சமூகம் சார்ந்த பிரச்சினைகள்
மக்கள் தொகை
1872-ல் மேயோ பிரபு காலத்தில் முதன்முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது, ஆனால் இக்கணக்கெடுப்பு முறையற்றது. 1881 ம் ஆண்டு முதல், ரிப்பன் பிரபு காலத்தில் முறையான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. பின்னர் பத்து வருடங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு சுதந்திரத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட 7வது கணக்கெடுப்பாகும்.
1872-ல் மேயோ பிரபு காலத்தில் முதன்முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது, ஆனால் இக்கணக்கெடுப்பு முறையற்றது. 1881 ம் ஆண்டு முதல், ரிப்பன் பிரபு காலத்தில் முறையான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. பின்னர் பத்து வருடங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு சுதந்திரத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட 7வது கணக்கெடுப்பாகும்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை :
• 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்களின் எண்ணிக்கை 72,147,039 ஆகும். இதில் 36,009,055 பெண்க ளும், 36,137,975 ஆண்க ளும் உள்ள னர். தேசிய அளவில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இது 5.96 விழுக்காடு ஆகும். மக்கள் தொகையில் ஆயிரம் ஆண்களுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையே பாலின விகிதமாகும். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் பதினைந்து முதல் நாற்பத்தி ஐந்து வரையுள்ள (இன விருத்திக்கான வயது) பெண்களுக்கும் இடையே உள்ள விகிதத்ததை ஆயிரம் பேருக்கு என கணக்கிடுவதே கருவள விகிதமாகும்.
மக்கள் தொகை வெடிப்பு:
- பிறப்பு விகிதம்
- இறப்பு விகிதம்
- இடப்பெயர்ச்சி
- திருமண வயது
- குழந்தை பிறப்பு அதிகரிப்பு
- சமூக பழக்கங்கள் மற்றும் நம்பிக்கை
- படிப்பறிவின்மை
- பிறப்பு கட்டுப்பாடு முறைகள் பற்றி அறியாமை
- மக்கள் தொகை பெருக்கத்திற்கு மற்றொரு காரணம் குறைவான இறப்பு வீதம் ஆகும்.
- வெளிக் குடிப்பெயர்ச்சியானது மக்கள்தொகை பெருக்கத்தினை குறைக்கிறது.
- உள் குடிப் பெயர்ச்சியானது மக்கள்தொகை பெருக்கத்தினை அதிகரிக்கிறது.
- அதிக பிறப்பு வீதம்
- குறைவான இறப்பு வீதம்
- இளவயது திருமணம்
- சமுதாய மற்றும் சமயக்காரணங்கள்
- வறுமை
- கல்வியறிவின்மை
- பொருளாதார வளர்ச்சிக்கு உழைப்பின் பங்களிப்பு, அதிகமாக தேவைப்பட்டாலும் நமது மக்கள்தொகை தொடர்ந்து வளர்வதால் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது.
- காரணங்கள் :
- உணவுப் பற்றாக்குறை
- உற்பத்தி செய்யாத நுகர்வோர் சுமை
- தலா வருமானம் மற்றும் நாட்டு வருமானம் குறைதல்.
- சேமிப்பும், முதலீடும் குறைதல வேலையின்மை (அ)குறை
- வேலையுடைமை
- மகளிரின் உழைப்பு வீணாதல்
- உழைப்பின் உற்பத்தித் திறன் குறைதல்
- சமூக நலத் திட்டத்தின் கீழ் அதிகச் செலவு
- வேளாண்மையில் பின் தங்கிய நிலை
- குடும்ப கட்டுப்பாடு முறைகளை பயன்படுத்துதல்.
- குழந்தைகளின் இறப்பு வீதத்தை கட்டுப்படுத்துதல் .
- நாடு தொழில்மயமாதல்.
- பெண்களின் எழுத்தறிவு வீதம் மற்றும் கல்வியை அதிகரித்தல்
- காலம் தாழ்த்தி திருமணம் செய்தல்.
- குழந்தை திருமணத்தினை தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தல்
மக்கள் தொகைப் பற்றி மூன்று கோட்பாடுகள் உள்ளன.
- மால்தஸின் மக்கள்தொகைக் கோட்பாடு
- உணவு உற்பத்தி அதிகரிக்கும் போது மக்கள்தொகையும் அதிகரிக்கும்.
- மக்கள் தொகைப் பெருக்க வீதத்திலும், உணவு உற்பத்தி கூட்டல் விகிதத்திலும் அதிகரிக்கிறது.
- கிடைக்கும் உணவுப் பொருட்களின் அளவிற்கேற்ப, இயற்கைத் தடைகள் மற்றும் செயற்கைத் தடைகள் மூலம் மக்கள் தொகையை நிலைப்படுத்தலாம்.
