உணவியல்
- உணவியல் என்பது உணவின் பயனைக் கற்பிப்பது ஆகும்.
- உணவு என்பது உடலின் தொழில்களைச் சரிவர நடத்துவிக்கும் மூலப்பொருள்களைத் தருவது.
- உணவியல் உணவின் பகுதிகளை ஆராய்ந்து, நோய்க்காலத்தும், நோயில்லாதபோதும் எந்தெந்த உணவுகளை எந்தெந்த முறைகளில் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று காட்டுகிறது.
- நோயுற்றபோது செய்யும் சிகிச்சை முறைகளில் உணவியலும் ஒன்று.
- உணவு வாழ்க்கையில் எந்த நிலையிலும் ஒவ்வொருவருக்கும் தேவையான சக்தியையும் மூலப்பொருள்களையும் தகுந்தபோதிய அளவில் தருவதற்கு அதுசீருணவாக (Balanced diet) அமையவேண்டும்.
- சீருணவு, ஆரோக்கியமான காலத்தில் வாழ்க்கைச் செயல்களுக்கும், நோயுற்றபோது நோய் நீக்கத்திற்கும் இன்றியமையாதது.
- சீருணவின் உபயோகத்தைப் பரவச் செய்யும் பொருட்டு உணவியலானது முயல்கிறது.
- ஊட்டச்சத்து என்பது உயிரிகள் வாழ்வதற்கும் வளர்வதற்கும் உட்கொள்ளும் உணவுக் கூறுகளாகும்.
- வளர்ச்சி, பராமரிப்பு, வேலைகள் மற்றும் செல்கள் அல்லது உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு, தேவையான அளவுள்ள பொருட்களே ஊட்டச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், உயிர்சத்துக்கள் மற்றும் தாதுப்புக்கள் ஆகியவை ஊட்டச்சத்துக்கள் எனப்படுகின்றன.
- நியுட்ரிசன் (Nutrition) என்ற சொல் லத்தீனின் நியுட்ர் (Nutr) என்ற வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது.
- இதன் பொருள் போஷாக்கு அல்லது ஊட்டமளித்தல் என்பதாகும்.
- கருவிலிருந்து இறப்பு வரை உடலானது சுவாசித்தல், செரிமானம், கழிவு நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இயக்கங்களை மேற்கொள்கிறது.
- இத்தகைய பல்வேறு உடலியக்கங்களுக்குத் துணை புரிய உடலுக்கு சக்தி தேவை.
- உணவு என்பது உட்கொண்டு செரிமானித்து, உட்கிரகித்துக் கொள் வது மட்டுமல்லாமல்.
- உடலின் பல்வேறு இயக்கங்களுக்குத் துணை புரிவதாகும்.
- அதனால் தான் உணவும் ஊட்டச்சத்தும் ஆரோக்கியத்தைத் தருவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
- உணவில், பல்வேறு உடலியக்கங்களை நிகழ்த்தும் பொருட்கள் உள்ளதால் அது இன்றியமையாததாகும்.
- உணவிலிருந்து பெறப்படும் அத்தியாவசியப் பொருட்களே ஊட்டச்சத்துக்கள் எனப்படுகிறது.
- நம் உடலியக்கத்தைப் பராமரிக்கவும், வளர்ச்சிக்கும் உறுப்புகளைப் பாதுகாக்கவும் உதவும் உணவிலுள்ள மூலக்கூறுகளே ஊட்டச்சத்துக்கள் என வரையறுக்கப்படுகிறது.
- மனித உடலின் அன்றாட நடவடிக்கைகளுக்கு 19 உயிர்ச்சத்துகளும், 24 தாது உப்புகளும் தேவை.
- ஊட்டச்சத்துகள் பேரூட்டச்சத்துகள் மற்றும் நுண்ணூட்டச்சத்துகள் என இரு வகைப்படும்.
- இவை இரண்டுமே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
- ஏனெனில் நமது உடலுக்கு ஒவ்வொரு ஊட்டச்சத்தும் முக்கியமாகத் தேவைப்படுகிறது.
