2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் 74.04% (ஆண்க ளின் எழுத்தறிவு விகிதம் 82.12% பெண்களின் எழுத்தறிவு விகிதம் 65.46%
இந்தியாவிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளாவும் (93.9%) குறைவான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பீகாரும் (63.8%) உள்ளன.
தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் (80.3%)
ஆறு முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கான கல்வியை அடிப்படை உரிமையாக்கும் 21A என்ற உறுப்பு அரசமைப்புச் சட்டத்தின் 86ஆவது திருத்தம் (2002)மூலம் அடிப்படை உரிமைகளில் சேர்க்கப்பட்டது.
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 (Right of children to Free and compulsory Education Act of 2009) தனியார் பள்ளிகளில் 25% இடங்க ளை இலவசமாக குழந்தைகளுக்கு வழங்க வழி செய்கிறது.
நாட்டிலுள்ள தொடக்கப்பள்ளிகளில் 80% அரசு பள்ளிகளாகவோ, அரசின் உதவிப் பெறும் பள்ளிகளாகவோ உள்ளன.
தொடக்கக் கல்வியை பொதுவுடமையாக்கும் ( Universalization of Primary Education ) நோக்கத்தோடு அனைவருக்கும் கல்வித் திட்டம் - (Sarva Siksha Abiyan) 2001ல் தொடங்கப்பட்டது.
2017க்குள் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி அளிக்கவும் - ( Universalization of Secondary Education ) 2020 க்குள் அதை நிலைநிறுத்தவும் R M S A ( ராஷ்டிரிய மத்யாமிக் சிஷா அபியன்) எனப்படும் அரசு இடைநிலைக் கல்வித் திட்டம் 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய எழுத்தறிவு திட்டம் ( National Literacy Mission), 2010 ஆம் ஆண்டு முதல் படிக்கும் பாரதம் (Saakshar Bharat) என்ற பெயரில் பெண் எழுத்தறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திட்டமாகச் செயல்பட்டு வருகிறது.
உயர்கல்வி வழங்குவதில் சீனா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அடுத்தப்படியாக இந்திய மூன்றாவது இடத்தில் உள்ளது.
உயர்கல்வி வழங்குவதில் பல்கலைக்கழக மானியக்குழு முக்கிய பங்கு ஆற்றுகிறது.
பல்கலைக்கழக மானியக்குழு 1948ல் அமைக்கப்பட்ட இராதாகிருஷ்ணன் கமிட்டியின் பரிந்துரைப்படி உருவாக்கப்பட்டு, 1956 முதல் சட்டப்பூர்வமான அமைப்பாக செயலாற்றி வருகிறது.
தொழில் நுட்பக்கல்வியை அகில இந்திய அளவில் நெறிப்படுத்தவும், நிர்வகிக்கவும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் ( All India Council of Technical Education) 1988 ஆம் ஆண்டு சட்டப்பூர்வமான அமைப்பாக உருவாக்கப்பட்டது.
தேசிய அளவில் ஆசிரியக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தேசிய ஆசிரியர் கல்விக்கழகம் ( National Council of Teachers Education ) 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கோத்தாரிக் கல்விக்குழு, 1966 இல் அளித்த அறிக்கையின்படி, 1968 ஆம் ஆண்டு தேசிய கல்விக்கொள்கை (National Education Policy) கொண்டு வரப்பட்டது.
தேசிய வருமானத்தில் 3 விழுக்காடு கல்விக்காக செலவிட வேண்டும் என்பதும், 10+2+3 முறையில் கல்வி அமைய வேண்டும் என்பதும் கோத்தாரிக் கமிட்டி பரிந்துரையின் முக்கிய அம்சமாகும்.
1986 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது.
புதிய கல்விக்கொள்கையின்படி கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுடன், நவோதய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன.
தற்போது இந்தியாவில் 576 ஜவஹர் நவோதய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.
நவோதய பள்ளிகள் CBSE பாடத்திட்டத்தில் இயங்கும் இருபாலின உறைவிடப் பள்ளிகளாகும். ( Coeducational Residential Schools)
தமிழ்நாடு அரசு கட்டாய இருமொழி கொள்கையைப் பின்பற்றுவதால், "மும்மொழிக் கொள்கை" கொண்ட நவோதய பள்ளிகள் தமிழ்நாட்டில் மட்டும் தொடங்கப் பெறவில்லை .
மத்திய அரசு பணியாளர்களது குழந்தைகளின் சீரான கல்வி நலன் கருதி கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 1962 இல் தொடங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் எழுத்தறிவு
1951 முதல் 2001 வரையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டு மக்களின் எழுத்தறிவு விழுக்காடு மும்மடங்காக பெருகியுள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் 80.35 விழுக்காடு மக்கள் எழுத்தறிவு பெற்றவராகத் திகழ்கின்றனர்.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கீட்டின் படி எழுத்தறிவு பெற்றவர்கள் அதிகம் உள்ள மாவட்டமாக கன்னியாக்குமரியும் - (87.55 விழுக்காடு) எழுத்தறிவு பெற்றவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ள மாவட்டமாக தர்மபுரியும் (61.39 விழுக்காடு) உள்ளன.