Easy Tutorial
For Competitive Exams

TNPSC G4 - Previous Year Qp's General Tamil - 2022

58837.உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
'உள்ளங்கை நெல்லிக்கனி போல'
வெளிப்படைத் தன்மை
வெளிப்படையற்ற தன்மை
மறைத்து வைத்தல்
தன்னலமின்மை
விடை தெரியவில்லை
58838.'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.
தெளிவாகத் தெரியாது
தெளிவாகத் தெரியும்
நிலைத்து நிற்கும்
நிலைத்து நிற்காது
விடை தெரியவில்லை
58839. ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர்.
இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது ?
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்
ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது
ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது
ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்
விடை தெரியவில்லை
58840.மாலதி மாலையைத் தொடுத்தாள். இது எவ்வகை வாக்கியம்?
செய் வினை
செயப்பாட்டு வினை
தன் வினை
பிற வினை
விடை தெரியவில்லை
58841.இலக்கணக் குறிப்பறிதல்.
சாலச் சிறந்தது - தொடரின் வகையை அறிக.
இடைச்சொல் தொடர்
விளித் தொடர்
எழுவாய்த் தொடர்
உரிச்சொல் தொடர்
விடை தெரியவில்லை
58842.பெயர்ச்சொற்களைப் பொருத்துக.
(a) மல்லிகை1. சினைப்பெயர்
(b) பள்ளி2. பண்புப்பெயர்
(c) கிளை3. இடப்பெயர்
(d) இனிமை4. பொருள்பெயர்
4 3 1 2
3 4 2 1
4 3 2 1
2 3 1 4
விடை தெரியவில்லை
58843.பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.
(a) காலப்பெயர் செம்மை
(b) சினைப்பெயர் கண்
(c) பண்புப்பெயர் ஆண்டு
(d) தொழிற்பெயர் ஆடுதல்
(a), (c)
(a), (b)
(c), (d)
(a), (d)
விடை தெரியவில்லை
58844.‘கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.
கேட்டு
கேட்ட
கேட்டல்
கேட்டான்
விடை தெரியவில்லை
58845.‘தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.
தணி
தணிந்த
தணிந்து
தனி
விடை தெரியவில்லை
58846.'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
தந்த
தரு
தா
தந்து
விடை தெரியவில்லை
58847. 'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
அரசன்
வறுமை
மதில்
நோய்
விடை தெரியவில்லை
58848.'மா' – என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
பெரிய
சிறிய
குறைய
நிரம்ப
விடை தெரியவில்லை
58849.'பரவை' - இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
மலை
கடல்
ஆறு
உயிர்வகை
விடை தெரியவில்லை
58850.மரபு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.
கூகை கூவும்
கூகை குனுகும்
கூகை குழறும்
கூகை அலறும்
விடை தெரியவில்லை
58851.சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
விடை தெரியவில்லை
58852.குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.
சார்பு
மருந்து
கஃசு
பசு
விடை தெரியவில்லை
58853.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
மோனை
எதுகை
இசைவு
இயைபு
விடை தெரியவில்லை
58854.பொருத்துக.
(a) சோறு1. குடித்தான்
(b) பால்2. உண்டான்
(c) பழம்3. பருகினான்
(d) நீர்4. தின்றான்
1 3 4 2
3 4 1 2
2 3 4 1
4 1 2 3
விடை தெரியவில்லை
58855.பொருத்துக. TNPSC Group4-2022 Question
2 4 1 3
4 1 3 2
4 3 2 1
3 2 1 4
விடை தெரியவில்லை
58856.பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்
ஆழ்வார்கள்
சித்தர்கள்
நாயன்மார்கள்
புலவர்கள்
விடை தெரியவில்லை
Share with Friends