- இயற்கைத் தடைகள் - இவை இறப்பு வீதத்தை அதிகரித்து மக்கள்தொகை வளாச்சியை பாதிக்கிறது. - எ.கா - வறுமை, வியாதிகள், போர்கள், பஞ்சங்கள்.
- செயற்கைத் தடைகள் - மக்கள் தொகையை குறைக்க மனிதன் மேற்கொள்ளும் முயற்சிகள் செயற்கைத் தடைகள் எனப்படும்.
- 1924-இல் எட்வின் கேனன் என்பவரால் உத்தம அளவு மக்கள்தொகைக் கோட்பாடு வெளியிடப்பட்டது. எட்வின் நாடுகளின் செல்வம் என்னும் நூலின் மூலம் அவர் உத்தம அளவுக் கோட்பாட்டை வெளியிட்டார்.
- மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றங்களும், அதன் விளைவாக தலா வருமானத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை உத்தம் அளவுக் கோட்பாடு விளக்குகிறது.
- இயற்கை வளங்கள், மூலதனப் பொருட்களின் இருப்பு மற்றும் தொழில்நுட்ப நிலை ஆகியவற்றிற்கு ஏற்ப சிறந்த மக்கள்தொகை, உத்தம் அளவு மக்கள்தொகை எனலாம்.
- உத்தம அளவு மக்கட்தொகை அளவில் தலா உற்பத்தி உச்சத்தில் இருக்கும் (அ) தலா உற்பத்தி உச்சத்தில் இருக்கும் நிலையில் உள்ள மக்கட் தொகையே உத்தம அளவு மக்கட்தொகை ஆகும்.
- இக்கோட்பாடு பிறப்பு வீதத்திற்கும், இறப்பு வீதத்திற்கும், உள்ள உயர்வை விளக்குகிறது.
- பிறப்பு வீதம் - ஒரு வருடத்தில் 1000 நபர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன என்ற வீதத்தை குறிக்கின்றது.
- இறப்பு வீதம் - ஒரு வருடத்தில் 1000 நபர்களுக்கு எத்தனை பேர் இறக்கின்றனர் என்ற வீதத்தை குறிக்கின்றது.
- நாடு முன்னேற்றம் குறைந்து, பின் தங்கிய நிலையில் இருக்கும்.
- வேளாண்மை மக்களின் முக்கியத் தொழிலாக இருக்கும்
- இந்தக் கட்டத்தில் அதிகப் பிறப்பு வீதம், அதிக இறப்பு வீதத்தை சரிக் கட்டுவதால் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாக இல்லை. அது தேக்கமுற்று காணப்படுகிறது.
- நாடு முன்னேறும் போது, தொழில் வளர்ச்சி அதிகரித்து, அதிக வேலைவாய்ப்பும் உருவாகின்றன.
- உயர்ந்த அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக போதிய மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெறுவதால் இக்கட்டத்தில் உயர்ந்த பிறப்பு வீதம், குறைந்த இறப்பு வீதத்திற்கிடையே வேறுபாடு ஏற்படும்.
- மக்கள்தொகை வளர்ச்சி வீதம் அதிகமாகிறது.
- பொருளாதார முன்னேற்றம் காரணமாக சமுதாய அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
- மக்களின் மனப்பான்மை மாற்றமாகிறது. கல்வியறிவின் காரணமாக, சிறு குடும்ப முறைக்கு மாறுகின்றனர். எனவே, பிறப்பு வீதம் குறைகிறது. நல்ல சுகாதார வசதிகள் செயல்படுவதால் இறப்பு வீதம் குறைகின்றது.
- இக்கட்டத்தில் பிறப்பு, இறப்பு வீதங்கள் குறைவாக இருப்பதால் மக்கள்தொகை வளர்ச்சி நிலையாக இருக்கும்.
- உலக நாடுகள் அனைத்தும் மூன்று நிலைகளையும் கடக்க வேண்டும்.
2.உத்தம் அளவுக் கோட்பாடு
3.மக்கட் தொகை வளர்ச்சிக் கட்ட கோட்பாடு :
மக்கள் தொகை வளர்ச்சியில் 3 நிலைகள் உள்ளன.
1.முதல் நிலை - உயர்ந்த பிறப்பு வீதமும் உயர்ந்த இறப்பு வீதமும்:
2.இரண்டாம் நிலை - உயர்ந்த பிறப்பு வீதமும், குறைந்த இறப்பு வீதமும்:
3.மூன்றாம் நிலை - குறைந்த இறப்பு வீதமும், குறைந்த பிறப்பு வீதமும்