- மாவுச்சத்து, புரதம், கொழுப்பு உள்ளிட்ட பேரூட்டச்சத்துகள் உடலுக்குப் பெருமளவில் சக்தி அளித்து திசுக்களை உருவாக்குகிறது.
- உயிர்ச்சத்துகள், தாது உப்புகள் போன்ற நுண்ணூட்டச்சத்துகள் உடலுக்குச் சிறியளவில் தேவைப்பட்டாலும் அவை உடலியக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
உணவுப் பொருள்களின் வகைகள்
- மாவுப்பொருள்கள் (கார்போஹைட்ரேட்டுகள்)
- கொழுப்பு
- புரதங்கள்
- வைட்டமின்கள்
- தாது உப்புகள்
- நீர்
- நீர் மற்றும் நார்ச்சத்துகள், நம் வாழ்வின் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக விளங்கும் முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.
- ஊட்டச்சத்துக்கள் செரிக்கப்பட்டோ அல்லது செரிக்கப்படாமலோ உட்கிரகிக்கப்பட்டு உடலுக்கு ஊட்டச்சத்தை அளிக்கின்றது.
- இவை அனைத்தும் உடல் வளர்ச்சியில் குறிப்பிட்ட பங்கு வகிப்பதோடு வெவ்வேறு உணவுகளிலிருந்தும் பெறப்படுகிறது.
- சத்துணவியல் என்பது வெவ்வேறு உணவுகளில் பெறப்படும் உணவூட்டங்களின் அளவுகள் மற்றும் உடலியக்கத்தில் அவற்றின் செயல்பாடுகள் குறித்து அளவாகும்.
- உயிரினங்கள் ஊட்டச்சத்தின் ஆக்கப் பொருளாகும். நலமுடன் வாழ 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.
- உடல் உட்கொண்ட உணவுப் பொருட்கள் செரிக்கப்பட்டு, உறிஞ்சப்பட்டு மற்றும் வளர்சிதைமாற்றம் அடைகின்றன.
- இவ்வூட்டச்சத்துக்களைப் பல்வேறு உணவுப் பொருட்களில் தேர்ந்தெடுக்கவேண்டும்.
- மனிதன் தேர்வு செய்யும் உணவுகளின் வகைகள் மற்றும் அளவுகள் அடிப்படையில் அவனது ஆரோக்கியம் அமைகின்றது.
ஊட்டச்சத்தின் வேலைகள் :
- ஊட்டச்சத்தின் இரு முக்கிய வேலைகள்.
- உடலின் அடிப்படை கட்டமைப்பைப் பராமரிக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கும் சீரமைப்புக்கும் தேவைப்படுபவற்றை அளித்தல்.
- வளர்சிதை மாற்ற செயல்களுக்குத் தேவைப்படும் சக்தியை வழங்கி உடலின் செயல்களை செய்வதற்குத் துணைபுரிதல்.
- சராசரி உடலியக்கத்திற்கு உணவூட்டங்கள் அத்தியாவசிய கூறுகளாகும்.
- உணவூட்டங்களை அதிகமாகவோ குறைவாகவோ பெறும்போது, ஊட்டக்கேடு, ஊட்டக்குறைவு மற்றும் அதீத ஊட்டம் ஆகியன ஏற்படும்.
- பல்வேறு வகையான ஊட்டங்கள் பின்வரும் படத்தில் சுட்டப்பட்டுள்ளன.
- மனிதன் தனக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களை சரியான விகிதத்தில் பெறுதல், உடலுக்குத் தேவைப்படும் சில ஊட்டச்சத்துக்களை உடலில் சேமித்து வைத்திருக்கும் நிலை நல்லூட்டம் எனப்படுகிறது.
- இது தகுந்த ஊட்டம் அல்லது போதுமான ஊட்டம் என்றழைக்கப்படுகிறது.
- இது நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.
- உணவில் உள்ள ஊட்டங்கள் ஒருவரை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்,அதனை பராமரிக்கவும் உதவும்.
