மறைமலையடிகள்
குறிப்பு:
- இயற் பெயர் - சாமி வேதாசலம்
- ஊர் - நாகை மாவட்டம் காடம்பாடி
- பெற்றோர் - சொக்கநாதப் பிள்ளை, சின்னம்மா அம்மையார்
- மகள் - நீலாம்பிகை அம்மையார்
வேறு பெயர்கள்:
- தனித்தமிழ் மலை
- தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
- தனித்தமிழ்த் இலக்கியத்தின் தந்தை
- தன்மான இயக்கத்தின் முன்னோடி
- தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி
புனைப்பெயர்:
- முருகவேள்
உரைநடை நூல்கள்:
- பண்டைத் தமிழரும் ஆரியரும்
- மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்
- வேளாளர் யாவர்
- சைவ சமயம்
- தமிழர் மதம்
- அம்பலவாணர் கூத்து
- தமிழ்த்தாய்
- தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்
- அறிவுரைக் கொத்து
- மக்கள் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?
- மரணத்தின் பின் மனிதனின் நிலை
- சோமசுந்தரக் காஞ்சியாக்கம்
- தென்புலத்தார் யார்?
- சாதி வேற்றுமையும் போலிச் சைவமும்
- தொலைவில் உணர்த்தல்
- Ancient and modern tamil poets
செய்யுள் நூல்கள்:
- திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை
- சோமசுந்தரக் காஞ்சி
ஆய்வு நூல்கள்:
- முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
- பட்டினப்பாலை ஆராய்ச்சி
- சிவஞான போத ஆராய்ச்சி
- குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி
- திருக்குறள் ஆராய்ச்சி
நாடகம்:
- சாகுந்தலம்(மொழிப்பெயர்ப்பு)
- குமுதவல்லி
- அம்பிகாபதி அமராவதி
நாவல்:
- கோகிலாம்பாள் கடிதங்கள்
- குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி
இதழ்:
- அறிவுக்கடல்(ஞானசாகரம்)
- The ocean of wisdom
குறிப்பு:
- தமிழ், ஆங்கிலம், வடமொழி என மும்மொழியிலும் வல்லவர்
- சைவத்தையும் தமிழையும் தம் உயிராக கொண்டவர்
- சென்னை கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்
- சாமி வேதாசலம் என்ற தன் வடமொழி பெயரை மறைமலை அடிகள் என தமிழில் மாற்றிக் கொண்டார்
- "ஞானசாகரம்" என்ற இதழுக்கு "அறிவுக்கடல்" என்று பெயர் மாற்றம் செய்து நடத்தினார்
- "சிறுவர்க்கான செந்தமிழ்" என்ற தலைப்பில் பாடநூல்களையும் வரைந்துள்ளார்.
- அடிகளின் "அறிவுரைக் கொத்து" என்ற நூலே "கட்டுரை" என்ற தமிழ்ச் சொல்லையும், கட்டுரை எழுதும் முறைகளையும் மாணவர்களிடையே பரப்பிற்று
- இவர் சைவ சித்தாந்த மகா சமாஜம், சமரச சன்மார்க்க சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்
சிறப்பு:
- "தனித்தமிழ் இயக்கம்" தோற்றுவித்தவர்
- திரு.வி.க - மறைமலை ஒரு பெரும் அறிவுச் சுடர்; தமிழ் நிலவு; சைவ வான்; தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை அடிகளாருக்கே சேரும்
- சங்க இலக்கியங்களை மக்களிடையே பரப்பியவர்