புவி மற்றும் அண்டம் - சூரியக் குடும்பம்
கண்டங்கள்:
*
பான்ஜியா ஏழு பெரிய தட்டுக்களாகவும், பல சிறிய தட்டுக்களாகவும் உடை பட்டுள்ளது.
*பசிபிக் தட்டு தான் மிகப்பெரிய தட்டு ஆகும். இது 1/5 பங்கு புவி மேற்பரப்பை உள்ளடக்கக் கூடியதாக உள்ளது.
எழுதட்டுகள்: (பெரியது)
1. யுரேசியா (ஐரோப்பா)
2. அண்டார்டிகா
3. வட அமெரிக்கா
4. தென் அமெரிக்கா
5. பசிபிக்
6. ஆப்பிரிக்கா
7. இந்தோ - ஆஸ்திரேலியா
*தற்போது புதிய கண்டம் ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது "ஜிலாந்தா"
முக்கிய சிறிய தட்டுகள்:
1. கரீபியன் பிலிப்பைன்ஸ்
2. கோகோஸ்
3. நாஸ்கா
*இந்தோ ஆஸ்திரேலியன் தட்டு 67 மில்லி மீட்டர் அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் உயர்கிறது. அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இவை 1500 கி.மீ அளவிற்கு ஆசியாவிற்குள் பயணிக்கக் கூடும் என அறிஞர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
*பூமியானது மிகப் பெரிய கோளம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் விரிந்தும், வட தென் துருவங்களில் குவிந்தும் சற்று தட்டையாகவும் உள்ள ஓர் வடிவம் தான் பூமி. நமது பூமியின் வடிவம் தனித்தன்மை வாய்ந்தது. ஆங்கிலத்தில் அதை சியாட் (Geoid) என்கிறார்கள்.
பூமியைப் பற்றிய சில தகவல்கள்:
*பூமி ஏழு கண்டங்களும், ஐந்து பெருங்கடல்களையும் கொண்டுள்ளது.இதைப்போல் பூமியில் மலைகள் ,பீடபூமிகள், சமவெளிகள் ஆகியவை பூமியின் முக்கிய நில அமைப்புகள் ஆகும்.
*கடல்கள் இன்றி தொடர்ச்சியான அகண்ட நிலப்பரப்புகள் கண்டங்கள் எனப்படுகின்றன.
ஏழு கண்டங்கள்:
பெருங்கடல்கள்:
*பூமியின் மேற்பரப்பில் சுமார் 71 சதவீதம் (மூன்றில் இரண்டு பங்கு) நீர் உள்ளது. பெருந்திரளான நீர்ப்பரப்புத் தொகுதியைப் பெருங்கடல் என்கிறோம்.
*சமவெளியைப் போல் பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள மற்றொரு கூறு கடல் பகுதியாகும்.
*பெருங்கடல்களை வசதிக்காகக் கடல்கள் எனப்பிரித்து வகுத்துக் கொள்கிறோம்.
*பெருங்கடல்களை அவற்றின் பரப்பளவின் அடிப்படையில் எளிதாக நினைவில் வைத்து கொள்ள கீழ்க்கண்டவற்றை உபயோகித்துக் கொள்ளவும்.
*"PAISA"
*P-Pacific (பசிபிக் பெருங்கடல்)
*A-Atlantic (அட்லாண்டிக் பெருங்கடல்)
I*- Indian (இந்தியப் பெருங்கடல்)
*S- South Antarctica (தெற்கு அண்டார்டிக் பெருங்கடல்)
*A- Artic (ஆர்டிக் பெருங்கடல்)
ஐந்து பெருங்கடல்கள்:
*அண்டார்டிக் பெருங்கடல் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக் கங்கோத்ரி,மைத்ரேயி மற்றும் பாரதி எனும் ஆய்வு குடியிருப்புகளை நம் நாடு நிறுவியுள்ளது. ஆண்டு முழுவதும் இந்திய விஞ்ஞானிகள் பலர் இங்கு ஆய்வு செய்து வருகின்றனர்.