- பணி செய்யும் திறனைத் தரும் சக்தி, சதைகள், எலும்புகள், இரத்தம், உறுப்புகள், தோல், முடி மற்றும் நரம்பு திசுக்கள் வடிவமைக்க உதவும் புரதம் உள்ளிட்டவையும் அடங்கும்.
- நம் உறுப்புகளைப் பாதுகாக்கவும்,அதன் இயக்கத்தை முறைப்படுத்த மற்றும் உடலியல் செயல்பாட்டிற்குத் தேவையான தாது உப்புகளையும் உயிர்ச்சத்துகளையும் உணவானது வழங்குகிறது.
- ஊட்டக்கேடு என்பது விரும்பத்தகாத அளவிலும் வகையிலும் ஊட்டங்கள் அமைந்திருப்பதாகும்.
- ஊட்டக்கேடு என்பது உடலில் அடிப்படையான ஊட்டங்கள் குறைந்தோ அல்லது மிகுந்தோ இருக்கும் தன்மையாகும்.
- ஆரோக்கியமற்ற சூழலும் ஊட்டக்கேடினை ஏற்படுத்தும்.
- உடல், மனம் மற்றும் அறிவு ஆகியவை ஊட்டக்கேடினால் பாதிக்கப்படும்.
- ஊட்டக்கேடுடைய நபர் உடல், மனம், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் இரு வகையாகபாதிக்கப்படுவார்கள்:
- ஊட்டக் குறைவு
- அதீத ஊட்டம்
- தோல் மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆரோக்கியமான நிறத்துடன் இருத்தல்.
- பிரகாசமான, தெளிவான கண்கள் மற்றும் இளஞ்சிவப்பு படலம்.
- உறுதியான இளஞ்சிவப்பு நகங்கள்.
- வேர்களுடன் உறுதியாக இணைந்த பளபளப்பான கூந்தல்.
- ஆரோக்கியமான ஈறுகள் மற்றும் வாயின் படலங்கள்.
- மேற்பூச்சில்லாத சிவந்த நாக்கு மற்றும் இளஞ்சிவப்பு உதடுகள்.
- வயதிற்குத் தகுந்த உயரம் மற்றும் அதற்கேற்ற எடை.
- நல்ல பசி மற்றும் வலிமையான ஊட்டங்கள்.
- சராசரி உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு மற்றும் சுவாச அளவு.
- ஆரோக்கியமான குழந்தைகள் விழிப்புடனே இருப்பார்கள்.
- இந்த வரையறை நமக்கு ஆரோக்கியம் குறித்த நேர்மறையான விளக்கமாகும்.
- 'ஆரோக்கியம்' என்ற சொல் உடலின் குறிப்பிட்ட நிலையைக் குறிக்கும்.
- இவ்வரையறையின்படி, ஒரு நபரை நோய் தாக்காமலிருந்தாலும் அவர் ஆரோக்கியமற்று சோர்வுடனும் சோம்பலுட னும் எந்த செயலிலும் கவனம் செலுத்த முடியாமலும் இருக்கலாம்.
- அதே நபர் வேறொரு நேரத்தில் நலமுடன் நன்றாக இருப்பார்.
- அதாவது ஒரு நபர் எல்லா நேரத்திலும் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்க முடியாது.
- எனினும், பெரும்பான்மை நேரத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவரையே மேற்குறிப்பிட்ட நான்கு பரிமாணங்களையும் ஒருவர் அனுபவித்தால் ஒருவர் முழுமையான அல்லது நேர்மறையான நலத்தைப் பெறுவார்.
- ஆரோக்கியமான ஒருவர் அவரது குடும்பத்திற்கு,சமூகத்திற்கு மற்றும் நாட்டிற்கு சிறந்த சொத்து, மாறாக ஆரோக்கியமற்ற ஒருவர் சுமையாக கருதப்படுகிறார்.
- சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி சமூகத்தின் பல்வேறு சமூக நல குழுக்களில் பங்கு பெறுவது மன நலத்தை மேம்படுத்தி அவரை மன அழுத்த நிகழ்வுகளைச் சமாளிக்க உதவுகிறது.
- மேலும் உடல் நலத்தை மேம்படுத்த வழிவகுப்பதுடன், உடல்நலக்குறைவைத் தாங்கவும், வேகமாக மீளவும் உதவுகிறது.
- மேற்குறிப்பிட்ட நான்கு பரிமாணங்களையும் ஒருவர் அனுபவித்தால் ஒருவர் முழுமையான அல்லது நேர்மறையான நலத்தைப் பெறுவார்.
- ஆரோக்கியமான ஒருவர் அவரது குடும்பத்திற்கு, சமூகத்திற்கு மற்றும் நாட்டிற்கு சிறந்த சொத்து, மாறாக ஆரோக்கியமற்ற ஒருவர் சுமையாக கருதப்படுகிறார்.
- சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி சமூகத்தின் பல்வேறு சமூக நல குழுக்களில் பங்கு பெறுவது மன நலத்தை மேம்படுத்தி அவரை மன அழுத்த நிகழ்வுகளைச் சமாளிக்க உதவுகிறது.
- மேலும் உடல் நலத்தை மேம்படுத்த வழிவகுப்பதுடன், உடல்நலக்குறைவைத் தாங்கவும், வேகமாக மீளவும் உதவுகிறது.
சுறுசுறுப்பாகவும், விழிப்புடனும் எந்த நோயினாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் ஒரு நபர் உடல் நலமுள்ளவராகக் கருதப்படுவார். வளமான சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு உடல் திசுக்களின் நல்லியக்கமும், பராமரிப்பும் மிக அவசியம்.
மன நலம்:- ஆரோக்கியமான உடலே ஆரோக்கியமான மனத்தின் இருப்பிடம்.
- உடல் நலமும் மன நலமும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையது என்பது தெளிவான ஒன்றாகும்.
- மனநலக் குறைபாடு நோய்த் தாக்கத்திற்கு வழிவகுக்கும்.
- இதன் சான்றாக மன அழுத்தமும் வருத்தமும் உயர் இரத்த அழுத்தத்திற்கும் இதய நோய்க்கும் வழிவகுக்கும்.
- இதற்கு எதிர்மறையாக உடல் நலக்குறைவு மனநலத்தைப் பாதிக்கும்.
- சான்றாக போலியோ தாக்கிய ஒருவர் சமுகத்தில் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதைக் குறிப்பிடலாம்.
- இது மனநலப் பாதிப்பின் நிலையாகும்.
- நல்ல சமூக நலம் பிறரோடு நல்லிணக்கத்துடன் வாழ உதவும்.
- நல்ல மனநலம் இல்லை என்றால் சமூக நலத்துடன் இருக்க இயலாது.பழக்கத்திலிருந்து மாறுபட்டவராக மாற்றும்.
- இந்தப் பழக்கம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ள முடியாததால் அவர்கள் சமூகத்திற்கு எதிரானவர் என்று அழைக்கப்படுகின்றனர்.
- ஆன்ம நலத்தை வரையறுப்பது கடினமான செயலாகும்.
- ஆன்ம நலம் பெற்ற ஒருவர் பின்வரும் நன்னெறிகளை பெற்றிருப்பர்.
- பொறுமை மற்றும் அமைதி ஆன்மநலத்தின் தனித்தன்மையாகும். இவை வழிபாடு, தியானம் போன்றவற்றின் வழி கற்பிக்கப்படலாம்.
- சமயப் பழக்கவழக்கங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதால் மட்டுமே ஒருவர் ஆன்மநலத்தைப் பெற முடியாது.
- ஆன்ம நலத்திற்கு உதவும் ஒரு பரிணாமம் மிக முக்கியமானதாகும்.
- இந்த நவீன காலத்தில் ஆன்மா குறித்த பார்வை நமது முழுமையான நலத்திற்குத் தவிர்க்க முடியாததாகும்.