Easy Tutorial
For Competitive Exams

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் திரு. வி. கல்யாண சுந்தரனார்

திரு. வி. கல்யாண சுந்தரனார்

வாழ்க்கைக்குறிப்பு:

  • திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதச்சல்னார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது)
  • பெற்றோர் - விருதச்சலனார் – சின்னம்மையார்
  • பிறந்த ஊர் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
  • இவ்வூர், தற்போது தண்டலம் என அழைகப்படுகிறது. இவ்வூர் சன்னியை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.


சிறப்பு பெயர்கள்:

  • தமிழ்த்தென்றல்
  • தமிழ் முனிவர்
  • தமிழ் பெரியார்
  • தமிழ்ச்சோலை
  • தமிழ் புதிய உரைநடையின் தந்தை
  • தமிழ் மேடைப்பேச்சின் தந்தை
  • தொழிலாளர் தந்தை
  • பேனா மன்னருக்கு மன்னன்(பி.ஸ்ரீ.ஆச்சாரியார்)
  • இக்காலத் தமிழ்மொழி நடையாளர்
  • தமிழ் வாழ்வினர்


கற்றல்:

  • தமிழ் கற்றது - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம்
  • சித்தாந்த சாத்திரம் கற்றது - மகாவித்துவான் தணிகாசல முதலியாரிடம்
  • இலக்கியம் கற்றது - மறைமலை அடிகளிடம்
  • சமய அறிவு பெற்றது - பாம்பன் சுவாமிகளிடம்


உரைநடை நூல்கள்:

  • முருகன் அல்லது அழகு
  • தமிழ்ச்சோலை
  • உள்ளொளி
  • மேடைத்தமிழ்
  • சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து
  • மனித வாழ்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்
  • தமிழ்த் தென்றல்
  • சைவத்திறவு
  • இந்தியாவும் விடுதலையும்
  • சைவத்தின் சமரசம்
  • கடவுட் காட்சியும் தாயுமானவரும்
  • நாயன்மார்கள்தமிழ்நாடும் நம்மாழ்வாரும்
  • இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
  • தமிழ் ந்நோல்களில் பௌத்தம்
  • காதலா? முடியா?சீர்திருத்தமா?
  • என் கடன் பணி செய்து கிடப்பதே
  • இமயமலை அல்லது தியானம்
  • இளமை விருந்து
  • பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியும்
  • வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கை பிதற்றல்


செய்யுள்:

  • முருகன் அருள் வேட்டல்
  • கிறித்துவின் அருள் வேட்டல்
  • உரிமை வேட்கை
  • திருமால் அருள் வேட்டல்
  • சிவன் அருள் வேட்டல்
  • புதுமை வேட்டல்
  • பொதுமை வேட்டல்
  • அருகன் அருகே
  • கிறித்து மொழிக்குறள்
  • இருளில் ஒளி
  • இருமையும் ஒருமையும்
  • முதுமை உளறல்


பயண நூல்:

  • எனது இலங்கை செலவு


இதழ்:

  • நவசக்தி
  • தேசபக்தன்


குறிப்பு:

  • பெரியபுராணத்திற்கு குறிப்புரை எழுதியுள்ளார்
  • திருக்குறளின் முதல் 10 அதிகாரங்களுக்கு விரிவுரை அளித்துள்ளார்
  • சென்னை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பனிப் புரிந்தார்
  • இவரின் சொற்பொழிவுகள் எல்லாம் "தமிழ்த்தென்றல்" என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது
  • இவரின் பத்திரிக்கைத் தலையங்கம் எல்லாம் தொகுத்து "தமிழ்ச்சோலை" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது
  • இவரின் மேடைபேச்சுகள் எல்லாம் "மேடைத்தமிழ்" என்ற தளிப்பில் வெளியிடப்பட்டது
  • இவரின் செய்யுள் நூல்கள் எல்லாம் "அருள் வேட்டல்" என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடப்பட்டது


சிறப்பு:

  • இந்தியாவிலிலேயே முதன் முதலாக சென்னையில் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார்
  • திரு.வி.க நடை என்று கூறும் அளவிற்கு தனி நடையை உரைநடையில் கொண்டவர்
  • அடுக்குத் தொடர்கள், வியங்கோள் அமைப்பு, வியப்புத் தொடர்கள், மரபுச் சொற்கள், கவிதை வரிகள், வினாவிடைப் பாங்கு, மேடைப் பேச்சுநடை, புதிய சொல்லாக்கம் ஆகியன இவர் தம் உரைநடையின் தனித்தன்மையாகும்
  • பி.ஸ்ரீ.ஆச்சார்யா - பேனா மன்னருக்கு மன்னன். அவர் சிறந்த பக்தன். அவர் சாகவில்லை. ஏனெனில் பக்தனைக் கண்டு சாவுதான் செத்துப் போகிறது. அவர் வாழ்ந்து வந்த புதுப்பேட்டை விலாசம் தான் மாறியிருக்கிறது. புது விலாசம் மக்கள் உள்ளம்
  • "பிரயாணம்" என்ற சொலுக்கு பதிலாக "செலவு" என்ற சொல்லை பயன்படுத்தியவர்
  • எத்துறை பற்றியும் இன்தமிழில் பேசவும் எழுதவும் முடியும் என நிறுவியவர் இவரே
  • திரு.வி.காவின் இலக்கிய வாரிசுகள் - மு.வ, கல்கி


Share with Friends