிக்கதிர் வீச்சுகளுக்கிடையேயான குறுக்கீட்டு விளைவு
இவை அனைத்தும்
57152.2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்
விண்வெளியில் புது உலகத்தினை தேடல்
நலமுடைமைக்கான யோகா
உள்ளடங்கிய வளர்ச்சிக்கான நீர் மற்றும் ஆற்றல்
அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமை
57156.பனி பாலம் நடவடிக்கை எந்த அமைப்போடு தொடர்புடையது
ISS
ISRO
NASA
ESA
57314.கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க. கூற்று (A) : பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம். காரணம் (R) : தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.
(A) மட்டும் சரி (R) தவறு
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), (A) உடைய சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), (A) உடைய சரியான விளக்கமல்ல
57541.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( ISRO ) 1968-ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம் அமைந்துள்ள இடம்