வளிமண்டலம்
* சூரியனின் ஒளிக்கதிர்களால் புவி வெப்பமடைவதையும், புவியின் மேற்பரப்பு பெற்ற வெப்பத்தால் வளிமண்டலம் வெப்பமடைவதையும் உணர்கிறோம். பல மில்லியன் ஆண்டுகளாக புவி சூரியனால் வெப்பம் படுத்தப்படுகிறது.
*ஆயினும் புவியின் வெப்பநிலை ஒரே சீராக இருக்கிறது. இதற்குக் காரணம் புவி சூரியனிடமிருந்து பெறும் வெப்ப அளவிற்கு ஏற்ப மீண்டும் அதே அளவு வெப்பத்தை விண்வெளிக்கு திருப்பி அனுப்புகிறது.
*கோடைக்காலத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் செங்குத்தாக இருப்பதால் பகல் நேரம் நீண்டதாக இருப்பதாலும் புவி பெறுகின்ற வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது. எனவே கோடை காலம் அதிக வெப்பமாக உள்ளது.
*குளிர்காலத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் சாய்வாக இருப்பதாலும், பகல் நேரம் குறைவாக இருப்பதாலும், புவி பெறுகின்ற வெப்பத்தின் அளவு குறைவாக உள்ளது. எனவே குளிர்காலத்தில் வெப்பம் குறைவாக உள்ளது.
*ஒரு வருடத்தில் புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட இடம் பெற்ற வெப்பமும், இழந்த வெப்பம் ஏறத்தாழ சமமாக உள்ளது. இதனையே புவியின் வெப்ப சமநிலை என்கிறோம்.
புவியின் வெப்பநிலை மாறுபாடு:
*புவி முழுவதும் சூரியனிடமிருந்து வெப்பத்தைப் பெற்றபோதிலும்,புவி முழுவதிலும் சீரான வெப்பநிலை நிலவுவதில்லை. புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதியின் வெப்பநிலை அதிகமாகவும், துருவப் பகுதியை நோக்கிச் செல்லும் போது உறைநிலைக்குக் குறைவாகவும். குறைந்து காணப்படுகிறது.
*இதற்கு இரண்டு மிக முக்கியக் காரணங்கள் உள்ளன.
அவை,
1. சூரியக் கதிர்கள் புவி மேற்பரப்பின் மீது விழும் கோணம்,
2. சூரியக் கதிர்கள் புவி மேற்பரப்பின் மீது விழும் கால அளவு
1.சூரியக் கதிர்கள் புவி மேற்பரப்பின் மீது விழும் கோணம்:
*புவி கோள வடிவில் இருப்பதால், சூரியக் கதிர்கள் புவியின் எல்லாப் பகுதிகளிலும், ஒரே கோணத்தில் விழுவதில்லை.
*சூரிய ஒளிக்கதிர்களின் கோணம் பூமத்திய ரேகைப் பகுதிகளில் செங்குத்தாகவும் துருவப் பகுதியை நோக்கிச் செல்ல செல்ல குறைந்து கொண்டும் செல்கிறது. சூரியனின் செங்குத்துக் கதிர்கள் புலியின் மிகக்குறைந்த பகுதியையே வெப்பப்படுத்துவதால், அப்பகுதி அதிகளவு வெப்பமடைகிறது.
*சூரியனின் சாய்வான கதிர்கள் மிக அதிகமான பகுதியை வெப்பப் படுத்துவதால் அப்பகுதிகள் அதிகளவு வெப்பமடைகின்றன. காரணம் சூரிய ஒளிக்கதிர்கள் சாய்வாக விழுகின்றன.ஆனால் மதிய வேளையில் வெப்பம் அதிகமாக உள்ளது.ஏனெனில் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன.
2. சூரியக்கதிர்கள் புவி மேற்பரப்பின் மீது விழும் கால அளவு:
*புவியின் - மேற்பரப்பில் ஒளிக்கதிர்கள் விழும் நேரத்தை பகல் நேரம் என்கிறோம். பகல் நேரம் அதிகமாக இருக்கும்போது அப்பகுதிக்கு அதிக வெப்பம் கிடைக்கிறது. பகல் நேரம் குறைவாக இருக்கும்பொழுது குறைவான வெப்பமே கிடைக்கிறது.
*பூமத்திய ரேகைப் பகுதியில் ஆண்டு முழுவதும் அதிக வெப்பம் நிலவுகிறது.பூமத்தியரேகைப் இதனால் பகுதிகளில் ஆண்டு சராசரி வெப்பம்,தினசரி வெப்பநிலை வேறுபாடும் குறைவாக இருக்கும்.
