பரிதிமாற்கலைஞர்
வாழ்க்கைக்குறிப்பு:
- இயற் பெயர் - சூரிய நாராயண சாஸ்திரி.
- ஊர் - மதுரை அடுத்துள்ள விளாச்சேரி
- பெற்றோர் - கோவிந்தசிவனார், இலட்சுமி அம்மையார்.
- தம் பெற்றோருக்கு மூன்றாவது மகனாக,1870ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஆறாம் நாள் பிறந்தார்..
சிறப்பு பெயர்கள்:
- தமிழ் நாடக பேராசிரியர்
- திராவிட சாஸ்திரி(சி.வை.தாமோதரம்பிள்ளை)
- தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்
படைப்புகள்:
- ரூபாவதி அல்லது காணாமல் போன மகள்(நாடக நூல்)
- கலாவதி(நாடக நூல்)
- மானவிசயம்(நாடக நூல், களவழி நாற்பது தழுவல்)
- பாவலர் விருந்து
- தனிப்பாசுரத் தொகை
- தமிழ் மொழி வரலாறு
- நாடகவியல்(நாடக இலக்கண நூல்)
- சித்திரக்கவி
- மதிவாணன்(புதினம்)
- உயர்தனிச் செம்மொழி(கட்டுரை)
- சூர்பநகை(புராண நாடகம்)
- முத்ராராட்சசம் என்ற வடமொழி நூலை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார்
- தமிழ் புலவர் சரித்திரம்
- தமிழ் வியாசகங்கள்(கட்டுரை தொகுப்பு)
இதழ்:
- ஞானபோதினி
- விவேக சிந்தாமணி
குறிப்பு:
- சென்னை கிறித்துவக் கல்லோர்ரியில் தமிழ் பேராசிரியராகப் பணி புரிந்தவர்
- மறைமலை அடிகளின் ஆசிரியர்
- சோனட் என்ற 14 அடி ஆங்கிலப் பாட்டைப் போன்று பல பாடல்கள் எழுதி "தனிப்பாசுரத்தொகை" என்னும் நூலை வெளியிட்டார்
- "அங்கம்" என்ற நாடக வகைக்கு மானவிசயம் என்ற நாடக நூலை படைத்தார்
- சி.வை.தாமோதரப் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க "மதிவாணன்" என்ற புதினம் படைத்தார்
சிறப்பு:
- சூரிய நாராயண சாஸ்திரி என்ற தம் பெயரை தனிப்ப்பசுரத் தொகை என்னும் நூலை வெளியிடும் போது பரிதிமாற் கலைஞர் என மாற்றிக் கொண்டார்
- இவரின் தனிப்பாசுரத் தொகை என்னும் நூலினை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
- இவரின் தமிழ்ப்புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு சி.வை.தாமோதரம்பிள்ளை இவருக்கு "திராவிட சாஸ்திரி" என்ற பட்டம் வழங்கினார்.
- உயர்தனிச் செம்மொழி(classical language), தகுந்தவை தங்கி நிற்றல்(survival of the fittest) என்ற கலைச் சொற்களைப் படைத்தவர்
- முதன் முதலில் தமிழை உயர்தனிச் செம்மொழி என அறிவித்தவர்