பொதுத்தமிழ் - II
101. வெற்றி தரும் இறைவியின் அருளுடைமையைப் பாராட்டுதல் என்பது - கொள்ளவை நிலை
102. கூறு என்பதன் தொழிற்பெயர் வடிவம் - கூறல்
103. “சுலோசனா சதி” என்னும் நாடகத்தை இயற்றியவர் யார் - சங்கரதாஸ் சுவாமிகள்
104. இடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் எது - கபாடபுரம்
105. தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள் - அகநானூறு, ஐங்குறுநூறு
106. பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் - பிரிதல்
107. தலைவியின் நல்லியல்பைத் தலைவனிடம் பாங்கன் கூறுவதை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் - செவ்வி சப்பல்
108. செய்யுளில் சொற்கள் முறைபிறழாமல் வரிசையாக அமைந்து வருவது - நிரல் நிறைப் பொருள்கோள்
109. செய்யுளில் இயல்பான ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது - உயர்வு நவிற்சி அணி
110. குறுந்தொகையைத் தொகுத்தவர் யார் - பூரிக்கோ
111. பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
112. மணிமேகலை எந்தச் சமயக் காப்பியம் - புத்த சமயம்
113. உத்தரபுராணத்தின் வழிவந்த நூல் எது - யசோதர காப்பியம்
114. 'காந்தள் மலர்' எத்திணைக்குரியது - குறிஞ்சி
115. 'காண்' எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் என்ன - கண்ட
116. தொல்காப்பியச் சொல்லதிகாரம் எத்தனை இயல்களைக் கொண்டது - ஒன்பது
117. 'மான்மியம்' என்பதன் பொருள் என்ன - தலபுராணம்
118. 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்' என்று பாடியவர் யார் - அப்பர்
119. அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது - 13 அடி முதல் 31 அடி வரை
120. 'ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாய கன்போர்க் குகன் எனும் நாமத்தான்' என்ற கம்பராமாயணப் பாடலில் வரும் அம்பி என்ற சொல்லின் பொருள் என்ன - படகு
121. முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார் - குமரகுருபரர்
122. வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறிய புலவர் யார் - காளமேகப் புலவர்
123. நாட்டுப்புறப் பாடலில் வரும் மீனவர்களின் அரிச்சுவடி எது - மீன்பிடி வலை
124. 'வியா இலங்குவரை உந்திய தோள்களை இப்பாடல் இடம் பெறும் நூல் எது - தேவாரம்
125. பெருமையும் எழிலும் பொருந்திய பத்மநாபனின் கையில் இருப்பது எது - சக்கரம்
126. "வள்ளுவனைப் பெற்றதால்: பெற்றதே புகழ் வையகமே" எனப் பாடியவர் யார் - பாரதிதாசன்
127. 'ஊமையோ - அன்றிச் செவிடோ - அனந்தலோ - ' என உரைப்பது யார் - ஆண்டாள்
128. சம்பரன் எனும் அரக்கனைப் போரில் வென்றவர் யார் - தசரதன்
129. பட்டினப்பாலைச் சுட்டும் பெருமைமிகு பட்டினம் எது - காவிரிபூம்பட்டினம்
130. பணை என்னும் சொல்லின் பொருள் யாது - மூங்கில்
131. திவ்வியப்பிரபந்தத்துக்கு உரை வழங்கியவர் யார் - பெரியவாச்சான் பிள்ளை
132. 'கிறித்துவக் கம்பர்' - யார் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
133. கலித்தொகை எதன் வழிப் பெயர் பெற்றது - யாப்பு வகையால்
134. 'செய்தக்க செய்யாமை யானும் கெடும்' என்ற வரி எந்த நூலில் இடம்பெறுகிறது - திருக்குறள்
135. மணநூல் என சிறப்பிக்கப் படுவது - சீவகசிந்தாமணி
136. ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் எது - தக்கயாகப் பரணி
137. நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி
138. யாருடைய கல்வி இனிமை பயக்கும் - அவைக்கு அஞ்சாதவனின்
139. இயேசுவின் 12 சீடர்களில் ஒருவன் - யூதாஸ்
140. ஆளுடைய அரச என அழைக்கப்படுபவர் - அப்பர்
141. 'எறும்பும் தன் கையால் எண் சாண் உடையதே' என்ற பாடல் வரிகள் மூலம் ஒளவையார் உணர்த்துவது - கற்றார் செருக்குக் கொள்ளக் கூடாது
142. திருமந்திரத்தை இயற்றியவர் யார் - திருமூலர்
143. திரிகடுகம் என்ற நூல் தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருட்கள் யாவை - சுக்கு, மிளகு, திப்பிலி
144. ஈசன் எந்தை இணையடி நிழலே என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
145. களவழி நாற்பது எந்த இடத்தில் நடந்த போரைப் பற்றியது - கழுமலம்
146. நெய்தற்கலிப் பாடல்களைப் பாடியவர் - நல்லந்துவனார்
147. தமிழின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
148. 'புஷ்பவல்லி' என்னும் நாடகத்தினை இயற்றியவர் - பம்மல் சம்பந்த முதலியார்
149. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார் - கால்டுவெல்
150. மலர்களின் பருவம் எத்தனை? யாவை - 7 அரும்பு, மொட்டு, முகை,மலர், அலர், வீசெம்மல்
151. மூத்த பள்ளி என்பது மூக்கூடல் எனில், இளைய பள்ளி - மருதூர்
152. பிரபந்தம் பொருள் தருக - நன்கு கட்டப்பட்டது
153. குண்டலம் என்ற சொல்லின் பொருள் - சுருள்
154. கேசி எனும் சொல் எதனைக் குறிக்கும் - கூந்தல்
155. குண்டலகேசி ஒரு - பௌத்தக்காப்பியம்
156. குண்டலகேசிக்கு போட்டியாக எழுந்த நூல் - நீலகேசி
157. பத்தரை என்பது யாருடைய இயற்பெயர் - குண்டலகேசி
158. ஆண்டாளின் இயற்பெயர் - கோதை
159. திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் - நீலன்
160. யாழ் என்ற நூலினை எழுதியவர் - விபுலானந்தர்
161. விமர்சனக்கலை எனும் நூலை எழுதியவர் - கநாசுப்ரமணியன்
162. சோழர்களின் கொடிச்சின்னம் - புலி
163. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176
164. பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தை பாடிய புலவர் - பெருங்குன்றூர்க்கிழார்
165. பாலைக் கவுதமனார் பாடிய பதிற்றுப்பத்துப் பகுதி - மூன்றாம் பத்து
166. அபிதான கோஷம் எனும் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் - முத்துத் தம்பிப்பிள்ளை
167. பெரியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் - குடியரசு
168. மந்திரமும் சடங்குகளும் எனும் நூலை எழுதியவர் - ஆசிவசுப்பிரமணியன்
169. பண்பாட்டு அசைவுகள் எனும் நூலை எழுதியவர் - தொபரமசிவன்
170. பாலைத் திணைக்குரிய புறத்திணை - வாகை
171. உழிஞை எதற்குரிய புறத்திணை - மருதம்
172. பொருநராற்றுப்படையின் ஆசிரியர் - முடத்தாமக் கண்ணியார்
173. தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் - பாரதிதாசன்
174. மரம், செடி, மின்விசிறி, நாற்காலி என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - பொருட்பெயர்
175. உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - இடப்பெயர்
176. தண்டு, வேர், கண், காது, மூக்கு, கை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - சினைப்பெயர்
177. திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - காலப்பெயர்
178. பச்சை இலை, சிவப்பு மை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - பண்புப்பெயர்
179. கொலல், நந்தம், நீட்டம், பெருக்கல், ஒழுக்கு என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - தொழிற்பெயர்
180. தான் தெரிந்தவற்றை வேரு ஒருவரிடம் கேட்பது - அறிவினா
181. தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கேட்டல் - அறியா வினா
182. தமக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்வது - ஐய வினா
183. ஒன்றினை மற்றவரிடம் கேட்டுப் பெறுதல் - கொளல் வினா
184. ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்டல் - கொடை வினா
185. மறைமலையடிகளாரின் இயற்பெயர் என்ன - சுவாமிவேதாசலம்
186. 'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் - இவ்வரி எவ்வியலில் இடம் பெற்றுள்ளது - தொல்காப்பியம் அகம்
187. அகத்திணைக்கே உரிய கோட்பாடு என்பது - உள்ளுறை உவமம்
188. மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய நூல் - ஐங்குறுநூறு
189. 'நெஞ்சாற்றுப்படை' எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது - முல்லைப்பாட்டு
190. சூளாமணி' நூல் அமைப்பு எப்பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது - சுருக்கம்
191. 'மக்கள்' என்பது ஒரு - உயர்திணை பன்மை
192. களவழி நாற்பது' என்னும் நூலை இயற்றியவர் யார் - பொய்கையார்
193. அணியிலக்கண நூல்களுள் முதன்மையானது - தண்டியலங்காரம்
194. புகழ்வது போலப் பழிப்பது எவ்வகை அணி - வஞ்சப்புகழ்ச்சி அணி
195. அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல் - பரிபாடல்
196. வீரசோழியம் எந்தச் சமயத்தைச் சார்ந்த இலக்கண நூல் - பவுத்தம்
197. தொல்காப்பியர் எத்தனை வகையான உரைநடைகளைக் குறிப்பிடுகிறார் - நான்கு
198. இறைச்சி என்பது எதனின் ஒரு பகுதியைக் குறிப்பது - கருப்பொருள்
199. பிரித்து எழுதுக: வையந்தழைக்கும் - வையம் + தழைக்கும்
200. பலுச்சிஸ்தானத்தில் பேசப்படும் திராவிட மொழி எது - பிராகுயி