Easy Tutorial
For Competitive Exams
TNPSC G2 Previous Year Question Papers General Tamil - 2015 Page: 4
33572.பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) வாலை1. தயிர்
(b) உளை2. சுரபுன்னை மரம்
(c) விளை3. இளம்பெண்
(d) வழை4. பிடரி மயிர்

(a) (b) (c) (d)
4 3 2 1
2 1 3 4
1 2 4 3
3 4 1 2
33573."இன்மையுள் இன்மை விருந்தொரால்" - இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
பண்புப்பெயர்
வினையாலணையும் பெயர்
பண்பாகுபெயர்
வியங்கோள் வினைமுற்று
33574.காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டவர்
அம்புஜத்தம்மாள்
தில்லையாடி வள்ளியம்மை
அஞ்சலையம்மாள்
வேலு நாச்சியார்
33575.கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க
பண்டைத் தமிழகம் சேரர், சோழர் பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப் பெற்றது
நகை அழுகை உவகை பெருமிதம் முதலான பல சுவைகள் தோன்றுமாறு பாடப்படும் பாடல்கள் பல்சுவை பாடல்களாகும்
தேர், யானை, குதிரை காலாள் படைகளின் வலிமை, வீரச் சிறப்புகளைப் போற்றுவது புறப்பாடல்கள்
நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக "காவடிச் சிந்து" திகழ்கிறது
33576.பொருத்துக:
நூல் ஆசிரியர்
(a) பாண்டியன் பரிசு1. பாரதியார்
(b) குயில் பாட்டு2. நாமக்கல் கவிஞர்
(c) ஆசிய ஜோதி3. பாரதிதாசன்
(d) சங்கொலி4. கவிமணி

(a) (b) (c) (d)
4 3 2 1
2 1 3 4
3 1 4 2
1 2 4 3
33577.தொண்டர்சீர் பரவுவார் என்று போற்றப்படுபவர்
சுந்தரர்
கம்பர்
சேக்கிழார்
மாணிக்கவாசகர்
33578.எட்டுத்தொகைநூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை
ஐங்குறுநூறு
33579.முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் முத்தொள்ளாயிரம்
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்
I, III சரியானவை
I, IV சரியானவை
I, II சரியானவை
III, IV சரியானவை
33580.திருக்கோட்டியூர் நம்பியால் எம்பெருமானார் என்று அழைக்கப்பட்டவர் யார்?
நாதமுனிகள்
இராமாநுசர்
திருவரங்கத்தமுதனார்
மணவாள மாமுனிகள்
33581.மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்
நற்றிணை
கலித்தொகை
ஐங்குறுநூறு
குறுந்தொகை
33582.நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்
நந்திவர்மன்
ஜெயங்கொண்டார்
குமரகுருபரர்
பெயர் தெரியவில்லை
33583.பட்டியல் I உடன் பட்டியல் I-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.
பட்டியல் Iபட்டியல் II
(a) கொண்டல்1. மாலை
(b) தாமம்2. வளம்
(c) புரிசை3. மேகம்
(d) மல்லல்4. மதில்

(a) (b) (c) (d)
3 14 2
2 1 3 4
3 4 1 2
1 2 4 3
33584.முக்கூடற்பள்ளு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I.முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி மருதூர் பள்ளி இளைய மனைவி என்ற இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்கையை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II.முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்டபேச்சு வழக்கைக் காண்லாம்
III. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
IV. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் நன்செய் நிலத்தில் உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல், சதகம்
IV மற்றும் I
III மற்றும் IV
I மற்றும் III
II மற்றும் I
33585.விற்பெருந்தடந்தோள் வீர!
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
இலக்குவன்
இராமன்
குகன்
அனுமன்
33586.திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்
நம்மாழ்வார்
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
குலசேகராழ்வார்
திருமங்கையாழ்வார்
33587.ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு
பேயனார்
கபிலர்
ஒதலாந்தையார்
ஓரம்போகியார்
33588.கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக
I. அகப்பொருள் பற்றிய, நற்றிணை நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது
II. நற்றினைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றினைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்
I மற்றும் II சரியற்றவை
II மற்றும் IV சரியற்றவை
III மற்றும் IV சரியற்றவை
I மற்றும் II சரியற்றவை
33589.பொருந்தாத இணையினைக் காண்க:
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே - புறநானூறு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - திருக்குறள்
கூடலில் ஆய்ந்த ஒண்தீந்தமிழன் - சிலப்பதிகாரம்
பண்ணொடு தமிழொப்பாய் - தேவாரம்
33590.திரிகடுகம் பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
திரிகடுகம் நூற்று இரண்டு வெண்பாக்களைக் கொண்டது
திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார்
திரிகடுகம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்
33591.பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள்__________ என்பதாகும்.
கரடி
யானை
முதலை
பாம்பு
Share with Friends