Easy Tutorial
For Competitive Exams

GS - Indian Economy (இந்தியப் பொருளாதாரம்) சமூகம் சார்ந்த பிரச்சினைகள் வேலைவாய்ப்பின்மை

வேலைவாய்ப்பின்மை

வேலையின்மை

தொழிலாளர்கள் வேலை செய்யும் தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது ஆகும்.

வேலையின்மை அளவீடுகள்
  • ஒரு நபர்> ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்ற அளவில், ஒரு வருடத்திற்கு 73 நாட்கள் வரை மட்டும் வேலையில் நியமனம் செய்யப்படுவதையே குறிக்கிறது.
  • பகவதி கமிட்டி (1973) பரிந்துரையின்படி வேலையின்மையை 3 வகையாகப் பிரிக்கலாம்
    1. முதன்மை நிலை வேலையின்மை
    2. வாராந்திர நிலை வேலையின்மை
    3. தினமும் வேலையின்மை நிலை
வேலையின்மைக்கான காரணங்கள்
  • அதிக மக்கள்தொகை வளர்ச்சி
  • போதுமான பொருளாதார வளர்ச்சி வீதமின்மை
  • வேளாண்மை தவிர பிற துறைகளில் வேலை வாய்ப்பு குறைவு.
  • பருவ கால வேலைவாய்ப்பு
  • கூட்டுக் குடும்ப அமைப்பு
  • இந்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து பெருகி வரும் மாணவர்கள்
  • குறைவான தொழில் வளர்ச்சி
வேலையின்மையின் வகைகள்
அமைப்பு வேலையின்மை:
  • உற்பத்தித் திறன் குறைவினால் வருவது.
வெளிப்படை வேலையின்மை:
  • படித்த மற்றும் படிக்காத மக்களிடையே காணப்படும் வேலையின்மை.
மறைமுக வேலையின்மை:
  • உற்பத்திக்கு பங்களிப்பு செய்யாமல் ஒருவா வேலையில் இருப்பது. அவரை நீக்கினாலும் உற்பத்தித் திறன் மாறாது.
பருவ கால வேலையின்மை :
  • விவசாயத் துறையில் வருடம் முழுவதும் வேலை இருப்பதில்லை. குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இருக்கும்.
இடைக்கால வேலையின்மை :
  • ஒருவர் ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு மாறும்போது ஏற்படுகிறது.
உராய்வு வேலையின்மை:
  • சந்தை நிலவர மாற்றத்தால் தேவை குறைவு மற்றும் புதிய தொழில்நுட்ப அறிமுகம் காரணமாக ஏற்படுவது.
குறைவேலையுடைமை:
  • ஒருவர் தன் கல்வித் தகுதிக்கு கீழான வேலையில் இருப்பது.
சுழற்சி வேலையின்மை:
  • தொழிலாளர்கள் உபரியாக கிடைக்கும் காலங்களில் இவ்வகை வேலையின்மை ஏற்படுகிறது.
வேலையின்மை -முக்கிய திட்டங்கள்

இந்தியாவில் ஒருவர் ஒரு நாளில் 8 மணி நேர வேலையை - வருடத்திற்கு 273 நாட்கள் வேலை வாய்ப்பும் கிடைக்காத நிலை வேலைவாய்ப்பின்மை

பகவதிக் குழு -1973 (திட்டக்குழுவின் பரிந்துரைப்படி)

இக்குழு மூன்று மதிப்பீடுகளை அளித்துள்ளது

  • வருடத்தில் பெரும்பாலும் வேலையில்லாத நிலை - UPS (Usual Principal Status)
  • வாரத்தில் ஒரு மணி நேரம் கூட வேலையில்லாத நிலை - CWs (Curent Weekly Status)
  • ஒரு நாளில் (அ) ஒரு சர்வே வாரத்தில் வேலையில்லாத நிலை - CDS (Current Daily Status)
முக்கிய திட்டங்கள் பதினொன்றாவது ஐந்தாண்டுத்திட்டம்:
  • மில்லியன் வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல்
  • வேலைவாய்ப்பு தேவை 80 மில்லியன்
  • 58 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
  • வேலைவாய்ப்பின்மை 5% குறைத்தல்
  • பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் -முழு வேலைவாய்ப்பை ஏற்படுத்தாவிட்டாலும், வேலையின்மை 8.3% இருந்து 4.83% குறைத்தல்
மற்ற திட்டங்கள்
  • Food for work Programme : வேலைக்கு உணவு திட்டம்
  • IRDP Intergrated rural Development Programme - ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் -1979
  • TRYSEM -Training Rural Youth For Self Employment -1979 கிராமப்புற இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சி திட்டம்
  • NREP: National Rural Employment programme -1980 தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
  • RLEGP - Rural Landless Employment Guarantee Programme -1983 நிலம் இல்லாதவர்க்கு வேலைவாய்ப்பு உறுதி திட்டம்
  • JRY – Jawhar Rozgar Yojana -1989 ஜவஹர் ரோஸ்கார் யோஜனா
  • Bharat Nirman - 2005
  • MGNREGP- Mahatma Gandhi National Rural Employment Guarantee Programme -2006 (NREGP Renamed as MGNREGP on Oct 2,2010)
Share with Friends