*புவி தனது சாய்ந்த அச்சில் சூரியனைச் வலம் வருகிறது. இதனால் புவியில் சூரிய ஒளிக்கதிர்களால் விழும் கோணமும், பகல் நேர அளவும் ஆண்டு முழுவதும் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே புவியின் பருவ காலங்கள் ஏற்படுகின்றன.
*வானிலை மையங்களில் தினசரி வெப்பநிலை பதிவு செய்யப்படும்.
தினசரி வெப்பநிலை மாறுபாடு :
*ஒரு நாளில் குறைந்த வெப்ப அளவு காலை 5 மணிக்கு, அதிக வெப்ப அளவு மதியம் 2 மணிக்கும் பதிவு செய்யப்படுகிறது.இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டினையே தினசரி வெப்பநிலை வேறுபாடு என்கிறோம்.
ஆண்டு வெப்பநிலை வேறுபாடு:
*ஒரு ஆண்டில் ஒரு இடத்தில் காணப்படும் அதிகபட்ச மாத சராசரி வெப்பநிலைக்கும், குறைந்தபட்ச மாத சராசரி வெப்பநிலைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை ஆண்டு வெப்பநிலை வேறுபாடு என்கிறோம்.
புவியின் வெப்ப மண்டலங்கள்:
*சூரிய ஒளிக்கதிர் விழும் கோணம், பகல் மற்றும் இரவு நேர கால அளவுகளைப் பொறுத்தே ஓரிடத்தின் வெப்பநிலை அமைகிறது. இவ்விரு காரணிகளும் பூமத்திய ரேகைப் பகுதியிலிருந்து, துருவப் பகுதியை நோக்கிச் செல்ல செல்ல மாறுபடுவதால், வெப்பநிலையும் மாறுபடுகிறது.
*வெப்ப வேறுபாடுகளின் அடிப்படையில் புவியை நான்கு வெப்ப மண்டலங்களாகப் பிரிக்கலாம். அவை,
1. பூமத்திய ரேகை மண்டலம் (Equator)
2. வெப்ப மண்டலம் (Tropical)
3. மிதவெப்ப மண்டலம் (Sub Tropical)
4. துருவ மண்ட லம் (Polar)
பூமத்திய ரேகை மண்டலம் (Equator)
*இந்த மண்டலம் 5° வட மற்றும் தென் அட்சங்களுக்கிடையில் அமைந்துள்ளது.இப்பகுதியில் சூரிய ஒளிக்கதிர்கள் ஆண்டு முழுவதும் செங்குத்தாக விழுகின்றன. எனவே வெப்பம் இங்கு ஆண்டு முழுவதும் அதிகமாக நிலவுகின்றன.
வெப்ப மண்டலம் (Tropical):
* வெப்ப மண்டலம் வட,தென் அரைக்கோளங்களில் 5° அட்சம் முதல் 30° அட்சம் வரையிலும் பரவியுள்ளது. அழைக்கப்படுகிறது.இப்பகுதியில் கோடைக்காலத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் அதிக வெப்பம் நிலவுகிறது.
*குளிர்காலத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் சாய்வாக விழுவதால் கோடைக்கால வெப்பத்தை விட சற்று குறைந்து காணப்படுகிறது. குளிர் காலத்தில் மித வெப்பம் நிலவுகிறது.
மித வெப்ப மண்டலம் (Sub Tropical):
* மித வெப்ப மண்டலம் வட, தென் அரைக்கோளங்களில் 30° அடசம் முதல் 60° அட்சம் வரையிலும் பரவியுள்ளது.கோடை காலத்தில் மித வெப்பமும், குளிர்காலத்தில் மிகக் குளிர்ச்சியும் இங்கு நிலவுகிறது. ஆண்டு முழுவதும், மித வெப்பம் இங்கு நிலவுவதால் இப்பகுதி மித வெப்ப மண்டலம் என அழைக்கப்படுகின்றது.
துருவ மண்டலம் (Polur):
*துருவ மண்டலம் வட, தென் அரைக்கோளங்களில் 60° அட்சம் முதல் 90° அட்சம் வரையிலும் பரவியுள்ளது.இம்மண்டலம் துருவங்களைச் சுற்றி அமைந்துள்ளதால் துருவ மண்டலம் என அழைக்கப்படுகிறது.
*ஒளிக்கதிர்களிடமிருந்து வரும் வெப்பத்தின் அளவு இப்பகுதியில் மிகக்குறைவாக உள்ளதால், இங்கு ஆண்டு முழுவதும் வெப்பம் உறைபனி நிலைக்கு மேல் 0° உயர்வதில்லை.எனவே இம்மண்டலம் பனிபடர்ந்து காணப்படுகிறது.